Jump to content

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை - சம்பந்தனின் இல்லத்திற்கு விரையும் டலஸ், சஜித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.ராம்)

ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

சஜித் அல்லது டலஸ் ? | Virakesari.lk

புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் உள்ள சம்பந்தனின்  இல்லத்தில் இன்று மாலை 5.30இற்கு ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது, டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு உள்ள நன்மைகள் என்ன, தீர்மைகள் என்ன என்றும் அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன், இருவரையும் ஆதரிக்காது வாக்கெடுப்பை நிராகரிப்பது தொடர்பிலும் பிரதிநிதிகள் கவனம் செலுத்தியதாகவும் தெரியவருகின்றது. எனினும், ஈற்றில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தி;ல் பங்கேற்ற  பல பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட உடனடியாக தீர்க்கவல்ல பிரச்சினைகள் தொடர்பில் காலவரையறையுடனான உறுதிப்பாடு அவசியம் என்றும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனது இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் அவரை முன்மொழிந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் டலஸ் மற்றும், சஜித் ஆகியோர் சம்பந்தனின் இல்லத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் செல்லவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதோடு, அவர்களை சந்திப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் தற்போது காத்திருக்கின்றனர்.

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை - சம்பந்தனின் இல்லத்திற்கு விரையும் டலஸ், சஜித் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பிழம்பு said:

ஆர்.ராம்)

ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

சஜித் அல்லது டலஸ் ? | Virakesari.lk

புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் உள்ள சம்பந்தனின்  இல்லத்தில் இன்று மாலை 5.30இற்கு ஆரம்பமாகியிருந்தது.

ரணிலை... ஒரு நிமிடம் கூட, ஜனாதிபதி பதவியில் அமர விடக் கூடாது என்று...
சுமந்திரனும், சாணக்கியனும்... காலி  முகத்திடல் போராட்டக் காரர்களுடன் 
பேசும் போது  சொன்னவர்கள்.

ரணிலிடம்... தனிப்பட்ட முறையில் பல பெறுமதி மிக்க உதவிகளை பெற்ற  சம்பந்தன் 
என்ன முடிவு எடுக்கிறார் என்று பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு

Published by T Yuwaraj on 2022-07-19 22:29:35

 

ஆர்.ராம்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென ஏகமானதாக தீர்மானித்துள்ளது.

FYC18DXX0AQXr3b__2_.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் வீரகசேரிக்கு கருத்து வெளியிடும்போது,

'தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று நடத்திய கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென ஏகமனதாக தீர்மனித்துள்ளது' என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப் பார்க்க பாவமாயிருக்கு.

எழும்பி நிற்க முடியாமல் இருக்கிறார்.

இந்த கூட்டத்துக்கை பீரிஸ் என்ற நரியும் நிற்குது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவரைப் பார்க்க பாவமாயிருக்கு.

எழும்பி நிற்க முடியாமல் இருக்கிறார்.

இந்த கூட்டத்துக்கை பீரிஸ் என்ற நரியும் நிற்குது.

வருங்கால ஜனாதிபதியையும்,  பிரதமரையும்... தன் வீட்டுக்கே கூப்பிட்டு,
"ஸ்கூல்  பசங்க" மாதிரி, தனக்கு பக்கத்திலை  நிக்க வச்சவன்(டா)  தலைவன்.  🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

வருங்கால ஜனாதிபதியையும்,  பிரதமரையும்... தன் வீட்டுக்கே கூப்பிட்டு,
"ஸ்கூல்  பசங்க" மாதிரி, தனக்கு பக்கத்திலை  நிக்க வச்சவன்(டா)  தலைவன்.  🤣

ஓஓஓ

நீங்க அப்பிடி வாறீங்களோ?

எதுக்குமொருக்கா கண்ணைப் பாருங்கோ?

திறந்திருக்கா?மூடியிருக்கா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ

நீங்க அப்பிடி வாறீங்களோ?

எதுக்குமொருக்கா கண்ணைப் பாருங்கோ?

திறந்திருக்கா?மூடியிருக்கா?

FYC18DXX0AQXr3b__2_.png

இதில் நிற்கும்... பல கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களை 
இன்றுதான் முதன் முதலில் பார்க்கின்றேன்.

அந்தளவிற்கு... கூட்டடமைப்பில்  ஒரு சில தனிநபர் ஆதிக்கம் உள்ளது.
வரும் தேர்தலுடன்... எல்லாருக்கும் பாடம் படிப்பித்து,
நிரந்தரமாக வீட்டிற்கு  அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அந்தளவிற்கு... கூட்டடமைப்பில்  ஒரு சில தனிநபர் ஆதிக்கம் உள்ளது.
வரும் தேர்தலுடன்... எல்லாருக்கும் பாடம் படிப்பித்து,
நிரந்தரமாக வீட்டிற்கு  அனுப்ப வேண்டும்.

