Jump to content

இங்கிலாந்தின் நிதி மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...!

இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...!

லண்டன்,

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். 

இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என கூறி அமைச்சரவையில் இருந்து நிதி மற்றும் சுகாதாரத்துறை மந்திரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

 

https://www.dailythanthi.com/News/World/uk-finance-minister-rishi-sunak-and-health-secretary-sajid-javid-resign-from-pm-boris-johnsons-govt-738810

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சனுக்கு வால்பிடித்த இரண்டு தெற்காசிய பொம்மைகளும் கடாசி வீசப்பட்டுள்ளன. அதில் ஒரு பொம்மை முன்னரும் கடாசி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு தெற்காசிய அம்மையார் இருக்கா. அவாவும் முன்னர் கடாசி வீசப்பட்டவாதான்.

இப்ப ஒரு ஈராக்கி.. குர்திஸ் ஆளை உள்ள போட்டிருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 ரிஷி சுனக் நவீன ஊழலை கண்டுபிடித்த கொள்ளையன் இவரின் பிழையான முடிவுகளால் எதிர்வரும் காலம் பாரிய வாழ்வாதார நெருக்கடி உருவாகும் முக்கியமாய் வீட்டு விலைகள் சரிவை சந்திப்பதை தவிர்க்க முடியாது வீடு வாங்குபவர்கள் கொஞ்சம் பொறுத்தால் மலிவான வீடுகள் வாங்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

ஜோன்சனுக்கு வால்பிடித்த இரண்டு தெற்காசிய பொம்மைகளும் கடாசி வீசப்பட்டுள்ளன. அதில் ஒரு பொம்மை முன்னரும் கடாசி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு தெற்காசிய அம்மையார் இருக்கா. அவாவும் முன்னர் கடாசி வீசப்பட்டவாதான்.

இப்ப ஒரு ஈராக்கி.. குர்திஸ் ஆளை உள்ள போட்டிருக்குது. 

பிஞ்சர் செய்த, நுள்ளு பிடுங்கல் விளையாட்டுக்கள் பத்தியும் சொல்லுங்கோவன்...

வீட்டு விலை குறையுமே, பெருமாள்?

பண வீக்கம் குறைக்க, வட்டி கூட்ட வேணும். ஆனாலும் வீட்டு விலை படாரென்று குறையிற அளவுக்கு, வட்டி கூடும் என்று நினைக்கிறீர்களா?

43 minutes ago, பெருமாள் said:

 ரிஷி சுனக் நவீன ஊழலை கண்டுபிடித்த கொள்ளையன் இவரின் பிழையான முடிவுகளால் எதிர்வரும் காலம் பாரிய வாழ்வாதார நெருக்கடி உருவாகும் முக்கியமாய் வீட்டு விலைகள் சரிவை சந்திப்பதை தவிர்க்க முடியாது வீடு வாங்குபவர்கள் கொஞ்சம் பொறுத்தால் மலிவான வீடுகள் வாங்கலாம் .

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

பிஞ்சர் செய்த, நுள்ளு பிடுங்கல் விளையாட்டுக்கள் பத்தியும் சொல்லுங்கோவன்...

வீட்டு விலை குறையுமே, பெருமாள்?

பண வீக்கம் குறைக்க, வட்டி கூட்ட வேணும். ஆனாலும் வீட்டு விலை படாரென்று குறையிற அளவுக்கு, வட்டி கூடும் என்று நினைக்கிறீர்களா?

வீட்டு  விலைகளின்  பெறுமதிக்கு வாடகை அதிகரிக்கவில்லை முன்பு  மூன்று பெட் ரூம் உள்ளவீடு ஒருலட்சம் போனபோதும் வீட்டு வாடகை 1000தான் இப்போ 4.5லட்சம் போகும் அதே வீட்டு  வாடகை 1200 முதலில் இந்த வித்தியாசத்தை கவனியுங்கள் கொர்னோவுக்கு மாஸ்க் கட்டாயம் தேவையில்லை என்று மக்களை பார்ட்டி அது இது என்று மயக்கத்தில் வைத்துக்கொண்டு வட்டி பேஸ் ரெட் ஐ உயர்த்தி விட்டார்கள் சரா சரி 400 பவுன் மோர்ட்கேஜ் அதிகரித்து உள்ளது அநேகமா ஸ்கூல் சமர் லீவில் கடற்கரையில் BBQ போட்டு ஆட்டமும் பாட்டமும் ஆக மக்கள் மயக்கத்தில்  இருக்கும்போது இங்கிலாந்து வங்கியின் வட்டி விகிதம் உயரும் .

