Jump to content

இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? 


Recommended Posts

இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? 

 lk.jpg

உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.

 

இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 இலங்கை அதன் வடிவத்தால் இந்து சமுத்திரத்தின் முத்துஎன்றும் இந்தியாவின் கண்ணீர் துளிஎன்றும் அழைக்கப்படுகிறது.

 

இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது.

 

இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது.

 

உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

 

சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2lk.jpg

இலங்கை தெற்காசியாவில் இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. (மாலைத்தீவிற்கு அடுத்ததாக)

3lk.jpg

 

ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்த மக்கள் தலையை ஆட்டும் பழக்கம் இலங்கையில் உள்ளது என கூறுகின்றனர்.

 

இங்கு கோட்டல் எனக்குறிப்பிடப்பட்ட அனைத்திலும் இரவில் தங்குவதற்கான வசதி காணப்படாது.

4lk.jpg

உலகின் பழமையான மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (சிறீ மகா போதி)

5lk.jpg

உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளரும், (சீனா, இந்தியா மற்றும் கென்யாவுக்குப் பிறகு) மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரும் இலங்கையே ஆகும்.

6lk.jpg

உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.

அப்ப ஐஸ்வர்யா ராய்? 😆

சிகிரியா யுனெஸ்கோ World Heritage Site. ஆனால் 8வது அதிசயமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது என்பது உடான்ஸ் டி சில்வாக்கள் அவிட்டு விட்ட கதை என நினைக்கிறேன்😆.

4 hours ago, Paanch said:

ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்த மக்கள் தலையை ஆட்டும் பழக்கம் இலங்கையில் உள்ளது என கூறுகின்றனர்.

இந்தியா, பாக்கிஸ்தானில் வேறு எதை ஆட்டுவார்களாம்?😆

ஆனால் இந்த தகையாட்டும் பழக்கம் தெற்காசியருக்கு ஐரோப்பியரை விட அதிகம் என்பது உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? 

Sri Lanka names Ranil Wickremesinghe new PM in bid to address growing  crisis - ABC News

@goshan_che தனது கட்சியில் எவரும் இல்லாமலே... தேர்தலில் தோற்ற ஒருவர்,
தனி  ஆளாக  பிரதமராகிய அதிசயமும், இலங்கையில் நடந்தது. 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.