Jump to content

போராட்டக்காரர்களை வடக்கிற்கு அழையுங்கள்

Recommended Posts

7 hours ago, Kapithan said:

தமிழர் சிங்களவர் பிரச்சனை எத்தனை நூற்றாண்டு காலத்தினை வரலாறாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நம்பிக்கையீனமே இன்றைய இனப்பிரச்சனைக்கான அடிப்படை.  ஒரிரவில் இதனைத் தீர்க்க முடியுமா ? அப்படி ஒரு தீர்வை முன்வைத்தாலும் அது நின்று நிலைக்குமா ? 

இத்தனை அழிவுகள் ஆகுதிகளைக் கண்ட பின்னரும் இந்தப் பிரச்சனையை இத்தனை இலகுவாகக் கையாளலாம் என சிந்திக்கும் வஞ்சகத்தனத்தை என்ன சொல்வது ? 

யாராவது குணா கவியழகனுக்குச் " உந்த ஆர்ப்பாட்டக்காறரை ஒருக்க யாழ்ப்பாணப் பக்கம் கொண்டுவந்த என்ன ? " என்று சொல்லியிருப்பினம். அதைக் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

கவியலகன் மீது எனக்கு எந்தகாழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவரை தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. 

அவர்மீதும் அவர் போன்றவர்கள் மீது எனக்கிருப்பது கோபம் மட்டுமே.  ஏனென்றால் இவர் போன்றவர்கள் ஏற்படுத்தும் சேதம் அப்படி. 

1) இவர்கள் மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள்

2) தற்பெருமைக்காகவும், பணத்திற்காகவும் தங்கள் எசமானாருக்கு விசுவாசமாக இருந்துகொண்டு எங்களுக்கு எங்கள் எல்லோரையும் முட்டாள்களாக நினைப்பது. 

(மேலே கடுமையாக எழுதும்போது யோசிக்காமல் எழுதினேன் என்று நினைக்கிறீர்களா?  நிச்சயமாக இல்லை.  எங்கள் எல்லோரையும் இத்தனை இலகுவாக முட்டாளாக்கலாம் என நினைக்Kறார்களே என்பதை நினைக்கும்போது கோபம் வருகிறது. அவ்வளவே) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணாவுக்கு யாழில் அவ்வளவாக வரவேற்பில்லை என்பது புரிகிறது. இதற்கு, அவரும் ஒரு காரணம்.

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

ஐயா,

நீங்கள் உங்களை போலவே எல்லாரையும் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகிறீர்கள்.

40 minutes ago, ரஞ்சித் said:

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

இதை கேட்கப்போய் எனக்கு காழ்புணர்ச்சி, என்னால் யுடியூப் வீடியோ போடமுடியாத வெம்பாரத்தில் எழுதுகிறேன் என்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

குணாவுக்கு யாழில் அவ்வளவாக வரவேற்பில்லை என்பது புரிகிறது. இதற்கு, அவரும் ஒரு காரணம்.

அவர் யாருக்காக வேலை செய்கிறார் அல்லது அவரது எஜமானர்கள் யாரென்று யாராவது இங்கு கூறினால் ஏனையவர்களுக்குப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். 

போராட்டத்திலீடுபடுபவர்களை வடக்கிற்கு அழைத்து கல்லெறிய வைப்பதனூடாக,  தமிழரை இராணுவத்தினருடனும் சிங்களவர்களுடனும் சிண்டு முடித்துவிடும் தேவை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே இவர் சேவகம் செய்கிறார். 

வடக்கு கிழக்கில் கலவரத்தை ஏற்படுத்தினால் அதனால் இலாபம் இந்தியாவுக்குத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

போராட்டத்திலீடுபடுபவர்களை வடக்கிற்கு அழைத்து கல்லெறிய வைப்பதனூடாக,  தமிழரை இராணுவத்தினருடனும் சிங்களவர்களுடனும் சிண்டு முடித்துவிடும் தேவை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே இவர் சேவகம் செய்கிறார். 

வடக்கு கிழக்கில் கலவரத்தை ஏற்படுத்தினால் அதனால் இலாபம் இந்தியாவுக்குத்தான். 

ஆர்ப்பாட்டாக்காரர்கள் வடக்கிற்கு வரும்போது தமிழர்கள் அவர்கள் மீது கல்லெறியவேண்டிய தேவை இல்லையே? அவர்கள் வரவழைக்கப்படுவதே தமிழர்களுக்காகத்தான் என்றால், ஏன் நாம் கல்லெறியவேண்டும்?

அடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்வெற்றிச் சின்னங்களை உடைக்கும்போது, அது அவர்களுக்கும் ராணுவத்திற்குமிடையிலான பிரச்சினையாக அல்லவா மாறும், தமிழர்கள் இதில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையே? 

குணாவின் இந்தியச் சார்பு நிலைப்பாடு நான் அறியாதது. ஆனால், அவரின் ஒரு சில காணொளிகளில் இந்தியா மீதும் விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக நினைவு. இதற்காக அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்று சொல்ல வரவில்லை.

