Jump to content

திருகோணமலை சித்திரவதை முகாமிலிருந்து தப்பியோடி வந்தவரின் வாக்குமூலம் - எழுத்து வடிவம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

 

 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2022 at 13:02, நன்னிச் சோழன் said:

 

 

இந்தச் செவ்வியின் எழுத்துவடிவம் உங்களிடம் இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, ரஞ்சித் said:

இந்தச் செவ்வியின் எழுத்துவடிவம் உங்களிடம் இருக்கிறதா? 

எழுதிக்கொண்டிருக்கிறன். இன்டைக்கு ராவைக்கு அல்லது நாளைக்கு முடிச்சிடுவன்.

 • Like 3
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

எழுதிக்கொண்டிருக்கிறன். இன்டைக்கு ராவைக்கு அல்லது நாளைக்கு முடிச்சிடுவன்.

எழுதுங்க நன்னி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


இணைப்புக்கு நன்றி. பெரும் துயரமானதொரு பதிவாகவும், கடத்தப்பட்டோரின் ஒட்டுமொத்தநிலையினை அறியத்தருவதாகவும் உள்ளது. சாட்சிகளைக் கேட்கும் உலகமன்று ஏன் இந்தச் சாட்சி கூறிய முகாம்களைப் பார்வையிட முயற்சிக்கவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நன்னிச்சோழன்.👏🏼

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் விதை பிடுங்கப்பட்ட சூடக்குடா வதைமுகாம்

 

பாகம்-1

 

 • மூலம்:  www.youtube.com/watch?v=v66w_YYvlzg 
 • வாக்குமூலம்: குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 
 • எழுத்து: நன்னிச் சோழன்

 

சிறிலங்கா மற்றும் வல்வளைக்கப்பட்ட தமிழீழப் பரப்புகளில் ஐயத்தின் பேரில் கைதுசெய்யப்படும் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சிறிலங்கா கடற்படையால் நிருவகிக்கப்பட்டு வந்த "சூடக்குடா சித்திரவதை முகாமில்" சிங்களவரால் வதைக்குட்படுத்தப்பட்டு ஒருவழியாக அங்கிருந்து தன்முயற்சியால் தப்பியோடிவந்த தமிழீழத் தமிழன் ஒருவரின் நேரடி வாக்குமூலம் இங்கே எழுத்து வடிவில் பதியப்பட்டுள்ளது. 

இங்கே தமிழர்களுக்கு பால் வேறுபாடின்றி செய்யப்பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கே கொண்டுவரப்பட்ட தமிழ் ஆண்களுக்கு சிங்களப் பெண்களும் தமிழ்ப் பெண்களுக்கு சிங்கள ஆண்களுமென சித்திரவதைகளை செய்தனர். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஆணுறுப்புகளில் செய்யப்பட்ட வதைகள் வாயால் விரிக்க முடியாதவை. சிங்கள இனவெறிப்பேய்கள் வதைவெறி கொண்டு ஆடிய ஆட்டத்தின் உச்சமிவை. இரண்டாம் உலகப்போரில் தன்னிடம் தோற்ற சீனாவின் நாஞ்சிங்கில் சப்பானியப் படைகள் ஆடிய வெறியாட்டத்தோடு இவை ஒப்பிடத்தக்கவை. அந்த அளவிற்கு இம்முகாமில் எம்மினத்தவர் அடைத்துவைக்கப்பட்டு வதைக்கப்பட்டுள்ளனர். 

அந்த வதைகளை நீங்களும் கனத்த நெஞ்சத்தோடு மனதை திண்மையக்கியபடி வாசியுங்கள். 

ஏலுமெனில் வேற்றுமொழிகளிலும் மொழிபெயருங்கள்.🙏

 

*****

 

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்களைக் கைது செய்தார்கள். அந்த சம்பவத்தை, கைது செய்த நேரத்திலிருந்து, என்ன காரணத்திற்காக கைது செய்தார்கள்? அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? எங்கே உங்களைக் கொண்டுபோய் வைத்திருந்தார்கள்? எப்படி உங்களை சித்திரவதை செய்தார்கள் ? என்ற விடையங்களை எங்கட உறவுகளுக்கு விரிவாகக் கூறுங்கள். 

"
ஆமா, 2009 முதலாம் மாசம் இரவு எட்டு மணிக்கு என்னை தூக்கினாங்கா. தூக்கி, என்ட வாகனத்தையும் எடுத்திட்டு என்னட்டை மோட்டர் பைக்கில்லை, கொண்டு கணேசபுரம் என்டவொரு இடம், அதிலை கொண்டு போய் வைச்சு எனக்கி அடிச்சாங்கா, என்ட வாகனம் வரமட்டும். கொட்டானாலை அடிச்சு முதுகெல்லாம் காயமாய்ப்போனது. அதுக்குப் பிறகு வாகனம் வந்த பிறகு என்ட வாகனத்திலை என்னை முகத்தை தறியப் போட்டு கழுத்து முதுகுக்கு மேலை ஏறி மிதிச்சிட்டுத்தான் இருந்தாங்கா, கொண்டு போகமட்டும்! 

கொண்டுபோய் சூடைக்குடா என்டொரு முகாமிலை கொண்டோய் என்னை இறக்கினாங்கா. அங்க இறக்கும்போது, அப்ப, அங்கொரு நீதாப்பளையில இருந்து ஊர்காவல் ஒராளை கொண்டுவந்து சித்திரவதை செய்திட்டிருந்தாங்கா. 

சூடைக்குடா, கூனித்தீவு, சம்பூர், திருகோணமலை மாவட்டம்.

 அதுக்குப் பிறகு என்னைக்கொண்டோய் வாகனத்திலை இருந்து இழுக்கக்குள்ளையே 'வரவேற்பு அடி' என்டு ஆளுக்கொரு பக்கத்திலை எல்லாரும் வந்து தலையிலைதான் அறைஞ்சு அறைஞ்சு அறைஞ்சிட்டு போனாங்கா.

அதுக்குப் பிறகு என்னைக்கொண்டோய் ஃகான்ட்கஃவில போட்டாங்கா, ஒரு கயிறைப் போட்டு என்னை, சாப்பாடு தரேலை, அடிச்சு தண்ணியை ஊத்திப் போட்டிருந்தாங்கா.

நான் அதுக்குபிறகு முழிச்சுப் பாத்தன், அங்காலை ஒரு பாதர் இருந்தார்; ஒரு பாதரும் ஒரு இயக்கப்பொடியனும் - எல்டிடி பொடியனும். பாதர் போனவுடனையே, 

"தம்பி, நீங்க, ஆரையும் காட்டிக்குடுக்க வேணாம், ஆரையும் சொல்ல வேணாம். நாம சாகப்போறம். நம்மளோடையே போய்யிற்றிரனும். ஆரையும் சொல்ல வேணாம்." 

என்டு அவ்வளவு மட்டுந்தான் சொன்னார். 

"ஓம் பாதர்."

என்டு மட்டும் சொன்னன். அவற்றை உடையைப் பாத்திட்டுத்தான் பாதர் என்டு மதிச்சனான்; கறுத்தப்பட்டி. ஆனால் புழுத்த மாதிரித்தான் இருந்தவர்; புழுத்துப் போனார்! அவர் ஏழாவது நாள் செத்திட்டார். அவரைக் கொண்டோய் கடல்ல இறக்கிட்டாங்கள். 

அதுக்குப் பிறகு அடுத்தநாள் எனக்கு அடியொண்டும் இல்லை. அடுத்த நாள் வைச்சிருந்தாங்கா.

அடுத்த நாள் ஒரு விடியப் பாத்தன், ஒரு ஏழுபேர் - அடிச்சு Bபொடி அப்பிடியே சுருண்ட மாதிரிக் கிடந்ததைக் கண்டன்; அதிலை ஒரு பொம்பிளைப் பிள்ளை. அந்தப் பொம்பிளைப் பிள்ளைக்கு, அவ எல்.ரி.ரி, அவக்கு யூனிஃவோர்ம் போட்டு சென்ரிக்கு நிக்க வெடி வைச்சுப்போட்டு அவவோட ஏழுபேரை கொண்டுபோய் கல்லை கட்டி கன்போட்டிலை ஏத்திக்கொண்டு கடலிலைதான் கொண்டோய் இறக்கினவங்கள், ஆழிக்கடல்ல.

மற்றது, அந்த முகாமிலை வந்து ஆம்பிளையளுக்கே உடுப்பில்லை; நானும் நிருமாணமாத்தான் இருந்தன். பொம்பளையள நிக்கரோடதான் வைச்சிருப்பாங்கா. பொம்பளையள கூடுதலா கெடுத்துத்தான் வைச்சிருப்பாங்கா - முலைப்பகுதி, அடிவயிறு, தொடைப்பகுதி எல்லாம் கடிச்சுருப்பாங்கா. அப்படியான ஒரு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் பொம்பளையளும் இருந்தவை. 

பிறகு அடுத்த நாள், எனக்கும் சரியான அடி. எல்.ரி.ரி.இலை சரன்டர் ஆனா ஆக்கள் வந்தாங்கா!

 "மச்சான், நாம ரண்டு பேரும்-எல்லாரும் ஒன்டாத்தானே இருந்தனாம, நாங்க எப்பிடித் திரியிறம் ஜாலியா. மச்சான், அந்த ஆயுதம் எங்க ஏத்தினது என்டு சொல்லு மச்சான். இல்லாட்டி உனக்கு பெரிய பிரச்சினை; உன்னைப் போடுவம்."
 
என்டு சொன்னான். நான் சொன்னன்,

 "நான் உங்களோடை இருக்கேலையே தம்பி." என்டு. 

"இருக்கலையா?"

என்டு சொல்லிப்போட்டு, அதுக்குப் பிறகு, 'இனியவன்' என்டு சொல்லி இயக்கத்திலை இருந்த பொடியன் ஒருத்தன், அவனும் சேந்து நேவிக்கார ஆக்களும் சேர்ந்து எனக்கு அடியடியென்டு அடிச்சு கை, கால் எல்லாம் உடைச்சு உள்ள போட்டிருந்தாங்கா.

அதுக்குப் பிறகு அடுத்த நாள் பின்னேரம், நேவிப் பொம்பளை பிள்ளைங்க பின்னேரம் ரெய்னிங் முடிய வந்தாங்கா. வந்து எனக்கு, #தணிக்கை................தணிக்கை#

"புக்கை கோவிலிலதான் அவிக்கிறது" எண்டன்.

அப்ப அவ கேட்டா,

 "பெண்சாதியின்ட புக்கையா?" என்டு. 

"பெண்சாதியும் அவிப்பா, நானும் அவிப்பன்" என்டு. 

அதுக்குப் பிறகு எனக்கு முன்னுக்கு நாலு பேரைப் போகச் சொன்னாள் அந்த Mமேடம். நாலு பேர் போக, நான் சொன்னன், 

"இது புக்கை இல்லை; இது சூத்து, குண்டி என்டு சொல்லுவம். இது புக்கை இல்லை." என்டன்.

அதுக்குப் பிறகு கறுப்பு, வெள்ளை, பொது நிறம் என்டு சொன்ன பொம்பளை வந்து என்ட நிகமெல்லாம் புடுங்கி, நெருப்பாலை சுட்டு, 

"உண்மையைச் சொல், வாகனத்திலை ஆயுதம் ஏத்தினன் என்டு சொல்லு. எங்களுக்கு ஆயுதந்தான் தேவை. ஆக்களையும் காட்டித் தா" என்டு. 