அடுத்தது  கனடா ஊதிப்பெருத்த  பலூன் ஆட்டம் இருக்கிறது வீட்டு விலைகள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

வீட்டு விலை குறையுமே, பெருமாள்?

அது தவிர்க்க முடியாது ஈஸ்டகம் பக்கம் போனால் கவனியுங்கள் சாதாரண வீடு வாங்கும் தரகர்கள் கூட நாங்கள் வீடு வாங்குகிறோம்உடனே பணம் கட்டுகளாக  கொடுத்து வாங்குவோம் என்று விளம்பரம் செய்கிறார்கள்  அவர்களுக்கு உரிய பணம் எங்கிருந்து வருகிறது ? விடை அ நேகமாய் உங்களுக்கு தெரியும் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1922 கமிட்டியின் விதிப்படி இன்னும் ஒரு வருடத்துக்கு போரிஸ் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வர முடியாது.

ஆனால் கபினெட் மந்திரிகள் பலர் விலகினால் - தட்சர் போல் வெளியேற வேண்டி வரலாம்.

அல்லது 1922 கமிட்டியின் விதியை தளர்த்த வேண்டும். இந்த கமிட்டியின் செயற்குழு தேர்தல் விரைவில் வருகிறது. அதில் பொரிஸ் எதிர்பார்ட்டி அதிகம் வெண்டால் - விதி மாற்றப்பட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு வரலாம்.

ரிசி எதிர்பார்த்ததுதான் ஆனால் ஜாவித் திருமதி ஜான்சனின் நண்பர், முன்னாள் பாஸ். அவரே விலகியது ஆச்சரியம்தான்.

The assasin never becomes the king என்பார்கள். அதனால்தான் லிஸ்சும், ஏனையோரும் இன்னும் ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.

 

3 hours ago, பெருமாள் said:

வீட்டு விலைகள் சரிவை சந்திப்பதை தவிர்க்க முடியாது வீடு வாங்குபவர்கள் கொஞ்சம் பொறுத்தால் மலிவான வீடுகள் வாங்கலாம் .

சல்லி முட்டியை உடைச்சா காணுமாய் இருக்குமா பெரும்ஸ்😆

 

2 hours ago, Nathamuni said:

வீட்டு விலை குறையுமே, பெருமாள்?

என்ன ஒரு டசன் வாங்கி விடுற ஐடியா போல😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முன்பு  மூன்று பெட் ரூம் உள்ளவீடு ஒருலட்சம் போனபோதும் வீட்டு வாடகை 1000தான் இப்போ 4.5லட்சம் போகும் அதே வீட்டு  வாடகை 1200

இது சரியான தரவாக தெரியவில்லை.

வாடகை ஏற்றம் அண்மையில் மந்தமானது உண்மைதான் ஆனால் இந்தளவுக்கு அல்ல.

3 பெட் ரூம் வீடு 100,000 விலை கடைசியாக போனது 1995 காலப்பகுதியில் அப்போ அதே வீட்டு வாடகை 400-500 ஆகவே இருந்த நியாபகம்.

இப்போ450,000 போகும் அதே வீட்டின் சராசரி வாடகை 1800 மட்டில்தான் வரும். அண்ணளவாக ஒரே விகிதத்தில்தான் வீட்டு விலை/வாடகை கூடியுள்ளது? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம்: ரிஷி சுனக், சாஜித் ஜாவித் பதவி விலகல் - இனி என்ன நடக்கலாம்?

  • ஜோசுவா நெவெட்
  • பிபிசி செய்தியாளர், அரசியல் பிரிவு
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஜாவித், சுனக் பதவி விலகல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.

பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் "சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்தார்.

இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை," என்று தெரிவித்தார்.

எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.

இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த ஸ்டீவ் பார்க்லேவசம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்தியாவில் 'மத்திய அமைச்சர்' என்று குறிப்பிடப்படும் பதவி, பிரிட்டனில் 'செயலாளர்' என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்த செய்தியில் பிரிட்டன் செயலாளர் என்பதை வாசகர்களின் புரிதலுக்காக 'பிரிட்டன் அமைச்சர்' என்றே குறிப்பிடுகிறோம்.

வருத்தம் தெரிவித்த பிரதமர்

முன்னதாக, "இந்த ஆண்டு தொடக்கத்தில் சில குற்றச்சாட்டுகள் எம்.பி கிறிஸ் பஞ்சருக்கு எதிராக நிலுவையில் இருந்தபோதும், அது பற்றி அறிந்திருந்தும் அவரை 'துணை தலைமைக் கொறடா' பதவிக்கு நியமனம் செய்தது எனது மிகப்பெரிய தவறு," என்று போரிஸ் ஜான்சன் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக பிபிசிக்கு போரிஸ் ஜான்சன் அளித்த நேர்காணலின்போது, "பின்னோக்கிப் பார்த்தால் அது நான் செய்த தவறான செயல். அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறினார்.

ஆனால், அத்தகைய பதவி நியமன நடவடிக்கையில் பிரதமர் தொடர்ச்சியாக நடந்து கொண்ட விதம், எதிர்கட்சிகள் மட்டுமின்றி அவரது சொந்த கட்சி எம்.பி.க்கள் சிலராலும் கடுமையான விமர்சிக்கப்பட்டது.

சுனக், ஜாவித் ஆகியோருடன் சேர்த்து டோரி துணைத் தலைவராக இருந்த பிம் அஃபோலமி ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையிலேயே தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். இவர் மட்டுமின்றி வர்த்தக தூதர் பதவியை ஆண்ட்ரூ முர்ரிசன் ராஜினாமா செய்தார். அமைச்சக உதவிப்பணியில் இருந்த ஜோனாத்தன் குல்லிஸ், சாகிப் பாட்டி ஆகியோரும் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது அமைச்சரவையில் தனக்கு எதிராக திரும்பிய அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையை பிரதமர் போரிஸ் ஜான்சன் மதிப்பிட்டு வருகிறார். ஆனால், அவரது தலைமையை வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பதவி உயர்வு பெறும் அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் பிற கேபினட் அமைச்சர்கள் ஆதரிப்பதாக பிபிசி அறிகிறது.

போரிஸ் ஜான்சனுக்கு விசுவாசமான கூட்டாளிகளாக கருதப்படும் கலாசாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், பிரெக்ஸிட் வாய்ப்புகள் துறைக்கான அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். "பிரதமர் வேலைக்கு சரியானவர் போரிஸ்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய தலைவலி

 

ரிஷி சுனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரிஷி சுனக்

சமீபத்தில்தான் தமது தலைமைக்கு நெருக்கடி வந்தபோது நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றிருந்தார். அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்த சில மாதங்களிலேயே போரிஸ் ஜான்சன், தமது சொந்த அமைச்சரவை சகாக்களின் ராஜினாமாவால் புதிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடந்து அதில் போரிஸ் 59 சதவீத வாக்குகளுடன் வெற்றியும் பெற்று விட்டார். அதனால் கட்சி விதிகளின்படி கன்சர்வேட்டிவ் தலைமை மாற்றத்துக்கான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை போரிஸுக்கு நிவாரணம் உள்ளது.

இந்த நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர், "ஒரு விரைவான தேர்தல் வந்தால் அதை நான் வரவேற்பேன். நாட்டிற்கு அரசாங்க மாற்றம் தேவை," என்று கூறினார்.

"அனைத்து தோல்விகளுக்குப் பிறகு, இந்த டோரி அரசாங்கம் (பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை இப்படி குறிப்பிடுகின்றனர்) இப்போது சரிந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது," என்று அவர் தெரிவித்தார்.

