Jump to content

நாளை, புதிய ஜனாதிபதி தெரிவு - மூன்று வேட்பாளர்கள் களத்தில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதித் தெரிவு நாளை- மூன்று வேட்பாளர்கள் களத்தில்!

நாளை, புதிய ஜனாதிபதி தெரிவு - மூன்று வேட்பாளர்கள் களத்தில்!

நாளைய தினம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பிற்கு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இன்று நாடாளுமன்றில் பரிந்துரைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார்.

இதனை முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவின் பெயரை முன்மொழிந்தார்.

மானுஷ நாணயக்கார இதனை வழிமொழிந்ததோடு, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்திருந்தார்.

நாளை புதன்கிழமை, காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291573

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே பேயும் பிசாசும் தாம் இதில் நமக்கென்ன பலன் இருக்கிறது

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை: பின்வாங்கிய சஜித் பிரேமதாச

Srilanka LoP Sajith Premadasa withdraws presidential candidature economic crisis

இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்தது. பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் நிலைமை சீரடையாததால் ஆத்திரமடைந்த மக்கள் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.

இதனை அடுத்து இலங்கையில் இருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் (ஐக்கிய மக்கள் சக்தி) தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை அதிபர் பதவிக்கு போட்டியிட வைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாளை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும்,  இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி, டலஸ் அழகப்பெருமவை வெற்றிபெற வைக்க எதிர்க்கட்சிகள் உழைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

https://minnambalam.com/not-contesting-sri-lankan-president-post-sajith-premadasa/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எல்லாமே பேயும் பிசாசும் தாம் இதில் நமக்கென்ன பலன் இருக்கிறது

இப்போதைக்கு  தமிழர்கள் எட்டத்தை நிண்டு கூத்து பார்க்கிறதுதான் நல்லது எண்டு நான் நினைக்கிறன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எல்லாமே பேயும் பிசாசும் தாம் இதில் நமக்கென்ன பலன் இருக்கிறது

அதே பேரினவாதப் பிசாசுகள் தான். எந்த மாற்றமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார்.

இதனை முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவின் பெயரை முன்மொழிந்தார்.

 

https://athavannews.com/2022/1291573

Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president

 

220715%20Alahapperuma%20%20(5).jpg

A formerly staunch Rajapaksa ally, Dullas Alahapperuma has declared his intention to run for president of Sri Lanka as Sinhala politicians have begun announcing their bids following the resignation of Gotabaya Rajapaksa.

We take a look at Dullas Alahapperuma’s record.

220715%20Alahapperuma%20%20(1).jpg

Alahapperuma is yet another staunch Sinhala Buddhist nationalist and Rajapaksa ally, who was initially with the Sri Lanka Freedom Party (SLFP) before switching to the Sri Lanka Podujana Peramuna (SLPP).

He started his career as a Sinhala journalist, before contesting the 1993 Provincial Council elections in the Matara District. He was elected as an MP for the region in 1994 until 2001.

After losing his seat in 2001, he reportedly pledged to leave the country but returned in 2005 as a national list MP under Mahinda Rajapaksa. He reportedly when on to “spearhead” Rajapaksa’s presidential campaign.

220715%20Alahapperuma%20%20(4).jpg

In 2009, he sat alongside paramilitary leader Douglas Devananda in Jaffna and said Mahinda Rajapaksa would “soon find a political solution,” but rejected previous claims by Devananda that the 13th Amendment would be implemented.

In 2012, as a United Nations Human Rights Council which called for accountability for war crimes was being first considered by the global body, the then Youth Affairs and Skills Development minister vowed that protests would be held in 150 local council sites across the island against such a move.

"Forgetting all differences people must rally to protect the president and the nation," said Alahapperuma.

In 2013, as the Tamil National Alliance released a manifesto for the Northern Provincial Council elections, Alahapperuma compared it to the TULF’s 1976 Vaddukoddai Resolution, and labelled it “a cyanide capsule to the Tamil youth".

In 2014 he told journalists  that Tamils who have migrated will never be granted the opportunity to cast votes in an election, as they would help to grow the LTTE movement in the country.

In 2015, whilst in opposition, he criticised the deproscribing of Tamil diaspora organisations – a move which that Gotabaya Rajapaksa regime revoked.

"De-proscription was welcomed if the organizations which are de-proscribed had given up separatism, but the government should be alert if these organizations continued to hold such views," he stated.