நான் சொன்னன், 

"ஊரோட ரெயினிங் எடுத்தனான்" என்டு. 

"என்ட வாகனத்திலை ஆயுதம் ஏத்தேலை நான்."

"பழைய கதையா? புதுக் கதையா?" 

என்டு கேட்டு திருப்பியும் அடுத்த நாள் போல அடிச்சாங்கா. அடிச்சிட்டு அடுத்த நாள், நாலாவது நாள் போலை, எனக்கு கண்ணுக்குள்ளை திப்பிலி, கொச்சிக்காய் எல்லாம் போட்டு சித்திரவதை பண்ணாங்கா. அதுக்கிடையிலை ஏழாவது நாள் பாதர் செத்திட்டார். அதுக்குப் பிறகு அங்காலை பக்கத்திலை கிடந்த எல்.ரி.ரி. பொடியன் ஆயுதம் இருக்குது என்டு ஆயுதம் எடுத்துக் குடுத்ததாலை அவருக்கு சாப்பாடு கிடைச்சிட்டுது; எங்களுக்கு அதொண்டும் கிடைக்கல்ல. 

அதுக்குப் பிறகு எட்டாவது நாள், அவள் சாப்பிட்ட சாப்பாட்டைக் கொண்டந்து மண்ணிலை கொட்டி, அதுக்குள்ள வேற இடங்கள்ள இருந்த பொடியன்களையும் எடுத்துக்கொண்டந்து, ஒரு ஆறு பேரை, பின்னுக்கு மாஞ்சைப் போட்டு, 

"நீங்க நாய் தான், சாப்பிடுங்கா" 

என்டு சொன்னாங்கா; நக்கி நக்கி சாப்பிட்டம். தண்ணி இல்லை. வந்து கேட்டாள் தண்ணி வேணுமா என்டு, ஒரு பொம்பளை. நான் சொன்னன்,

 "ஓம்மா, எனக்கு தண்ணி வேணும்." என்டு.

 அப்ப, சஸ்ரோயன் ரின்னில புல்லா பாத்துரூம் இருந்து போட்டு தந்தாங்கா, தண்ணியாக் குடியென்டு! நான் சொன்னன், 

"இந்தத் தண்ணியில்ல, தண்ணிதான் வேணும்." என்டு. 

“இதான் தண்ணி இல்லாட்டி…”

 அடிச்சாங்கா; சாப்பிட்ட மாதிரி அடிச்சாங்கா. பேந்து, எங்கட கை பின்னுக்குப் போட்டிருக்க, மாஞ்சு போட்ட மாதிரி, ஒன்டும் செய்யேலாது, அதிலை அடியடியெண்டு அடிச்சாங்கா. மண் சோறுதான் சாப்பிட்டது; பிறகு முழிச்சி மண்சோறையும் நக்கி நக்கிச் சாப்பிட்டம். பாத்துரூம் தான் தந்தது, முழுவதையும் குடிச்சம்! 

அடுத்தநாள் காலம்பிறை வந்து கேட்டாங்கா, 

"நீ பிரஸ் பண்ணப் போறியா?" என்டு.

 "ஓம்" என்டு சொன்னன். 

ரொய்லட்டுக்குள்ள பிரஸப் போட்டுட்டுக் கொண்டந்தாங்கா, தீட்டென்டு சொல்லி. தீட்டாட்டி அடியெண்டுபோட்டு தீட்டினனான். தண்ணியில்லை; அப்பிடியே உமிஞ்சு உமிஞ்சு துப்பிட்டு அப்பிடியே இருந்தன்.  

அதுக்குப் பிறகு பார்த்தா உங்க வெருகல் இருந்து, லங்காபட்டினத்திலை இருந்து, ஒரு ஆளைக் கொண்டுவந்தாங்கா. இந்தாளைத் தெரியுமா என்டு. எனக்கு ஆளைத் தெரியும் ஆனால் தெரியாது என்டு சொன்னன்; 'தேவன்' என்டு சொல்லி. அவரை அன்டிரவு 'முகமட்' என்டொரு ஆள்தான், கிண்ணியா ஆமி சி.ஐ.டி., அவந்தான் கொண்டந்து போட்டு அடிச்சான். அவனுக்கு தலையிலை அடிபட்டு ஆள் செத்திட்டுது. அவனோட இன்னொரு நாலு பேரைக் கொண்டந்து போட்டு அடிச்சாங்கா. அதிலை ஆறு பேற்ற பொடி கிடந்திச்சு. 

விடிய, எல்லாம் கொண்டந்து, வாகனத்துக்குள்ள கொண்டந்து, அந்த ரப்பராலயான நெற்றுள்ள வெட்டி, அதுக்குள்ள ஒரு ஏழு Bபொடியையும் போட்டு கருங்கல்லையும் போட்டு, கிரேனில தூக்கிக்கொண்டுபோய் Gகன்போட்டுக்கு மேலை ஏத்தினாங்கா. சிறிலங்கா போடரிலை கொண்டுபோய் எறிஞ்சாங்கா. 

ஒவ்வொரு நாளும் விடிஞ்சா ஐஞ்சு ஆறு என்டு போகும்!

எங்கள் எல்லாரையும் ஒன்டா வைச்சிருக்கேலை. அந்த ஒரே ஒரு நாள், எங்களை கொண்டோய் ஒளிச்ச இடத்துக்குள்ள போகேக்கில தான் பாத்தன், எல்லாம் ஒரு எழுபது எழுவத்தைஞ்சு பேருக்கி கிட்ட ஆக்கள் இருந்தவங்க. அதிலை பதினாலு பேர் பொம்பிளையள். பொம்பிளையளுக்கு உடுப்பு இல்லை, நிக்கரோடைதான்! எங்களை கொண்டோய் ஒளிக்கக் கொண்டுவரேக்கிலதான் பொம்பிளையளுக்கு சால்வையாலை மூடின மாதிரி கொண்டு வந்தாங்கள். எங்களை நிருமாணமாத்தான் கொண்டுபோய் வைச்சிருந்து, பிறகு அந்தப் பெரியாள் வந்துபோனப்பிறகு எங்களைத் திருப்பிக்கொண்டோய் கான்ட்கஃவ்வில போட்டு உள்ள போட்டாங்கா.

அப்ப பத்து பன்ரண்டு நாளாய்ப் போயிற்றுது. 

அதுக்குப் பிறகு பார்த்தா, விடிய அடுத்த நாளும் எனக்கு அடி. 

அடுத்த நாள் எனக்கு கையில காலில எல்லாம் வெட்டினாள். 

"உண்மையைச் சொல், புது கதையா? பழைய கதையா?" என்டு. 

நான் சொன்னன், 

"நான் அப்படியொன்டும் இல்லை." என்டு. 

இந்த பிரபாகரன், இந்த வரலாறு தெரியுமா என்டு கேட்டாள். நான் சொன்னன், 

"அவற்ற வரலாறு தெரியாது, நான் ஈரோசில் இருந்தனான்." என்டு. 

ஆதரவாய் இருந்தனியா இல்லையா என்டு கேட்டாள். 

“ஊரில இருந்த இடத்தில நாங்கா ஆதரவு இல்லாம இருக்கேலாது; நாங்க ஒவ்வொரு மாதமும் காசு குடுக்கிறனாங்கா என்டு”. 

“உண்மையைச் சொல்லு”... (#அழைப்பு இடைநின்றது#) ... 
அதுக்குப் பிறகு அண்டைக்கும் அடிதான். அடிச்சிற்று, பிறகு, எங்க நம்மளுக்கு எச்சிவாய் இருக்குதோ அவ்வளவுக்கும் சின்னச் சின்ன திப்பிலிக் கொச்சிக்காய் போட்டுத் தடவின்னாள், நான் கத்தினன்.

கத்தி முடிஞ்சு அடுத்த நாள், நேவிப் பொம்பளையள் வந்தாங்கா. வந்து உண்மையைச் சொல்லப் போறியா, உன்னை கொல்லப்போறம். நீங்கா வடகிழக்கில இருந்து வந்தனீங்கா, ஈழம் கேட்டு. சிங்கவூராப் போகப் போகுது சிறிலங்கா. நீங்கெல்லாம் இருக்கக்கூடாது; நீங்கதான் இந்த இயக்கத்தை வளத்தெடுத்தாக்கள்; நீங்கதான் வளத்தது; உங்களாலதான் இயக்கங்கள் உருவாகினது. என்ன சொல்லப் போறா என்டு கேட்டு அடிச்சாங்கா. நான் சொன்னன், 

"இதான் கதை; என்ர வாகனத்தில ஆயுதம் ஏத்தேல."

 "நீ பொய் சொல்லுறாய், உண்மையச் சொல்".

அப்ப பிள்ளையான், மேயன், சிவகீதா, கருணா அம்மான், கிட்டு - இவங்கட வழிவரலாறைப் பத்திச் சொல்லு என்டுச்சினம். நான் சொன்னன், 

"அவங்க மட்டக்களப்பு, நான் இஞ்ச ரின்கோ ஆள் அவங்கட வகிபாகம் எனக்கு தெரியாது. நான் 'கிட்டு' என்டு கேள்விப் பட்டிருக்கிறன், ஆனால் நேரில கண்டதில்லை". 

"என்டால் நீ பபா தானே, நில்றா வாறன்." 

என்டுபோட்டு என்னை பிறகு கயிறில கட்டி, அங்கயிருந்த ஆலமரத்தை வளைச்சுக் கட்டினாங்கள். அங்க ஏற்கனவே ஆறு பேர் தொங்கீற்று இருந்தவங்கா. என்னோட சேர்த்து ஏழு பேர். ஏழுபேரையும் மேல தொங்கிவிட்டாங்கா; அப்பிடியே இரவு அஞ்சு மணிக்கு துக்கினது, அண்டு இரவு-அடுத்தநாள் பகல்-அடுத்தநாள் இரவு எட்டு மணிக்கு மேல , 24 மணித்தியாலத்தைத் தாண்டி, பத்து மணி போல இறக்கக்கில எனக்கு கை இழுபட்டிட்டுது; கையும் ஏலாது. அதில ஒரு 'விளாவெட்டுவான்' பொடியன் ஒருத்தன் - செத்து - ஊதி - வெடிச்சு - புழுத்து - பொசு விளுந்தும் அரக்கேல. அதுக்குப் பிறகு எங்கட கை விறைப்பு மாறினாப் பிறகுதான் அவரையும் அந்தக் கூட்டுக்குள்ள போட்டு, அதிலையும் ரண்டுபேர் செத்திற்றினம்; தூக்கினாக்கள் இல்லை, அதிலை நாலு பேர்தான் நாங்க உயிராய் இறக்கினாக்களும்! 

அதுக்குப் பிறகு நான் பாத்தன், அந்த இடங்கள் எல்லாம் எனக்கு நல்லாய்ச் சுத்திப் பாத்திட்டன். அதுக்குப் பிறகு Vவான்குள்ளை காசிருந்தது, ஒரு 17,000 ரூபாய். அந்தக் காசை ஒரு நேவிக்கிட்ட எடுத்துக் குடுத்தன். அப்ப,

 "அங்கிள், உங்களைப் போடப் போறாங்கள். உங்களை மூதூர், தோப்பூர், கிண்ணியாவிலை போய் விசாரிச்சது. உங்களைப் போடப் போறாங்கள், தெரியுந்தானே இஞ்ச வந்தாக்களை ஒருகாலமும் விட்டதில்லை? உங்களை நாளைக்கு அல்லது நாளையிண்டைக்கு போடுறது என்டு சொல்லிச் சொன்னாங்கள்."

