Jump to content

நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி!


Recommended Posts

நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி!

தினமும் காலையில் ஈரமான புல்வெளியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் நாம் நடப்பது என்பது எல்லோர் வாழ்விலும் ஏற்படும் ஒரு அனுபவமாகும். இந்த `நடக்கும்' தியானத்தை நாம் தினமும் செய்து வந்தாலே போதும். நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம்.

நடப்பது என்ற செயல் ஒரு உடற்பயிற்சி தொடர்புடைய செயல் ஆதலால் நம்முடைய தினசரி பழக்கங்களுடன் இதையும் நாம் சுலபமாக நுழைத்து விடமுடியும்.

தினமும் சில மைல்கள் நடக்க வேண்டுமா? கீழ்வரும் ஒரு 10 வழிகளை கடைபிடியுங்கள் :

முதலில் அனுமதி பெறுங்கள் : நீங்கள் இதுவரை உடற்பயிற்சியோ அல்லது நடப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்யாதவராகவோ இருந்தால், உங்கள் மருத்துவரை ஆலோசியுங்கள். அவரிடம் உங்கள் ஆரோக்கியத்தை முதலில் `செக்-அப்' செய்யுங்கள். மேலும் உங்கள் மருத்துவரிடம், தினமும் சில மைல்கள் நீங்கள் நடக்கப்போகும் திட்டத்தை கூறுங்கள்.

ஒரு ஒப்பந்தம் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள் : அதாவது எவ்வளவு தூரம், எங்கே, எப்போது, எவ்வளவு நேரம் நடக்கப்போகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் அடைய விரும்புவது என்ன போன்றவைகளை எழுதி, அதனை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் லட்சியங்களை அடைந்து விட்டீர்களா? நீங்களே உங்களுக்கு பரிசு கொடுத்து கொள்ளுங்கள். அதாவது புதிய ஷு - ஜோடிகளை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது ஒரு புதிய `ட்ராக் - சூட்' வாங்கிக் கொள்ளுங்கள்.

நல்ல `ஷு'வை தேர்ந்தெடுங்கள் : போக்குவரத்திலேயே `நடை' தான் மிகவும் மலிவான ஒன்றாகும். ஆனால் இதற்கும் கொஞ்சம் செலவு செய்துதான் ஆக வேண்டும். காயம்படாமல் இருக்கவும், நடையை மகிழ்ச்சியாக்கவும் நல்ல ஜோடி `ஷு'க்களை வாங்குங்கள். அத்லெடிக் ஷு எல்லாமே இதற்கு ஒத்து வந்தாலும், நடைக்கென்றே பிரத்யேகமான ஷுக்கள் இப்போது கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தலாம்.

நடைப் பயிற்சியை துவங்குவதற்கு முன் : கை கால்களை நீட்டி, மடக்கி, சிறு சிறு பயிற்சிகளை செய்து தசையை இலகுவாக்க வேண்டும். உடலை வெதுவெதுப்பாக்கும் இதுபோன்ற `வார்ம்-அப்' (நர்ம்-உப்) பயிற்சி செய்தால், காயம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். நடையைத் துவங்கும்போது சாதாரணமாக நடப்பதைவிட சற்றே மெதுவாக நடைபோடத் துவங்குங்கள். மூச்சை சாதாரணமாக விடுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியே விடும்போதும் எவ்வளவு அடி நடக்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். இதை தினமும் செய்வதன் மூலம் உங்கள் கால்களையும், தசைகளையும் இப்பயிற்சிக்கு நீங்கள் தயார் படுத்தலாம்.

