Jump to content

தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி நுனா.நான் இதைக் கேட்க்க நினைத்தேன்.எனத வாக்கும் 1 ஆவதுக்கே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

கற்ப்ஸ், முழுத்தமிழரனான கஜன்ஸ்சும், சம், சும், மாவை கிழித்து தொங்கவிட்டுட்டினம், விக்கியர் கிழிக்கவில்லை எண்டுறியளோ? விக்கி மட்டும் அல்ல அவர் பிள்ளைகளும் முழு தமிழர் தான் பேரபிள்ளைகள்தான் அர

satan

விக்கியர் ஒன்றும் தானாக அரசியலுக்கு வரவில்லை, அவரை இழுத்துக்கொண்டு வரும்போது அவர் கொழும்பு வாசியென்றோ, அரைச் சிங்களமென்றோ, சிங்களச்சம்பந்தியென்றோ யாருக்கும் தெரியவில்லை. தங்களை தக்கவைக்கும் தெய்வமாக த

Kandiah57

இந்த கருத்தில் என்ன பிழை உண்டு  ?.   விக்கியார் ஒரு சிறந்த உண்மை நேர்மை உள்ள தலைவர்   பிரபாகரனுக்கு பின்னர் சிங்களம் பயப்பிடும் தமிழ் தலைவர் விக்கி தான்   சம்பந்தர்.  சுமந்திரன் மாவை...போன்றவர்கள் இரு

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு முதலாவதுக்கே.

34 minutes ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

தமிழர்கள் தீர்க்கதரிசனத்துடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் ராஜபக்‌ஷக்கள் நாட்டை பல வருடங்கள் ஆண்டு, பொருளாதாரத்தை சிதைத்து, சிங்களவராலேயே அரசியலில் இருந்து அவமானகரமாக விரட்டப்பட்டுளனர். அது போன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்க்கதரிசனத்துடன் ஜனாதிபதியை தேர்வு செய்ய உதவுவார்கள்!😉

என்ன தமிழர்கள் ராஜபக்‌ஷக்களால் ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டதுபோல, புதிதாக வரும் ஜனாதிபதியும் தன்னால் இயன்றவரை சிங்கள-பெளத்த மேலாண்மையை நிலைநிறுத்த ஏதாவது செய்வார் (தமிழர் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்தல் அடங்கலாக)!

வாக்களிப்பு இரகசியம் என்பதால் ரணிலுக்கு வாக்குப்போட்டு அவரை ஜனாதிபதி ஆக்கினால் ரணிலின் வாழ்நாள் ஆசையை அடைய உதவி செய்ததாகவும், 2005 இல் அவரை ஜனாதிபதி ஆகாமல் வரச் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ததாகவும் வரலாறு எழுதும். அத்தோடு அரகலய போராட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராஜபக்‌ஷக்களை விரட்டியதுபோல ரணிலை விரட்ட உதவவும் முடியும்.😃 சிங்களவர்கள் ரணிலை விரட்டமுடியாவிட்டால், சிறிலங்காவில் புரட்சிகர மாற்றங்கள் வராது. எனவே, புரட்சிகர மாற்றங்களுக்கான சோதனைக் களத்தை அமைக்க ரணிலை ஜனாதிபதியாக்க தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொன்னான வாக்கை அளிக்கவேண்டும். இலவசமாகக் கொடுப்பதில் விருப்பம் இல்லையென்றால் பெட்டிகளை பேரம் பேசலாம்.😁 அதுவும் முடியாவிட்டால் இவர்கள் நாட்டுக்கோ, வீட்டுக்கோ எதுவித பயனும் தராதவர்கள்தான் என்பதை தாங்களாகவே உறுதி செய்தவர்கள் ஆவார்கள்😎

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழர்கள் தீர்க்கதரிசனத்துடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் ராஜபக்‌ஷக்கள் நாட்டை பல வருடங்கள் ஆண்டு, பொருளாதாரத்தை சிதைத்து, சிங்களவராலேயே அரசியலில் இருந்து அவமானகரமாக விரட்டப்பட்டுளனர். அது போன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்க்கதரிசனத்துடன் ஜனாதிபதியை தேர்வு செய்ய உதவுவார்கள்!😉

என்ன தமிழர்கள் ராஜபக்‌ஷக்களால் ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டதுபோல, புதிதாக வரும் ஜனாதிபதியும் தன்னால் இயன்றவரை சிங்கள-பெளத்த மேலாண்மையை நிலைநிறுத்த ஏதாவது செய்வார் (தமிழர் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்தல் அடங்கலாக)!

