Jump to content

இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

பஞ்சத்தினை  விட ஒரு கலவரத்தினையும் தூண்டிவிடுவார்களோ என்ற ஒரு பயம் உள்ளது, வீண் சிரமம் எதற்கு.

பொலிஸுக்கும் இராணுவத்திற்கும் சாப்பாட்டுக்கு கஷ்டம் வரும்போது கலவரம் வந்தாலும் வேடிக்கை பார்த்து கட்டுப்பாடில்லாமல் போகவும் செய்யக்கூடும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், இப்போதைக்கு ஊருக்கு செல்ல வேண்டாம். அவசரவேலை என்றால் தனியே செல்லலாம். குடும்பத்துடன் செல்வது அவ்வளவு உசிதமில்லை! நான் 2 கிழமைக்கு முன்தான் ஊரிலிருந்து வந்தேன். ஊரில் சாப்பாடு கஷ்டம் என்று பெரிதாக ஒன்றுமில்லை. எரிவாயு, பெட்ரோல்தான் பிரச்சனை. விறகடுப்பு இருப்பதால் அவ்வளவு கஷ்டமில்லை. Induction  ஸ்டோவும் பாவிக்கலாம். தனியே சென்றால் சைக்கிளில் சுற்றித்திரியலாம். எவ்வித பிரச்சனையும் இல்லை. ஊரிலிருந்து வான் பிடித்து ஏர்போர்ட் வர 75 000 ரூபா செலவானது. இப்போ 150 000 ரூபா என்று கேள்வி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறையில்... மேலும், வீழ்ச்சி ஏற்படலாம் என அச்சம்!

இலங்கையின் சுற்றுலாத்துறையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இலங்கைக்கு செல்வதற்கு எதிராக தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு புதிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன.

பொருளாதார நெருக்கடி மோசமடைதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மைக்கான சாத்தியக்கூறுகள் என்பன இதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, அயர்லாந்து ஆகியன, சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட பயண ஆலோசனைகளைத் தொடர்ந்து பேணி வருகின்றன.

எனவே இந்த நிலைப்பாடு, நாட்டில் ஏற்கனவே பின்னடைவைக் கண்டுள்ள சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

எனினும் அத்தகைய எச்சரிக்கைகளின் தாக்கத்தை முடிந்தவரை ‘மென்மைப்படுத்த’ நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1290183

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல்

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1291145

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.