Jump to content

லூஸ் மாஸ்டர் - ஐசக் இன்பராஜா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன். 

அப்படி நான் பல பத்து வருடங்களாக (1991 இல் இருந்து) தேடிக்கொண்டிருக்கும் விடயம் ஒரு காலத்தில் ஈழத்தில் மிக பெரும் ஞனரஞ்சக நகைச்சுவை படைப்பாக ஒவ்வொரு  தேத்தண்ணி கடையிலும் கேட்ட “லூஸ் மாஸ்டர்” நகைச்சுவை ஒளிநாடா பதிவு.

2015 வாக்கில் யாழிலும் எழுதினேன்.

இன்றுவரை இந்த நாடகத்தின் ஆடியோ கசட்டை யாரும் எங்கும் தரவேற்றியுள்ளதாக தெரியவில்லை.

ஆனால் பின்னர் தேடிப்பார்த்ததில் - 2014 இலேயே இதை எழுதி, நடித்த நாவாலியூர் ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் வசித்து காலாமாகினார் என்ற சோழியன்( 🙏) அண்ணாவின் பதிவும், அந்த திரியில் பொயட் ஐயா உட்பட பலர் எழுதிய நாடக ஆசிரியர் பற்றிய தகவல்களும் கிடைக்கப்பெற்றன.

லூஸ்மாஸ்டர் என்ற ஒற்றை படைப்பின் மூலம் இன்றுவரை என்னுள் நகைசுவை உணர்வை தூண்டிவிட்ட நாடக ஆசிரியர், கலைஞர், இலக்கியவாதி ஐசக் இன்பராஜா.

இதை இவர்தான் எழுதினார் என்பது கூட எனக்கு அண்மையில் வரை தெரியாது. இன்னார், எவர், அவரின் படைப்பு என்பது தெரியாமலே அவரின் படைப்பால் ஈர்க்கப்பட்டு அதை பல காலம் தேடித்திரிகிறேன்.

இதை விட ஒரு படைப்பாளிக்கு வேறு பெருமை இருக்க முடியாது.

அவரை பற்றிய சில தகவல்கள் கீழே.

திரு ஐசாக் இன்பராஜ “விகட விற்பனர்” என அறியப்பட்டுளார் ( https://noolaham.net/project/666/66598/66598.pdf ).

அதே போல் காலங்கள் வாழ்த்தும் 300  ஈழத்து கலைஞர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார் ( https://noolaham.org/wiki/index.php/காலங்கள்_வாழ்த்தும்_300_ஈழத்துக்_கலைஞர்கள்?uselang=en ).

அவர் பற்றிய இன்னொரு குறிப்பு இது

https://ourjaffna.com/tag/ஐசாக்-இன்பராஜா/

அவர் பெயர் சொல்லும் ஜேர்மன் தமிழர் வரிசையிலும் உள்ளார்.

https://ta.m.wikipedia.org/wiki/செருமானியத்_தமிழ்_நபர்கள்_பட்டியல்

வடிவேலு, கவுண்டர் எல்லாரையும் தூக்கி சாப்பிட கூடிய நகைசுவையாளர் ஐசக் இன்பராஜா - என்ன பாக்கு நீரிணையின் தப்பான பக்கத்தில் பிறந்து விட்டதால் - நம்மவர்களே அவரை அதிகம் கண்டு கொள்ளவில்லை என்றே என் மனதில் படுகிறது.

பிகு

இன்னும் லூஸ்மாஸ்ரர் ஒளிநாடா தரவேற்றத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். 

கிடைத்தால் மிக்க சந்தோசம் அடைவேன்.

இது மட்டும் அல்ல பின்னாளில் இவர் ஐரோப்பாவில் உருவாக்கிய படைப்புக்களை கூட யூடியூப் உட்பட எங்கும் எடுக்க முடியவில்லை.

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அந்தக் குறைகள் உண்டு.....அருமையான படைப்புகளை செய்யும் சிலர் பின் அவற்றை பதிந்து வைக்கவோ அன்றி பிரபலப்படுத்தவோ முயற்சிகள் செய்வதில்லை......அதனால்தான் அவைகள் எங்கோ ஓரிடத்தில் மறைந்து இருக்கின்றன......!  🤔

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பாக்கு நீரிணையின் தப்பான பக்கத்தில் பிறந்து விட்டதால் - நம்மவர்களே அவரை அதிகம் கண்டு கொள்ளவில்லை என்றே என் மனதில் படுகிறது.

7 hours ago, goshan_che said:

நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன்.

கோசான் சே அவர்களுக்கு நன்றி. தாயகம் விறுவிறுப்போடு இருந்தகாலத்தில் புனர்வாழ்வுக் கலைமாலை நிகழ்வுகளை அலங்கரித்த கலைஞர்களில் இவரும் ஒருவர். மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த கலைஞர். மாவீரர்களையே மதிகொள்ளா மனம்கொண்ட எம்மவரிடையே நீங்கள் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்துபோயுள்ளிர்கள். ஆனால், கலைஞர்கள் காலத்தால் மறைவதில்லை என்பதை உங்களைப்போன்றோர் நினைவூட்டிவருகின்றமையே பதிவாகின்றது.
நன்றி 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

எனக்கும் அந்தக் குறைகள் உண்டு.....அருமையான படைப்புகளை செய்யும் சிலர் பின் அவற்றை பதிந்து வைக்கவோ அன்றி பிரபலப்படுத்தவோ முயற்சிகள் செய்வதில்லை......அதனால்தான் அவைகள் எங்கோ ஓரிடத்தில் மறைந்து இருக்கின்றன......!  🤔

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி🙏.