வாக்களிப்பு இரகசியம் என்பதால் ரணிலுக்கு வாக்குப்போட்டு அவரை ஜனாதிபதி ஆக்கினால் ரணிலின் வாழ்நாள் ஆசையை அடைய உதவி செய்ததாகவும், 2005 இல் அவரை ஜனாதிபதி ஆகாமல் வரச் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ததாகவும் வரலாறு எழுதும். அத்தோடு அரகலய போராட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராஜபக்‌ஷக்களை விரட்டியதுபோல ரணிலை விரட்ட உதவவும் முடியும்.😃 சிங்களவர்கள் ரணிலை விரட்டமுடியாவிட்டால், சிறிலங்காவில் புரட்சிகர மாற்றங்கள் வராது. எனவே, புரட்சிகர மாற்றங்களுக்கான சோதனைக் களத்தை அமைக்க ரணிலை ஜனாதிபதியாக்க தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொன்னான வாக்கை அளிக்கவேண்டும். இலவசமாகக் கொடுப்பதில் விருப்பம் இல்லையென்றால் பெட்டிகளை பேரம் பேசலாம்.😁 அதுவும் முடியாவிட்டால் இவர்கள் நாட்டுக்கோ, வீட்டுக்கோ எதுவித பயனும் தராதவர்கள்தான் என்பதை தாங்களாகவே உறுதி செய்தவர்கள் ஆவார்கள்😎

நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், சொல்லப்பட்ட விடயங்கள் ஏற்கத்தக்கவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

 

தாயகத்திலிருந்து முகநூல்  பதிவு   ஒன்று

 

புதிய சனாதிபதிக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் யாரை ஆதரிக்க வேணும்?
யார் சனாதிபதியாக வந்தால், சிங்கள தேசம் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுமோ அவரை ஆதரிக்க வேணும்.
யார் வந்தால் அது நடக்கும்?
யார் வந்தாலும் அதுதான் நடக்கும்.
அப்ப...
யாரை ஆதரிச்சாலும் சரிதான். புறக்கணிச்சாலும் சரிதான்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

சிவனே எண்டு மௌனவிரதம் இருக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு சிலவேளை மாறலாம் - தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரைஹஷான்)

 

தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று  19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம்  கையளித்துள்ளேன்.

அவரின் உறுதிமொழிக்கமைய நடுநிலைமை என்ற தனது முடிவு சில வேளைகளில் மாறலாம் என விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகளின் ஆதரவை கோரும் முயற்சிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் நடு நிலையாக செயற்படபபோவதாக   தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனினால் ஏற்கனவே கூறப்பட்ட  நிலையில் தற்போது ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து பிரதான எதிர்கட்சித்தலைவரான  சஜித் பிரேமதாச விலகியதால் உங்கள் நடு நிலைமை என்ற முடிவில் மாற்றங்கள் எதாவது உண்டா என அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம்   கையளித்துள்ளோம்.

அது தொடர்பில் அவர் சில உறுதிமொழிகளை வழங்கினார். எனினும் தமது பங்காளிக்கட்சிகளுடனும் ஏனைய தமிழ் கட்சித்தலைவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே  இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளேன். அப்போது சில வேலைகளில்  நடு  நிலைமை என்ற முடிவு மாற்றமடையலாம்.

அதேவேளை ஏனைய   ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் எனது கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே என்னிடம் நேரடியாக ஆதரவு கோரினார்.

அதனாலேயே தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை அவரிடம் நேரில் கையளித்தேன். அவர் உடனடியாகவே படித்துப்பார்த்து சில உறுதி மொழிகளை வழங்கினார். இந்தக்கடிதத்தை எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதசாவிடமும் கையளிக்க விருந்தேன். ஆனால் அவர் இறுதி நேரத்தில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகி விட்டதால் அவருக்கு கையளிக்கவில்லை என்றார். 