220715%20Alahapperuma%20%20(5).jpg

In 2015, he was pictured alongside fellow extremist politicians Sarath Weerasekara and Udaya Gammanpila waving a flag emblazoned with only the Sinhala lion. The flags have been associated with the racist ‘Sinha Le’ movement other organisations accused of hate speech.

220715%20Alahapperuma%20%20(2).jpg220715%20Alahapperuma%20%20(2).JPG

220715%20Alahapperuma%20%20(3).JPG

In 2016, he joined a protest outside the United Nations Human Rights Council in Geneva where Sinhala demonstrators were denouncing further resolutions on accountability for mass atrocities.

Protestors held placards stating Sri Lankan troops were engaged in a “humanitarian mission” and for the protection of military “war heroes”.

And in 2020, Alahapperuma praised Gotabaya Rajapaksa for getting rid of “frauds, corruptions, malpractices, drug trafficking and underworld gangs”, and added “the President and his administration will bring about a more favourable and conducive environment for every ethnic community to live in peace and harmony”.

 

I"m announcing my candidacy for the presidency. I ask for the support of fellow MPs, who believe that needs to embark on a new, constructive course. Together, let's commit to guide to the path of econo. prosperity while upholding rule of law & maintaining ethnic solidarity.

— Dullas Alahapperuma (@DullasOfficial) July 15, 2022

He curently joins the war crimes accused Sarath Fonseka and another Sinhala nationalist Sajith Premadasa as having announced their intentions to run for presidency.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் - யாருக்கு வெற்றி சாத்தியம்?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,SRI LANKA PARLIAMENT

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று தமது வேட்பு மனுவை, நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்தனர்.

இதற்கமைய, இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள், நாடாளுமன்றத்தில் இன்று (19) முன்மொழியப்பட்டன.

வேட்பு மனு தாக்கலுக்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய போதே இந்த பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன்படி, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

டளஸ் அழகபெரும

ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

அநுர குமார, தலைவர் - தேசிய மக்கள் சக்தி

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது.

போட்டியிடாமலேயே களத்தில் இருந்து விலகிய சஜித்

இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

எனினும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு, ராஜபக்ஷ குடும்பத்தை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஆதரவை வழங்கியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு, தற்போது அந்த கட்சி மாத்திரமே ஆதரவை வழங்கியுள்ளது.

 

line

 

line

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எந்தவொரு வேட்பாளரும் ஆதரவு வழங்காது. நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மெளனம் காக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானத்தை எட்டவில்லை.

மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இன்று வரை சஜித் பிரேமதாஸவுடனேயே கூட்டணியாக செயற்பட்டு வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தீர்மானத்தை தாமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி, டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியாக செயற்படும் தாமும் அதற்கு ஆதரவாக இருப்பதாக அவi; கூறுகின்றார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை வெளிபடையாக அறிவிக்காத நிலையில், சில கட்சிகள் மாத்திரமே நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

எம்பிக்கள் கருத்து

ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், ''மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். தலைசிறந்த நோக்காக கொண்டு செயற்படுகின்ற அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அதனால், எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் பொதுவான நிகழ்ச்சி நிரலொன்றை நடைமுறைப்படுத்துகின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 19வது திருத்தம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை கூற வேண்டும். அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஒன்றிணைந்த திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனாலேயே இந்த தீர்மானத்தை எடுத்தோம். உறுதியாக நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதனை தெரிந்துக்கொண்டே நாங்கள் இந்த விடயத்தில் களமிறங்கினோம்," என தெரிவிக்கின்றார்.

இந்த போட்டியில் களமிறங்கியுள்ள டளஸ் அழகபெரும, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் என்பதுடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆதரவு வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திம வீரக்கொடி, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.

''மக்கள் எதிர்நோக்குகின்ற ஒன்று இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றக்கூடியவர்களின் கொள்கைகளை கொண்டவர் யார் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். மக்கள் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்த நாம் ஆதரவு வழங்க போவதில்லை" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய மக்கள் சக்தி

டளஸ் அழகபெரும, ஜனாதிபதி பதவியை ஏற்கும் பட்சத்தில், சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கின்றார்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

விஜித்த ஹேரத், மக்கள் சக்தி

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியமை குறித்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

''மொட்டு கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒருவரை முன்மொழிந்தனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், மொட்டு கட்சியுள்ளவர்களை முன்மொழிந்தனர். அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டார்கள். எனினும், நாட்டு மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மக்களின் எண்ணத்துடன் தற்போதே வெற்றி பெற்று விட்டோம்" என விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

 

படக்குறிப்பு,

ஆரோக்கியநாதன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், சிஸ்டம் சேஞ்ச் நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''எதை செய்தேனும், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு காணப்படுகின்றது. எனினும், இறுதியாக இவர்கள் எதிர்பார்க்க சிஷ்டம் சேர்ன்ஜ் இதுவா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. மொட்டு கட்சியின் விஞ்ஞானபனங்கள் தோல்வி அடைந்துள்ளது, இனி மொட்டு கட்சிக்கு வர முடியாது என சஜித் பிரேமதாஸ கூறி வந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களும் அதே விடயத்தை கூறி வந்தார்கள்.