அதுக்குப் பிறகு யோசிச்சன், எனக்கு நடந்த சித்திரவதை, எனக்கு இப்பிடியெல்லாம் நடந்தது தாங்கேலாது. அப்ப நான் பக்கத்தில இருந்த பொடியனிட்டச் சொன்னன், 

"இங்க வாங்க. நான் உங்களைக் கொண்டு சேர்ப்பன். இப்ப்டியே நாம ஓடி ஆனைக்கண் குளத்துக்குப் போய் கட்டைபறிச்சான் போய் சேரக்கூடிய மாதிரி நான் கொண்டு சேர்ப்பன். நீங்க வெளிக்கிடுங்க." 

எண்டு சொல்லி. எல்லாம் ஓமென்டு சொல்லிக்கொண்டிருந்தவன், அவன் அண்டிரவு ஏத்திரிக்குப் போயிற்று ஒரு கேனில பிஸ்ரோல் ஆயுதங்களை எடுத்துக் குடுத்ததுக்கு அடுத்த நாள் இரவு சாராயமும் சாப்பாடும் குடுத்து வெறியோட படுத்துட்டான். எழும்பமாட்டென்டுட்டான்; எழுப்பிப் பாத்தன் எழும்பேலை. அவன் அம்மைநகர், கட்டைபறிச்சான் பொடியன். அவன் ஒரு 17 பேரின்ட பெயரைக் குடுத்துட்டிருந்தான்; இவ்வளவு பேரும் ஆதரவான ஆக்கள் என்டு. அப்ப் ஒரு மாஸ்டர் ஒராளின்ட பெயரைக் குடுத்திருந்தான்; அவனுகிட்டை சாமான் இருக்குது என்டு சொல்லி. அப்ப அவன் பொய்யைச் சொல்ல, அவன் உண்மையைச் சொல்லுறான் நீ பொய் சொல்லுறாய் என்டு; அவனுக்குள்ளை விசயம் இருக்குது. என்ட, அப்ப எனக்கு திரும்பி மாறி அடிச்சு, வெட்டி குத்தினாங்கள். 

அதுக்குப் பிறகு பாத்தன், ஒரு சொப்பினில புல்லா கொண்டு ஓடி வருதுகள், நேவிப் பொம்பளையள். அப்ப என்னத்தைக் கொண்டு வருகுதுகள் என்டு பாத்தன், சொப்பினில அவ்வளவும் கறுத்தக் கட்டெறும்பைக் கொண்டு வருதுகள். என்ட ஆணுறுப்பில அப்ப்டியே புல்லா வைச்சுக் கட்டிவிட்டுதுகள். அதில ஒரு கட்டெறும்பு ஒரு பொம்பளைக்குக் கடிச்சிட்டுது. அவளுக்கு வைத்தியம் செய்ய ஓடித்திரியுறாங்கள். எனக்கு ஒண்டும் செய்யேலாது; ரண்டு கையும் இழுத்துக் கட்டின மாதிரி. அப்டியே கடிச்சு என்ர தொடக்கணாக்குள்ள வீங்கீற்றுது; வெடிச்சறணாக்குள்ள போயிற்றுது. அப்ப, இஞ்ச மன்னம், பொலனறுவை ஆள்தான் ஒரு டொக்டர் இருந்தவா. அவள் வந்து என்னைப் பாத்திற்று, 

"நீங்க பாடாண் உடைவத்தை மாதிரி, உங்களப் பாக்க எனக்கு பாவமா இருக்குது." என்டு. 

அவங்களுக்குத் தெரியாமல் எனக்கு வந்து ஊசியையும் போட்டுட்டு மருந்தையும் தந்திட்டு அவவுக்குத் தாற ரீயை எனக்கும் கொஞ்சம் கொண்டந்து தருவா. பணிசிலையும் பாதியைத் தருவா. ஒருநாள் எனக்கு அவ சோறு கொஞ்சம் தந்து சாப்பிடேக்கிலை கண்டிட்டான். கண்டாதாலை அவவுக்கு பணிஸ்மன்ற்; ரண்டு நாளாய் வெய்யிலை கிடந்து புல்லுக் கொத்தி மண் முடிச்சு மூட்டையோடை. 

"

 

தொடரும்...

 

Edited by நன்னிச் சோழன்
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் விதை பிடுங்கப்பட்ட சூடக்குடா வதைமுகாம்

 

பாகம்-2

 

 • மூலம்:  www.youtube.com/watch?v=v66w_YYvlzg 
 • வாக்குமூலம்: குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 
 • எழுத்து: நன்னிச் சோழன்

 

"...

பிறகு, அவவை மாத்தினதுக்குப் பிறகு, அதிலை நான் காசெடுத்துக் குடுத்தவன் சொன்னான்,

 "ரண்டு மூண்டு நாளைக்குக்களை உங்களைப் போடுவாங்கள். இனி வைக்க மாட்டாங்கள். இங்க கொண்டுவந்தாக்களை விட மாட்டாங்கள், தெரியுந்தானே? இந்த பொம்பளையாக்களைக் கொண்டுவந்து, இந்தா பாத்தியளா சித்திரவதை!" 

என்டான்.  

பொம்பளையாகளைக் கொண்டு வந்தா ஆம்பளையள்தான் சித்திரவதை. ஆம்பளையளைக் கொண்டு வந்தால், பொடியன் தரவழிக்கு, நேவிப் புள்ளையள் பின்னேரம் ஐஞ்சு மணிக்கு வந்தா நம்மட ஆணுறுப்பு வெட்டுறது! கம்புக்கூட்டை கிட்டி போட்டு இழுக்குங்கள்! கிட்டி போட்டு விரையை நசிச்சால் அரை மணித்தியாலம் ஆகும், சீவன் போக! ஆணுறுப்பை வெட்டினால் ரத்தம் போகும்; ரத்தம் போயே செத்துக் கிடக்கும்; அங்க ஒரு ஏழு எட்டு என்டு கிடக்கும்!

கிட்டத்தட்ட நான் அவ்வளவு நாளும், இந்த 27 நாளும், நான் பாத்தது, கிட்டத்தட்ட ஒரு எண்பது பேரை கண்ணாலை பாத்தது பொடியாய். அப்பையும் ஆக்கள் உயிரோட இருந்தது. 

அதுக்குப் பிறகு, நேவிக்குள்ளை கொண்டுபோனாங்கள் ஒருநாள். கண்ணெல்லாம் உள்ளுக்குளை பஞ்ச வைச்சுக் கட்டி, சீலையாலை சுத்திக் கட்டி எடுத்திட்டு, என்னை இழுத்திட்டு கொண்டு கன்போட்டிலை ஏத்தியெடுத்திட்டு நேவிக்குள்ள கொண்டுபோனாங்கா. நேவிக்குள்ளை கொண்டு போனதுக்குப் பிறகு, பின்னேரம் அஞ்சு மணிக்கு கொண்டுபோனது, அங்கை கொண்டுபோய் கண்ணை அவிழ்த்திட்டு என்னை உள்ள கொண்டுபோகேக்கிலதான் பாத்தன் அங்காலை ஒரு 24 பேர், நேவிக்குள்ளை, எல்லாம் சொறி புடிச்சு ஊத்தை புடிச்சு முடியெல்லாம் வளர்ந்து, பாக்கேலாது அவ்வளவு கேவலம், தனிய எலும்புக் கூட்டு மனுசராத்தான் இருந்தவை. 

அப்ப அதில ஒராள் சொல்லிச்சி, இந்தா இதில இருக்கிற இரண்டு பொம்பளையளையும் தெரியுமா? இவங்கள்தான் கரும்புலியாக்கள்! இவங்கள்தான் எயார்போட்டிலை வைச்சு புடிச்சு வந்த பொம்பளையள். அதிலை அஞ்சு பொம்பளையளை வைச்சிருந்தவன்; அதிலை அந்தப் பொம்பளையள் மட்டுந்தான் உடுப்போட இருந்தவை. நேவிக் கோட்டைக்குள்ளை வைச்சிருந்தது.

என்னை அங்கதான் ரண்டுநாள் வைச்சிருந்தவங்கள்; வைச்சிருந்து விசாரிச்சு அண்டைக்கும் எனக்குச் சரியான அடி. எனக்கு காதாலை ரத்தம் ஓடத் தொடங்கீற்றிது. அப்ப எனக்கு காதாலை ரத்தம் ஓடத் துவங்க என்னைக் கொண்டுபோய் மருந்து போட்டுவிட்டாங்கா. மருந்து போட்டுட்டு திரும்பியும் என்னை நிருமாணத்தோட சூடைகுடாக்கு கொண்டந்தாங்க.

சூடைக்குடாக்கு கொண்டந்து அடுத்தநாள் என்னைக் கொண்டுபோறத்துக்கு எல்லாம் இது பண்ணிற்று இருந்தாங்கா. அப்ப நான் சொன்னன், என்னை நீங்க கொல்லாதீங்கா சேர். முக்கியமான ஆள் மட்டக்களப்பில இருக்கி. அவரிட்டை ஆயுதம் எல்லாம் இருக்கி அவரை நான் காட்டித்தாறன் என்டு. ஏனென்டு சொன்னால் நான் தப்பணும். என்னைத் தட்டப் போறாங்கா என்டு எனக்கு விளங்கீற்று. நான் இப்பிடி ஒண்டைச் சொன்னா எனக்கு ஒன்டும் செய்யவும் மாட்டாங்க; அடிக்கவும் மாட்டாங்கா.

அடுத்த நாள் பாக்கிறன், ரின்கோவில இருந்து காபர்போட்டில தூக்கினதாமெண்டு ரண்டு பொம்பளையளைக் கொண்டந்தாங்கா. ரண்டு பொம்பளைப் புள்ளையள கொண்டந்தெண்டு சொல்லி சிரிக்கிறாங்கள். மோட்டர் பைக்கிள வந்தாக்கள் தான் இவங்கா. இவங்க கச்சேரிக்கு வேலைக்குப் போறத்துக்கு வந்தாங்கா என்டு சிரிக்கிறாங்கா, அப்ப நான் பாத்திட்டு இருக்கிறன்.

அதுக்குப் பிறகு, அண்டைக்குப் பின்னேரம், "அம்மா! அம்மா!" என்டு கத்திக் கேக்குது.

நான் சீற் ஓட்டைக்குள்ளாலை எட்டிப் பாக்க, பின்னுக்கு நான் பாத்ததைக் கண்டுட்டான் அவன். அப்ப அவங்க ஒரு சாதி ஜக்கு மாதிரி ஒன்டு வைச்சிருக்கிறாங்கள். அப்ப அதிலை வைச்சு, தொடையில வைச்சுப் பூட்டினா, அங்க சரியான அந்தரிக்க, 'பிரிதி பைக்கற்' அதுகளைப் போட்டு, ஒவ்வொருவரா போட்டு அடிச்சடிச்சு திரிஞ்சு - அடுத்தநாள் காலம்புறையோட கழுவீற்று கொண்டந்தாங்கள்; நடந்து வருகுதுகள் பிள்ளையள்; நடந்திக்கிறாங்கள், அதுகள் தடக்குப்பட்டு வருதுகள்! 