முடிவு சிலவேளை மாறலாம் - தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TNA - அழகப்பொருமாள் ஐயாவுக்கு  போடுவார்கள் என்று சிங்களவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அய்யா மகிந்தவின் ஆள். நிச்சயம் ரணிலுக்கு ஆதரவு தருவார் அல்லது (கள்ள) நடுநிலை வகிப்பார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

TNA - அழகப்பொருமாள் ஐயாவுக்கு  போடுவார்கள் என்று சிங்களவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

TNA உட்பட மேலும் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸுக்கு ஆதரவு

July 19, 2022  10:11 pm

 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அனுர பிரியதர்சன யாப்பா உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்தார். 

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பிள்ளையான், வியாழேந்திரன் இவர்களும் டாலசுக்கு ஆதரவாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பிள்ளையான், வியாழேந்திரன் இவர்களும் டாலசுக்கு ஆதரவாம்.

இனியென்ன... எல்லாரும் ஒண்டுக்குள்ளை ஒண்டு.
கூட்டமைப்பும் மொட்டுக் கட்சிக்குத் தான்... ஆதரவு. 

டக்ளஸ் தேவானந்தா  மட்டும்தான், ரணிலுக்கு ஆதரவு போலுள்ளது.

ரணிலின்... ஜனாதிபதி கனவு, கருகி விட்டது போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் மற்றைய இனங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக்(பல வழிகளிலும்) கொண்டிருப்பதால் வடக்கு கிழக்கு தமிழர்களின் உண்மையான விருப்பைப் புரிந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளை முற்றிலுமாகப் பிரதிநிதிப்படுத்துதல் முடியாத காரியம் என்பதுதான் நான் கூற விரும்பியது. 

 

இங்கே நான் விக்கியின் வரவின் போது அதை ஆதரித்து எழுத - பலர் அவரை எதிர்த்து முன்வைத்த கருத்து இது - ஆனால் இன்று அவர்களில் பலரே விக்கி சரியான கொள்கைகளையே முன்னெடுக்கிறார் என இதே திரியில் எழுதி உள்ளார்கள்.

விக்கி

1. நேர்மையாக கைசுத்தமாக நடப்பார்,

2. ஊரில் போய், மக்களிடம் கதைத்ததும் எம் அரசியலை புரிந்து அதன் வழி ஒழுகுவார்

3. நடைமுறை சாத்தியமான, விவேக அரசியலை முன்னெடுப்பார் என நான் நம்பினேன். யாழிலும் எழுதினேன்.

இதில் 3 இல் அவர் தவறி விட்டார், அந்த இயலுமை அவருக்கு இல்லை என்பதை நான் ஏற்கிறேன்.

ஆனால் 1,2 இல் அவர் நான் எதிர்பார்த்தபடியே நடந்தார்.

இன்று அரசியல் செய்யும் அத்தனை தமிழ் தேசிய யாழ்-மைய அரசியல்வாதிகளை விடவும், பலபடிகள் சிறப்பாக தமிழ் தேசிய அரசியலை விக்கி முன்னெடுக்கிறார் என்பதே உண்மை.

ஆகவே நடப்பதை வைத்தே, கொழும்பில் பிறந்தவர் தமிழ் தேசிய அரசியலினை உண்மையாக பிரதிபலிக்க முடியாது/கஸ்டம் என்ற உங்கள் வாதம் அடிபட்டு விட்டது என நான் நினைக்கிறேன்.

17 hours ago, Kapithan said:

இங்கே பிரதேசவாதம் என்பது என் சிந்தனையில் துளியளவும் இல்லை. 

ஏற்கிறேன்.

17 hours ago, Kapithan said:

நாங்கள் எப்படித்தான் சம்பந்தரைக் கரிச்சுக் கொட்டினாலும், சம்பந்தரின் இடத்தை விக்கியராலோ அல்லது சுமந்திரனாலோ  (நேர்மையாக) நிரப்ப முடியும் என நம்புகிறீர்களா ? 

👆இப்படி நானும் நினைத்த காலம் உண்டு.

இப்போ என்னை பொறுத்தவரை - 

ஊரில் எட்டு செலவுக்கு ஒரு கதிரைக்கு வேட்டி, சேர்ட் போட்டு, மூக்குகண்ணாடி எல்லாம் போடு அலங்கரிப்போம் (காலமானவராக பாவித்து) - அந்த கதிரைக்கும் ஐயா சம்பந்தருக்கும் அதிக வேறுபாடில்லை.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

1. வாக்களிக்காமல் விடல்
2. ரனிலுக்கு வாக்களித்தல்
3.டலசுக்கு வாக்களித்தல்
4.  அநுரவுக்கு வாக்களித்தல்

உங்களின் தேர்வு என்ன? 

