Jump to content

மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?

  • சுரையா நியாசி
  • போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 
வைரல் படம்.

பட மூலாதாரம்,சுரையா நியாசி

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண்டிருந்தார்.

இந்த காட்சியின் வீடியோ வைரலாகப் பரவியதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பின்னணி என்ன?

தம்பியின் உடலுடன் அண்ணன்

எட்டு வயது சிறுவன் ஒருவன் , தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

உயிரிழந்த குழந்தையின் வயது 2. அவனது உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. தந்தை தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வண்டி தேடிச் சென்றிருந்தார்.

பூஜாராம் ஜாதவ், மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வண்டி கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் வண்டி இல்லை என்றும், வெளியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டனர் என்றார் பூஜாராம்.

வெளியில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பூஜாராம் பேசியபோது அவர்கள் 1500 ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர்.

பூஜாராம் ஜாதவ்

பட மூலாதாரம்,சுரையா நியாசி

படக்குறிப்பு,

பூஜாராம் ஜாதவ்

அதன் பிறகு மகனின் சடலத்துடன் வெளியே வந்த அவர் மருத்துவமனைக்கு வெளியே வண்டி கிடைக்காததால், நேரு பூங்கா அருகே இளைய மகனின் உடலை மூத்த மகனிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து சென்றார்.

நரோத்தம் மிஸ்ரா அறிக்கை

குல்ஷன் தனது தம்பி உடலை மடியில் வைத்தவாறு அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஊரிலிருந்து வந்தபோது பூஜாராமின் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததும், குழந்தையின் உடலை மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விசாரணை நடத்துவார். மாலைக்குள் விசாரணையை முடிக்கும்படி அவரிடம் கூறப்பட்டுள்ளது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சிவில் சர்ஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு சில உதவிகளை செய்துள்ளது.

"சந்தையில் வண்டிகளுக்கு பஞ்சர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறேன். குழந்தையின் உடல்நிலை எப்படி மோசமடைந்தது என்று தெரியவில்லை. முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினேன். ஆனால் பலனில்லை. பின்னர் இங்கே அழைத்து வந்தேன்,"என்று தந்தை பூஜாராம் ஜாதவ் கூறினார்.

பூஜாராம் ஜாதவ் குடும்பம்

ஜாதவ் குடும்பத்தை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், அவர்களை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றுவிட்டது.

பூஜாராம் ஜாதவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மனைவி அவரைப் பிரிந்து சில காலமாக தாய் வீட்டில் வசிக்கிறார். பூஜாராம்தான் இந்த குழந்தைகளை கவனித்து வந்தார். சரியான உணவு கிடைக்காத காரணத்தினால் குழந்தையின் உடல் நிலை மோசமடைந்து அதுவே இறப்பிற்கு காரணமாக அமைந்தது என அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.

குல்ஷன் தனது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி நகரின் கோத்வாலி காவல் நிலைய டவுன் இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங் ஜாதோனுக்கு தெரியவந்தது. அவர் அந்த இடத்திற்குச் சென்று, இருவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதே நேரத்தில், "இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பினோம்."என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ராகேஷ் ஷர்மா கூறுகிறார்.

பாஜக-காங்கிரஸ் மோதல்

இந்த சம்பவம் காரணமாக காங்கிரசும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

இந்த விஷயத்தில் அரசை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர் கமல்நாத், கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் ஆம்புலன்ஸ் பிரச்னைகள் குறித்து பல ட்வீட்களை பதிவுசெய்தார்.

இந்த விவகாரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதிலளிக்கவில்லை.

"மொரேனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாமல் அவர் ஒடிவிட்டார். சிவராஜ் அவர்களே, நீங்கள் எவ்வளவு ஓடுவீர்கள், எங்கு ஓடுவீர்கள், மக்கள் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்."என்று சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி கமல்நாத் கூறினார்.