இரண்டாம் நாள் அந்த புள்ளையள் இரண்டுபேரும் செத்திடுதுகள். அதோட ஆம்பளையள் மூன்டுபேர் செத்துக் கிடந்தது. அவ்வளவு பேரையும் ஏத்தினாங்கள், கன்போட்டுக்குள்ள, அந்த நெற்றுக்குள்ளை போட்டு. கிரைன் போட்ட கறுத்த வாகனம் ஒன்டு வந்துச்சு. அதிலை தூக்கி ஏத்தியெடுத்தாங்கள் - அந்த டெலிகொம் வாகனம் மாதிரி ஒன்டு. கிரேனில துக்கி எடுத்தாங்கள். பிறகு அஞ்சு பொடியையும் அப்பிடியே கன்போட்டிலை - கடலோரத்தோடதான் எங்களை வைச்சிருந்தவிடம், சூடைக்குடா - கொண்டந்து சிறிலங்கா போடரிலைதான் இறக்கியிருந்தாங்கா. 

அப்ப நான் பாத்தன், நம்ம தப்பப்போறம். இனி இவனுகளை பற்றி நாம பாக்கேலாது. அவன் சொல்லிப்போட்டான், இதுக்குள்ளை இருந்தா நாளைக்கு நாளையிண்டைக்கு போடப்போறாங்க என்டு. அப்ப நான் நாலைஞ்சு நாளாய் அந்த சென்ரிக்கு இருக்கிறாக்கள் எத்தினை மணிக்கு போறெண்டு நான் நல்லா ரெக்கி எடுத்தன். எடுத்திட்டுப் பார்த்தா, ஒவ்வொரு நாளும் ரண்டு மணிக்கு ரீ குடிக்கிறத்துக்கு போனாங்க என்டால் நாலு மணிக்குத்தான் வருவாங்கள். சென்ரி பாக்கிறத்துக்கு பன்ரண்டு மணிக்கு ஒருத்தன் சுத்திப்பாத்திட்டுப் போயிற்றுவருவான். அதுக்குப் பிறகு இவனுகள் 'ரீ' குடிக்கப் போயிடுவானுகள். அப்ப அதிலை நான் நல்லா ரெக்கி பாத்திட்டு, நான் இந்த பக்கத்தில கிடந்த பொடியனைத்தான் எடுத்திட்டுவாறத்துக்கு வந்தன். அவன் ஆயுதம் எடுத்துக் குடுத்ததிலை அவனையும் கூப்பிடேலாமல் போயிற்று.

முதல் நாள் அவனிட்டைதான் சொல்லி நீயும் போய் பார், பாத்தா நாம ரண்டுபேரும் டக்கென்டு கிளம்பலாமெண்டு. சென்ரிக்கிட்டை ஒராள் எட்டிப் பாத்த மாதிரிக் கிடக்குது, என்னென்டு போய் பாரென்டு. அவன் வந்து சொன்னான், ஆக்கள் படுத்துக் கிடக்குது ரண்டு பேர் என்ட நானும் டக்கென்டு மாஞ்சையைப் போட்டுட்டு படுத்திட்டன். விடியத்தான் நான் பாத்தன் எட்டி, பெட்சீட்டாலை நுழம்புவலையை இழுத்துப் போட்டிட்டவுடனேயே பெட்சீட்டின்ட அந்த மூலை அவ்ந்து ஆள் எட்டிப் பார்த்திட்டு இருக்கிற மாதிரி இருந்துது. அப்ப நான் இவனுக்கு பேசிப் போட்டு என்னடா நீ பாத்த வேலை. நீ சொல்லியிருதால் நான் இப்பிடியே கொண்டோய் மாவடி வேம்பாலை கொண்டோய், நையேந்தையாராலை கொண்டுபோய் ஆனைக்கண் குளத்துக்குள்ளாலை கொண்டு போய் நையேந்தைக்குளத்துக்குள்ளாலை போனால் அங்காலை சீதனவெட்டை, அங்காலை அப்படியே கொண்டு அம்மைநகர், அங்காலை கட்டைபறிச்சானுக்கை கொண்டு சேர்ப்பன். எனக்கு இடந்தெரியும். என்ன நீங்க பாத்த வேலையிது. அப்ப அவன் சொல்றான், எனக்கு ஏரியா தெரியாது தானே, நான் புல்மோட்டை ஆள்தானே அதென்டு. தெரியாட்டி நீ என்னைச் சொல்லியிருக்கலாம்தானே, நான் பாத்திருப்பந்தானே என்டு இவனுக்குப் பேசி போட்டன். அவன் அடுத்த் நாள் பிஸ்ரோல் எல்லாம் எடுத்துக்குடுத்து அவன் படுத்துட்டான்.

பிறகு நான் பாத்திட்டுக் கிடந்தனான். இரவு ஒரு 12 மணிக்கு மாஞ்சை எல்லாம் உருவி எடுத்திட்டன். ஒரு மாஞ்சை தான் இழுக்கேலாமல் போயிற்றுது. அதை பிச்சுக்கிச்சு எடுத்தன்; எச்சையாலை துப்பி சோப்பைப் போட்டு தேச்சுத் தேச்சு பிச்சு எடுத்தன். எடுத்துட்டு படுத்துக் கிடந்தன். எங்களுக்கு இரவு எட்டு மணி மட்டும் அடிச்சாங்கள். அங்காலை போய் கொஞ்சப் பேரைப் போட்டு அடியடியெண்டு அடிச்சு ரெண்டு பேரை மண்டையிலை அடிச்சு உடைச்சு வைச்சிருந்தாங்கா; செத்துக் கிடக்கிறாங்கா. அதுக்குப் பிறகு வந்து இவனுகள் நுழம்புவலைக்குள்ள பூந்தவனுகள். நாங்கா படுத்ததிலை இருந்து அவன் கிட்டத்தட்ட ஒரு 3மீ ,4மீ உள்ள கட்டில்லை நுழம்புவலைக்குள்ள ரண்டு பேரும் நல்ல வெறி; ஆக்கள் நல்லாப் படுத்து நித்திரை. ரைபிளை தலைமாட்டிலை சாத்தி வைச்சிட்டுப் படுத்திட்டாங்கள். 

 நான் மாஞ்சை உருவீட்டு கிடந்தனாந்தானே, இவங்கள் நித்திரை கொண்டு குறட்டை அடிச்ச சத்தத்தோடை, நான் எழும்பி ‘டக்’கெண்டு போய் முதல்ல தூக்கினது அவங்கட ரைபிளைத் தான். ஒன்டைத் தூக்கி தோளிலை போட்டன். ஒன்டைக் கையிலை எடுத்தன். கோல்சரை இடுப்பிலை கட்டினன். ரண்டு மைக்ரோ பிஸ்ரலையும் இடுப்பிலை ரண்டு பக்கமும் சொருகி, நான் 'டக்'கெண்டு கதவை அவுட்டு கதிரையையும் மெதுவாத் தூக்கி வைச்சிட்டு வெளியாகினன். 

வெளியாகிட்டு இஞ்ச ஓடியந்தன். சென்ரியில நின்ட ஆக்கள் போயிற்றினம். பீகே இருந்தது, பீகேயைத் தூக்கி கீழ போட்டிட்டு மட்டையைக் குடுத்து மேலை உசத்தினன்.  உசத்தி வைச்சிட்டு ரைபிளையும் எடுத்து வெளியாகினன். 

நான் சென்ரிக்காரனைத் தான் பாத்திட்டு வந்தனான்; முன் பெரிய கேட்டு சென்ரிக்காரனை ரை பண்ணித்தான் நான் வந்தனான். அப்ப வெளிய வந்த பிறகு எனக்கினின் ஆயுதம் தேவையில்லை, நம்மளுக்கு ஆயுதத்தை தூக்கிட்டு ஓடேலாதுதானேக்கிலை இருந்தது. அதுக்குப்பிறகு நான் வழி வழியா ஆனன், ஆயுதங்களைப் போட்டிட்டு. ஏனென்டால், என்ர காலுக்குள்ளாலை குத்தி கம்பியை ஏத்தி தலைகீழாத் தூக்கினவங்கள்; கட்டித்தூக்கி கையும் ஏலாது; நகம் எல்லாம் புடிங்கி சின்னவிரல் ரண்டும் எல்லாம் உச்சஞ்சிதள் கட்டி வடிஞ்சிட்டு இருக்கு; இடுப்பிலை எல்லாம் நெருப்பாலை சுட்டு fபுல்லாக் காயம். காயமில்லாத பக்காம் ஒன்டுமில்லை; காது மூக்கு தலை எல்லாம் எனக்கு காயம்.

நிருமாணமாத்தான் வெளிக்கிட்டனான். பிறகு அவங்கட ரைபிள் எல்லாத்தையும் போட்டுட்டு காட்டிலை ஒரு எட்டுநாள் கிடந்தன். வரேலாமல் போயிற்றுது. ஆத்திகாயும் விளாங்காயும் பிலாக்காயும் அதுகளைத்தான் சாப்பிட்டிட்டு குளத்திலை இறங்கித் தண்ணியைக் குடிக்கிறது. குடிச்சிட்டு வெளியிலை வரேலாமல் போயிற்றுது. 

திருப்பி அடுத்தநாள் என்னைக் கண்டிட்டாங்கள், ஒரு வயல் வெட்டையிலை வைச்சு. திரத்தி வெடி வைச்சாங்கள், 'கூ'வென்டு. ஓடினன். ஓடினால், சின்னத் தீவுக் காட்டுக்குள்ளை போய் பூந்தன். அந்தக் காட்டுள்ளை இருக்கேலாமல் போயிற்றுது. திருப்பிப் பாத்தன், ஒன்டும் செய்யேலாது, அந்தக் காட்டை ரவுண்டப் பண்ணுற மாதிரி இருக்கு. நான் 'டக்'கெண்டு ஓடியந்து குளத்திலை பாஞ்சன். குளத்துக்குள்ளாலை சுழியோடி, குளத்துக்குள்ளை ஒரு மரத்திலை கொடி படர்ந்து கிடக்குது, அந்தப் பச்சைக்கொடி மரம், அந்தக் கொடிக்குள்ளை போய் பூந்திருந்தன், பின்னேரம் ஐஞ்சு, ஆறு மணி மட்டும் அந்தக் குளத்துக்குள்ளையே இருந்தன், கொடிக்குள்ளை பூந்து. ரவுண்டப் முடிஞ்ச பிறகு
திருப்பி வெளிய வந்தன்.

வெளிய வந்து, 'தொடுவான்குளம்' என்டொரு இடம், அதிலை அத்தி மரத்துக்குக் கீழ குந்திக்கொண்டிருக்கிறன், செல்லடிக்கிறான், நான் பூந்த காட்டுக்கு. ரண்டு கிபிரும் வந்து அடிச்சிட்டு போச்சுது. 

