Jump to content

கோட்டாபயவை துரத்துவதில் மூளையாக செயற்பட்ட தமிழர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதனை கவுண்டர் ஸ்ரைலில் வாசிக்கவும். 

கடவுளே இன்னும் ஏன் என்னை உயிரோடு வைத்திருக்கிறாய். ....இத்தனை வருடங்களாக JVP என அடையாளம் காணப்பட்ட ஒருவரை சிறிய காசுக்காக எப்படியெல்லாம் உருமாற்றி அடிக்கிறார்கள்.தேவை ஏற்பட்டால் இவரை திரும்பவும் JVP என்பார்கள், அரைச் சிங்களம் என்று மீண்டும் உரு மாற்றி அடிப்பார்கள் .....இதனையெல்லாம் சகித்துக்கொண்டு  எத்தனை காலம்தான் நான் உயிர்வாழ வேண்டும் ? 

🤣

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய FSP, இந்த மக்கள் எழுச்சியுடன் JVPயை ஓரங்கட்டி முன்னேறும் என நினைக்கவில்லை. ஆனால்  இவரைப் பற்றி D.B.S Jeyarajற்கு ஒரு soft corner இருக்கிறது போல தெரிகிறது..

https://www.dailymirror.lk/dbs-jeyaraj-column/FSP-Leader-Kumar-Gunaratnam-and-his-Aragalaya/192-241201

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவருடைய FSP, இந்த மக்கள் எழுச்சியுடன் JVPயை ஓரங்கட்டி முன்னேறும் என நினைக்கவில்லை. ஆனால்  இவரைப் பற்றி D.B.S Jeyarajற்கு ஒரு soft corner இருக்கிறது போல தெரிகிறது..

https://www.dailymirror.lk/dbs-jeyaraj-column/FSP-Leader-Kumar-Gunaratnam-and-his-Aragalaya/192-241201

 

இவர் சில காலத்திற்கு முன்னர, Australia விலிருந்து வேறு பெயரில் நாட்டிற்குள் நுழைந்து சிறிது நாட்களில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தார். அப்போது கொட்டாபயவை நேரடியாகத் தொடர்புகொண்ட அவுஸ்திரேலிய தூதர் கொட்டாவுக்கு "அடுத்த 24 மணித்தியாலத்தில் அவர் வெளியே இருக்க வேண்டும். " என கூறப்பட்டிருந்தது. 

அதன்படி அவர்  அடுத்த  24  மணித்தியாலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட்டுப் பார்த்தால் எல்லாமே தெளிவாகப் புரியும். 

😉

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையம்பற்றி யாழில் ஒரு கட்டுரையை கொத்தா கோ போராட்டம் உக்கிரமடையும்போது வெளிவந்திருந்தது நான் நினைக்கிறேன் அனைவரும் மறந்துவிட்டீர்கள் என.

ஆனால் திருப்பவும் லங்க சிறீ கூறி நாம் இதைத் தெரியவேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ்ப்பெயரில் உள்ள சிங்களவர்!

 

இலங்கை ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்கு உதவிய கடத்தப்பட்ட எதிர்ப்பாளர்

அவர் என்னை கடத்தி கொலைசெய்ய முயன்றார் - குமார் குணரட்ணம்

-

தனது பதின்ம வயதில் அவர் 1980களின் இடதுசாரி கிளர்ச்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இராணுவவீரர்கள் போன்று தங்களை காண்பித்தவாறு கண்டியில் உள்ள இராணுவமுகாம்மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றிய பல்கலைகழக இளைஞர்களிற்கு  குமார் குணரட்ணம் தலைமை தாங்கினார் என விக்டர் ஐவன் தெரிவிக்கின்றார்.

எனினும் இராணுவதளபதி சரத்பொன்சேகா வைத்த பொறியில் அவர் சிக்குண்டார்.

kumar_g_main.jpg

ஏஎவ்பி

செயற்பாட்டாளர் பிரேமகுமார் குணரட்ணம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் இலங்கையின் பாதுகாப்பு தலைவர் தன்னை இலக்குவைத்தார் என தெரிவிக்கின்றார்,அவரது கடத்தலின் முக்கிய சூத்திரதாரி பின்னர் ஜனாதிபதியானார்.ஆனால் அந்த தலைவரின் வீழ்ச்சியில் இந்த எதிர்ப்பாளர்  முக்கிய பங்களி;ப்பு செய்துள்ளார்.

தற்போது 56 வயதாகும் குணரட்ணத்தை அவ்வேளை கொழும்பிற்கு அருகில் உள்ள அவரது வீட்டின் அருகி;ல்வைத்து ஆயுதமேந்திய நபர்கள் வானில் தூக்கிப்போட்டு இரகசியஇடமொன்றிற்கு கொண்டு சென்றனர்,அங்கு தடுத்துவைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தனர்.

2012 இல் சீருடையணியாமல் இலக்கத்தகடற்ற வாகனங்களை பயன்படுத்திய பொலிஸார் பல எதிர்ப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் கடத்தி சென்றனர் அவர்களில் பலர் திரும்பிவரவில்லை.

புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த தருணத்திலேயே தீவிரபோக்குகொண்ட இடதுசாரியான அவர் கடத்தப்பட்டார், தப்பி வந்த அதிஸ்டசாலிகளில் அவரும் ஒருவர்,சர்வதேச அழுத்தம் காரணமாக நான்கு நாட்களின் பின்னர் அவரை விடுவித்தனர்.