"சவால்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து உண்மையை மறுக்கும் நீங்களும் உங்கள் அரசும் மேற்கொள்ளும் இந்தப்போக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ முறையையும் வெறுமையாகவும் உணர்வற்றதாகவும் ஆக்குகிறது," என்று அவர் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார்.

முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

இதற்குப் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் வழங்கப்பட்டது.

3,400 பேருக்கு ஒரு மருத்துவர்

இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மாநிலத்தில் 77 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 22 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்று எம்.பி மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய கவுன்சில் இந்த ஆண்டு மறுபதிவு செய்வதற்கான உத்தரவை அரசு வழங்கியது. கடைசி தேதி வரை, 22,000 டாக்டர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதற்கு முன்பு இருந்த ஆவணங்களின்படி 59,000 மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

3,278 சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 1,029 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1,677 மருத்துவ அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில சுகாதாரத் துறையின் நிலையை படம்பிடித்துக்காட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/india-62133583

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

வட மாநிலங்களில், இப்படி அடிக்கடி நடைபெறும்.
சென்ற வருடம் ஒருவர்… தனது மகளுடன், இறந்த தனது மனைவியை
தோளில் வைத்துக் கொண்டு… 12 கிலோ மீற்றர் நடந்து வந்திருகிறார்கள்.
மாட்டுக்கு… அம்புலன்ஸ் சேவை நடத்தும் மாநிலத்தில், மனிதனின் மதிப்பு இதுதான்.

  • Like 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

பாரதீய ஜனதா தலைமையில், இந்தியா எனும் உலகின் முதலாவது மக்கள் தொகை கொண்ட நாடு, இந்துத்துவா நோக்கி மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. 

தனது இந்துமத அடிப்படைவாதக் கொள்கைகளுக்காக இந்திய மிகவும் பாரதூரமான விலையினைச் செலுத்தப் போகிறது. இன்று இலங்கையில் நடப்பதுபோல, மிக விரைவில் இந்திய முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளுக்கெதிராக கிளர்ந்தெழச் சந்தர்ப்பம் இருக்கிறது. பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

உலக முஸ்லீம்களுக்கு மதத்தை முதன்மைப்படுத்தி பல நாடுகள் இருக்கும் போது இந்துக்கள் தங்கள் மதத்தை  முன்னிலைப்படுத்தி ஒரு நாட்டை வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

அது அமெரிக்கனுக்கு தெளிவாக புரிந்தபடியால்தான் இவர்களையிட்டி பெரிதாக அலட்டிக்கொள்வதில்ல. 

2 hours ago, குமாரசாமி said:

உலக முஸ்லீம்களுக்கு மதத்தை முதன்மைப்படுத்தி பல நாடுகள் இருக்கும் போது இந்துக்கள் தங்கள் மதத்தை  முன்னிலைப்படுத்தி ஒரு நாட்டை வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

இந்துக்கெளுக்கென்று ஒரு நாடென்ன ஒன்பது நாடுகள் இருக்கலாம். அதில் பிரச்சனையே இல்லை. ஆனால் இவர்கள் இந்துத்துவம் என்கின்ற பெயரில் வர்ணாசிரம தர்மத்தையல்லோ நிறுவ முயற்சிக்கிறார்கள். 

ஆனால் இவர்கள் தங்களைச் சூழ உள்ளவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவிற்கு மனிதனை மோசமான நிலையில் வைத்திருக்கும் இந்தியா உலகத்தின் தலைவராக  வரும் என்பது முடியாத ஒன்று.இந்தியாவில் மனிதனுக்கு மதிப்பு இல்லை. அது இந்த கட்சி  இப்போது ஆளும்போது என்று இல்லை முன்பு தொடக்கம் இந்தியா அப்படி தானே இருந்து வருகிறது.
அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.அவர்கள் Kafir களுக்கு எதிரான போரை எப்போதே தொடங்கிவிட்டனரே.அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

9 hours ago, குமாரசாமி said:

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

சூட்கேசுக்குள் கடவுள் படத்தை ஒளித்து வைத்து வணங்கும் நிலைமை சில முஸ்லிம் நாடுகளில் இருப்பதாக கேள்விபட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்துக்கெளுக்கென்று ஒரு நாடென்ன ஒன்பது நாடுகள் இருக்கலாம். அதில் பிரச்சனையே இல்லை. ஆனால் இவர்கள் இந்துத்துவம் என்கின்ற பெயரில் வர்ணாசிரம தர்மத்தையல்லோ நிறுவ முயற்சிக்கிறார்கள். 