மக்களுக்கு மறதி அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் காலை இந்த படத்தை ஒருவர் வட்ஸப்பில் அனுப்பினார். என்ன இழவு என்று அப்போது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

3 hours ago, பிழம்பு said:

FYC18DXX0AQXr3b__2_.png

போட்டோவுக்குக் கூட எழுந்து நிற்க முடியாத தலைமை தமிழ் மக்களுக்கு தேவையா ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அது பாருங்கோ பழக்க தோஷம்.

(கதிரையை வீட்டுக் கொடுக்காத )😃

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வருங்கால ஜனாதிபதியையும்,  பிரதமரையும்... தன் வீட்டுக்கே கூப்பிட்டு,
"ஸ்கூல்  பசங்க" மாதிரி, தனக்கு பக்கத்திலை  நிக்க வச்சவன்(டா)  தலைவன்.  🤣

42 minutes ago, புலவர் said:

எழும்பாமலே வேலையை முடிச்சவண்டா என்தலைவன்!!

FYC18DXX0AQXr3b__2_.png

நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா?
நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நான்
இழுத்ததும் பிரியுற நூலா நான்
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நான்
விடியல விரும்பிடும் சம்பந்தனடா நான்...
சம்பந்தனடா நான் 😎

 

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

ஈற்றில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தி;ல் பங்கேற்ற  பல பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவையும் வெல்லுற அவசரத்தில எழுதிக்குடுத்துப்போட்டு நாளைக்கு மறுப்பறிக்கையோ? வாங்கி கிழித்து குப்பைக்கூடைக்குள் போடுறதோ? அல்லது விட்டிட்டு கலைப்படுகிறதோ? "உறுதிப்பாடு" இவர்களே மக்களுக்கு கொடுத்த உறுதிப்பாட்டை தூக்கி கடாசிப்போட்டினம்,   

இதுக்குள்ள டிலான் பெரேராவின் முகமும் தெரியுது. தேர்தல் என்றால்; நடக்காததும் நடக்கும், பல புதுமைகளைச்சொன்னேன்.

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த கூட்டத்துக்கை பீரிஸ் என்ற நரியும் நிற்குது.

சிங்களத்துக்குள் ஒரு டக்கிளஸ் தேவானந்தா இவர், கொப்பு விட்டு கொப்பு தாவுவதில் வல்லவர். எல்லோருந்தான் இவர்கள் ஒருபடி மேல். ஒருவேளை கூட்டமைப்பினரின் முடிவு  அறிய அனுப்பப்பட்டாரா?     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டளஸ் அழப்பெரும மகிந்தவின் காலைச் சுற்றிவந்த நாய். பொதுஜன பெரமுனவின் தூண்களில் ஒன்று. மிகத் தீவிரமான சிங்கள பெளத்த இனவாதி. அப்படியான ஒருவனை ஜனாதிபதியாக்க உதவுவதன் மூலம் மீண்டும் தமிழர்கள் தமது தலையில் மண்ணையள்ளி போட்டுக்கொள்ளப்போகிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் அவன் நிறைவேற்றப்போவதில்லை. 

ஒரு சின்ன உதாரணத்திற்கு, குருந்தூர் மலையில் எமது கோயிலை இடித்து விகாரை கட்டும் ஆக்கிரமிப்புத்தனத்தை நீதிமன்று ஒன்று வெளிக்கொணர்ந்து தடுத்துவிடப்போகிறதென்பதற்காக அரச நிர்வாகமும், பொலீஸும் "சமூகங்களுக்கிடையே கசப்பான மனநிலை உருவாகும்" என்று பூச்சாண்டி காட்டி, ஆக்கிரமிப்பை நீட்டித்திருக்கிறது. இந்த இலட்சணத்தில் எங்களின் தாயகமெங்கும் நடக்கும் திட்டமிட்ட சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பினை இவர்கள் ஒப்பந்தம் போட்டுத் தடுத்துவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவுதான்.

என்னைப்பொறுத்தவரை கூத்தமைப்பு செய்வது, "நாம் ஒப்பந்தம் போட்டுத்தான் ஆதரவு வழங்கினோம், அவர்கள் ஏமாற்றுவார்கள் என்று எமக்குத் தெரியாது" என்று கூறி இலகுவாக தப்பிப்பதற்கே இதனைச் செய்கிறார்கள். ஏனென்றால், இவை எல்லாவற்றையும் விட அவர்களின் அரசியல் எதிர்காலம் அவர்களுக்கு முக்கியமானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரஞ்சித் said:

"நாம் ஒப்பந்தம் போட்டுத்தான் ஆதரவு வழங்கினோம், அவர்கள் ஏமாற்றுவார்கள் என்று எமக்குத் தெரியாது"

பட்டறிவு, பகுத்தறிவு என்று ஒன்று இருக்குதெல்லோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு - டலஸ், சஜித் இடையிலான எழுத்துமூல உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் இதோ !

