Jump to content

ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது.

தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் தீயில் இருந்து சுமார் 2,300பேர் வெளியேற வேண்டியிருந்தது.

டோரெமோலினோஸ் கடற்கரையில் விடுமுறைக்கு வருபவர்கள் மலைகளில் பெரிய புகை மூட்டங்களைக் கண்டனர், அங்கு பல விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துகின்றன.

அங்குள்ள தீ மற்றும் போர்டியாக்ஸுக்கு சற்று தெற்கே ஏற்பட்ட தீ, கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) நிலத்தை அழித்துவிட்டது. சுமார் 3,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய் முதல், போர்த்துகலில் வெப்பநிலை 47 செல்சியஸ் ஆகவும், ஸ்பெயினில் 40 செல்சியஸ்க்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. இரு நாடுகளிலும் 300க்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291345

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ், ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ

ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Wildfires rage in France and Spain as heatwaves sweep Europe – The Irish  Times

கோடை வெப்பம் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Europe heatwave: Thousands escape wildfires in France, Spain and Greece -  BBC News

பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் இருந்து சுமார் 14,000 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர். அங்கு 1,200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். 10000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் காட்டுத்தீயில், மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
 

https://www.virakesari.lk/article/131638

Link to comment
Share on other sites

ஜரேப்பாவில் காட்டுத் தீயும் அதிக வெப்பமும், அவுஸ்ரேலியாவில் அடிக்கடி மழையும் வெள்ளமும். பொதுவாக அவுஸில் காட்டு தீயே அதிகம் ஏற்படுவதுண்டு, ஆனால் இப்பொழுது அடிக்கடி மழையும் வெள்ளமும்.. காலநிலை மாற்றம் காரணமாக இருக்கும் என தோன்றுகிறது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பொதுவாக அவுஸில் காட்டு தீயே அதிகம் ஏற்படுவதுண்டு, ஆனால் இப்பொழுது அடிக்கடி மழையும் வெள்ளமும்.. காலநிலை மாற்றம் காரணமாக இருக்கும் என தோன்றுகிறது.. 

அவுஸ்த்திரேலியாவில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு "லா நினா" என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது, வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சியையும், பகல் நேர வெப்பநிலைகளை வழமைக்கு மாறாக குறைவாகவும் உருவாக்குகிறது. 

அதேபோல அவுஸ்த்திரேலியாவில் சுமார் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னர் வரை இருந்த மிகக்கடுமையான வறட்சியான காலநிலைக்கும், பெரும் காட்டுத்தீக்களுக்கும் காரணமான காலநிலையினை  "எல் நினோ" என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது வழமைக்கு மாறான வெப்பநிலையினை இளவேனிற்காலம் மற்றும் கோடை காலத்தில் ஏற்படுத்துவதோடு காட்டுத்தீக்களுக்கு ஏதுவான முகில் மறைப்பினையும் உருவாக்குகிறது. அதாவது பூமியின் வெப்பத்தால் மேலெழும் வெப்பமான காற்று இந்த நிலைத்த முகிற்கூட்டங்களுடன் மோதுப்பட்டு மீண்டும் பூமியை நோக்கிக் கொண்டுவரப்படுவதால் தொடர்ச்சியான வெப்பமாதலை இந்தக் காலநிலை உருவாக்குகிறது. 

லா நினா மற்றும் எல் நினோ என்று இரு துருவப்பட்ட இந்தக் காலநிலைகளினதும் ஆயுட்காலம் 9 மாதங்களிலிருந்து 12 மாதங்கள்வரை நீடிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அண்மைய வருடங்களில்  அவுஸ்த்திரேலியாவில் இவையிரணடும் குறைந்தது இரண்டு அல்லது மூன்றுவருடங்கள் வரை நிலைத்திருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இவை அனைத்துக்கும் ஒற்றைக் காரணம் மனிதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழல் வெப்பமடைதல் செயற்பாடுகளே என்றால் அது மிகையில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jet Stream  இது காலநிலையினை தீர்மானிக்கும் இயற்கை அம்சமாகும், உயர் தாழமுக்கங்களினால் காற்று ப்யணிக்கும் போது ஒரு காற்று நதி போல உயர் தாழமுக்கங்களிடையே பயணிக்கின்றது, துருவத்தில் ஏற்பட்ட பனி உருகலினால் (உலக வெப்பமயமாதலினால்) இந்த Jet stream இன் பயண வேகம் குறைந்தமையால் காலனிலையில் சடுதியான மாற்றங்கள் நிகழ்கிறது எனக்கொள்கையளவில் கருதுகிறார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.