 

சாஜித் ஜாவித்

பட மூலாதாரம்,AFP

பிரிட்டனில் போரிஸ் அரசின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டில் நிறைவடைகிறது. எனவே அடுத்த பொதுத்தேர்தல் முறைப்படி பதவிக்காலத்தின் நிறைவில் நடப்பதாக இருந்தால் அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

எதிர்ப்புக்குரல் கொடுக்கும் தலைவர்கள்

இந்த நிலையில், லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சித் தலைவர் சர் எட் டேவி, பிரதமரின் "குழப்பம் நிறைந்த அரசாங்கம் நம் நாட்டில் தோல்வியடைந்துள்ளது" என்று கூறி, அவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஸ்காட்டிஷ் முதல் அமைச்சரும் எஸ்ன்பி தலைவருமான நிகோலா ஸ்டர்ஜியன், ஜான்சனின் அரசாங்கத்தில் "முழுமையாக அழுகிப் போன" எல்லாம் போக வேண்டும். அவரது அமைச்சரவையில் இருப்பவர்கள் "பொதுமக்களிடம் பொய் உரைத்தவர்கள்" என்று குற்றம்சாட்டினார்.

 

போரிஸ் ஜான்சன்

இது போரிஸ் ஜான்சனின் அரசியல் முடிவின் தொடக்கமா?

மூத்த அமைச்சர்கள் பதவி விலகிய பிற்பாடு நடந்த நாளின் அலுவலில், பிரதமரின் முக்கிய விமர்சகர்கள் சிலர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போரிஸுக்கு மற்ற அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

ரிஷி சுனக்கும் சாஜித் ஜாவித்தும் அதைத்தான் செய்துள்ளனர். பிரதமரை வெளியேற்ற வேண்டுமானால் தங்களின் ராஜினாமா அவசியம் என்று இருவரும் கருதியுள்ளனர்.

ஒருவேளை அந்த இருவரும் எதிர்கால தலைமைப் போட்டிக்கான நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம். ஆனால் இங்குள்ள நிலைமையை பார்க்கும்போது, இப்போதும் இந்த சூழலை தவிர்க்க முடியும் என்று பிரதமர் இல்லம் நம்புவதாகத் தோன்றுகிறது.

ரிஷி, ஜாவித் வெளியேறிய பிறகும் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்களே வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வணிக அமைச்சர் பதவிகளை வகிக்கிறார்கள்.

கார்டன் பிரெளன் பிரதமராக இருந்தபோது (2007-10) அவரது அமைச்சரவையில் இருந்த சிலர் பதவி விலகினார்கள். அப்போது அவரது விசுவாச அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்ததால் அவரது அமைச்சரவை தப்பித்த வரலாறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்போதைய சூழலில் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். போரிஸ் ஜான்சனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் சில அமைச்சர்களில், குறிப்பாக இளநிலை அமைச்சர்கள் ரிஷி சுனக், சஜித் ஜாவித் வழியை பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது.

 

2px presentational grey line

தெரீசா மேவுக்கும் இதே தலைவலிதான்

போரிஸுக்கு முன்பு பிரதமர் பதவி வகித்த தெரீசா மேவும் இதேபோன்ற சூழலில் கட்சி அளவிலான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரெக்சிட்டை அணுகிய விவகாரத்தில் அவரது நடவடிக்கைகள் சர்ச்சையாக பார்க்கப்பட்டன. அதன் அழுத்தம் அதிகரித்ததால் அவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது.

அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்.

இது மட்டுமின்றி, சில கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர்.

இத்துடன் கடந்த ஜூன் மாதம் டிவெர்டன், ஹோனிட்டன் மற்றும் வேக்ஃபீல்டில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததும் பிரதமர் போரிஸுக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே மேலதிக அழுத்தத்தை அளித்தது. இதன் உச்சமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஆலிவர் டெளடென் விலகவும் நேர்ந்தது.

காணொளிக் குறிப்பு,

பதவி விலகிய பிறகு வீட்டுக்குத் திரும்பிய சாஜித் ஜாவித்

செவ்வாய்க்கிழமை மாலையில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக சாஜித் ஜாவித் தமது ராஜினாமா கடிதத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதுவும் தமது இல்லத்தில் செய்தியாளர்களை பிரதமர் போரிஸ் சந்தித்த சில நிமிடங்களில் தமது ராஜினாமா கடிதத்தை சாஜித் பகிர்ந்திருந்தார்.