1. மூவருக்கும் வெளிப்படையாக காணி, கல்வி, பொலிஸ், மட்டுபட்ட நிதி அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு இப்போதே (87 உடன் படிக்கையின் படி, இருக்கும் இலங்கை சட்டத்தின் படி) தருவோம். மாகாணசபை தேர்தலை 3 மாதத்தில் நடத்துவோம் என எழுத்தில் உறுதி தரும்படி கோரல்.

2. நாம் கேட்பது ஏலவே இலங்கை சட்டதில் உள்ளதுதான் என போதியளவு அறகளைகாரருக்கும், இராஜதந்திரிகளுக்கும், சாதாரண சிங்கள மக்களுக்கும் அவர் மொழியில் பரப்புரை செய்தல்.

3. ஒத்து கொள்பவருக்கு ஆதரவு

4. எல்லாரும் ஒத்து கொண்டால் நடுநிலை

5. யாரும் ஒத்து கொள்ளாவிட்டால் - தனி தமிழ் வேட்பாளர்

பிகு

மன்னிக்கவும் நீங்கள் தந்த தெரிவுகளுக்கு அப்பால் போய் ஒரு தெரிவை தந்துள்ளேன்.

It’s time we stopped choosing from options given by others and create and pursue our own Tamil-centric options.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

TNA - அழகப்பொருமாள் ஐயாவுக்கு  போடுவார்கள் என்று சிங்களவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அழகப்பொருமாள் ஓரு தமிழர் அவர் தான் வெற்றிபெற வேண்டும் என்று வட்சப்பில் செய்தி வந்தது  கூட்டமைப்புகும் அது அனுப்பபட்டு இருக்குமோ

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nochchi said:

அதைவிட சிங்கள எசமான விசுவாசம் கரணியமாக 'தமிழினப் படுகொலை' தீர்மானத்தை நிறைவேற்றியதும் முக்கிய கரணியாமாக இருந்தது.

 விக்கினேஸ்வரன் இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனவழிப்பே என்று கூற, அதற்கு ஆதாரம் இல்லை என  அதிமேதாவி சுமந்திரன் வாதாட, கிளம்பியது பூதம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக! கூட்டமைப்பை பொறுத்த மட்டில், சுமந்திரன் ஒரு மணி கட்டின மாடு! விக்கினேஸ்வரன் வேண்டாத பெண்டாட்டி. தானே விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டவந்ததாகவும் அவர் தனது முதுகில் குத்திவிட்டார் என்றும் புலம்பி அவருக்கு எதிராக மாவையரை கொம்பு சீவினார்.  (சிங்களத்தை குற்றவாளியாக்கியதே முதுகில் குத்தியது என்பதன் விளக்கம்) கட்சியை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று துரத்தினார், அவர் வென்றதும் கட்சியை உடைத்து விட்டார் என்று புலம்பினார். அவர் வெளியேறியதும் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த மாவையரில் வாய் வைத்தார். இவரின் அடுத்த பகிடி, உட்கட்சி பூசலை உள்ளுக்குள் பேசி தீர்க்க முடியாமல் வெளிநாடுகளில் அறைகூவல் விட்டவரிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, ஏன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உங்களை மட்டும் பேச்சுக்கு அழைக்கிறார்கள்? என அதற்கு இவர் அழித்த பதில் மிகவும் பரிகாசத்துக்குரியது. அதாவது அவர்கள் சில இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டார்களாம், அது இரகசியமாக இருப்பதற்காக தன்னை அழைக்கிறார்களாம், ஆனால் தான் வந்து பேசப்பட்ட விடயங்களை கூட்டத்தில் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறாராம். இதில் எங்கே இரகசியம்? ஏன் இவர் மட்டும்? என்பதை இவர்தான் விளக்க வேண்டும். இதுமட்டுமல்ல ஒருதடவை விக்கினேஸ்வரன் ஒரு அறிக்கை விட்டார், அதாவது தமிழருக்கு நடந்த அனிஞாயங்களை சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாரப்படுத்த வேண்டுமென்று. அதற்கு நேற்று பெய்த மழையில் இன்று முளைச்ச காளான், சாணக்கியன், சொன்ன பதிலை தேடிப்பாருங்கள்., சாணக்கியனின் சிங்கள விசுவாசம் தெரியும். தங்களது சிங்கள விசுவாசத்தை மறைக்க, சிங்கள சம்பந்தி என இலகுவாக முத்திரை குத்தி விடுகிறார்கள். தங்களை, தங்களது பின்புலத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். எப்போவெல்லாம்  விக்கினேஸ்வரன் சிங்களத்தால்  தமிழருக்கு எதிராக நடாத்தப்பட்ட கொடூரங்களை வெளிப்படுத்துகிறாரோ, அப்போவெல்லாம் இந்த; சிங்கள சம்பந்தி, கொழும்புவாசி, சிங்களவரை கோபப்படுத்துகிறார் என்று சிங்கள விசுவாசிகள் கொடி தூக்க தொடங்கிவிடுவார்கள். சிங்கள கட்சியில் ஒட்டியிருந்துவிட்டு, சரிந்து போன தன் அரசியலை உயர்த்துவதற்காக இங்கு வந்து ஒட்டிக்கொண்டு போடும் நாடகம், பேசும் பேச்சு கொஞ்சநாளில் வெளுக்கும். அவரின் தனிப்பட்ட வாழ்வையும் அறிவோம். அதிலும் குருந்தூர் விகாரை விவகாரத்தில் பிக்குகளோடு மல்லுக்கட்டி, போராடி, போலீசாருடன் மோதுப்பட்டவர்கள் யாரோ, பெயர் இவர்களுக்கு. பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யாரோ, பெயரை தட்டிக்கொண்டவர்கள் இவர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பேரணி என்று நினைக்கிறன். ஆனால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் சுமந்திரன். ஏன்? தனக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்பதால்.  இப்படி தங்களை முன்னிலைப்படுத்தவே அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள், யாரையும் முன்னுக்கு வர இவர்கள் விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

