Jump to content

காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு.

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.

இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

https://athavannews.com/2022/1291362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் வெற்றிகளாவன:

1. ரணில் ராஜபக்ச என்ற ஒரு முழுவதும் வளர்ந்த முதியவரை பிரசவித்து, பிரதமந்திரி, ஜனாதிபதியாக்கியது.

2. ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் சோப்பு போட்டு குளித்தது

3. கோத்தாவின் ஜொக்காவை கைப்பற்றியது

4. பிரதம மந்திரி அலுவலக பால்கனியில் நின்று கிஸ்ஸடித்தது

5. இனவாத பேய் பெளத்த சிங்கள மனங்களில் இருந்து அகல தொடங்கி விட்டது என சில அப்பாவி தமிழர்களை நம்ப வைத்தது 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடைய 6 கோரிக்கைகளில் முதலாவதை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. கோட்டாவை பதவி இறக்கியது.. இவர்களுடைய இரண்டாவது கோரிக்கை ரணில் பதவி விலக வேண்டும்.. ஆனால் நடந்தது பதவி உயர்வு.. 

இரண்டாவது கோரிக்கை நிறைவேறாதபடியால் இனி மீதி 4 கோரிக்கைகளும் காணாமல் போய்விடும். ஆனாலும் இப்பொழுது போராட்டக்காரர்கள் 100வது நாளை கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள்.. இனி இப்படியே அடங்கிவிடும்.. 

இப்பொழுது ரணிலின் பதவி உயர்வால் நாடும் நாட்டிலுள்ள மக்களும் வாணலிக்கு தப்பி நெருப்பில் விழுந்த கதை போலவே ஆகிவிட்டது. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: "கடனில்லாத நாடு வேண்டும்" - 100வது நாள் போராட்டத்தில் மக்கள்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை போராட்டம்

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய, பிறகு தமது பதவியில் இருந்து விலகி, புதிய அரசு அமைய வழியேற்படுத்தியிருக்கிறார். நூறாவது நாளாக தொடர்ந்து நடக்கும் தங்களுடைய போராட்டத்தை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று கூறி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று கொழும்பு - காலி முகத்திடலில் பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் ஆரம்பம் முதலே வலுவாக இருந்தது. இந்த நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு, ரணில் நாட்டின் பிரதமரானதும் மக்கள் போராட்டம் சற்றே தணிந்து காணப்பட்டது. ஆனால், வலுவிழக்கவில்லை.

இந்த நிலையில், நாட்டில் எரிவாயு விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை போன்வை ஏற்றத்துடனேயே இருந்ததால் மக்களின் கோபம் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தினர், மக்கள் போராட்டம் மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த மக்கள், அதற்குள்ளாகவும் செல்ல முற்பட்டபோது, அவர்களை நோக்கி போலீஸார் தொடர்ச்சியாக கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகங்களை நடத்தி கட்டத்தைக் கலைக்க படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அதிகரித்து வந்த மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப்படையினர் தோல்வி அடைந்தனர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் இல்லத்தை கடந்த 9ஆம் தேதி போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

இலங்கை வரலாற்றிலேயே மக்கள் இப்படி போராட்ட உணர்வை வெளிப்படுத்துவது அசாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கோட்டாபய விலகலால் சமாதானம் அடையாத மக்கள்

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவ்வாறான பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவர், முதலாவதாக மாலத்தீவுக்கும் அதற்கு மறுநாள் சிங்கப்பூருக்கும் சென்றார். இதேவேளை, தாம் வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக கோட்டாபய அறிவித்தார்.

இதன் பின்னர், சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதர் மூலம் தமது பதவி விலகல் கடிதத்தை ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைத்தார் கோட்டாபய.

அவரது கடிதத்தை உரிய பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜூலை 15ஆம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து இலங்கையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு முறைப்படி நடைபெறவுள்ளது.

 

இலங்கை போராட்டம்

இது ஒருபுறமிருக்க, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியபோதும் அந்த செயல்பாடு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை. கோட்டாபய, மஹிந்த குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக ரணில் விக்ரமசிங்க கருதப்படுவதால், அவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இந்த மக்கள் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"இது வாழ்வதற்கான போராட்டம்"

இதையொட்டி கொழும்பு - கொச்சிகடை பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் நூறாம் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

 

ஹிமாஷி ரெஹானா

 

படக்குறிப்பு,

ஹிமாஷி ரெஹானா

அப்போது, "வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்," என இந்த 100 நாள் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று வெற்றி கொண்டாட்டங்களை நடத்தி வரும் சிங்கள மொழி யுவதியான ஹிமாஷி ரெஹானா தெரிவித்தார்.

''போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த போராட்டம் இத்துடன் முடிவடைந்துள்ளதா என கேட்டால் இல்லை என்பதே எங்களுடைய பதில். இந்த நாட்டிற்கு சாதகமான மாற்றம் கிடைக்கும் நாளிலேயே இந்த போராட்டம் முடிவடையும். சிஸ்டம் சேஞ்ச் ஒன்று ஏற்படும் தினத்திலேயே போராட்டம் முடிவடையும். அவ்வாறு நடக்குமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆம் அவ்வாறு நடக்கும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறு ஒன்றிணைய வேண்டும். அரசியல், கட்சி பேதங்கள் எதுவும் வேண்டாம். நாட்டிற்கு உண்மையாகவே நன்மை நடக்கும் என்றால், அதை யார் செய்தாலும், எந்த கட்சியினர் செய்தாலும் அதனை நாம் வரவேற்க வேண்டும். யாராவது தவறு இழைக்கும் போது, அதற்கு எதிராக குரல் எழுப்பும் இடத்திற்கு நாம் வர வேண்டும். அதற்கான முதுகெலும்பு எமக்கு இருக்க வேண்டும். எமக்கு நாடு வேண்டும். வாழ்வதற்கான நாடு வேண்டும். கடன் இல்லாத நாடு வேண்டும். எமது குழந்தைகளுக்கு கையளிக்க முடிந்த நாடொன்று வேண்டும். எமக்கு வாழ வேண்டும். நீங்களும் வாழ வேண்டும். அதற்காகவே இந்த போராட்டத்தை நடத்துகிறோம். காலி முகத்திடலில் மாத்திரமே போராட்டம் நடக்கின்றது. எதிர்காலத்தில் போராட்டத்தை வெற்றி கொள்ள முடியுமா என பலரும் கேட்கின்றார்கள். முடியும் என்றே நான் கூறுகின்றேன். 'காலி முகத்திடல்' என்பது போராட்டத்திற்கான ஒரு அடையாளம் மாத்திரமே. சில சந்தர்ப்பங்களில் அது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அம்மாவை வெற்றி பெற செய்வோம். அம்மா வெற்றி பெற்றால், நாமும் வெற்றி அடைவோம். வாழ்வதற்காக போராட்டம் வெற்றி பெறட்டும். மக்களுக்கு வெற்றி" என்கிறார் ஹிமாஷி ரெஹானா.

புதிய கலசாரத்தின் எழுச்சி

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியே, இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

 

கொழும்பு நூறு நாள் போராட்டம்

 

படக்குறிப்பு,

இன்ஸ்டின்

''கோட்டாபய அரசாங்கம் இன ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தி, மக்களை பிரித்துத்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். அதேபோல இன்று மக்கள் ஒற்றுமை ஆகி அவர்களை அனுப்பி இருக்கிறார்கள். எந்த இனங்களை பிரித்து இந்த ஆட்சிக்கு வந்தார்களோ, அந்த அத்தனை இனங்களும் ஒன்றாக இணைந்து, அவர்களை துரத்தி அடித்திருக்கிறது. இந்த போராட்டக்களம், அத்தனை மக்களையும் ஒன்றிணைத்துவிட்டது. இனி எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் பிரிய மாட்டோம் என்ற அளவிற்கு இந்த போராட்டம், மக்களின் உள்ளங்களை பலப்படுத்தி இருக்கின்றது. அரசியல் ரீதியில் பிரித்தாலும் சக்தியானது, இவர்கள் இனி அரசியல் செய்ய முடியாது என்ற இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ போக வேண்டும் என்று வந்தவர்கள், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போக வேண்டும் என்ற இடத்திற்கு வந்தார்கள். இந்த போராட்டத்தின் முதல் வெற்றியானது, கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தி அடித்தது. இந்த வெற்றியை இன்று கொண்டாடி வருகின்றனர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு சாதகமாக செயற்படும் ரணில் விக்ரமசிங்க தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார். அவரையும் துரத்தி, இந்த அரசியல் சிஸ்டத்தை முற்றுமாக துடைத்தெறிவோம். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பிறகே இந்த போராட்டத்தை விட்டு வெளியேறுவோம்" என போராட்டத்தில் ஈடுபட்ட இன்ஸ்டின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியல்வாதிகள், நாட்டை விற்றுள்ளதாகவும், இனி அவ்வாறு இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடும் விக்னேஷ்வரன் கூறுகின்றார்.

 

இலங்கை போராட்டம்

 

படக்குறிப்பு,

விக்னேஷ்வரன்

''இந்த போராட்டத்தின் வெற்றி இலக்கை இன்று நாம் அடைந்திருக்கின்றோம். அதேபோன்று, இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அனைவரையும் குறைக்கூற முடியாது. அதேபோன்று அனைவரையும் சரி என்றும் கூற முடியாது. இவ்வளவு நாள் இலங்கையர்களாக இருக்கக்;கூடிய நாங்கள், இரண்டு மொழிகளாலும், 4 மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தோம். இனவாதத்தையும், மதவாதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைவரும் அரசியல் செய்தார்கள். அனைவரையும் பிளவுப்படுத்தி அரசியல் செய்திருக்கின்றார்கள். நாங்கள் அதனை ஒட்டு மொத்தமாக ஒழித்து இன்று இலங்கையர் என்று வாழ்வதற்கான அடிப்படை தளத்தை இட்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடக்கூடியவர்களுக்கு இது அச்சுறுத்தலாக அமையும். சரியாக அரசியல் செய்பவர்களுக்கு இது பலமாக அமையும். எதிர்காலத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். இதுவரை அரசியல்வாதிகளாக இருந்தவர்கள், ஒட்டு மொத்த இலங்கையையும் சூரையாடி, நாட்டை இழிவுப்படுத்தி, சீரழித்து, தமது சுகபோக வாழ்க்கைக்காக முழு நாட்டையும் விற்றிருக்கின்றார்கள். இனி இவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்." என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