இப்பயிற்சியை துவங்கிய 2-வது வாரத்திலிருந்து, நாள் முழுதும் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் சிறிய சிறிய நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நடக்கும்போது நன்றாக நேராக நிமிர்ந்து நடங்கள். தோள்களை இலகுவாக வைத்திருங்கள். கைகளை இயல்பாக ஆட்டியபடியே நடக்கலாம். உங்கள் அடிமுதுகு நேராக இருக்க - அடிவயிற்றை சற்றே எக்கி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியை துவங்கிய சில நாட்களுக்கு ஒரே இடம், ஒரே நேரம் என்பதை மாற்ற வேண்டாம். இந்தப் பயிற்சி உங்களுக்கு பழக்கமான பிறகு, பூங்கா, புல்வெளி, மேல்மாடி, கடற்கரை என்று நீங்கள் நடக்கும் இடத்தை மாற்றிக் கொண்டே போகலாம். கூடிய வரையிலும் சாலைகளில் `நடைப்பயிற்சி' செய்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்தாலும், எதிர் வரும் வண்டிகளின் திசையில் நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாலை சாய்ந்து இருட்டில் `வாக்கிங்' போகும்போது, கையில் டார்ச்சுடனோ அல்லது ஒளியை பிரதிபலிக்கும் உடைகளையோ அணிந்து கொள்வது நலம்.

இந்தப் பயிற்சியினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிந்து கொள்ள எவ்வளவு தூரம், எவ்வளவு நிமிடம் நடக்கிறீர்கள் என்பதை எழுதி வாருங்கள். நடக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையோ, அல்லது நீங்கள் பார்த்ததையோ எழுதி வந்தீர்களானால் இப்பயிற்சியை தொடர்ந்து நீங்கள் செய்ய உற்சாகம் ஏற்படும்.

உடல் விளைவுகளை கவனியுங்கள் : முதலில் நீங்கள் நடக்கும்போது, உங்களின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளும். அல்லது சிலருக்கு சோர்வு கூட ஏற்படும். இதனால் ஒன்றும் இல்லை. உங்களின் இந்த புதிய பயிற்சிக்கு உடல் அமைப்புகள் தங்களை தயார் செய்து கொள்கிறது என்று அர்த்தம். ஆனால் எங்காவது `வலி' ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

என்ன வயதாயிருந்தாலும் உங்களின் உடல்நிலை எவ்வாறாக இருந்தாலும், நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான ஆனால் ஆரோக்கியம் காக்கும் பயிற்சியாகும். உங்களுடைய பலத்தை பராமரிக்கவும், அதிகரிக்கவும் `நடைபயிற்சி' போன்ற ஒரு சாதாரணமான பயிற்சி வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தகவல்...

நான் தினமும் சுமார் ரெண்டு மணித்தியாலங்கள் வோக்கிங் செய்வேன். பெரிய, பெரிய விடயங்களை எல்லாம் யோசிப்பது, முக்கியமான தீர்மானங்களை எல்லாம் எடுப்பது வோக்கிங் செய்யும் போதுதான். இதை வோக்கிங் செய்தல் என்று சொல்வதை விட தியானம் செய்தல் என்று கூறலாம். சிலவேளைகளில் காதுகளில் ஐபொட்டை கொழுவுவேன். ஆனால், அடிக்கடி ஐபொட்டை கொழுவுவதில்லை. இது எமது சிந்தனையாற்றலை மழுங்கடித்துவிடும். ஆமிக்காரன் ரோந்துக்கு போவது மாதிரி தினமும் லெப், ரைட் அடித்துக்கொண்டு போய்க்கொண்டு இருப்பன். வோக்கி போட்டு வந்தால் வாழ்க்கையில் ஏதோ சாதித்து விட்ட மாதிரி ஒரு பீலிங் வரும். போகாட்டிக்கு எதையோ செய்யாத மாதிரி ஒரு தவிப்பு வரும்.. வோக்கிங் செய்யேக்க நாம் ஆகவும் எம்மை மறந்த நிலையில் இருக்க கூடாது. சுற்றும் முற்றும் என்ன நடக்கின்றது என்பதையும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாய் பீ, மற்றும் மாட்டுச் சாணத்தினுள் காலை வைக்க வேண்டி வரும். இதைவிட விபத்துக்களிலும் சிக்க வேண்டி வரும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.