பிறகு நான் திருப்பி மாறி வெளியாகினான். வெளிய வந்து ஒவ்வொரு இடமா ரெக்கி பாத்துத் திரிஞ்சன், ஒவ்வொரு இடமா. திருப்பி ரோட்டைக் கடக்கலாம் என்டு வந்திருந்தன், நேவிக்காரான் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டிட்டு இருக்கிறான். அப்ப  சாப்பிட்டிட்டு எனக்கு முன்னுக்குத் தான் கொண்டந்து எறியிறான், காட்டுக்குள்ளை, காட்டிலை சென்றியைலை இருந்தவன். அப்ப நான் அந்தச் சாப்பாடென்டாவது எடுத்துச் சாப்பிடுவம் என்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க நாய் வந்தது. நாய் உறும அதை மெதுவா விட்டிட்டு திரும்பி மாறி வந்தன், கடற்கரை பக்கம். கடற்கரை பக்கம் ரோட்டுக் கடக்கேலாமல் போட்டுது. பிறகு குழை வைச்சுக் கட்டினன், முதுகு, கழுத்து, தலைக்கெல்லாம். பாகங்குழையாலை இடுப்பிலை கட்டினை சீலையை fபுல்லா சீலையைக் கட்டிட்டு ரோட்டை மட்டும் கடந்தன். 

ரோட்டைக் கடந்த பிறகு அப்பிடியே கடற்கரைக்கு வந்தன். கடல்லை எட்டு மணிக்கு இறங்கினான், விடிய விடிய நீந்தினன். நீந்தி மூதூர் 'தக்வா நகர்' இலை வந்து ஏறினன். அங்க முசிலீம் ஆக்களிட்டை போய், அங்க முசிலீம் ஆக்கள் லோயரோடை கதைச்சு நீதிமன்றத்திலை ரண்டு மணிக்கு சரண்டர் ஆகுறதுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து முசிலீம் ஆக்கள் கொண்டுபோய் என்னை சரண்டர் ஆக்கினாக்கள். 

சரண்டர் ஆகினத்துக்குப் பிறகு, என்னை ரின்கோவிலை கொண்டுபோய் மருந்து எல்லாம் செய்து உடனே சிறைக்கு கொண்டுவந்திட்டாங்கா. 

அதுக்குப்பிறகு என்னை மட்டக்களப்புச் சிறைக்கு கேட்டு மாத்தி எடுத்தாங்கா.

அதுக்குப் பிறகு, நான் வைத்தியம் செய்திட்டு இருக்கக்கிலை என்னை காட்டிக்குடுத்தவனின்டை சின்னம்மாக்காரி இப்பிடி தப்பி வந்திருக்கிறன் என்டு சொல்ல, இஞ்ச மட்டக்களப்பிலை வந்து சீ.ஐ.டியாலை தேடத்தொடங்க, நீதவான் சொன்ன மாதிரி யுனிசெஃவோட வந்து சரண்டர் ஆனன், பொலிசிலை இரவு எட்டு மணிக்கு. 

எட்டு மணிக்கு சரண்டர் ஆக, என்னை விசாரிச்சுபோட்டு ஒரு மாசம் இருட்டிலை பொலிசிலை வைச்சுப்போட்டு பிள்ளையான் ஆக்களிட்டை 10கிலோ கிளைமோர் எடுத்துப்போட்டு கேசைப் போட்டு உள்ள போட்டாங்கள்; திருகோணமலை மாவட்ட ரண்டாவது தளபதியாகவும் சொர்ணத்தாருக்குக் கீழ நான் இயங்கினதாகவும் பொட்டம்மானின்ட வழிகாட்டல்லை நான் புலனாய்விலை திரிஞ்சதாகவும் என்டு சொல்லி எட்டிடத்திலை கை அடையாளம் எல்லாம் எடுத்துப்போட்டு கேசைப் போட்டு உள்ள போட்டாங்கள். சிறையிலை இருந்தன்.

சிறையிலை இருந்து 2011 கடைசி மாசம் வெளியாகினன். திருப்பி பொலீசிலை சைன் பன்றது என்டு வழக்கு போயிற்றிருந்தது. 

இப்ப இந்த மூனாம் மாசம் பொலீசிலை நகர்வு நூற்றுக்கு 90 வீதம் சரியாகவும் இருந்தது என்டாங்கா. அப்ப என்னக்கிட்டை கேட்டாங்க நீதிமன்றத்தாலை,

 "நீ என்ன சொல்லப்போறாய்" என்டு. 

நான் சொன்னன், 

"என்னை சி.ஐ.டி. ஆலை இரவு எட்டு மணிக்கு சிங்கள மகாவித்தியாலத்தியாலம் அகதி முகமிலை தேடி வந்தாங்கா. நான் போய் பொலீசிலை சரண்டர் ஆகினன், இரவு எட்டு மணிக்கு. அதுக்குப் பிறகு ஒரு மாசம் வைச்சிருந்து என்னை எட்டெடத்திலை சைன் எடுத்தாங்கா. அதுக்குப் பிறகு, ஒரு மாசத்துக்குப் பிறகு, என்னை நீதிமன்றத்துக்கு கொண்டு போனாங்கா. நீதிமன்றத்திலை கேட்டாங்கா, 'என்ன வழக்கு என்டு தெரியுமா?' என்டு. 'எனக்குத் தெரியாது.' என்டு சொன்னன். தெரியாது என்டு சொல்ல, நீதிமன்றத்தாலைதான் சொன்னாங்கா, எனக்கு 10 கிலோ கிளைமோர் போட்டிருக்கு. இனி நீங்கா அப்பீல் பண்ணித்தான், நீங்கா அது மட்டும் சிறையிலை இருக்க வேண்டி வரும். நீங்கா அப்பீல் பண்ணி அங்கயிருந்து மறுமொழி வந்தாப்பிறகு தான் உங்களுக்கு பிணை கிடைச்சாத்தான் நீங்கா வெளிய போகலாமென்டு. அது மட்டும் நீங்கா சிறையிலை இருக்கலாமென்டு."

நான் சொன்னன் நீதிமன்றத்திலை, 

"எனக்கும் இந்தக் குண்டுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. 'உயர் நீதிமன்ற நீதிபதி ஐயா அவர்களே என்னை விடுதலை செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேக்கிறன்.' " 

ஏன்டா என்னை ஒரு பத்து நிமிசத்துக்குள்ளை கதைச்சு முடிக்கனுமென்டு சொல்லிப்போட்டார், எங்கட லோயர் பிரேம்நாத். அப்ப பத்து நிமுசத்துக்கு முதல் நான் என்ர பிரச்சினையை கதைச்சு முடிச்சன்.

அதுக்குப் பிறகு எனக்கு ஐயாயிரம் ரூபாய் சதுரப் பிணையிலையும் ஐயாயிரம் ரூபாய் பிணைக்காசு வழக்கு தள்ளுபடி ஆகி ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணமும் நீ கட்டிப்போட்டு வெளியபோகலாம் என்டு தீர்ப்பு வழங்கினாங்கா. எனக்கு ரண்டு வருசத்துக்கு வெளிமறியல் மாரித்தான். அப்ப பிணையிலை விட்டு இருக்காங்கா.

நான் அனேகமா சம்பூருக்குப் போறது குறைவு. இப்ப நான் #தணிக்கை# இஞ்ச இருக்கிறன். 

"

 

தொடரும்...

 

Edited by நன்னிச் சோழன்
 • Sad 1
Link to comment
Share on other sites

 • நன்னிச் சோழன் changed the title to திருகோணமலை சித்திரவதை முகாமிலிருந்து தப்பியோடி வந்தவரின் வாக்குமூலம் - எழுத்து வடிவம்
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் விதை பிடுங்கப்பட்ட சூடக்குடா வதைமுகாம்

 

பாகம்-3

 

 • மூலம்:  www.youtube.com/watch?v=v66w_YYvlzg 
 • வாக்குமூலம்: குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 
 • எழுத்து: நன்னிச் சோழன்

 

"...

இடுப்பிலை இருந்து fபுல்லா வெட்டு; முதுகு, தலை எல்லா இடமும் வெட்டு. கழுத்துக்குள்ளலை எல்லாம் கம்பிதான் ஏத்தினது. ஆனா இருக்கிற ஆக்களும் அங்க இல்லை. அங்க இவங்கள் வைச்சு சாப்பாடு போடுவாங்கள் என்டது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எல்லாரையும் போட்டுட்டாங்கா. ஆனா கடைசிலை ஒரு 700 பேருக்குக்கிட்ட இருந்தவங்க, கடைசிலை ஜனாதிபதி தோத்தவுடனை இருந்த ஆக்களையும் கொண்டுபோய் அப்பிடியே தட்டிட்டாங்கா. கடத்தப்பட்ட ஆக்கள் என்டு இல்லை, என்னைப்பொறுத்தளவிலை ஒருதரும் இல்லை. ஒரு நாளைக்கு 8,7,6, 3 என்டு இப்பிடித்தான் கிடக்கும் பொடி. சுருண்டுதான் கிடக்கும் Bபொடி; மண்கவ்வினால் போலதான் கிடக்கும். வேதனை செஞ்சாக்கள், முகத்தறியக் கிடத்தி அடியடியென்டு அடிச்சி வாயெல்லாம் மண்கவ்வினால் போலதான் கிடக்கும், சுருண்டு. ஆனால் ஆம்பிளையளுக்கு உடுப்பில்லை. நானும் ஒரு கவரக்கோசான் மாதிரித்தான்; என்ட ஆணுறுப்பும் இருந்திச்சி. அப்பிடி நுளம்புக்கடி. எங்களுக்கு ஒழுங்கான சாப்பாடு இல்லை. 

விசாரிக்கிறத்துக்கு முதல்லை வெளிய எங்களைக் கொண்டுபோய் கடியனுக்குள்ளை விடுவாங்கள், நில்றா என்டு சொல்லி. சிலபேர் காட்டிக் குடுக்குறவனிட்டை சொல்லுவாங்கள், உங்கட புருசனை ஆக்களை பாக்கச்சொல்லி அனுப்பு, நாம அங்க வாறம் உங்கட வீட்டை என்டு சொல்லிட்டு வெளிக்கிட்டுப் போவாங்கள். அவங்கள் அங்கயிருந்து வரேக்கிலை சாராயத்தோட வருவாங்கள். வந்தால் அன்டுராவு எப்பிடியும் ஒரு ஏழு, நாலு என்டு அடிச்சுத்தான் கொண்டுதான் கிடக்கும்.

நான் இருந்ததுக்கு முன்னுக்குத்தான் ஒரு இடம், அங்காலை சூடக்குடா அடுத்த காம்ப். அதிலை ரண்டு முகாம். 3600 பேருக்கு ரெயினிங் காம்ப் தான் இது. கிட்டத்தட்ட அதிலை 7000 பேருக்குக்கிட்ட நேவி ஆக்கள் மட்டும் இருந்தது. ஒரு ரெயினிங் பேஸ்தான் சூடக்குடா முகாம். ஒரு குளத்துக்கட்டுதான் அவங்கட ரெயினிங் பேஸும். 