படக்குறிப்பு,

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

இலங்கையின் ஆளும் அரசு எதிர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை 100வது நாளை எட்டியது. பதவியில் இருந்த நாட்டின் ஜனாதிபதியை பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பிறகும் அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போராட்ட களத்தில் உள்ள மக்கள் உள்ளனர்.

கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்கள், தமது மாளிகையை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறினார். கடந்த வியாழக்கிழமை அவர் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அவரது தவறான நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இலங்கை உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், தங்களின் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியே சென்றதை 100ஆம் நாள் போராட்டத்தில் மக்கள் கொண்டாடினர்.

அங்குள்ள கள நிலவர படங்களை கொழும்பில் முகாமிட்டுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் பதிவு செய்துள்ளனர். அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

 

ஞாயிற்றுக்கிழமை காலையில் காலி முகத்திடலின் காட்சி

 

படக்குறிப்பு,

ஞாயிற்றுக்கிழமை காலையில் காலி முகத்திடலின் காட்சி

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

கொழும்பு காலி முகத்திடல்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

படக்குறிப்பு,

பதில் ஜனாதிபதி ரணிலை பதவி விலக வலியுறுத்தி சாலை சந்திப்பு கட்டட சுரில் பொருத்தப்பட்டிருக்கும் பலகை

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்

 

படக்குறிப்பு,

குடியிருப்புப் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் பொதுமக்கள்

 

வெறிச்சோடி காணப்பட்ட கொழும்பு நகர சாலை சந்திப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka Protest Celebration: இலங்கையில் 100வது நாளை எட்டிய போராட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

போராட்டத்தின் வெற்றிகளாவன:

1. ரணில் ராஜபக்ச என்ற ஒரு முழுவதும் வளர்ந்த முதியவரை பிரசவித்து, பிரதமந்திரி, ஜனாதிபதியாக்கியது.

2. ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் சோப்பு போட்டு குளித்தது

3. கோத்தாவின் ஜொக்காவை கைப்பற்றியது

4. பிரதம மந்திரி அலுவலக பால்கனியில் நின்று கிஸ்ஸடித்தது

5. இனவாத பேய் பெளத்த சிங்கள மனங்களில் இருந்து அகல தொடங்கி விட்டது என சில அப்பாவி தமிழர்களை நம்ப வைத்தது 

6. ஜனாதிபதியின்ரை கொடியை… பின்னுக்கு இருவர் பிடித்திருக்க, ஜனாதிபதியின் மேசையில் இருந்து… ரின் “பியர்”  அடித்ததும் வெற்றிதான்.

அதனைப் பார்த்த ரணில்… தனக்கு,  ஜனாதிபதி கொடியும் வேண்டாம், தன்னை அதி உத்தமர் என அழைக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

6. ஜனாதிபதியின்ரை கொடியை… பின்னுக்கு இருவர் பிடித்திருக்க, ஜனாதிபதியின் மேசையில் இருந்து… ரின் “பியர்”  அடித்ததும் வெற்றிதான்.

அதனைப் பார்த்த ரணில்… தனக்கு,  ஜனாதிபதி கொடியும் வேண்டாம், தன்னை அதி உத்தமர் என அழைக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டார். 😂

🤣 நரியின் மாமன், “ஆசியாவின் கிழட்டு நரி” தன்னைதானே உயர்த்தி கொள்ள அறிமுக படுத்திய சொல் இந்த அதி உத்தமர். 

ஆனால் அவரில் இருந்து இந்த பதவிக்கு வந்தோர் எல்லாரும் “அதி ஊத்தைமர்கள்”🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

🤣 நரியின் மாமன், “ஆசியாவின் கிழட்டு நரி” தன்னைதானே உயர்த்தி கொள்ள அறிமுக படுத்திய சொல் இந்த அதி உத்தமர். 

ஆனால் அவரில் இருந்து இந்த பதவிக்கு வந்தோர் எல்லாரும் “அதி ஊத்தைமர்கள்”🤣.

 

May be a cartoon

உடான்ஸ்.... உங்களுடைய கருத்துக்கு, பொருத்தமான... ஓவியம் இன்று வந்துள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 100வது நாள் போராட்ட Celebration படங்கள் வட்சப்பிலும் வந்தன.வசதியானவர்களின் கொண்டாட்டம் போன்று இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

 

May be a cartoon

உடான்ஸ்.... உங்களுடைய கருத்துக்கு, பொருத்தமான... ஓவியம் இன்று வந்துள்ளது. 🤣

😆 சேனநாயக்காக்கள் காலத்திலேயே UNP ஐ uncle nephew party என்று அழைப்பார்களாம்😆

  • Haha 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.