தனக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்பதால்.  இப்படி தங்களை முன்னிலைப்படுத்தவே அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள், யாரையும் முன்னுக்கு வர இவர்கள் விட மாட்டார்கள்.

நிதர்சனமான உண்மை.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

தமிழர்கள் தீர்க்கதரிசனத்துடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல் விட்டுத்தான் ராஜபக்‌ஷக்கள் நாட்டை பல வருடங்கள் ஆண்டு, பொருளாதாரத்தை சிதைத்து, சிங்களவராலேயே அரசியலில் இருந்து அவமானகரமாக விரட்டப்பட்டுளனர்.

எமது தலைவிதியை நாமே எழுதிக்கொண்ட காலம் அது. இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ரணிலுக்கும் அமெரிக்காவுக்கும் பாடம் படிப்பிக்க எண்ணி இறுதியில் மகிந்த எனும் கொலைகாரனை அரியணையில் ஏற்றி ஒரு முற்றான இனக்கொலையினை எம்மீது நாமே திணித்துக்கொண்ட காலம். இதைத் தீர்க்கதரிசனம் என்றெல்லாம் சிலர் கூறித்திருந்ததை நீங்கள் நகைச்சுவையாக நினைவுபடுத்துகிறீர்கள். 

ஆனால், எமக்கு முன்னால் உள்ள தெரிவுகளில் டளஸோ அல்லது ரணிலோ வேறுபட்டவர்கள் கிடையாது. இருவருமே ராஜபக்ஷேக்களுக்காகத்தான் வேலை செய்கிறார்கள். அநுர புதியவர். ஆனால் அவரது கட்சியும் இனவாதிகள்தான். வாக்களிக்காதுவிட்டாலும் இந்த மூவரில் ஒருவரே வரப்போகிறார், எதுவுமே மாறப்போவதில்லை. 

அரகலையில் முன்னின்றவர்கள் வேட்பாளராக இறங்கினால், நாம் அவர்களை ஆதரிக்கலாம். ஆனால், அதுவும் நடப்பதாகக் காணோம்.

6 hours ago, Sasi_varnam said:

விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பிள்ளையான், வியாழேந்திரன் இவர்களும் டாலசுக்கு ஆதரவாம்.
 