ஆனால் இவர்கள் தங்களைச் சூழ உள்ளவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? 

மேற்குலகமும் மதத்தை அடிப்படையாக வைத்து தான்  போர்களை நடத்தியது.நடத்துகின்றது.

அந்நியர்கள்  ஆசிய நாடுகள் மீதான  படையெடுப்பின் பின்னர் நடந்த மத அட்டூளியங்கள் பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

1) மேற்குலகமும் மதத்தை அடிப்படையாக வைத்து தான்  போர்களை நடத்தியது.நடத்துகின்றது.

2) அந்நியர்கள்  ஆசிய நாடுகள் மீதான  படையெடுப்பின் பின்னர் நடந்த மத அட்டூளியங்கள் பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

1)இப்போதும் மதத்தை அடிப்படையாக வைத்துத்தானா போர்களை நடாத்துகிறார்கள் ? இல்லை என்பது என் அபிப்பிராயம்.

2) என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர்கள் அட்டூழியம் புரிந்தார்கள். அதனால் நாமும் புரியலாம். இரண்டும் சரிசமமாக ஆகிவிடும் என்கிறீர்களா ? 

இல்லை, மற்றவர்கள் விட்ட பிழைகளில் இருந்து நாம் பாடம் படிப்போம் என்கிறீர்களா? 

புரியவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த மதவாதிகளாலேயே இலங்கையில் தமிழ்மக்கள் ஒரு இன அழிவைச் சந்தித்தார்கள். இலங்கை சிங்கள - பெளத்த நாடு எனும் கொள்கையினாலேயே மற்றைய இனங்களையும் மதங்களையும் அழிக்கலாம் என்கிற எண்ணக்கரு அவர்களுக்குப் பிறந்தது. தொடர்ந்தும் அந்த எண்ணக்கருவில் பயணிப்பதாலேயே மற்றைய இனங்கள் மீதும் மதங்கள் மீதும் சகிப்புத் தன்மையின்றி கற்காலத்து மிருகங்கள் போல வாழ அவர்களால் முடிகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல இலங்கையின் பெளத்தம்.

மதவாதம் தலைக்கேறுவதால்த்தான் நாகரீகம் காணாமற்போகிறது.

இந்தியாவில் நடப்பதும் இதுதான். இந்துமதத்திற்கும், அதன் குருக்களும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஏனைய மதங்கள் மீது இவர்களால் மிக இலகுவாக ஆக்கிரமிப்பையும், அக்கிரமங்களையும் செய்ய ஏதுவாகி விடுகிறது.

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குலகு கிறீஸ்த்தவ மதத்தினை முன்னிறுத்தியே அக்கிரமிப்புக்களைச் செய்தது, போர்களை நடத்தியதென்பதை நான் மறுக்கவில்லை. உண்மையும் அதுதான். சிலுவை யுத்தம் கிறீஸ்த்தவர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டதும் வரலாறு. 

ஆனால், இன்றைய போர்கள் மதத்தினால் தூண்டப்பட்டவையல்ல. பொருளாதார, அரசியல்க் காரணங்களுக்காகவே இன்றைய போர்கள் நடக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்களில் ஜப்பானியர்களைத் தவிர மற்றைய எல்லோரும் கிறீஸ்த்தவர்களே. உக்ரேனும் ரஸ்ஸியாவும் ஒரே மதத்தையே பின்பற்றுகின்றன. 

