Jump to content

சைக்கிளில் யாழ் மாணவனின் கண்டுபிடிப்பு! குவியும் பாராட்டுக்கள்!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!😀

இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்👍🏾👏👏👏

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு பாரட்டுக்கள்.
அவர் சுத்தமான தமிழில் கொடுத்த விளக்கம் இன்னும் சிறப்பு.

இப்படியான கண்டுபிடிப்புகளுக்கு… காப்புரிமை எடுக்க வேண்டியது
அவரின் எதிர்கால வருமானத்துக்கு உத்தரவாதமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்றதொரு மிதிவண்டியை பல புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகபடுத்திவரும் தமிழக பொறியியல் மாணவர் ஒருவரும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அறிமுக படுத்தியிருந்தார் .

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு பாராட்டுக்கள்.

தகவலுக்கு நன்றி கிருபன்.

முன்பொரு காலத்தில் எத்தனையோ சிங்கள கல்விமான்களை உருவாக்கிய கல்லூரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் வரவேண்டும் அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது  கல்லூரியை  சேர்ந்த  இளவல்  என்ற  பெருமிதத்துடன்இ  இந்த  நிகழ்வினை    களவாசிகளுடன்  நானும்  பாராட்டுகின்றேன். 
இந்த  சமயம்  நினைவுக்கு  வரும்  வேறு  விடயமும்  ஒன்று  உண்டு.   வட்டத்துக்கு  வெளியேயே  சிந்திக்க  வேண்டியத்தின்  தேவையும்  விளைவுகளும்  என்பது  பற்றியது.  
சுவீடன்  தலைநரம்  ஸ்டோக்ஹோல்ம் . 
அங்கே   உலகளாவிய  ரீதியில்  பாடசாலை  மாணவர்களுக்கு  Stockholm Junior Water Prize  என்று  சர்வதேச  போட்டி  வருடாந்தம்  நடைபெறும் .
சில  வருடங்களுக்கு  முன்னர்  எனது  புதல்வியார்  இந்த  போட்டிக்கு  அவுஸ்திரேலியாவை   பிரதிநித்துவப்படுத்தி  கலந்து  கொண்டிருந்தார்.  
அந்த  வருடத்து  போட்டியில்  தெரிவு  செய்யப்பட  கண்டுபிடிப்பு   பலரையும்  பரவசப்படுத்தியதொன்று.  
மாசடைந்துள்ள  நீர்  மாதிரியில்  கலந்துள்ள  மாசுக்களை  கண்டறிவது  மிகவும்  சவாலானதும்  செலவு  கூடியதுமான  ஒரு   விடயம்.  
வசதி  குறைந்த  நாடுகளில்  உபகரணங்கள்,   ஆய்வுக்கூடங்கள்  எல்லாமே  எப்படி  இருக்கும்  என்பது  தெரிந்த  விடயம் .
மாசடைந்திருக்கும்    நீர்  மாதிரி  ஒன்றின்  நிற  ஒளிப்படம்  ஒன்று  எடுத்து,  அதிலுள்ள  வேவேறுவகையான   நிற  ஒளித்துகள்களின் எண்ணிக்கையை    (pixels) கணக்கிடுவதன்  மூலம்  அதில்  கலந்திருக்கக்  கூடிய  மாசுக்களை  கண்டறிவதும்,  அதன்  மூலம்  அந்த  நீர்  மாதிரி  பாவனைக்குகந்த    தன்மையில்  இருக்கிறதா  இல்லையா  என்பதனையும்   நிறுவியதுமான   கண்டுபிடிப்பு  அது . 
சாதாரண  இரசாயன  முறையில்  அமைந்த  ஆய்வுகூட    வசதிகளின்  தேவை  இங்கே  இல்லாமல்  போகின்றது .  
இளவல்களுக்கு  வட்டங்கள்  சதுரங்களுக்கு  வெளியே   பார்ப்பதற்கான  பயிற்சிகளை  சிறு  வயதில்  இருந்தே  கொடுத்து  வருவது  நன்மை  பயற்கப்பாலது…..   
 