தமிழரின் நலன்கள், பாதுகாப்பு என்று வரும்போது பிரிந்து நின்று வேலைபார்க்கும் "தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்", சிங்களவன் ஒருவனை அரியணையில் ஏற்றவேண்டும் என்ற நிலைவரும்போது ஓரணியில் திரள்கிறார்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

ரணிலுக்கும் அமெரிக்காவுக்கும் பாடம் படிப்பிக்க எண்ணி இறுதியில் மகிந்த எனும் கொலைகாரனை அரியணையில் ஏற்றி ஒரு முற்றான இனக்கொலையினை எம்மீது நாமே திணித்துக்கொண்ட காலம்

 நரியார் புலிகளுடன் பேசிக்கொண்டே, புலிகளுக்கெதிராக சர்வதேச வலை விரித்தததை தாமே ராஜதந்திரிகள் ஆர்வ மிகுதியாலோ, தாம் தாம் வெற்றிபெறப்போகிறோம் என்கிற திமிரிலோ, தேர்தல் காலத்தில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஷ நாயக்கவும் போட்டுடைத்ததே தலைவர் தனது முடிவை மாற்ற காரணமாகியது. அவரை ஆதரித்திருந்தாலும் நமது தலைவிதி இதுதான், ஆனால் சிங்கள இராணுவம் தப்பி அமெரிக்க, இந்திய இராணுவம் முடித்திருக்கும். ஆனாலும் தலைவர் ராஜபக்ஸ்ஷாக்களின் குணாதிசயத்தையும், அதன் பலனையும் எதிர்வு கூறியிருந்தார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இங்கே நான் விக்கியின் வரவின் போது அதை ஆதரித்து எழுத - பலர் அவரை எதிர்த்து முன்வைத்த கருத்து இது - ஆனால் இன்று அவர்களில் பலரே விக்கி சரியான கொள்கைகளையே முன்னெடுக்கிறார் என இதே திரியில் எழுதி உள்ளார்கள்.

விக்கி

1. நேர்மையாக கைசுத்தமாக நடப்பார்,

2. ஊரில் போய், மக்களிடம் கதைத்ததும் எம் அரசியலை புரிந்து அதன் வழி ஒழுகுவார்

3. நடைமுறை சாத்தியமான, விவேக அரசியலை முன்னெடுப்பார் என நான் நம்பினேன். யாழிலும் எழுதினேன்.

இதில் 3 இல் அவர் தவறி விட்டார், அந்த இயலுமை அவருக்கு இல்லை என்பதை நான் ஏற்கிறேன்.

ஆனால் 1,2 இல் அவர் நான் எதிர்பார்த்தபடியே நடந்தார்.

இன்று அரசியல் செய்யும் அத்தனை தமிழ் தேசிய யாழ்-மைய அரசியல்வாதிகளை விடவும், பலபடிகள் சிறப்பாக தமிழ் தேசிய அரசியலை விக்கி முன்னெடுக்கிறார் என்பதே உண்மை.

ஆகவே நடப்பதை வைத்தே, கொழும்பில் பிறந்தவர் தமிழ் தேசிய அரசியலினை உண்மையாக பிரதிபலிக்க முடியாது/கஸ்டம் என்ற உங்கள் வாதம் அடிபட்டு விட்டது என நான் நினைக்கிறேன்.

ஏற்கிறேன்.

👆இப்படி நானும் நினைத்த காலம் உண்டு.

இப்போ என்னை பொறுத்தவரை - 

ஊரில் எட்டு செலவுக்கு ஒரு கதிரைக்கு வேட்டி, சேர்ட் போட்டு, மூக்குகண்ணாடி எல்லாம் போடு அலங்கரிப்போம் (காலமானவராக பாவித்து) - அந்த கதிரைக்கும் ஐயா சம்பந்தருக்கும் அதிக வேறுபாடில்லை.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவர் வேறு சமயம் மாறி திருமணம் செய்துகொண்டார். ஒரு பிள்ளை தனது மதத்தவையே திருமணம் செய்துகொண்டார்.  

சமயம் தொடர்பான கதை வருகிறது. இரு பிள்ளைகளும் தங்கள் சமயத்தின் அருமை பெருமைகளை வெழுத்து வாங்குகிறார்கள். 

இதில் நீங்கள் யாருக்குச் சார்பாகக் கதைப்பீர்கள்? 

