Jump to content

இலங்கை நெருக்கடி: "கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்" - ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: "கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்" - ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

24 நிமிடங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

 

படக்குறிப்பு,

இலங்கை பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்ளும் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

'பதில் ஜனாதிபதி' (Acting President) ஆக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்களின் தொகுப்பு இதோ.

1. இலங்கை அரசியலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால், 'பதில் ஜனாதிபதி' ஆக பதவி வகிக்கும் இந்த குறுகிய காலத்திற்குள், மிக முக்கிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

2. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் முழுமையாக அமல்படுத்த எதிர்பார்க்கின்றேன். அதற்காக நாடாளுமன்றத்திற்கு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான பின்புலத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.

3. நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

4.அமைதி வழி போராட்டத்தை 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், சிலர் வன்முறைகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள். எதிர்வரும் வாரம் புதிய ஜனாதிபதி தெரிவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சிலர் முயற்சித்து வருவதாக அறிகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமாக வாக்களிக்கும் பின்புலத்தை நான் ஏற்படுத்திக் கொடுப்பேன். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை.

5. ஜனநாயகத்தை மூழ்கடித்து, பாசிசவாத கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை தீக்கிரையாக்கும் குழுக்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்தின் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களை இந்த குழுக்களே சூறையாடின. ராணுவத்தின் 24 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உண்மையான போராட்டக்காரர்கள் இவ்வாறு செயற்பட மாட்டார்கள்.

 

ரணில் விக்ரமசிங்க

6. உண்மையான போராட்டக்காரர்களுடன் இணைந்து, ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகளுக்கு நான் இடமளிக்க போவதில்லை. ஆதரவு வழங்க போவதில்லை. அரசியலமைப்புக்கு வெளியில் செயற்பட மாட்டேன்.

7. சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடையுமாக இருந்தால், அது எமது பொருளாதாரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

9. எரிபொருள், மின்சாரம், நீர்விநியோகம், உணவு பொருள் விநியோகம் ஆகியன தடைப்படக்கூடும். இந்த அபாயகரமான நிலைமையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

10. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி, போலீஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளின் தலைமையிலான விசேட குழுவொன்றை நான் ஸ்தாபித்துள்ளேன். அரசியல் அழுத்தங்கள் இல்லாது, சுயாதீனமாக செயற்படுவதற்கான சுதந்திரத்தை நான் வழங்கியுள்ளேன்.

11. சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் உடனடியாக பொது இணக்கப்பாடொன்றிற்கு வர வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

12. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

13. பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, முக்கியமான இரண்டு தீர்மானங்களை எடுக்கின்றேன். ஜனாதிபதியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'அதிமேதகு' என்ற வசனத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்கின்றேன். அதேபோன்று, ஜனாதிபதி கொடியை ரத்து செய்கின்றேன். நாடொன்றிற்கு 'தேசிய கொடி' மாத்திரமே இருக்க வேண்டும். ஒரு கொடியின் கீழ் நிழலை பெற்று நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62180292

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

13. பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, முக்கியமான இரண்டு தீர்மானங்களை எடுக்கின்றேன். ஜனாதிபதியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'அதிமேதகு' என்ற வசனத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்கின்றேன். அதேபோன்று, ஜனாதிபதி கொடியை ரத்து செய்கின்றேன். நாடொன்றிற்கு 'தேசிய கொடி' மாத்திரமே இருக்க வேண்டும். ஒரு கொடியின் கீழ் நிழலை பெற்று நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

ரணில் 13 ஐ அமுல்படுத்திப்போட்டாரா.!!!!
இந்த நடவடிக்கைகளால் சிறிலங்காவின் பொருளாதாரம் நிமிருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

ரணில் 13 ஐ அமுல்படுத்திப்போட்டாரா.!!!!
இந்த நடவடிக்கைகளால் சிறிலங்காவின் பொருளாதாரம் நிமிருமா?

இல்லை 1-13 விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறும் பானைக்குள் அகப்பையை வைத்து கிண்டிக்கொண்டு மக்களை பேய்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.......இப்படியே காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே போக பிரச்சினைகள் தீராது ஆனால் மக்கள் வாழப் பழகிவிடுவார்கள்..........!  😴

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அமைதி வழி போராட்டத்தை 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆஹ்ஹா ..... சொல்கிறார் கேளுங்கோ, நம்பாதீங்கோ! சாத்தான் வேதம் அப்படித்தான் இருக்கும்.

9 hours ago, ஏராளன் said:

ஜனநாயகத்தை மூழ்கடித்து, பாசிசவாத கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை தீக்கிரையாக்கும் குழுக்கள் இருக்கின்றன.

அவர்கள் பாவம்! அவர்களை ஒன்றும் சொல்லாதீங்கோ. மக்களை கொலை செய்து, கொள்ளை அடித்து, சொத்துக்களை கொழுத்தியவர்களுக்கு மாலையும், மரியாதையும் கொடுத்து ஊக்குவித்தவர்கள் தாங்கள் தாமே! பின் எப்படி குறை சொல்லலாம்? அவர்கள் தாங்களாகவே இதை செய்தார்களா? எல்லாம் பழக்க தோஷம். சன்மானத்தை, தேச பக்தன் விருதை, பாராட்டை எதிர்பார்த்து செய்துள்ளார்கள். ஒரு வித்தியாசம்! அன்று இதனால் பாதிக்கப்பட்டது தமிழர் மகிழ்ந்தீர்கள், இன்று அது தன்னைத்தானே தாக்கிக்கொள்கிறது, தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கிறீர்கள் குறையும் சொல்கிறீர்கள், திருப்பி தாக்குவோம் என்கிறீர்கள், மக்கள் குழம்பிபோயுள்ளார்கள் உங்களால். உங்கள் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக் கொடுத்ததற்கு எங்கள் நன்றிகள் உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2022 at 04:08, suvy said:

சும்மா வெறும் பானைக்குள் அகப்பையை வைத்து கிண்டிக்கொண்டு மக்களை பேய்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.......இப்படியே காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே போக பிரச்சினைகள் தீராது ஆனால் மக்கள் வாழப் பழகிவிடுவார்கள்..........!  😴

அடுத்த தேர்தல் வரும் நாமல் ராஜபக்சா ஜனாதிபதியா  வந்தாலும்   வருவார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2022 at 13:57, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: "கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்" - ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

இவ்வளவு தீர்க்கமான சிந்தனையுடையவர்  2009ல் சிங்களை கொடியை சம்பந்தரிட்டை குடுத்து ஆட்டச்சொல்லியிருக்கக்கூடாது. முதல்லை சண்டை உருவாக காரணமான பிரச்சனையளை தீர்க்க முயற்சி செய்திருக்கவேணும்

சிங்க கொடியை உயர்த்திப்பிடித்திருக்கும் சம்பந்தன்! – eelamview

Edited by குமாரசாமி
தொழில் நுட்ப கோளாறு.😁
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2022 at 21:57, ஏராளன் said:

முக்கியமான இரண்டு தீர்மானங்களை எடுக்கின்றேன். ஜனாதிபதியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'அதிமேதகு' என்ற வசனத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்கின்றேன். அதேபோன்று, ஜனாதிபதி கொடியை ரத்து செய்கின்றேன்

அதே போன்று அரசியலும் வேண்டாம் என்று கிளம்பினீர்களென்றால், போராட்டக்காரரும் வீடு போக வசதியாக இருக்கும். உங்களை வீட்டுக்கு அனுப்பாமல் தாங்கள் வீடு போவதில்லை என்று காத்திருக்கிறார்கள். பாவம் அவர்கள், வாழ வேண்டிய பிள்ளைகள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.