சாஜித் ஜாவித் - 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவி விலகல் கடிதத்தில், "இனி நல்ல மனசாட்சியுடன் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது," என்று கூறியுள்ளார்.

மேலும், "உள்ளுணர்வாகவே நான் ஒரு அணி வீரன். ஆனால் தங்களுடைய அரசாங்கத்திடம் இருந்து அதே நேர்மையை எதிர்பார்க்க பிரிட்டிஷ் மக்களுக்கு உரிமை உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு தலைவராக நீங்கள் வெளிப்படுத்தும் தொனி மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகள், உங்களுடைய சகாக்கள், கட்சி மற்றும் இறுதியில் நாட்டை பிரதிபலிக்கும்," என்றும் தமது கடிதத்தில் சாஜித் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரிஷி சுனக்கும் தமது ராஜினாமா கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்கால தலைவராகும் சாத்தியம் மிக்கவராக கருதப்படும் ரிஷி சுனக், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசாங்கத்தில் தரநிலைகள் "போராடத் தகுந்தவை" என்று கூறியுள்ளார்.

 

ரிஷி சுனக்

பட மூலாதாரம்,RISHI SUNAK

2020, பிப்ரவரியில் பிரிட்டன் நிதியமைச்சராக பதவியேற்றதில் இருந்து, ரிஷி சுனக் எப்போதும் பொருளாதாரக் கொள்கை மற்றும் பொதுச் செலவின விவகாரங்களில் பிரதமருடன் ஒத்துப்போகாதவராகவே தோன்றினார்.

"நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தேன். எங்கள் கட்சியின் தலைவராவதற்கு நான் உங்களை ஆதரித்தேன், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தினேன்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிகளின் பொறுப்பை நீங்கள் என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றியுடன் நான் உங்களின் நிதிமைச்சராக பணியாற்றினேன். ஆனால், இனியும் என்னால் உங்களை ஆதரிக்க முடியாது," என்று ரிஷி சுனக் தமது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.

நமக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள ரிஷி, "அடுத்த வாரம் பொருளாதாரம் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட கூட்டு உரை தயாரிப்பின்போது, நம் இருவரது 'அணுகுமுறைகளும்' அடிப்படையிலேயே 'மிகவும் மாறுபட்டவை' என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் இனியும் இதில் தொடர முடியாது என்ற முடிவுக்கு நான் தயக்கத்துடன் வந்துள்ளேன்," என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

இந்திய தொழில் அதிபரும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான நா. ரா. நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி ஆகியோர் ரிஷி சுனக்கின் மாமனார்-மாமியார் ஆவர். பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படலாம் என்று ஊகங்கள் வலுவாக எழுந்த சூழலில் அவரது ராஜினாமா வெளிவந்திருக்கிறது. பிரிட்டனில் இவர் செளத்ஹாம்ட்டன் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

https://www.bbc.com/tamil/global-62060003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரிசின் சொந்தகாரர் ஆரும் வர வேணும் என்றால் சொல்லி அனுப்புங்கோ….

கடைசியா முகம் பாக்கிறவை வரலாம்….

 

பாவம் மனுசன். நாட்களோ, மணத்தியாலங்களோ மிச்சம் இருக்கிறது என்பது கூட விளங்காமல்….உக்ரேன்…தானியம்…பொஸ்போரஸ் கப்பல் போக்குவரத்து என்று நீட்டி முழக்கிறார்.

மானமுள்ள வேறு எந்த மனிதரும் இப்போதைக்கு தானாக விலகி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

போரிசின் சொந்தகாரர் ஆரும் வர வேணும் என்றால் சொல்லி அனுப்புங்கோ….

கடைசியா முகம் பாக்கிறவை வரலாம்….

 

பாவம் மனுசன். நாட்களோ, மணத்தியாலங்களோ மிச்சம் இருக்கிறது என்பது கூட விளங்காமல்….உக்ரேன்…தானியம்…பொஸ்போரஸ் கப்பல் போக்குவரத்து என்று நீட்டி முழக்கிறார்.