சிறிலங்காவிலை எங்க தூக்கினாலும் சூடக்குடாவுக்குத்தான் வரும். வவுனியாவிலை தூக்கினாலும் சூடக்குடாவுக்குத்தான் வரும். இதுவழிய தூக்கினாக்கள் எல்லரையும் சூடக்குடாவிலைதான் வச்சிருந்தவங்கள். ஆனால் ஆரார் எத்தினை எத்தினை பேர் இருக்கு என்டதை fபுல்லாப் பாக்கேலாது. ஒவ்வொராளையும் விசாரணைக்கு மட்டும் எடுப்பாங்கள். இந்தப் Bபொடியள் எடுக்கக்குள்ளை நான் அந்த சீற் ஓட்டைக்குள்ளாலை தான் பாத்துக்கிறது, சத்தம் கேக்கும். மற்றது இந்த சென்ரியிலை இருந்து நான் வெளியாகினது, இந்தச் சத்தம் கேக்கும், 'கடக்குக் கடக்கு' என்டு சத்தம் கேக்கும். கேட்டால் அவனுகள் வெளிக்கிட்டு போவாங்கள். போனால் 'ரீ' குடிக்கப்போறாங்கள். குடிச்சிட்டு வருவனக்கள் நாலு மணிக்கு. மிச்சம் கஸ்டத்துக்கு மத்தியிலைதான் நானும் வெளியாகி வந்தன். நானும் பேசாமல் படுத்திருந்தால் - எனக்கு நீந்தத் தெரியாட்டி தப்பேலாது - நானும் போயிருப்பன். 13 வருசமா போயிருக்கும் - காணாமல்போனோர் பட்டியலிலை நானுமொராளை வந்திருப்பன்! 

நான் நல்லா நீந்துவன், நான் 'மரதன்' ஓடினனான். நான் நீச்சல் போட்டிக்கேல்லாம் போறனான்; நல்லா நீந்துவன்; விடிய விடிய நீத்திருக்கிறன், அவ்வளவு பசியோடையும்! விடிஞ்சு நாலு மணிக்கு நான் மூதூரிலை வந்து ஏறினன். 

இதான் அந்த உண்மை. 

ஆனால், ஆக்கள் இல்லை. பாதர் சொன்ன மாதிரி நானும் ஆரையும் காட்டிக்குடுக்கனுமென்டு விரும்பேலை. நாம மாட்டிட்டம், எங்களுக்கு நடக்கிறதுதான் மத்த மக்களுக்கும் நடக்கும் என்டதைத்தான் நானும் உணர்ந்தன். நான் ஒருத்தரையும் சொல்லேலை. அந்த எல்.ரி.ரி. பொடியன்தான் ஒரு 17 பேற்றை பெயரைக் குடுத்திருந்தான். நான் ஒருதரையும் எனக்குத் தெரியாது என்டதாலை - நம்மளுக்கு கட்டைபறிச்சான் மக்கள் முழுப்பேரையும் தெரியும். என்னை வந்து பாத்தவங்கா; நான் இப்பிடி வந்தவுடனை எல்லாரும் வந்து என்னைப் பாத்தவங்கா. ஏன்டா, நான் காட்டுறன் என்டு சொன்னா முக்கியமான ஆக்கள் எல்லாரையும் காட்டுவன். ரவுனிலை எவ்வளவு முக்கியமான ஆக்கள் இருந்தவை. அப்பிடி ஒரு இது நான் விரும்பவுமில்லை, காட்டவுமில்லை, சொல்லவுமில்லை. 

நான் உண்மையிலை அவங்களுக்கு கூடுதலான ஆதரவு செய்தனான். அதான் உண்மை. என்ட இயக்கம் ஈரோஸ் தான். ஈரோஸை இயக்கம் இது பன்னவுடனை எங்கட Pபாட்டியெல்லாம் அப்பிடியே சாமனை அவங்களுக்கே ஒப்படைச்சுப்போட்டம். அதோடை நானும் அங்க தொழிற் செய்தனான் - கரைவலை வாடி. எனக்கிட்டை வாகனம் கிடந்தது, ரண்டு Bவேல். அப்பிடி இருந்ததாலை நான் ஒருதரையும் இது பண்ணேலை. 

நான் அவங்களுக்கு கூடுதலான ஆதரவு; கொழும்பிலை இருந்தோ எங்கயிருந்தோ நான் கூடுதலான ஆதரவு செய்தனான், முசிலீம் ஆக்களை வைச்சு. அதிலை ஒரு முசிலீம் ஆளும் செய்த்திட்டுது. ஒராள் கிண்ணியாவிலை இருக்கிறார், எங்களுக்கு ஆதராவான ஆக்கள். மிச்சம் நெருக்கியமான ஆள். ஒராள் இப்ப கிட்டடியிலை செத்திட்டார்; ரவிச்சேனன், மூதூர். அவர் முக்கியமான புள்ளி, எல்.ரி.ரிக்கு. கிண்ணியா சின்னம்பலச்சேனையிலை இருக்கிறான், கௌசி. அவரையும் நான்தான் கொண்டோய் இவங்களோடை சேர்த்தது. பொட்டு எல்லாரையும் அவருக்குத் தெரியும். நான் எல்லாரையும் ஒருநாள் கொண்டு போனான், கிளிநொச்சிக்கு. இந்த மூன்டு முசிலீம் ஆக்களையும் கொண்டு போய் அவங்கள் எல்லாரையும் சந்திச்சு கதைச்சிட்டு வந்தால், அவங்கள் எங்களுக்கு இந்த வெளிவேலை முழுக்க கூடுதலா செய்தாங்கள். ஒராள் மோசம் போயிற்றுது, ஒராள் இருக்குது.

சரி. "

 

தப்பி வெளியில் வந்து இவ்வளவு நாளாகியுள்ளதால் இதுதொடர்பாக நீங்கள் யாரிடமேனும் சொல்லியிருக்கிறீர்களா?

“ ஓமோம், ஐசிஆர்சி வந்து கேட்டது, ஐசிஆர்சியிட்டைச் சொன்னனான், யு.என்.எச்.சி.ஆர். மாமாங்கத்திலை இருந்து வந்தவங்கா. அவங்களிட்டை எல்லா விவரமும் சொல்லி என்ர காயங்கள் எல்லாம் பாத்து, என்டை நகம் புடுங்கல்கள் எல்லாம் பாத்து, உடனே என்னைக் கொழும்புக்கு எடுத்தவங்கா. அங்கையும் என்னை எல்லாரும் பாத்தவங்கா. அங்கை சூசையன் பேசிலை, அங்கை என்னைக் கேட்டு எல்லாம் விசாரிச்சு என்டை காயங்கள் எல்லாம் பாத்தவங்கா. 

வெள்ளைக்கார பொம்பளை, பெற்றுணா, அவதான் என்னைக் கொண்டு மட்டக்களப்பு பொலிசிலையும் சரண்டர் ஆக்கினவ. என்னை வந்து விசாரிச்ச இயக்கங்கள், வந்த நிறுவனக்கள் எல்லாரிட்டையும் என்ர உண்மையைச் சொன்னனான். என்னை வேறயிடங்களுக்கு அங்கையிஞ்சை வா போவம் என்டு அவங்கள் சொல்லயில்லை. அவங்க தான் என்னை விசாரிச்சு விசாரிச்சுப் போனவங்கா. 

ஐசிஆர்சி வந்து விசாரிச்சது. ஐசிஆர்சியிட்டை முழு விவரங்களையும் சொன்னனான். உங்கட வாகனத்தை எடுத்துத் தாறன், நீ எல்லாத்தையும் சொல்லென்டு. நான் சொன்னனான், இப்பிடி ஆக்களை வச்சிருக்கு. ஆக்கள் இருக்குது. ஒரு நாளைக்கு நாலு ஐஞ்சு ஏழு என்டு செத்திட்டு இருக்கு; அடிச்சுத்தான் கொல்லுறாங்கள் என்டு. 

நான் எல்லா விவரங்களையும் யுனிசெப்பிட்டை சொன்னனான், ஐசிஆர்சியிட்டையும் சொன்னனான். அதுக்குப்பிறகு வேறொரு நிறுவனம் வந்தது. அவங்களும் வந்து என்னை விசாரிச்சவங்கா, சிறையிலை வைச்சு, ரின்கோவிலை. “

 

இனி, அந்தச் சூடக்குடா முகாமில், அங்கேயிருந்த நேவி, ஆமி இவையள் தமிழில்தான் உரையாடினார்களா அல்லது சிங்களத்திலா?

"தமிழ், நல்லாத் தமிழ் தெரியும். நல்லாத் தமிழிலை தான் எல்லாம். சிங்களப் பொம்பளையளுக்கு நல்லாத் தமிழ் தெரியும். அதிலை, எங்களை விசாரணை செய்தாக்களிலை, 'அப்புகாமி' என்டு சொல்லி, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, அவனுக்கு நல்லாத் தமிழ் தெரியும். 

அவன் என்னட்டை சொன்னான், தான் கொழும்பிலை பஜார் வழிய பிச்சைக்காரன் மாதிரித்தான் தெரு வழிய கிடந்து பேங்கிலை குண்டு வச்சாக்கள், அப்புடியான ஆக்கள் கனக்கப்பேரை புடிச்சனான், தெரியுமா? நான் பிச்சைக்காரன் மாதிரித்தான் கிடப்பன்; ஏழெட்டு நாளாய் குளிப்பில்லாம நாங்கா பிச்சைக்காரன் மாதிரி நடுபஜாரிலை வெய்யில்லை கிடப்பம். அப்பிடிக் கிடந்துதான் உங்கட அக்கள் கனக்கப் பேரை நான் புடிச்சனான், தெரியுமா? நீ உண்மையைச் சொல்லு. ஆயுதம் தான் கேக்கிறம். நீ ஆயுதம் எடுத்துத் தந்தியென்டால் உனக்கு ஒன்டும் செய்ய மாட்டம் என்டு சொன்னான். 

நான் சொன்னன்,

"என்னட்டை எங்க தம்பி ஆயுதம் இருக்கு? பிளீஸ் சேர், என்னட்டை ஆயுதம் இல்லை."
"பொய் சொல்ல வேண்டாம்."

என்டு. எனக்கு அவன் இது பண்ணான், அப்புகாமி, அவன் கொச்சிக்கடை ஆள்.

மற்றாள், அவனுக்குத் தமிழ்ப் பெயர்தான் சொல்றாங்கள். அவன் முசிலீம் ஆள்; கண்டி ஆள்; அவனுமொரு சீ.ஐ.டி..

அதிலை கம்பகாவிலை உள்ளவொரு நேவி; உயர்ந்த ஒருவன். அவனுக்குத் தமிழ் தெரியாது. அவன் சிங்களத்தாலைதான் கதைப்பான். அவனும் அப்புகாமி என்டவனும் தான் என்னை கிழுவடியிலை வைச்சுத் தூக்குறத்துக்கு வந்து தூக்கிப்போனாக்கள்; கடத்தினாக்கள் அவங்கள் தான். “


 
அந்த முகாமிலை எத்தினை தமிழ் ஆக்கள் இருந்தவங்கள்? 

"அதுக்குள்ளை, தமிழ் தெரிஞ்சாக்கள் கூடுதலா எப்பிடியும் ஒரு முப்பது பேருக்குக் கிட்டை இருக்குது. நேவிப் பெட்டையள்ளை ஒரு பதினைச்சு பேருக்குக்கிட்டை நல்லாத் தமிழ் தெரியும்."


 
ஓ, தமிழ் உறவுகள் கைதிகளாக அங்கே எத்தினை பேர் இருக்கிறார்கள், உங்களுக்கு ஒரு அளவுக்கேனும்?