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூலமான உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது.

Untitled-1.jpg

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று தொடக்கம் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி நிரந்தரத் தீர்வுகாண்பதாகவும், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை எட்டுவதற்கான உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் ஏற்றுக்கொண்டு பத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முன்னிலையில் எழுத்துமூல உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்விடயங்களாவன

1.நீண்டகாலமாக காரணமற்று சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.

2.அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

3.வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

4.தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

5.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல்.

6.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.

7.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

8.வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

9.வடக்கு, கிழக்கில் குடிகொண்டிருக்கும் இராணுவப் பிரசன்னத்தைக்; குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி அமைத்தல்.

10.கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.

இதனைவிடவும், காணி சம்பந்தமாக நான்கு துணை விடயங்களும் உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/131857

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை பதவிக்கு வராத ஒருவருக்கு ஆதரவு கொடுத்த கூட்டடைமப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

மீண்டும் ஒரு முறை பதவிக்கு வராத ஒருவருக்கு ஆதரவு கொடுத்த கூட்டடைமப்பு.

அவர் பதவிக்கு வர முடியாமல் போனதே மேலே குறிப்பிட்ட எழுத்துமூல உடன்பாட்டாலதான் என்பது எத்தனை பேருக்கு விளங்குது! சிங்களவனா கொக்கா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:
6 hours ago, சுவைப்பிரியன் said:

மீண்டும் ஒரு முறை பதவிக்கு வராத ஒருவருக்கு ஆதரவு கொடுத்த கூட்டடைமப்பு.

அவர் பதவிக்கு வர முடியாமல் போனதே மேலே குறிப்பிட்ட எழுத்துமூல உடன்பாட்டாலதான் என்பது எத்தனை பேருக்கு விளங்குது! சிங்களவனா கொக்கா

இரகசிய வாக்கெடுப்பில் ரணிலுக்கு தானாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

எழுத்துமூல உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை பேய்க்காட்ட ஒருவரோடு உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, மறுகையில் கையூட்டு வாங்கிக்கொண்டு மற்றவருக்கு ஆதரவு கொடுப்பது. எப்படியிருந்தாலும் யாருக்கு வாக்கு போட்டாலும் தமிழருக்கு ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை, இவர்கள் வற்புறுத்தப்போவதுமில்லை. அப்பப்போ தமிழரை வைத்து அவர்கள் பணம் பார்ப்பார்கள். இதென்ன புதுசா இவர்கள் உடன்படிக்கையில் கையெழுத்து வாங்குவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

மக்களை பேய்க்காட்ட ஒருவரோடு உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, மறுகையில் கையூட்டு வாங்கிக்கொண்டு மற்றவருக்கு ஆதரவு கொடுப்பது. எப்படியிருந்தாலும் யாருக்கு வாக்கு போட்டாலும் தமிழருக்கு ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை, இவர்கள் வற்புறுத்தப்போவதுமில்லை. அப்பப்போ தமிழரை வைத்து அவர்கள் பணம் பார்ப்பார்கள். இதென்ன புதுசா இவர்கள் உடன்படிக்கையில் கையெழுத்து வாங்குவது?

கண்டி ஒப்பந்தத்திலிருந்து… எல்லாத்தையும் கிழித்து எறிந்த சிங்களவனிடம்…
திரும்ப ஒப்பந்தம் போடுகிறார்கள்.
வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் படிக்க மாட்டார்கள் போலுள்ளது.

கூட்டமைப்பு… யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ, அவர்கள் தோற்பது உறுதி என்று, மீண்டும்  நிரூபிக்கப் பட்டுள்ளது.
அந்த அளவுக்கு அவர்களுக்கு அரசியல் சாணக்கிய வரட்சி.
இவர்கள் எல்லோரும் அரசியலை விட்டே… விரட்டியடிக்கப் பட வேண்டும்.
இவர்கள் செய்யும்… தவறுகளால், தமிழ் மக்களுக்குத்தான் துன்பம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு… யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ, அவர்கள் தோற்பது உறுதி

கூட்டமைப்புக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். சும்மா இவர்களுடன் டீல் போட்டு, உடன்படிக்கை செய்து, நாடி பிடித்து பார்ப்பது; யார் வெல்வாரென அவ்வளவே. அங்கேயே வெல்பவர் யாரென உறுதி செய்துவிடுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.