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சாமானியன் said:

சிறந்த கருத்து, பொதுவாக துறைசார் நிபுணர் இடது மூளை செயற்பாட்டாளர்கள், அதனால் அவர்களால் தெளிவான படத்தினை உணர முடிவ்தில்லை (Big picture).

அதனாலேயே அவர்களது முயற்சி தொழில்னுட்பவியலாலரின் அளவிலேயே முடிவடைந்துவிடுகிறது.

மாணவர்களை வட்டத்துக்கு வெளியே சிந்திக்கும் வகையில் கல்வித்திட்டம் இருக்கவேண்டும்.

முயற்சி செய்த மாணவருக்கு பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்......கூடனே நண்பர் சாமானியனின் மகளுக்கும் வாழ்த்துக்கள்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு பாரட்டுக்கள்!👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் வரவேண்டும் அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்

இது கண்டுபிடிப்பல்ல. ஏலவே இப்படியான துவிச்சக்கர வண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன பல நாடுகளில்.

ஆனால்.. இன்றைய சூழலில்.. இறக்குமதி தடைகள் உள்ள சூழலில்... இலங்கைக்கு இந்த வகையான சுய வடிவமைப்புக்கள் வாழ்த்தி வரவேற்கப்படவும்.. பலருக்கும் உபயோகிக்கக் கூடிய வகைக்கு மீள் உருவாக்கம் செய்யக் கூடியதாகவும் அமையின் சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. ஆனால் துவிச்சக்கர வண்டியின் வேகத்தை அதிகரிக்க மோட்டார் பூட்டுவது பாதுகாப்பாக தெரியவில்லை. இது விபத்துக்கள் ஏற்பட வழிகோலக்கூடும்.

மாறாக இதே முறையை பாவித்து மின் கலங்களில் மின்சாரம் சேகரிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுக்கு பாராட்டுகள்.

உள்ளூர் தயாரிப்பாக இன்றைய பொருளாதார நிலையில் இது நல்ல வியாபார முயற்சியாக அமைய கூடும். குறிப்பாக சார்ஜிங்கும் சூரிய ஒளி மூலம் என்பது போல் செய்தால்.

On 6/7/2022 at 20:06, தமிழ் சிறி said:

இப்படியான கண்டுபிடிப்புகளுக்கு… காப்புரிமை எடுக்க வேண்டியது
அவரின் எதிர்கால வருமானத்துக்கு உத்தரவாதமாக இருக்கும்.

ஏற்கனவே இது இங்கே சந்தையில் உள்ள தயாரிப்பு. இவர்கள் மாணவனிடம் காசு கேட்காமல் இருந்தாலே போதுமானது.

https://www.ebikechoices.com/convert-a-road-bike-to-electric/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின்  சூழ்நிலைக்கேற்ப எது அவசியமாக தேவையோ அதனை செய்கின்றார்கள்.யாரையும் எதிர்பார்க்காமல் கையில் இருப்பதை வைத்து அறிவை பிரயோகித்து விரலுக்கேற்ற வீக்கம் போல் உருவாக்கிய அந்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.

பாதுகாப்பான வாகனமா என்பதில் சந்தேகம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஏற்கனவே இது இங்கே சந்தையில் உள்ள தயாரிப்பு. இவர்கள் மாணவனிடம் காசு கேட்காமல் இருந்தாலே போதுமானது.

https://www.ebikechoices.com/convert-a-road-bike-to-electric/

அப்படி... அவர்கள் மாணவனிடம் காசு  கேட்டால், 
என்னிடம் காசு இல்லை, தர முடியாது என்றால்... என்ன செய்வினம். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அப்படி... அவர்கள் மாணவனிடம் காசு  கேட்டால், 
என்னிடம் காசு இல்லை, தர முடியாது என்றால்... என்ன செய்வினம். 😁

காசு தரமுடியாது போடா😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படி... அவர்கள் மாணவனிடம் காசு  கேட்டால், 
என்னிடம் காசு இல்லை, தர முடியாது என்றால்... என்ன செய்வினம். 😁

2 hours ago, goshan_che said:

காசு தரமுடியாது போடா😆

 நாங்கள் வழமையாய் சொல்லுறது தானே......இதிலை என்ன தயக்கம்? ☺️

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.