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும். வேறு சொல்வதற்கில்லை. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.அவர்கள் Kafir களுக்கு எதிரான போரை எப்போதே தொடங்கிவிட்டனரே.அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

இஸ்லாம் மதம் என்னவோ அமைதியான மதம் தான். ஆனால் பின்பற்றுபவர்கள் அதனை மிகவும் தவறான வழியில் புரிந்துகொண்டு பின்பற்றுவதாலேயே பிரச்சினை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இன்றிருக்கும் பிரச்சினை நாம் அறியாதது அல்லவே. அதேபோல இந்தியாவும் ஆகிவிடக் கூடாதென்பதுதான் எனது கருத்து. 

இஸ்லாமோ, இந்து மதமோ, கிறீஸ்த்தவமோ மக்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டுமேயன்றி, மக்களை விலங்குகளாக மாற்றக் கூடாது.

மற்றும்படி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நான் ஆதரவென்று நீங்கள் எப்படி முடிவிற்கு வந்தீர்களோ தெரியவில்லை. ஏனென்றால், நாம் அப்படியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

கிழக்குப் பாக்கிஸ்த்தானும் மேற்குப் பாக்கிஸ்த்தானும் பிறந்ததற்கு மதம் ஒரு காரணம் இல்லை என்று நினைக்கிறேன். 

மேற்குப் பாக்கிஸ்த்தானிய பஷ்டூன், பஞ்சாபி, சிந்தி இனக்குழுக்கள் கிழக்குப் பாக்கிஸ்த்தானிய வங்காளிகள் மீது திணித்த இனரீதியிலான அடக்குமுறையே கிழக்குப் பாக்கிஸ்த்தானின் சுதந்திர எழுச்சிக்கு வித்திட்டு, ஈற்றில் இந்தியாவின் துணையுடன் வெற்றியும் கண்டு பங்களாதேஷ் எனும் சுதந்திர நாடாக மாறியது என்று நினைக்கிறேன். 

ஆனால், இவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள்தான். ஆகவேதான் இது மத ரீதியிலான போர் இல்லை என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது இந்த கட்சி  இப்போது ஆளும்போது என்று இல்லை முன்பு தொடக்கம் இந்தியா அப்படி தானே இருந்து வருகிறது.
அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.

நீங்கள் கூறுவதால் நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றிருக்கும் உலக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான முக்கிய காரணங்கள் ஒன்று பாலஸ்த்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு என்று நான் எண்ணுகிறேன். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பிற்கு மேற்குலகம் கொடுக்கும் ஆதரவும், இந்த ஆக்கிரமிப்பினை தடுக்கமுடியாது முழு இஸ்லாமிய உலகும் இருக்கும் கைய்யறு நிலையே இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகு முழுதும் பரவக் காரணமாகிவிட்டது. தாம் மத ரீதியாக அடக்கப்படுகிறோம் எனும் உணர்வே அவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றியிருக்கிறது. ஆனால் என்ன, தமது எதிர்வினையினை அவர்கள் இன்னொரு நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டமாக ஆரம்பித்த அவர்களின் போராட்டம் இன்று அடிப்படைவாதிகளால் கடத்தப்பட்டு மதத்தினை மட்டுமே முன்னிறுத்தி மிருகங்கள் போல செயற்பட வைக்கிறது.

இந்தியாவிலும் நிலைமை கிட்டத்தட்ட இதேதான். பாக்கிஸ்த்தான் பிரிந்தபோது பல கோடி முஸ்லீம்கள் இந்தியாவிலேயே இருந்துவிட்டார்கள். புதிய இஸ்லாமியக் குடியரசான பாக்கிஸ்த்தானுக்குள் வாழவேண்டும் என்கிற மத ரீதியிலான உணர்வு அன்று அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால், சுதந்திரத்தின் பின்னரான இந்தியாவின் செயற்பாடே இன்று அவர்களை மத ரீதியில் சிந்திக்க வைக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் காஷ்மீரில் இந்திய ராணுவம் முஸ்லீம்கள் மீது செய்துவரும் மனிதவுரிமை மீறல்களும் அட்டூழியங்களும். அங்கு வாழும் இஸ்லாமிய மக்களின் எழுச்சியுணர்வினை தமக்குச் சாதகமாக்கி, அங்கு வாழும் இந்துக்களை குறிவைத்து இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதால், இந்தியாவும் தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வருகிறது.