மானமுள்ள வேறு எந்த மனிதரும் இப்போதைக்கு தானாக விலகி இருப்பார்கள்.

பேசாமல் எங்களோடை(EU) வந்து சேருங்கோப்பா..... நாங்கள் உங்களுக்கு என்ன குறை வைச்சனாங்கள் எண்டு கேக்கிறன்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பேசாமல் எங்களோடை(EU) வந்து சேருங்கோப்பா..... நாங்கள் உங்களுக்கு என்ன குறை வைச்சனாங்கள் எண்டு கேக்கிறன்? 🤣

😆 சே விஜயகாந்த் படம் போல எப்படி கூட்டு குடும்பமா இருந்தனாங்கள்😆. எல்லாத்தையும் நாசமாக்கினதில இந்த கோமாளிக்கும் பெரிய பங்குண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரித்தானிய அரசாங்கத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் - பதவி விலகுமாறு பிரதமருக்கு கடும் அழுத்தம் | Call For Boris Johnson To Resign

பிரித்தானிய அரசாங்கத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் - பதவி விலகுமாறு பிரதமருக்கு கடும் அழுத்தம்

பதவி விலகிச் செல்வது பொறுப்பாக இருக்காது

 

எவ்வாறாயினும், இந்த தருணத்தில் பதவி விலகிச் செல்வது பொறுப்பாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமன்ஸ் இணைப்புக் குழுவில் பேசிய அவர், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் உக்ரைன் போருக்கு மத்தியில் தான் பதவி விலகிச் செல்வது சரியல்ல என போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/call-for-boris-johnson-to-resign-1657129926

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் அடம் பிடிக்கிறானுகள் போக மாட்டன் என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலநாள் திருடன் ஒரு நாள் பதவி விலகுவான்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎07‎-‎2022 at 02:09, goshan_che said:

இது சரியான தரவாக தெரியவில்லை.

வாடகை ஏற்றம் அண்மையில் மந்தமானது உண்மைதான் ஆனால் இந்தளவுக்கு அல்ல.

3 பெட் ரூம் வீடு 100,000 விலை கடைசியாக போனது 1995 காலப்பகுதியில் அப்போ அதே வீட்டு வாடகை 400-500 ஆகவே இருந்த நியாபகம்.

இப்போ450,000 போகும் அதே வீட்டின் சராசரி வாடகை 1800 மட்டில்தான் வரும். அண்ணளவாக ஒரே விகிதத்தில்தான் வீட்டு விலை/வாடகை கூடியுள்ளது? 

நீங்கள் அப்பவே வந்திட்டிங்கள் போல🙂...90க்கு முதல் நாட்டை விட்டு  ஓடி வந்தாக்கள் தான் இணையத்தில் நல்லாய் அரசியல் கதைப்பினம்😀...நான் உங்களை மட்டும் சொல்லேல்ல கோசான்😐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் அப்பவே வந்திட்டிங்கள் போல🙂...90க்கு முதல் நாட்டை விட்டு  ஓடி வந்தாக்கள் தான் இணையத்தில் நல்லாய் அரசியல் கதைப்பினம்😀...நான் உங்களை மட்டும் சொல்லேல்ல கோசான்😐 

80, 90 களிலேயே நாட்டிற்கும் யூகேக்கும் விமானம் ஓடியது அக்கா. அங்கிருப்போர் இங்கே வந்து, போய், மீண்டும் வர எல்லாம் இயலுமாய் இருந்தது.

பி கு

ஓடி வந்தோர் எல்லாம் - ஒரே வழியில் ஓடி வந்தோர் அல்ல. புரியும் என நம்புகிறேன்.

நம்மை போலவே எல்லாரும் வந்தார்கள் என எடை போடக்கூடாது. நானும் உங்களை மட்டும் சொல்லவில்லை அக்கா😆.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

80, 90 களிலேயே நாட்டிற்கும் யூகேக்கும் விமானம் ஓடியது அக்கா. அங்கிருப்போர் இங்கே வந்து, போய், மீண்டும் வர எல்லாம் இயலுமாய் இருந்தது.