அவ்வேளை இலங்கையின் பாதுகாப்பு படையினர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டனர் பின்னர் அவர் நாட்டின் ஜனாதிபதியானார்,நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மாறினார் கடந்த வாரம் குணரட்ணம் அணிதிரட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்ட வேளை அங்கிருந்து தப்பியோடி அவர் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அவர் என்னை கடத்தி கொலைசெய்ய முயன்றார், என குமார் குணரட்ணம் ஏஏப்பிக்கு தெரிவித்தார் ஆனால் அது தனிப்பட்ட பகையல்ல என வறண்ட சிரிப்புடன் அவர்  தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டாளரை உள்ளுர் ஊடகங்கள், வெளித்தோற்றத்தில் தலைவர் அற்றதுபோன்று தோற்றமளித்த பல மாத எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பியதிலும்  அது பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக மாற்றியதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என தெரிவிக்கின்றன.

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிவாரத்தில் அரசபடையினரின்  கொடுமைகள் குறித்து சர்வதேச சமூகம் கண்டனம் வெளியிட்ட போதிலும் பல தசாப்தகால உள்நாட்டு போரை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக ஒரு காலத்தில் நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட அரசியல் வம்சாவளியொன்றின் வீழ்ச்சிக்கு இது காரணமாக அமைந்தது.

ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டது அவசரஅவசரமாக சிங்கப்பூர் சென்றது ஜனநாயகத்திற்கான வெற்றி என குணரட்ணம் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

ஆனால் நீதியை எதிர்கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் நீதிமன்றங்களிற்கு வரும்வரை ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம் நிறைவேறாது என  அவர் தெரிவித்தார்.

ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போதல் ஆகியவற்றின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் கோத்தபாய யுத்த குற்றங்களிற்கு காரணமானவரும் அவரே என குணரட்ணம் தெரிவித்தார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போதும் பின்னரும் பாதுகாப்பு படையினர் பிரச்சினைக்குரிய எதிராளிகளை அனேக தடவைகள் கடத்தியுள்ளனர் என குற்றம்சாட்டப்படுகின்றது.வெள்ளை வான் என்பது ஆள்கடத்தலை குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.

2019 இல் உள்நாட்டு செய்தியாளர் ஒருவரிற்கு கருத்து தெரிவித்தவேளை ராஜபக்ச வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டார் எனினும் அது தான் பாதுகாப்பு செயலாளராக பதவி வகிப்பதற்கு முன்னர் என தெரிவித்த அவர் தன் மீது குற்றசாட்டுகளை சுமத்துவது நியாயமற்றது என தெரிவித்தார்.

2012 இல் தனக்கு நிகழ்ந்தவைகளை குமார் குணரட்ணம் ஒருவகை நகைச்சுவை உணர்வுடன் நினைத்துப்பார்க்கின்றார்,அவரது நெருங்கிய சகா காணாமல்போய் இரண்டு மாதங்களின் பின்னர் இவர் கடத்தப்பட்டார்- அவரது நண்பர் மீண்டும் திரும்பிவரவில்லை.

நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் குணரட்ணத்திற்கு அவுஸ்திரேலியா பிரஜாவுரிமை வழங்கியது அவரது செயற்பாட்டிற்காக அவர் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவுஸ்திரேலியா பிரஜாவுரிமையை வழங்கியது.

கான்பெரா தூதுவரின் பரப்புரிமையே தனது உயிரை காப்பாற்றியது என்கின்றார் குமார்குணரட்ணம்.

நீண்டகால ஆயுத மோதல் மனித உரிமை துஸ்பிரயோக வரலாற்றினை கொண்ட நாட்டில் தனது வாழ்க்கையை புரட்சிகர அரசியலில் செலவிட்டுள்ளார் குணரட்ணம்.

இதன் காரணமாக அவர் மரணத்தை மிக அருகில் சந்தித்தது இது முதல்தடவையல்ல.

தனது பதின்ம வயதில் அவர் 1980களின் இடதுசாரி கிளர்ச்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இராணுவவீரர்கள் போன்று தங்களை காண்பித்தவாறு கண்டியில் உள்ள இராணுவமுகாம்மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றிய பல்கலைகழக இளைஞர்களிற்கு  குமார் குணரட்ணம் தலைமை தாங்கினார் என விக்டர் ஐவன் தெரிவிக்கின்றார்.

எனினும் இராணுவதளபதி சரத்பொன்சேகா வைத்த பொறியில் அவர் சிக்குண்டார்.

மோதலின் போது திருகோணமலையில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத படுகொலைக்கு சரத்பொன்சேகாவே காரணம் என்கின்றார் குமார் குணரட்ணம்.

ஏனைய சகாக்கள் கொல்லப்பட்டதால் கடும் அழுத்தத்திற்குள்ளனான அரசாங்கம் காணாமல்போன சிலர் உயிருடன் இருக்கின்றனர் என்பதை காண்பிப்பதற்காக  சிலரை விடுதலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என அவர் தெரிவிக்கின்றார்.

மிகநீண்ட காலத்திற்கு முன்னரே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ள குமார் குணரட்ணம் முழுமையான அரசியல் சீர்திருத்தங்களிற்காக வீதிப்போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுக்கவேண்டியுள்ளது என்கின்றார்.

ஆட்சியாளர்களிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்கவில்லை இதன் காரணமாகவே மக்கள் வீதிக்கு வந்து ஜனநாயகம் என்றால் என்னவென காண்பித்துள்ளனர் என்கின்றார் அவர்.

https://www.virakesari.lk/article/131755

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

25 minutes ago, கிருபன் said:

இவர் தமிழ்ப்பெயரில் உள்ள சிங்களவர்!

தமிழ் பெயர்தாங்கி

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.