ஈழத்தில் தமிழர்கள் தாக்கப்படும்போது அவ்வபோது தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ச்சியடைவதுபோல, காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதல்களால் இந்தியாவினுள் வாழும் முஸ்லீம்கள் கொதிக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சியின் காஷ்மீர் தொடர்பான அண்மைய கொள்கைகள் இதனை மேலும் கொதிநிலைக்கு உயர்த்தியிருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் ன்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.

Kaipulla Meme's - Home | Facebook

இது என்ன... புதுசா இருக்கு...... 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பெளத்த மதவாதிகளாலேயே இலங்கையில் தமிழ்மக்கள் ஒரு இன அழிவைச் சந்தித்தார்கள். இலங்கை சிங்கள - பெளத்த நாடு எனும் கொள்கையினாலேயே மற்றைய இனங்களையும் மதங்களையும் அழிக்கலாம் என்கிற எண்ணக்கரு அவர்களுக்குப் பிறந்தது. தொடர்ந்தும் அந்த எண்ணக்கருவில் பயணிப்பதாலேயே மற்றைய இனங்கள் மீதும் மதங்கள் மீதும் சகிப்புத் தன்மையின்றி கற்காலத்து மிருகங்கள் போல வாழ அவர்களால் முடிகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல இலங்கையின் பெளத்தம்.

மதவாதம் தலைக்கேறுவதால்த்தான் நாகரீகம் காணாமற்போகிறது.

இந்தியாவில் நடப்பதும் இதுதான். இந்துமதத்திற்கும், அதன் குருக்களும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஏனைய மதங்கள் மீது இவர்களால் மிக இலகுவாக ஆக்கிரமிப்பையும், அக்கிரமங்களையும் செய்ய ஏதுவாகி விடுகிறது.

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குலகு கிறீஸ்த்தவ மதத்தினை முன்னிறுத்தியே அக்கிரமிப்புக்களைச் செய்தது, போர்களை நடத்தியதென்பதை நான் மறுக்கவில்லை. உண்மையும் அதுதான். சிலுவை யுத்தம் கிறீஸ்த்தவர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டதும் வரலாறு. 

ஆனால், இன்றைய போர்கள் மதத்தினால் தூண்டப்பட்டவையல்ல. பொருளாதார, அரசியல்க் காரணங்களுக்காகவே இன்றைய போர்கள் நடக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்களில் ஜப்பானியர்களைத் தவிர மற்றைய எல்லோரும் கிறீஸ்த்தவர்களே. உக்ரேனும் ரஸ்ஸியாவும் ஒரே மதத்தையே பின்பற்றுகின்றன. 

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும். வேறு சொல்வதற்கில்லை. 

உண்மை, மதம் பிடித்து மீண்டு வந்த நாடுகள் தற்போது எதுவுமே இல்லை. மேலை நாடுகள் அரம்பத்திலேயே மதத்தையும் அரசியலையும் கலக்காமல் வேறுபடுத்தியதால் தப்பி விட்டார்கள். அமெரிக்காவில் மீண்டும் மதவாதிகளின் பிடி கொஞ்சம் அதிகரித்து வருகிறது, அல்லது வருவது போன்ற ஒரு தோற்றம் வருகிறது  ஆனாலும் ஒரு கட்டத்துக்குமேல் இங்கு போகமுடியாது என்று நினைக்கிறேன். மற்ற மத நாடுகளை விட  இந்தியாவில் நடப்பதில் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது, இங்கு மதரீதியான இணைவதுடன், ஒரு குறிப்புட்ட பிரிவினர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களின் கீழ் மீண்டும் வர்ணாசிரம தர்மத்தை கொண்டுவரும் முயற்சி முழு மூச்சாக நடைபெறுகிறது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும்.

