Jump to content

இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்

51 நிமிடங்களுக்கு முன்னர்
 

இளையராஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது.

இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இவர்களுக்கான நியமன உத்தரவு விரைவில் குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்படும்.

இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினர்களாகவிருக்கும் நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கான வாழ்த்துச் செய்தியில், "தலைமுறைகளை கடந்து மக்களை தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளைராஜா. அவரது இசை பல்வேறு உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியில் இருந்து இந்த அளவுக்கு சாதனைகளை படைத்தவரின் வாழ்க்கை பயணம்  மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்துள்ளார். 

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பி.டி. உஷா தொடர்பாக பிரதமர் மோதி குறிப்பிடும்போது, "உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது," என்று மோதி கூறியுள்ளார்.

'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு கதாசரியரும், மூத்த படைப்பாளியுமான விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

ஐந்து முறை தேசிய விருது

79 வயதாகும் இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுகு படத்துக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் இளையராஜா வென்றுள்ளார்.

 

இளையராஜா

பட மூலாதாரம்,PIB INDIA

2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

திடீர் சர்ச்சையில் சிக்கியவர்

இரு மாதங்களுக்கு முன்னர் பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போதே இளையராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது வேறு உயர் பதவி கிடைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் அம்பேத்கரை மோதியுடந் இளையராஜா ஒப்பிடுவதா என்று விவாதங்கள் எழுந்தன.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் தனக்கு இசைஞானி பட்டம் சூட்டிய கலைஞரை நினைவுகூர்ந்து இளையராஜா பேசினார்.

அப்போது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்துப் பேசிய அவர், "இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தமிழக மக்களை முன்னேற்ற அவர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். பொது வாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்களும் தெரியும். அவர் வழியில் செல்லும் நமது முதல்வரும் நீண்ட நாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்," என்று பேசினார்.

 

இளையராஜா

பட மூலாதாரம்,ILAYARAJA

இது தவிர பல்வேறு தருணங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் சட்டென்று கோபத்துடனும் எதிர்வினையாற்றக் கூடியவராக அறியப்பட்ட இளையராஜா, ஆன்மிக கருத்துக்களை பொது நிகழ்ச்சிகளில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது இளையராஜா நியமன உறுப்பினராகும் செய்தியை பிரதமர் மோதி பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியல், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் எத்தனை பேர்?

 

இளையராஜா

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்.

மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்து விட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும்.

மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகும் உறுப்பினர்கள் நீங்கலாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ குடியரசு தலைவரால் அவரது அதிகாரத்துக்கு உள்பட்டு நேரடியாக நியமிக்கப்படக் கூடிய தகுதியை 12 உறுப்பினர்கள் பெறுகின்றனர். அவர்கள் பொதுவாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களாக இருப்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மரபு.

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. எனினும், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.

டெல்லியில் எம்.பி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இதுதவிர பிற எம்.பிக்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள்.

நியமன உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது கட்சியில் சேர விரும்பினால் அதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் கட்சியில் சேராமல் பின்னாளில் சேர முடிவெடுத்தால் அவர்கள் நியமன உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம், கவன ஈர்ப்பு நோட்டீஸ் தருவது உள்பட எல்லா அலுவல் நடைமுறைகளிலும் நியமன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு தரப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.

நியமன உறுப்பினர்கள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வேலைகளைச் செயல்படுத்த, நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம். MPLADS நிதியை செயல்படுத்துவதற்கும் வெளியிடுவதற்கும் உறுப்பினர் ஒரு நோடல் மாவட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது யாரெல்லாம் நியமன உறுப்பினர்கள்?

மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்), மகேஷ் ஜேட்மலானி (உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர்), சோனல் மான்சிங் (பரதக்கலைஞர்), ராம் ஷகால் (பாஜக பிரமுகர்), ராகேஷ் சின்ஹா (ஆர்எஸ்எஸ் ஆதரவு முன்னாள் பேராசிரியர்) ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.

காலியாகவுள்ள ஏழு இடங்களில் தற்போது இளையராஜா, பி.டி. உஷா, வீரேந்திர ஹெகடே, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டாலும் கூட மேலும் மூன்று நியமன உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகவே இருக்கும்.

https://www.bbc.com/tamil/india-62069195

  • Like 2
Link to comment
Share on other sites

அரசியலுக்குள் இசைஞானி  வருவார் என எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத சந்தர்ப்பமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் தனிப்பட்ட குனாதியங்களை விட்டு (அப்படி லேசில் விட முடியாதளவுக்கு பலரை காயப்படுத்தியுள்ளார்.)பார்த்தால் என்றும் நல்ல இசை மேதை தான்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரை கேட்டால் மனதில் இசை அருவியாய் பாயும் .... இன்று எனோ வெறுமையாய் உணர்கிறேன் 😧

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை அவர்களது விருப்பத்துக்குரிய தொழில் அதில் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்...... மற்றும்படி பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் இருந்து பாமரர்களாய் வந்தவர்களில்  ஒருவர் இது போன்ற உயர் பதவி கிடைக்கும் என்பதை சில மாதங்களுக்கு முன்னர் கூட நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்......தானாகாத் தேடி வருகிறது......பெற்றுக் கொள்ளட்டும், ஏனைய கிராம மக்களுக்கும் ஒரு உத்வேகமாய் அமையட்டும்.......வாழ்த்துக்கள்.......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.