“ஒரு அளவுக்கென்ன - கைதிகளாக ஆக்களைக் கொண்டுபோகேக்கில நான் கடைக் கண்ணாலை பாத்திட்டுப் போறது. பாக்கேக்கிலை 'ரப்பர் கண்ணியாலை' (?) அடிப்பாங்கள். ரப்பர் கண்ணியா என்ட கண்ணுக்குளை இருக்காம்! அங்காலை இஞ்சாலை எங்கடா பாத்திட்டுப் போறாய் என்டு அடிப்பாங்கள். நான் போன பீரியட்டுக்குள்ளை 75 80 பேருக்குள்ளை அங்கை இருந்தது. அங்க ரின்கோவுக்குள்ளை, நேவிக் கோட்டைக்குள்ளை, ஆம்பிளையள் 24 பேர், பொம்பளையள் 5 பேர். இஞ்ச என்னோடை இருந்தது 74 அ 78 பேர். அதிலையும் கனக்கச் செத்திட்டுது; நான் வரேக்குள்ளையே கனக்கச் செத்திட்டுது. “

 

நீங்கள் வெளியில் வந்த பின்பு வேறு யாராவது, அங்கே முகாமில் இருந்தவர்கள், யாரேனும் வெளியில் வந்திருக்கிறார்களா?

“ஒருதரும் வரேலை. கடத்தப்பட்டாக்கள் ஒருதரும் இல்லை."

 

மெதுமெதுவாக ஒவ்வொருவரையும் கொன்றிருப்பார்கள்; சில வேளைகளில் இப்பொழுது முழுவரும் இறந்திருப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம்!

"ஒரு அளவுக்கென்ன, அந்த அடிக்கும் சாப்பாடில்லாமல் விதையை நசிக்கிறது, ஆணுறுப்பு வெட்டிறது என்டு தப்பக் கூடிய அளவுக்கு இல்லை! என்ட விதையையும் மிதிச்சு உதைச்சதுகள், நேவிக்காராக்கள். எனக்கே வயிறெல்லாம் வீங்கிக் கிடந்தனான். அந்தளவுக்குத்தான் எங்களை நாய் மாதிரித்தான் பாத்தவங்கள்.

எங்களுக்கு என்ன மாதிரி என்ன சித்திரவதை செய்யேனுமோ; போகேக்கிலை காறித் துப்பிப்போட்டுப் போவாங்கள், எங்கட முகத்திலை, வடியும். ரண்டு கையிலையும் மாஞ்சைப் போட்டா ஒன்டும் செய்யேலாது.

கடைசியா நான் தப்பி வாறன்டு இராவு விசாரிச்சு அடிச்சுப் போட்டு 'ஃகான் ஃகஃவ்' போடேக்கிலை கொஞ்சம் லூசாப் போட்டாங்கள். வலது கையைப் போடேக்கிலை விரலை சரிச்சு இப்பிடிப் புடிச்சன். ரண்டு விரலை உள்ளுக்குளை வைச்சு லொக் பன்னான், இருட்டுக்குள்ளை. ஒரு ஏழு பல்லை வைச்சு லொக் பன்னான். அதாலை நான் அந்தக் கையை லேசா உருவி எடுத்தன். அப்பவும் கையை பிச்சுத்தான் எடுத்தனான். மற்றக்கை கொஞ்சம் லேசாக் கழட்டித்தான் எடுத்தனான். நான் மண்ணுக்குள்ளை கத்தியும்தான் வைச்சிருந்தனான். இது கழட்டேலாட்டி நான் கையைத் தறிச்சிட்டு வருவம் என்ட நிலைப்பாட்டோடைதான் இருந்தனான்; இரவு வெட்டிட்டு ஓடுவம்.

அன்டைக்கு நான் இரவு வெளிக்கிடக்குள்ளை, பன்ரன்டு மணிக்கு உருவீட்டுப் படுத்தனான்; படுத்த மாதிரி நித்திரை கொண்டுட்டன். கனவிலை எங்கட மருமகன் கௌரி நோன்பு காப்புக் கட்டின மாதிரி, "நாங்க நிக்கிறம் ஏன் படுத்திக் கிடக்கிறீர்?" என்ட மாதிரி கனவிலை தென்படத்தான் நான் அதேபராலை வெளிக்கிட்டனான்; முழிச்சன், எனக்கொரு தென்பும் வந்திது. அண்டு 2009 முதலாம் மாசம் மூன்டாம் நாள் கடும் மழை. மழையும் பெஞ்சது எனக்கு நல்லொரு காலமாப் போச்சுது. நான் அதேபராலை வெளிக்கிட்டனான்.

ஆனால் ஆக்கள், கடத்தினாக்கள், இல்லை!

அதான் எனக்குத் தெரியும். கடத்தினாக்கள் ஒன்டையும் வைக்கமாட்டாங்கள். அப்பிடித்தான் என்னட்டையும் சொன்னவன். நானும் அவ்வளவு bபொடியையும் பாத்தனான்.

எப்பிடியும் எங்களை விதை நசிச்சுத்தான் பெட்டையள் கொல்லும். கம்பை வைச்சு இழுத்தால் மடமடவென்டு வெடிக்கும், அப்பிடியே அடிபட்டு!

அதான் எனக்குத் தெரியும். கடத்தினாக்கள் ஒன்டையும் வைக்கமாட்டாங்கள். அப்பிடித்தான் என்னட்டையும் சொன்னவன். நானும் அவ்வளவு பொடியையும் பாத்தனான்.

எப்பிடியும் எங்களை விதை நசிச்சுத்தான் பெட்டையள் கொல்லும். கம்பை வைச்சு இழுத்தால் மடமடவென்டு வெடிக்கும். அப்பிடியே அடிபட்டு அரை மணித்தியாலம் போகும், சீவன் போக. என்ட முன்னுக்கே எட்டுப் பேரின்டை ஆணுறுப்பை வெட்டினவள். எனக்கு எறும்பைக் கட்டினவள். அந்த நேவிக்காரப் புள்ளை, "பாவம், இதைக் கட்ட வேணாம். அவர் பாவம்தானே, வயசு போனாள், கொல்றது என்டால் கொல்லுங்கோ" என்டு சொல்லுறாள், தமிழரை. அவளுக்கு உடனையே பனிஸ்மன்ற்; அப்பிடிப் பாவம் பாத்தால் பனிஸ்மன்ற். ரெயினிங் 5 மணிக்கு முடிஞ்சு பொம்பளையள் வந்தா எப்பிடியும் ஒரு ஏழு பேரை போட்டுட்டுத்தான் போங்கள், நேவிப் பெட்டையள்.

ஆம்பளையளுக்குச் சித்திரவதை பொம்பளையள் தான். பொம்பளையளுக்குச் சித்திரவதை ஆம்பளையள். 

உடுப்பே இல்லை. நான் உடுப்பில்லாமல்தான் நிருமாணமாத்தான் காட்டிலையும் கிடந்தனான், முகத்திற்கு பன மட்டயை வச்சிட்டுப் படுப்பான். அப்பையும் நரியள் கடிக்கப் பாத்திச்சு!

ஆனால் உறவுகள் என்டு அங்கை புடிச்சாக்கள் இல்லை. 

கிண்ணியா, மன்னார், வவுனியா - அங்கிருந்தெல்லாம் கொண்டந்து இறக்குவாங்கள், கன்போட்டிலை. கன்போட்டு கரை ஒதுங்கினால் ஓடித் திரிவாங்கள். ஓடித்திரிஞ்சால் நினைக்க வேண்டியதுதான் ஆக்கள் கொண்டு வாராங்கள் என்டு. ஒரு தரம் பன்ரண்டு பேரைக் கொண்டந்து இறக்கினாக்கள். கொண்டந்து இறக்கினடத்திலேயே ரண்டு பேர் செத்திட்டுது. 

பிறகு அடுத்த நாள் ஒருதனைக் கொண்டந்தாங்கள். அவனை எனக்குத் தெரியும், அவன் புலனாய்விலை இருந்த பொடியன், ஒரு 'வேடப் பொடியன்'; உயர்ந்த பொடியன். அவனைக் கொண்டோய் இறக்கி வைச்சால் அவன் சொல்லிப் போட்டான், நானொரு Bபூலி பிஸ்ரல் வைச்சிருக்கிறன் தாறன் என்டு சொல்லி. அப்ப எனக்குப் பக்கத்துக் கொட்டில்லைதான் வைச்சிருந்தவங்கள். தகரக் கொட்டில், சுனாமி வீட்டுத் திட்டத்துக்குளை அடிச்சது. பிறகு, சரியா அண்டு என்னை விசாரிச்சு அடிச்சு என்னை தண்ணியூத்திப் போட்டிருந்தாங்கள்; அப்ப எனக்குப் பின்னுக்குப் போட்டிருந்தாங்கள் மாஞ்சை. அவனுக்குப் பின்னுக்குக் கிடந்த மாஞ்சையை கழட்டி முன்னுக்கு எடுக்கக்குள்ளை, இடிச்சான் நேவிக்காரனுக்கு மூக்கிலை. மூக்கு உடைஞ்சவுடனையே கீழ கிடந்த கம்பியை எடுத்து அடிச்சான். அதிலை ரண்டு நேவி செத்திட்டான். ஒரு நேவிக்கு கை தூளாப் போயிற்றிது. அதுக்குப் பிறகு அங்கை தூரத்திலை நிண்ட நேவிக்காரன் ஓடியந்து அவனுக்கு வெடி வைச்சுப் போட்டாங்கள். சுட்டாங்கள் படபடவென்டு, அப்பிடியே தலை சிதறின மாதிரி விழுந்தான். அவன் அன்டு கொண்டந்து ரண்டு நாள் இதிலை தட்டிப் போட்டாங்கள். அவன் அடிச்சதாலை அவனை சுட்டவங்கள். அவந்தான் வீரச்சாவடைஞ்சவன். ரண்டு நேவி தலையுடைச்சு செத்திட்டிது. அதிலை ஒரு நேவிக்கு கையிதண்டிட்டுது. அதை என்ர கண்ணாலை நேர பாத்தது. அவன் மட்டுந்தான் வீரச்சாவடைஞ்சது. அதொரு வேடப் பொடியன். அவன் புலனாய்விலை இருந்தவந்தான். அதையும் என்ர கண்ணாலை பாத்தனான். "

 

தொடரும்...

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் விதை பிடுங்கப்பட்ட சூடக்குடா வதைமுகாம்

 

பாகம்-4

 

 • மூலம்:  www.youtube.com/watch?v=v66w_YYvlzg 
 • வாக்குமூலம்: குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 
 • எழுத்து: நன்னிச் சோழன்

 

"...

குமார், நீங்கள் சொன்னீங்கள், உங்களை முதல்லை சூடக்குடா முகாமிற்கு கொண்டு போகேக்கிலை ஃபாதர் இருந்தார் என்டு சொன்னீர்கள். அதிலை ஆர் பாதர் என்டு உங்களாலை அடையாளம் காணக் கூடியதாய் இருந்துதா? 