அது தான் சரியானது. ஆனால் முஸ்லிம் மதம் மட்டுமே என்று முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் மதத்தை பின்பற்றாதோரை ஒடுக்குவதும், அல்லாவை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதும், இவர்கள் சிறுபான்மையாக இருக்கின்ற மற்ற மக்களின் நாடுகளில் முஸ்லிம்கள்  நாங்கள் ஒடுக்கபடுகின்றோம் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்று கேட்பதையும் தான் காணகூடியதாக உள்ளது.

17 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன... புதுசா இருக்கு...... 🤣

😂

என்ன செய்வது அல்லாகு அக்பர் என்று சொல்லி அமைதியான செயல்களை செய்வார்கள் என்று பிரசாரம் செய்து தமிழ் கவீர்களை நம்பவைத்துள்ளார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2022 at 00:16, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர்கள் அட்டூழியம் புரிந்தார்கள். அதனால் நாமும் புரியலாம். இரண்டும் சரிசமமாக ஆகிவிடும் என்கிறீர்களா ? 

நான் அறிய புலம்பெயர் தேசங்களில் கூடுதலாக இலங்கை தமிழர் என்றால் ஒரு நல்ல மரியாதை உண்டு. இருந்தும் என்ன பலன் நாடற்றவர்கள்.

இதுவும் உங்களுக்கு புரியாது. புரியக்கூடாது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் அறிய புலம்பெயர் தேசங்களில் கூடுதலாக இலங்கை தமிழர் என்றால் ஒரு நல்ல மரியாதை உண்டு. இருந்தும் என்ன பலன் நாடற்றவர்கள்.

இதுவும் உங்களுக்கு புரியாது. புரியக்கூடாது. :cool:

இந்துத்துவ இந்தியா தனிநாடு பெற்றுத்தரும் என்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

இலங்கை,இலங்கைத்தமிழர் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது. இலங்கை தமிழர்கள் ஆரம்பத்தில் தனிநாடு கேட்கவில்லை. தனிநாடு கேட்க உந்தப்பட்டவர்கள்.பிரிவினையை ஆரம்பித்ததே சிங்கள இனவாதிகள் தான். தமிழர்கள் அல்ல.

உலகத்தில் நடக்கும் நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகளில் ஈழத்தமிழர் பிரச்சனை முற்றிலும் வேறு பட்டது. மற்ற நாட்டு பிரச்சனைகளுடன் எமது நாட்டு பிரச்சனையை எள்ளளவும் ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்துத்துவ இந்தியா தனிநாடு பெற்றுத்தரும் என்கிறீர்களா? 

2009 க்கு பின் தனிநாடு என்ற விடயமே சர்வதேச அளவில் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு.

ஆனால் நான் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்  என்பதை உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின் தனிநாடு என்ற விடயமே சர்வதேச அளவில் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு.

ஆனால் நான் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்  என்பதை உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன்.

அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2022 at 19:40, ரஞ்சித் said:

தனது இந்துமத அடிப்படைவாதக் கொள்கைகளுக்காக இந்திய மிகவும் பாரதூரமான விலையினைச் செலுத்தப் போகிறது

உண்மைதான், இவர்களின் அதிகார எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அளவே இல்லை. வடக்கில் தாங்கள் நினைப்பதை சாதிக்க கூடியதாக இருப்பதால் தெற்கிலும் காலூன்ற நினைக்கிறார்கள். 

நான் இங்கே இணைத்துள்ள கட்டுரையை நேரம் இருந்தால் பாருங்கள். 

https://tribune.com.pk/story/2365732/tamil-nadu-another-kashmir-for-india?amp=1

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.