எனினும், ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபரை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் கைக்கோர்க்கின்றார்கள் என்று சொன்னால், அது ஒரு தனிநபரின் ஆளுமை மீதான அச்சமா? இல்லையென்றால், அரசியல் காழ்ப்புணர்வா? என்ற கேள்வி எழுகின்றது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பூரண அறிவும், தூர பார்வையும் கொண்ட ஒருவர் இருந்தால் தான் நல்லது. நெருக்கடியான நேரத்தில் வலுவான தலைவர் ஒருவரே இருக்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நல்ல விடயங்களை சாதித்தார்கள். இதையடுத்து, தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்ககூடிய ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் எண்ணுகின்றார்களா?

ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், அவர்கள் கூறுவதை இவர் செவிமடுக்க மாட்டார் என்று யோசிக்கின்றார்களா? இப்படியே போனால், போராட்டக்காரர்கள் எதிர்காலத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தலையீடு செய்ய முயற்சிப்பார்கள்.

ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். யாருக்கும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை நியமித்ததற்கு பிறகு, எந்த நேரமும் மக்களை கேட்டு கேட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. நெருக்கடிகளை நாடு சந்திக்கும் போது, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அது தான் உண்மையான தலைமைத்துவத்திற்கு அழகு. வேண்டாம் என கூறிய இடத்திலேயே தற்போது சென்றிருக்கின்றார்கள்.

மீண்டும் மொட்டு கட்சியே ஆதிக்கம் செலுத்த போகின்றது. அப்படி ஒன்றால், சிஸ்டம் சேஞ்ச் அங்கு இருக்கின்றது." என மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அருண் ஆரோக்கியநாதன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62225113

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:
டலஸ் அழகப்பெரும பற்றி... இதுவரை, அறிந்திராத விடயங்கள்.
 
1983 ஜூலை கலவரத்தில் தமிழர்களுக்குத் தனது வீட்டில் பாதுகாப்புக் கொடுத்தவர் டலஸ் அழகப்பெரும..
 
முஸ்லிம்களுக்கு எதிரான 2014 அளுத்கம, 2018 திகன, 2019 கண்டி, குருநாகல், கம்பஹா வன்முறைகளில் முஸ்லிம்களுக்குத் ஆதரவாக நின்றவர் டலஸ் அழகப்பெரும
 
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் PHD முடித்தவர் டலஸ் அழகப்பெரும
 
இதுவரையில் எந்தவொரு லஞ்சக் குற்றச்சாட்டுகளிலும் சிக்காத ஒரே அரசியல்வாதி டலஸ் அழகப்பெரும
 
இப்படி... எவனாவது உருட்டிட்டு வருவான்.
அப்பிடியே, அவனை மல்லாக்கப் போட்டு புடுக்குலயே மிதிங்க.
டலஸ் அழகப்பெரும... ஒரு கெரியன், ஸ்கூலுக்குப் போனதுதான்...
அவருடைய உச்ச பட்ச கல்வித் தகைமை.
சிரிக்க வைத்த பதிவு. நீங்களும் வாசித்து சிரியுங்கள். 🤣

 

 

இவர் ஒரு  இனவாதி என்று  இருந்த  எனக்கு

உதை வாசித்ததும்  ஒரு  தடுமாற்றம் வந்ததுண்மை??🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இவர் ஒரு  இனவாதி என்று  இருந்த  எனக்கு

உதை வாசித்ததும்  ஒரு  தடுமாற்றம் வந்ததுண்மை??🤣

தமிழர், முஸ்லீம்களின்... ஆதரவை பெற....
முற்  பகுதியில்... உருட்டின உருட்டு அப்பிடி... விசுகர். 😂

நானும் உங்களைப் போல, வாசித்து ஏமாந்தவன் தான்... 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு...  டலஸ் அழகப் பெருமவிற்கு,  ஆதரவு தெரிவிக்க...

முடிவு எடுத்து உள்ளார்கள் என, அறிய முடிகின்றது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.