அவர் இந்தியாவுக்குச் சார்பானவராக  இருக்கலாம், இனி அவதானித்தால் போயிற்று !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

(நான்  கூறியவை தொடர்பாக ) உங்கள்  புரிதலில் தவறு இருப்பதாக நினைக்கிறேன். 

ஆர்ப்பாட்டக்காறர்கள் வடக்கிற்கு வந்துதான் இராணுவ சின்னங்களை உடைக்க வேண்டிமென்பதில்லையே. அவர்கள் இலங்கையின் தற்போதைக்கான பிரச்சனைக்கான அடிப்படையைப் புரிந்துகொண்டார்களென்றால் அவர்கள் முதலில் தூக்கியெறிய வேண்டியது மகாநாயக்கர்களைத்தான். அதன் பின்னர்தான் இராணுவச் சின்னங்களை நோக்கிப் போக வேண்டும். 

இன்றுவரை, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆர்ப்பாட்டக்காறர்களோ அல்லது பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட  இலங்கையின் இன்றைய பிரச்சனைக்கான அடிப்படை இனப்பிரச்சனைதான் என எங்குமே கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக ராசபக்ஸ குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

"""நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்ற 25  ஆர்ப்பாட்டக்காறர்களில் ஒரு முஸ்லிமைத் தவிர மிகுதி 24 பேரும் சிங்களவர்கள். """"

நிலைமை இப்படி இருக்கையில் தழிழரை திரும்பவும் சிங்களத்தில் நம்பிக்கை வைக்கச் சொல்வதின் பின்னால் உள்ள காரணம்  என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இது உண்மைதான்.

1 hour ago, Kapithan said:

அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக ராசபக்ஸ குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

பெரும்பாலான சிங்களவர்கள் ராஜபக்ஷேக்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 74 வருடகால அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால், சிறிய பகுதியினரே. 

1 hour ago, Kapithan said:

"""நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்ற 25  ஆர்ப்பாட்டக்காறர்களில் ஒரு முஸ்லிமைத் தவிர மிகுதி 24 பேரும் சிங்களவர்கள். """"

இதற்குக் பெரும்பாலான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து தம்மை விலத்தியிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டங்களில் நாம் பங்கெடுக்கத் தேவையில்லை என்பதுதானே நமது நிலைப்பாடு. அப்படியிருக்கையில், அவர்கள் எம்மையும் அழைத்துப் போகக் காரணம் இருக்காதென்று நினைக்கிறேன். 

1 hour ago, Kapithan said:

நிலைமை இப்படி இருக்கையில் தழிழரை திரும்பவும் சிங்களத்தில் நம்பிக்கை வைக்கச் சொல்வதின் பின்னால் உள்ள காரணம்  என்ன ? 

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தால் அவர்களை நம்பமுடியாது. இனிமேலும் அது மாறும் என்றுச் சொல்ல முடியாது. சிலவேளை, புதிய தலைமுறைச் சிங்களவர்கள் புதிதாக யோசிக்கலாம் என்கிற நப்பாசைதான். இதுகூட, நடப்பதற்கான சாத்தியப்பாடு மிக மிகக் குறைவுதான். 

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

ஐயா,

நீங்கள் உங்களை போலவே எல்லாரையும் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகிறீர்கள்.

உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋

ஆண்பாலில் நம்பிக்கையா, பெண்பாலில் நம்பிக்கையா என்பதையும் ஒருக்காச் சொல்லிட்டுப் போறது...😉

7 hours ago, ரஞ்சித் said:

இது உண்மைதான்.

பெரும்பாலான சிங்களவர்கள் ராஜபக்ஷேக்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 74 வருடகால அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால், சிறிய பகுதியினரே. 

இதற்குக் பெரும்பாலான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து தம்மை விலத்தியிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டங்களில் நாம் பங்கெடுக்கத் தேவையில்லை என்பதுதானே நமது நிலைப்பாடு. அப்படியிருக்கையில், அவர்கள் எம்மையும் அழைத்துப் போகக் காரணம் இருக்காதென்று நினைக்கிறேன். 

கடந்த காலத்தை வைத்துப் பார்த்தால் அவர்களை நம்பமுடியாது. இனிமேலும் அது மாறும் என்றுச் சொல்ல முடியாது. சிலவேளை, புதிய தலைமுறைச் சிங்களவர்கள் புதிதாக யோசிக்கலாம் என்கிற நப்பாசைதான். இதுகூட, நடப்பதற்கான சாத்தியப்பாடு மிக மிகக் குறைவுதான். 

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை அவர்கள்தான் ஆரம்பிக்க வேண்டும். 

நாம் அவசரப்பட முடியாது. 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

ஆண்பாலில் நம்பிக்கையா, பெண்பாலில் நம்பிக்கையா என்பதையும் ஒருக்காச் சொல்லிட்டுப் போறது...😉

என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால் 

ஒன்றன்பால்

பலவின்பால் 

பசுவின்பால்

ஆட்டுப்பால்

தேங்காய்ப்பால்

மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்  என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால் 

ஒன்றன்பால்

பலவின்பால் 

பசுவின்பால்

ஆட்டுப்பால்

தேங்காய்ப்பால்

மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்  என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!

"அடி கள்ளி" ப்பாலைக் கூறவில்லைத்தானே  ? 😉

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.