Jump to content

இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,AMILA UDAGEDRA

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது.

கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் கடுமையாக முயன்றனர்.

பல கட்ட அடுக்கு தடுப்புகள் அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார், பிறகு தொடர்ச்சியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். அதன் காரணமாக சில நிமிடங்கள் தணிந்த போராட்டம் பிற்பகலில் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸாரும், ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர்.

இதற்கிடையே, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தலைநகர் கொழும்பில் திடீரென நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் கடந்த சில நாட்களாக இலங்கையில் பதிவாகும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

"அமைதியான போராட்டம் மனித உரிமை"

பட மூலாதாரம்,AMILA UDAGEDARA

மறைமுகமாக செய்ய முயற்சிக்க வேண்டாம் - மனித உரிமைகள் ஆணையம்

இதேவேளை, இலங்கை போலீஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் சட்டவிரோதமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை மூலம் தெரிவித்தது.

அதில், "போலீஸ் தலைவரின் உத்தரவு மக்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் உரிமையை பறிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 'நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முயற்சிக்காதீர்கள்' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

"மக்களின் பேரணியைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முடியாத நிலையில், சட்ட விரோதமான வழிகளில் பேரணியைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

 

Presentational white space

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் எதிர்வினை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "சனிக்கிழமை, ஜூலை 9, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, கூட்டங்களைக் கையாள்வதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், வன்முறையைத் தடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்கவும் அது பற்றிய கருத்துக்களை வெளியிடவும் உரிமை உண்டு என்றும் பாதுகாப்புப் படையினருக்கு தெளிவாக அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,AMILA UDAGEDARA

ஒரு பொது விதியாக, மக்கள் கூட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு உட்பட்டு சட்ட அமலாக்கப் பணிகளைச் செய்யலாம். அப்படி பணியாற்றும்போது அவர்கள் சிவில் ஆளுகைக்கும் சிவில் சட்டங்களுக்கும் உட்பட்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

 

Presentational white space

அமைதிவழி போராட்டம் மக்களின் உரிமை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்

இந்த நிலையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் படைகள் மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

#RightsUnderAttack என்ற ஹேஷ்டேக் என குறிப்பிட்டு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்திற்கு செல்லும் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்போது 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக்கூடாதவை', என்ன உடை அணிய வேண்டும், எதை எடுத்துச் செல்ல வேண்டும், கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பாளர்களின் உரிமைகள் என்ன போன்ற அறிவுறுத்தல்களை அந்த அறிக்கை தெளிவாகக் கொண்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

 

https://www.bbc.com/tamil/sri-lanka-62106319

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் - இவர்களுக்கு கண் குருடு, கருத்தும் குருடு.

கொத்துக் கொத்தாக உயிர்கள் மரணிக்கையில், மக்கள் வீதிக்கு வந்து தடுக்க போராடியபோது அனைத்து வாசல்களையும் பொத்திக்கொண்டு இருந்தது மறந்து போய்விட்டதா..? 😷

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009யில் வட,கிழக்கு மக்களால் இப்படியொரு போராட்டத்தை ஏன் நடத்த முடியாமல் போனது என்ற ஆதங்கம் இன்னும் உள்ளது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

2009யில் வட,கிழக்கு மக்களால் இப்படியொரு போராட்டத்தை ஏன் நடத்த முடியாமல் போனது என்ற ஆதங்கம் இன்னும் உள்ளது .

"போராடும் அத்தனை பேரும் பயங்கரவாதிகள்" என ராணுவத்தினர் அறிவிப்பு செய்துவிட்டு, சுட்டுப் பொசுக்கி அழித்துவிட்டு போயிட்டே இருந்திருப்பான், சிங்களவன்.😌

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், வாயை பொத்திக்கொண்டு பாராமுகமாக இருந்திருப்பார்கள்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

2009யில் வட,கிழக்கு மக்களால் இப்படியொரு போராட்டத்தை ஏன் நடத்த முடியாமல் போனது என்ற ஆதங்கம் இன்னும் உள்ளது .
 

எங்களுக்கு என்றால் துவக்கையெல்லோ பாவித்திருப்பான். செத்தவர்கள் எல்லாம் புலிக் கணக்கில் சேர்த்திருப்பார்கள். என்றாலும் உங்களை போல் எனக்கும் உடன் தோன்றியது . இதுக்கு தான் மக்களை போராடக் கேட் டதோ என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

"போராடும் அத்தனை பேரும் பயங்கரவாதிகள்" என ராணுவத்தினர் அறிவிப்பு செய்துவிட்டு, சுட்டுப் பொசுக்கி அழித்துவிட்டு போயிட்டே இருந்திருப்பான், சிங்களவன்.😌

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், வாயை பொத்திக்கொண்டு பாராமுகமாக இருந்திருப்பார்கள்.

 

6 minutes ago, Hana said:

எங்களுக்கு என்றால் துவக்கையெல்லோ பாவித்திருப்பான். செத்தவர்கள் எல்லாம் புலிக் கணக்கில் சேர்த்திருப்பார்கள். என்றாலும் உங்களை போல் எனக்கும் உடன் தோன்றியது . இதுக்கு தான் மக்களை போராடக் கேட் டதோ என்று.

 

இது எங்களுக்கு நாங்களே சொல்லும் ஒரு சாட்டு ..மக்கள் ஒன்றிணைந்த போராட்டமாக இணைக்க தலைவரால் கூட முடியவில்லை என்பது தான் உண்மை 

  • Like 2
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

 

இது எங்களுக்கு நாங்களே சொல்லும் ஒரு சாட்டு ..மக்கள் ஒன்றிணைந்த போராட்டமாக இணைக்க தலைவரால் கூட முடியவில்லை என்பது தான் உண்மை 

உண்மை .
அப்பன் இல்லை என்றால் தெரியும் அப்பன் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

2009யில் வட,கிழக்கு மக்களால் இப்படியொரு போராட்டத்தை ஏன் நடத்த முடியாமல் போனது என்ற ஆதங்கம் இன்னும் உள்ளது .
 

உண்மை கசக்கும்.அம்புட்டுத்தான் நான் சொல்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

கொத்துக் கொத்தாக உயிர்கள் மரணிக்கையில், மக்கள் வீதிக்கு வந்து தடுக்க போராடியபோது அனைத்து வாசல்களையும் பொத்திக்கொண்டு இருந்தது மறந்து போய்விட்டதா..?

மக்கள் அழுதார்கள், மன்றாடினார்கள் தொண்டு நிறுவனங்களை, தங்களை விட்டுப்போக வேண்டாம் என்று. அவர்களுக்கு தெரிந்திருந்தது, தங்களுக்கு என்ன நிகழப்போகிறது என்பது. மக்களுக்கு தொண்டு செய்ய வந்தவர்கள்? கேட்கவில்லை கிளம்பிவிட்டார்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு. எல்லாம் முடிந்தபின் அறிக்கை விட்டார்கள். எல்லாம் தமது தேவைக்கேற்பவே செய்வார்கள். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.