பி கு

ஓடி வந்தோர் எல்லாம் - ஒரே வழியில் ஓடி வந்தோர் அல்ல. புரியும் என நம்புகிறேன்.

நம்மை போலவே எல்லாரும் வந்தார்கள் என எடை போடக்கூடாது. நானும் உங்களை மட்டும் சொல்லவில்லை அக்கா😆.

ஒத்துக் கொள்கிறேன் நீங்கள் அப்பவே பெரிய ஆள் தான்🤗  ஊரில் இருந்து வந்து திரும்பி போய் திரும்ப   வந்து இருக்கிறீர்கள் 
உங்களை போல என்னையும் எடை போடக் கூடாது தான் ...யுத்தத்தினையோ, போர் வலியையோ அனுபவிக்காமல் வந்த நீங்களும், அதன் வலியை அனுபவித்தவர்களும் எப்படி ஒன்றாக முடியும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஒத்துக் கொள்கிறேன் நீங்கள் அப்பவே பெரிய ஆள் தான்🤗  ஊரில் இருந்து வந்து திரும்பி போய் திரும்ப   வந்து இருக்கிறீர்கள் 
உங்களை போல என்னையும் எடை போடக் கூடாது தான் ...யுத்தத்தினையோ, போர் வலியையோ அனுபவிக்காமல் வந்த நீங்களும், அதன் வலியை அனுபவித்தவர்களும் எப்படி ஒன்றாக முடியும்  

நான் பெரிசு சிறுசு என இங்கே கதைக்கவில்லை அக்கா. எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவரின் அனுபவத்தை வைத்து இன்னொருவரை எடை போடல் ஆகாது. அவ்வளவுதான்.

நீங்கள் வந்து விட்டு திரும்பியும் போகாத சமயம், திரும்பியும் போய், யுத்த வலியை 2001 வரை ஊரில் இருந்து அனுபவித்தவன் என்ற வகையில் - நானும் உங்களை போன்றவர்களும் ஒன்றாக முடியாதுதான் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நான் பெரிசு சிறுசு என இங்கே கதைக்கவில்லை அக்கா. எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவரின் அனுபவத்தை வைத்து இன்னொருவரை எடை போடல் ஆகாது. அவ்வளவுதான்.

நீங்கள் வந்து விட்டு திரும்பியும் போகாத சமயம், திரும்பியும் போய், யுத்த வலியை 2001 வரை ஊரில் இருந்து அனுபவித்தவன் என்ற வகையில் - நானும் உங்களை போன்றவர்களும் ஒன்றாக முடியாதுதான் அக்கா.

சரி, சரி எல்லோருடைய அனுபவமும் வித்தியாசம் என்று நீங்களே எழுதி விட்டீர்கள்..நான் யுத்தத்திற்கு பயந்து ஓடி வரவில்லை...நான் ஏன் திரும்ப போக வேண்டும்?...நீங்கள் 2000ம் ஆண்டு  போர் வழியை அனுபவித்தாலும் தப்பி வர வழியும் ,நாடும் இருந்தது  
நான் உங்களை தனிப்படட ரீதியில் தாக்க வேண்டும் என்பதற்காய் எழுதவில்லை ...நான் சொல்ல வந்தது இது தான் உங்களை போல 70,80 அல்லது அதற்கு முன்பு வந்தவர்கள் தான் போராட்டத்தை உசுப்பேத்தி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சரி, சரி எல்லோருடைய அனுபவமும் வித்தியாசம் என்று நீங்களே எழுதி விட்டீர்கள்..நான் யுத்தத்திற்கு பயந்து ஓடி வரவில்லை...நான் ஏன் திரும்ப போக வேண்டும்?...நீங்கள் 2000ம் ஆண்டு  போர் வழியை அனுபவித்தாலும் தப்பி வர வழியும் ,நாடும் இருந்தது  
நான் உங்களை தனிப்படட ரீதியில் தாக்க வேண்டும் என்பதற்காய் எழுதவில்லை ...நான் சொல்ல வந்தது இது தான் உங்களை போல 70,80 அல்லது அதற்கு முன்பு வந்தவர்கள் தான் போராட்டத்தை உசுப்பேத்தி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள்  

ஏன் ஊரில் ரத்த பொட்டு வச்சு உசுபேத்தி போட்டு இந்தியாவுக்கு ஓடினவையும் உண்டுதானே.