அவர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட ஒலிநாடா இல்லாவிடிலும் பின்னர் ஜேர்மனி வந்த போது செய்தவை நிச்சயம் பதிவில் இருக்கும் என நம்புகிறேன். 

#தேடல் தொடர்கிறது.

2 hours ago, nochchi said:

கோசான் சே அவர்களுக்கு நன்றி. தாயகம் விறுவிறுப்போடு இருந்தகாலத்தில் புனர்வாழ்வுக் கலைமாலை நிகழ்வுகளை அலங்கரித்த கலைஞர்களில் இவரும் ஒருவர். மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த கலைஞர். மாவீரர்களையே மதிகொள்ளா மனம்கொண்ட எம்மவரிடையே நீங்கள் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்துபோயுள்ளிர்கள். ஆனால், கலைஞர்கள் காலத்தால் மறைவதில்லை என்பதை உங்களைப்போன்றோர் நினைவூட்டிவருகின்றமையே பதிவாகின்றது.
நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது கூட உள்ளூர் இசைக்கலைஞர்களை கொண்டு நடாத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுக்க தயங்குகிறார்கள். இந்த மனநிலை எப்பொழுது மாறுமே தெரியாது

இவரைப் பற்றி அறிந்ததில்லை. ஆகையால் இங்கே பதிந்தமைக்கு நன்றி!

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2022 at 12:29, goshan_che said:

அவர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட ஒலிநாடா இல்லாவிடிலும் பின்னர் ஜேர்மனி வந்த போது செய்தவை நிச்சயம் பதிவில் இருக்கும் என நம்புகிறேன்

கோசன், உங்கள் நம்பிக்கை இங்கே  நிறைவேறுகிறதா எனப் பாருங்கள்

https://nathi.eu/index.php/blogs-68340/127-2bloggs/579-2014-08-22-06-39-56

Edited by Kavi arunasalam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

கோசன், உங்கள் நம்பிக்கை இங்கே  நிறைவேறுகிறதா எனப் பாருங்கள்

https://nathi.eu/index.php/blogs-68340/127-2bloggs/579-2014-08-22-06-39-56

நன்றி ஐயா. இங்கேயும் அவர் பற்றிய கட்டுரைதான் உள்ளது. அவரின் படைப்புகளின் தரவேற்றம் பற்றிய தகவல்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

stand up நகைசுவை விருந்துக்கு மாறிவிட்டார்?

இவருக்கு வாய்ப்பும், எமது சமூகத்தின் நகைச் சுவை இரசனை மெருகூட்டலும் சரியான நேரத்தில்  அமையவில்லை?
 
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி ஐயா. இங்கேயும் அவர் பற்றிய கட்டுரைதான் உள்ளது. அவரின் படைப்புகளின் தரவேற்றம் பற்றிய தகவல்கள் இல்லை. 

கட்டுரைக்குக் கீழே ஒரு வீடியோ லிங் இருப்பதை கவனிக்காமல் விட்டிட்டீங்களே கோசன்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கட்டுரைக்குக் கீழே ஒரு வீடியோ லிங் இருப்பதை கவனிக்காமல் விட்டிட்டீங்களே கோசன்.

நன்றி ஐயா. என் வாழ்நாள் தேடலின் ஒரு பகுதியை கண்டெடுத்து கொடுத்துள்ளீர்கள்🙏.

லூஸ்மாஸ்டர் நகைச்சுவை இதை விட பல மடங்கு பிரமாதமாக இருக்கும். அவரின் உறவுகள் பழைய ஒலிநாடாவை வைத்திருக்க கூடும். தேடுவோம்.

மீண்டும் மிக்க நன்றி🙏.

குடி பற்றிய அவரின் ஒரு பாடல்👇

அம்மானை ஒண்டு சொல்லுறன் நல்லாய் கேளுங்கோ….

கல்லோயா கசிப்பிருக்கு அடிச்சு பாருங்கோ…

அம்மானை ஒண்டு சொல்லுறன் நல்லாய் கேளுங்கோ….

பாலுக்குள்ள…பசும் பாலுகுள்ள

எறும்பு விழுந்தா - பாரியார் பாடு பெரும்பாடு…

பனம் பாலுகுள்ள

பல்லி விழுந்தாலும் கண்ணை மூடிகொண்டடிப்பாரு…..

சாதி சண்டைகளுக்கும், சமய சண்டைகளும் வீடு, வீதிகளில் உண்டு….

இங்கு சாதியும் சாதியும் பாத்திரமொன்றில் பாதி பாதியாய் பருகுவதுண்டு….

3 hours ago, Kadancha said:

stand up நகைசுவை விருந்துக்கு மாறிவிட்டார்?

இவருக்கு வாய்ப்பும், எமது சமூகத்தின் நகைச் சுவை இரசனை மெருகூட்டலும் சரியான நேரத்தில்  அமையவில்லை?
 
நானறிய இவரின் பாணி ஓரங்கநாடகம்+ஸ்டாண்ட் அப் சேர்ந்த கலவைதான்.  

சரியாக சொன்னால் - monologue என்ற genre யில் அடங்கும் என நினைக்கிறேன். 

தமிழில் ஓரங்கநாடகம்?

ஸ்டாண்டப் என்றால் என்ன என்பதே தெரியா வயதில் ரசித்தது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கட்டுரைக்குக் கீழே ஒரு வீடியோ லிங் இருப்பதை கவனிக்காமல் விட்டிட்டீங்களே கோசன்.

 நான் அந்த லிங்குக்கு அவ்வப்போது போய் வருவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவி அருணாசலம் & கோஷான்-சே.......!   👍

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.