Jump to content

நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை!

students-girls-TNM-3-compressed.jpg

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று ( ஜூலை 17 ) நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் 204 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் பெற்றோர் கொல்லம் புறநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகார் மனுவில்,

“தேசிய தேர்வு முகமை உள்ளாடையில் இரும்பு கொக்கிகள் ஏதும் இருக்ககூடாது என அகற்றச் சொல்லியுள்ளனர். அப்படி அகற்ற முடியாவிடில் பிராவையே கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சொல்லி கட்டளையிட்டுள்ளனர். உள்ளாடையில் இரும்புக் கொக்கிகள் இருக்கக் கூடாது என்று தேர்வு அறை விதிகளில் எங்கும் சொல்லவில்லை. எனது மகள் உள்ளாடையை கழட்ட மறுத்ததால் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். எனது மகள் நீண்ட நாட்களாக நீட் தேர்வுக்கு பயின்று வந்தார். ஆனால் நேற்று சரியாக தேர்வு எழுதவில்லை. பல மாணவிகளும் அழுதுகொண்டே திரும்பிச் சென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சோதனையிடும் அதிகாரிகள் அனைத்து பெண்களையும் ஒரே அறையில் உள்ளாடைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் உள்ளாடைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தனர் என்றும் பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.
ஆனால் தேர்வு நடந்த கல்வி மையத்தின் நிர்வாகிகளோ, “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்யவும், அவர்களின் பயோ மெட்ரிக் அட்டெண்டென்ஸ் எடுக்கவும் இரு நிறுவனங்களிடம் பணியை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனங்கள்தான் இவ்வாறு செயல்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.
 

https://minnambalam.com/neet-exam-students-forced-remove-their-bra/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - தேசிய தேர்வு முகமை விளக்கம்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி ஹிந்தி சேவைக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தேர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

"தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார்.

தனது புகாரில் , தனது மகளிடம் உள்ளாடையை கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்," என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்," என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உறவினரான அஜித் குமார் பிபிசியிடம் பேசுகையில், "முதலில் அவர்கள் உள்ளாடையை கழற்றும்படி கூறியுள்ளனர். பின் அவள் அழத் தொடங்கிவிட்டாள். அதன்பின் அவளை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு மாணவ மாணவிகள் கூடி இருக்கும்போது இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"நாங்கள் மாணவியின் கூற்றை பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்," என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற மாணவிகளின் பெற்றோரும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கவுள்ளதாக கோபகுமார் தெரிவித்தார்.

"இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாக கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இது முதல்முறை அல்ல

நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கன்னூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அந்த ஞாயிற்றுக் கிழமையில் அந்த மாணவியும் அவரின் தாயும் சில கிமீ தூரம் நடந்து புதிய கால்சட்டை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன்பின் தேர்வு எழுத உள்ளே சென்றபோது, மெட்டல் டிடக்டர் சோதனையில் சத்தம் வந்தது. பின் அவரின் உள்ளாடையில் உள்ள ஊக்கால் அந்த சத்தம் வந்துள்ளது. எனவே அவர் தனது தாயிடம் அதை கழற்றி கொடுத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது

அதற்கு அடுத்த வருடம், பாலக்காட்டில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்வு முகமையின் மறுப்பு

தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை.

மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-62217833

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர்

அரசினது கைக்கூலிகளான அதிகாரிகள் ஒத்துக்கொள்வார்களா? இது தனியே தென்மாநிலங்களில் மட்டும் திட்டுமிட்டு நடாத்தப்படுகிறதா என்று ஊடகங்கள் ஆய்வுசெய்து  உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். புலி எலி என்று சவுக்கெடுப்போர் இதனைப் புலனாய்வு செய்து மணியாட்டலாமே. 
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார்.

😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2022 at 18:16, கிருபன் said:

 

“தேசிய தேர்வு முகமை உள்ளாடையில் இரும்பு கொக்கிகள் ஏதும் இருக்ககூடாது என அகற்றச் சொல்லியுள்ளனர். அப்படி அகற்ற முடியாவிடில் பிராவையே கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சொல்லி கட்டளையிட்டுள்ளனர். உள்ளாடையில் இரும்புக் கொக்கிகள் இருக்கக் கூடாது என்று தேர்வு அறை விதிகளில் எங்கும் சொல்லவில்லை. எனது மகள் உள்ளாடையை கழட்ட மறுத்ததால் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். எனது மகள் நீண்ட நாட்களாக நீட் தேர்வுக்கு பயின்று வந்தார். ஆனால் நேற்று சரியாக தேர்வு எழுதவில்லை. பல மாணவிகளும் அழுதுகொண்டே திரும்பிச் சென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சோதனையிடும் அதிகாரிகள் அனைத்து பெண்களையும் ஒரே அறையில் உள்ளாடைகளை கழட்டி வைத்து விட்டு தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் உள்ளாடைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தனர் என்றும் பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.
ஆனால் தேர்வு நடந்த கல்வி மையத்தின் நிர்வாகிகளோ, “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்யவும், அவர்களின் பயோ மெட்ரிக் அட்டெண்டென்ஸ் எடுக்கவும் இரு நிறுவனங்களிடம் பணியை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனங்கள்தான் இவ்வாறு செயல்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.

வக்கிரம் பிடித்த.... இந்திய சட்டங்கள்.
அண்மையில்... ஊழல், துரோகம், சர்வாதிகாரம்... போன்ற பல சொற்கள் 
பாராளுமன்றில் தடை செய்யப் பட்ட  சொற்களாக அறிவித்து உள்ளார்கள்.

 

//வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.//

 

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைகளைக் களட்டச் சொன்ன அதிகாரிகள் எதிர்காலத்தில் அவர்களது வீட்டுப் பெண்டுகளதும் உள்ளாடைகளை இன்னுமொருவன் களட்டச்சொல்லுவான் என்பதை மறந்துவிட்டார்கள்.

பொறுக்கி பொறுக்கி அக்கா தங்கச்சிகளுடன் புறக்கல போல கிடக்கு.

இதில் ஒரு சில அதிகாரிகள் பெண்களின் உள்ளாடைகளை லவட்டிக்கொண்டு போயிருப்பார்கள் என்பது நிச்சயம். இது ஒரு வித மனநோய்.

இவங்களை எல்லாம் பயித்தியக்காரர்களுக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார டாக்டரிடம் கொண்டாந்து விடனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உள்ளாடைகளில்  " தரவுகள் காப்பி அடிக்க   " ஒழித்து வைத்திருப்பார்கள் என்பதாலேயோ .? அப்போ சூப்பர்வைசர்களுக்கு   என்ன வேலை ?
 

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.