அதேபோல் கேணல் சங்கர் உட்பட 70, 80 களில் வந்து விட்டு திரும்பிபோய் அங்கே ஆகுதியானவர்களும் உண்டு.

என்னை தனிப்பட்டு தாக்கவில்லை என்கிறீகள் ஆனால் யூகே வீட்டு விலை, வாடகை சம்பந்தமான கருத்தில், நான் எப்போ எப்படி யூகே வந்தேன் என்ற கருத்தும், உசுப்பேத்தலும் ஏன் உள்ளே வந்தது என்பது இன்னமும் எனக்கு விளங்கவில்லை.

சரி விடுவோம்👋.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஏன் ஊரில் ரத்த பொட்டு வச்சு உசுபேத்தி போட்டு இந்தியாவுக்கு ஓடினவையும் உண்டுதானே.

அதேபோல் கேணல் சங்கர் உட்பட 70, 80 களில் வந்து விட்டு திரும்பிபோய் அங்கே ஆகுதியானவர்களும் உண்டு.

என்னை தனிப்பட்டு தாக்கவில்லை என்கிறீகள் ஆனால் யூகே வீட்டு விலை, வாடகை சம்பந்தமான கருத்தில், நான் எப்போ எப்படி யூகே வந்தேன் என்ற கருத்தும், உசுப்பேத்தலும் ஏன் உள்ளே வந்தது என்பது இன்னமும் எனக்கு விளங்கவில்லை.

சரி விடுவோம்👋.

 

கணக்க யோசியாதீங்கோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

கணக்க யோசியாதீங்கோ  

அக்கா சொன்னா சரி😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

70,80 அல்லது அதற்கு முன்பு வந்தவர்கள் தான் போராட்டத்தை உசுப்பேத்தி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள்

70,80 க்கு முன்பு வந்தவர்கள் போராட்டத்தை உசுப்பேத்தாமல் விட்டிருந்தால்  இன்று நாடு எப்படியிருந்திருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2022 at 23:53, goshan_che said:

😆 சே விஜயகாந்த் படம் போல எப்படி கூட்டு குடும்பமா இருந்தனாங்கள்😆. எல்லாத்தையும் நாசமாக்கினதில இந்த கோமாளிக்கும் பெரிய பங்குண்டு.

 
 

 

 
 

 

 


 
பிரிட்டன் ஐரோப்பிய  ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கான  வாக்கெடுப்பு நடந்ததில்(2016-2022) இன்று வரையான 6 வருடகாலத்தில் 3 பிரதமர்கள் பதவி விலகியுள்ளார்கள் 3  பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானியா போன்ற ஒரு வல்லரசு நாட்டுக்கு இப்படி அரசியல் ஸ்திரத்தன்மை இருப்பது முன்னெப்போதும் நடந்ததில்லை. இன்னும் கொஞ்சக் காலம் போனால் மீண்டும் ஐNருhப்பிய இணைவதற்கான வாக்கெடுப்பை நடத்தினாலும் ஆச்சரியமில்லை. இப்படி அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த காரணத்தைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஐரோப்பி ஓன்றயத்துடன் சேர்ந்திருக்க வேண்டும் அரசாங்க எதிர்க்கட்சிகளில் இருக்கும் பல உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் என்பது உண்மை.இந்தப் பிர்சினைகளில் மக்களைத் திசை திருப்பும் நாடகமாக போரிஸ் உக்கிiனுக்குப் போவதும் அடிக்கடி  அறிக்கை விடுவதுமாக இருக்கிறார். விiவு பிரித்தானியாவில் என்ணை விலை அதி உச்சத்துக்குப் போயிருக்கிறது. பாண் பால் போன்றவற்றின் விலைகளும் அதிகரித்து இருக்கின்றது. பிரித்தானியா உக்கிரைனுக்கு ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவுகிறது. அதற்கு பிரித்தானிய மக்களின் வரிப்பணமே செலவாகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.