உங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம், ஆனாலும்  இருவரது மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே உண்மை. 

இங்கே கொழும்பு அரசியல்வாதிகளின் நிலையும் இதுபோன்றதுதான். அதிலும் பிற இனத்தவரில் திருமண பந்தங்களை வைத்திருப்பவர்களின் நிலை இன்னும் கடினமானது. 

நாங்கள் எப்படி  பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவேண்டி ஏற்படும் என்பது உண்மையோ அப்படியே கொழும்பு அரசியல்வாதிகளின் நிலையும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை மட்டும் குத்திக்காட்டுவதன் நோக்கம் என்னவோ? சரி பிழையாகாது, பிழை சரியாகாது. எந்த விட்டுக்கொடுப்பும் இனியில்லை, கொடுத்ததே அதிகம் என்கிறார், பேராசையை தட்டிகேட்க்கிறார்!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவர் வேறு சமயம் மாறி திருமணம் செய்துகொண்டார்.

 

31 minutes ago, Kapithan said:

இரு பிள்ளைகளும் தங்கள் சமயத்தின் அருமை பெருமைகளை வெழுத்து வாங்குகிறார்கள். 

 

35 minutes ago, Kapithan said:

இதில் நீங்கள் யாருக்குச் சார்பாகக் கதைப்பீர்கள்? 

 

35 minutes ago, Kapithan said:

உங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம், ஆனாலும்  இருவரது மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே உண்மை. 

அடிப்படை விளக்கமே குளறுபடியாய் இருக்கிறதே! இருவரின் மதமும் ஒன்றுதானே! அப்படியென்றால் ஒருவருக்கு தனது மதம் எதுவென்று தெரியாத குழப்பமாக இருக்கலாம், தந்தையார் சரிவர சொல்லிக்கொடுக்கவில்லை, அங்கேதான் தவறு, உண்மையும் அதுதான்.  பிள்ளைகளிலில்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

 

 

 

அடிப்படை விளக்கமே குளறுபடியாய் இருக்கிறதே! இருவரின் மதமும் ஒன்றுதானே! அப்படியென்றால் ஒருவருக்கு தனது மதம் எதுவென்று தெரியாத குழப்பமாக இருக்கலாம், தந்தையார் சரிவர சொல்லிக்கொடுக்கவில்லை, அங்கேதான் தவறு, உண்மையும் அதுதான்.  பிள்ளைகளிலில்லை!  

நான் மதத்தைப்பற்றிக் கதைக்கவில்லை. 

தந்தையின் நிலைபற்றி, அவரது நிலையிலுள்ள எங்கள் கொழும்பு வாழ் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைபற்றி கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 இருவரது மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே உண்மை. 

உண்மையை ஏற்க மறுபவருக்கு  உண்மையை எடுத்துரைப்பதே சம்பந்தப்பட்டவரின் கடமை, பொறுப்பு. பொய்க்கு தாளம் போடுவது உண்மையாகாது  எவ்விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. அதையே விக்கினேஸ்வரன் செய்கிறார், அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்குது. கண்கொத்திப்பாம்பாய் விமர்சிக்கிறார்கள், அடங்கி விடுவார் என நினைக்கிறார்கள். கை கொடுக்காவிட்டாலும் விலகி இருக்கலாம்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

உண்மையை ஏற்க மறுபவருக்கு  உண்மையை எடுத்துரைப்பதே சம்பந்தப்பட்டவரின் கடமை, பொறுப்பு. பொய்க்கு தாளம் போடுவது உண்மையாகாது  எவ்விதத்திலும் பிரச்சனையை தீர்க்காது. அதையே விக்கினேஸ்வரன் செய்கிறார், அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்குது. கண்கொத்திப்பாம்பாய் விமர்சிக்கிறார்கள், அடங்கி விடுவார் என நினைக்கிறார்கள். கை கொடுக்காவிட்டாலும் விலகி இருக்கலாம்!  

சாத்,

கொழும்பை மையமாகக் கொண்ட எந்த அரசியல்வாதியும் வடக்கு கிழக்கு தமிழர்களின் அபிலாசையைச் சரிவரப் புரிந்துகொண்டு சேவையாற்ற முடியாது என்றுதான் கூறினேன்.

அதற்கு  விக்கியரும் விதிவிலக்கல்ல. 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.