"அடையாளம் காணக்கூடியளவுக்கு இல்லை. ஏன்டா, முகமெல்லாம் பழுத்து சிதள் வடிஞ்ச மாதிரி இருந்தது. அப்பிடியே ரத்தங்கள் வடிஞ்சி காஞ்சு பட்டியைப் பாத்துற்றுத்தான் இவர் பாதர் என்டு நினைச்சனான். அவற்றை வெள்ளை யூனிஃவோர்ம் வந்து, அவருக்கு ரௌசர் ஒன்டும் இல்லை. அவர் ஒருசாதி பினாட் மாதிரிதான் இருந்திச்சு அவற்றை உடை. அவர்தான் சொன்னார், “நான் மன்னார்” என்டு. எவடம் பாதர் என்டு கேக்க,

"நான் மன்னார். ஆரையும் காட்டிக் குடுக்க வேணாம் தம்பி. தெரியும்தானே, ஆரையும் காட்டிக் குடுக்க வேண்டாம், நாம சாகப் போறம். அவ்வளவுதான். கனக்க கதைக்கவுமேலாது. கதைச்சால் நம்மளை அடிச்சுக் கொண்டுபோடுவாங்கள்."

சரி அவ்வளவுதான் என்னட்டைச் சொன்னது.

என்னை வைச்சிருந்ததிலையிருந்து அவர் எப்படியென்டு சொன்னால், நான் இருந்ததிலையிருந்து ஒரு 15 மீட்டருக்குள்ளை அவர் இருந்தவர். அது இடைக்குள்ளை ஒரு பொடியன், தொங்கல்லை நான். நான் போய் ஏழாவது நாள் ஆள் அப்பிடியே சுருண்ட மாதிரியேக் கிடந்திச்சு. நாத்தமாத்தான் இருந்திச்சி. பிறகு, நாங்கதான் அதைக் கையாலை தூக்கி பொலித்தீன் பேக்குக்குள்ளை போட்டு அந்த நெற்றுக்குள்ளை வைச்சு, அதுக்குப்பிறகு, ஊராக்கள் ஒரு நாலு பேரின்ர பொடி, இவரோடை ஐஞ்சு, கொண்டுற்றுப் போனாங்கள், ஒரு சனிக்கிழமை. ஏத்திவிட்டம் தூக்கி, ஒரு கிரைனில குடுக்க, கிரைன்கிலை தூக்கி ஏத்தியெடுத்து, அங்க கல்லைப்போட்டு மேலை கட்டுக் கம்பியாலை கிரைஞ்சிப்போட்டு கடல்லை கொண்டோய் இறக்கிறதாம். 

அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

அவர் பாதர் என்டு சொன்னதாலைதான், நான் பாதர் என்டு அவற்றை பட்டியையும் உடுப்பையும் பாத்துத்தான் பாதர் என்டு நினைச்சனான். பிறகுதான் தான் மன்னார் பாதர் என்டு சொல்லி நான் மன்னாருக்குப் போனனான். நான் விசாரிச்சனான், அங்கை எங்களுக்குத் தெரிஞ்சாள் ஒராள் இருந்தது. அவர், தனக்கு அவ்வளவு விளங்கலை என்ட மாதிரி, அந்தப் பாட்டி பயப்பிட்டுது. இஞ்சையும் இந்த பிசப் கிட்டையும் போனனான், போனதரம். போனகிழமை எங்களுக்குக் கடிதங்கள் தாங்கோ என்டு. அவர் தரேலாது எங்களுக்கு, அதெல்லாம் செய்யேலது, எனக்குப் பயமாக் கிடக்குது உங்களைப் பாக்க. எனக்கு இதில்லை, நான் தரேலாது. நான் வெளியாக்களுக்குக் குடுக்கிறனான் தான், ஆனால் உங்களுக்குத் தரேலாது. போங்க நீங்க, ஆருக்கிட்டை கேட்டு உள்ள வந்தனீங்கா என்டு கனக்கப் பேசத் துவங்கீட்டார். பின்ன சரியென்டுபோட்டு நானும் என்ர வைஃவும் பிறகுட நாங்க வெளிய வந்திட்டம். ஒரு ஞாயிற்றுக்கிழமை போனாங்க அங்கை. அதோட நாங்க திரும்பீட்டம். 

ஆனால் கடத்தப்பட்ட உறவுகள் என்டு இஞ்சை இல்லை. இருந்திருந்தா ஆக்கள் விட்டிருக்கும். விடக்கூடிய அளவுக்கும் இல்லை. 

அதுதான் இந்த உண்மை. “


 
குமார், இந்த உண்மையை நீங்கள் இதுவரைக்கும் எந்த ஊடகத்திற்காவது சொல்லியிருக்கிறீங்களா இதுவரைக்கும்?

"ஊடகங்களாலை என்னை, நான் வந்து ஒரு மாசம் தான் வைத்தியம் செய்திட்டு இருந்தனான். அதுக்குள்ளை நிறுவங்கள் எல்லாம் வந்து கேட்டது. வேறு ஊடகங்கள் ஒருதரும் வந்து என்னை விசாரிக்கக்கூடியளவிற்கு வரேலை. "
 
 

இப்பொழுது நீங்கள் வெளியில் வந்து கூறுவதற்கு என்ன முக்கியமான காரணம்?

"வெளிய என்டு, என்ட பிரச்சினை என்டு சொன்னா, இப்ப நீங்கள் இந்தக் கோத்தபாயா எல்லாரும் எங்கடை இறைவன்ட தீர்ப்பு என்ட மாதிரி, அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்டறுக்கும் என்ட மாதிரி, இப்ப உவர் வெளியேறக்கூடியளவிற்கு இவரை அவங்கட சிங்கள மக்கள், உவரைப் புறக்கணிக்கக்கூடியவளவிற்கு வந்திட்டுது. இனியவரும் உள்ள போவார். நானும் ஒரு வெளிமறியலிலை இருக்கிற மாதிரித்தான் இருக்கிறன். 

இதே என்ட பிரச்சினை மாதிரி ஆருக்கும் தெரியாது. போதகர் தான் சொன்னார், இப்பிடி ஒன்டு இருக்கிது. இப்பிடி உண்மையிலையே நீங்கள் அங்கயிருந்து வந்திருந்தால், இப்பிடி அந்தாக்களோடை அறிமுகப்படுத்திவிடுறன், அவங்களோடை கதையுங்கோ என்டு.  

அப்ப ஊடகங்கள் வரக்கூடிய அளவிலை நான் சிறைக்குப் போயிட்டன். சிறையிலை இருந்து நான் ஒன்டும் கதைக்கக்கூடியளவுக்கு அங்கை ஒன்டும் வரேலை. 
 
ரிங்கோவிலை மட்டும் தான் ஐசிஆர்சி மட்டும் உள்ளை வந்தது. அவங்களிட்டை முழு விவரமும் சொன்னன். நிறுவனங்கள் ஒன்டும் அதைப் பெரிசுபடுத்தி அங்கை என்னை ஒன்டும் கேட்டு அங்கை விசாரணைக்கு வாறாய், இஞ்சை போயிட்டு வாறாய் என்டு ஒருதரும் என்னட்டை கேக்கேலை. இப்ப நிறுவனங்கள்...
 
ஆ... சொல்லுங்கோ" (குறுக்கிடப்படுகிறது...)
 
 

இப்ப என்ன செய்துகொண்டு இருக்கிறீங்கள்?

" இப்ப நானொரு வாகனம் தான் பாக்கியிலை போட்டு Hகையறுகள் கிடைச்சால் ஓர்றது."
 
ம்ம்ம்...
 
"அப்பிடித்தான் ஓடிற்றிறுக்கிறன்."

 

யாரிடமிருந்தாவது உங்களுக்கு உதவிகள் கிடைக்கிறதா?

 "எனக்கு ஒருதரிட்டையிருந்தும் எந்த உதவியும் கிடைக்கேலை. நான் கஸ்டப்பட்டுத்தான், வாகனம் ஓடித்தான் புள்ளையளையும் படிப்பிச்சி சாப்பாடும் எல்லாம் அந்த வாகனத்துள்ளை எல்லாப் பிரச்சினையும் பாத்திட்டு இருக்கிறன். "

 

சமூகம் மத்தியில் நீங்கள் சிறையில் இருந்தது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எப்படிப் பார்க்கிறார்கள்? சமூகம், உங்களோடு சுற்றாடலில் இருப்பவர்கள்...

"சுற்றாடலிலை இருந்து... என்னைக் கொண்டுபோனவங்க என்னைப் பற்றி இப்பிடி இது பண்ணப் பிறகு எங்கட வீட்டக்காளிட்டை சொல்லியிருக்கிறாங்கா, நீங்க கட்டைபறிச்சான் முகாமிலை வந்திருக்கலாம். உங்கடை ஆக்கள் சொல்லி இது பண்ணதாலை தான் தூக்கினது. எங்களுக்குத் தெரியாது. பிறகுதான் நாங்கா கேள்விப்பட்டம்.
 
முசிலீம் அக்களை எச்சரிக்கை பண்ணியிருக்கிறாங்கா, வரச்சொல்லி. என்னைக் கொண்டு சரண்டர் ஆக்கினாக்கள், ஜெமில் கபூரும், எங்கடை ரவிச்சேனனையும்.
 
அப்ப அவங்கா சொல்லியிருக்கிறாங்கா, அவங்கா எல்.ரி.ரி. என்டா நாங்க கொண்டு போக மாட்டம். அவன் இஞ்ச கிடந்து துடிச்சி கரைபாடு கடற்றொழில் செஞ்சவன். அந்த அளவிலைதான் நாங்கா கொண்டு போய் நீதிமன்றத்திலை சரண்டர் ஆக்கினாங்கா. 
 
நீங்கா அப்பாவியளை எல்லாம் போட்டு இப்பிடி அடிச்சுக் கொல்லுவியள் என்டு எங்களுக்கு விளங்குமோ? என்டு சொல்லி அவங்கா, ஜெமில் கபூரும் அவரும், கனக்கக் கதைச்சிருக்கிறாங்கா.

அவர் செயார்மேனை இருந்தவர். அவர் கிட்டடியிலைதான் மோசம் போனவர். 
 
முசிலீம் ஆக்களும் எனக்குக் கொஞ்சம் சப்போட் செய்தாங்கா. 
 
வேறை நிறுவனங்களாலை எனக்கு வேறு எந்தவொரு உதவியும் ஒன்டுமில்லை. "
 
ஆக மொத்தத்திலை உங்களுக்கு நடந்த, அந்த செத்துப் பிழைத்த அந்த அனுபவங்களை நீங்கள்...

(குமார் குறுக்கிட்டு)
"யூ.என்.எச்.சி.ஆர். கிட்டை சொன்னனான்." 

 

அவ்வளவற்றையும் நீங்கள் இங்கே எங்கட உறவுகள் மத்தியிலை தெரியப்படுத்த வேண்டும், நடந்த விடையங்களை, உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் நீங்கள் இங்கே எங்களோடு இணைந்திருக்கிறீர்கள்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன மாதிரி என்ற விடையங்களை நாங்கள் இங்கே கூற விரும்பவில்லை.

 நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் மனந்திறந்து இஞ்சே எங்களோடு உங்களுக்கு நடந்த சம்பவங்களை, இனப்படுகொலையின் உச்சக்கட்டதில், முள்ளிவாய்க்கால் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, மே மாதம் அந்த உச்சக்கட்டப் போருக்கு முன்னதாகவே, எப்படி இவர்கள் எங்கடை உறவுகள் எல்லாரையும் சிறை பிடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எத்தனை இலட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்பது தெரிகின்றது. 

நன்றி குமார்!
 

 

முற்றும்😭

 
 

Edited by நன்னிச் சோழன்
 • Sad 2
Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.