Jump to content

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

மேற்கு நாடுகள் எல்லாம் கவலை தெரிவித்து விட்ட நிலையில்….

பக்கத்து நாடான இந்தியா… இன்னும் கவலை தெரிவிக்கவில்லை என்று,
எனக்கு கவலையாக இருக்கு. 😁

உள்ளூர சந்தோசம், அதை  எப்படி இந்த நேரத்தில் தெரிவிப்பது! ஓடியோடி உதவி செய்தும் கைகூடி வாறநேரம் இப்படி கைநழுவிப்போச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது

7 நிமிடங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம்

இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர்.

அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக் காட்சியை ஃபேஸ்புக் நேரலை மூலம் நேயர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் சாமுவேலையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.

அப்போது அங்கே என்ன நடந்தது என்பதை ஜெரினோடு சேர்ந்து அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பிபிசி தமிழ் செய்தியாளர் எம்.மணிகண்டன் விவரிக்கிறார்:

கொழும்பு காலி முகத் திடலில் இருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நானும் வீடியோ செய்தியாளர் ஜெரினும் அந்த இடத்திற்கு சென்றோம். முதலில் அங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. அங்கிருந்தபடி முகநூலில் ஒரு நேரலை செய்தோம். அந்த நேரலை முடிந்ததும் சுமார் 100 ராணுவ வீரர்கள் சாலையை மறித்தபடி குவிக்கப்பட்டனர்.

சற்று நேரத்தில் மீண்டும் நேரலையை தொடங்கி அந்த காட்சிகளை பதிவு செய்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்தோம். சில வினாடிகளில் ராணுவ வீரர்கள் அங்கிருந்து அதிபர் செயலகத்தின் வாயிலை நோக்கிய சாலையில் வேகமாக முன்னேற தொடங்கினார்கள். பின்னர் பல்வேறு சாலைகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் குவிந்தார்கள்.

 

ராணுவம்

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கணிக்க முடியவில்லை. அனைத்து சாலைகளையும் அடைத்தபடி, செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை பின்னோக்கி தள்ளியபடி வந்தார்கள். திடீரென சாதாரண உடை அணிந்து இருந்த ஒருவர் ஜெரின் கன்னத்தில் இரண்டு மூன்று முறை அடித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

பின்னோக்கி செல்வதற்கு முயன்றோம். ஆனால் ராணுவத்தினர் எங்களை முன்னோக்கி தள்ளியபடியே வந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளும் லத்திகளும் இருந்தன. எங்களுடன் மற்றொரு செய்தியாளர் அன்பரசனும் இருந்தார். எங்களுடைய நேரலை தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கைபேசியை பிடுங்கி தரையில் வீசி விட்டார்கள் ராணுவத்தினர்.

அதன் பிறகு தரையில் இருந்து செல்போனை எடுத்து மீண்டும் நேரலையை தொடங்கினோம். மீண்டும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக சீருடை அணிந்தோர், சீருடை அணியாதோர் என பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஜெரினை தாக்க தொடங்கினார்கள். அதில் ஒருவர் கன்னத்தில் அடித்தார். மற்றொருவர் வயிற்றில் எட்டி உதைத்தார். உடனடியாக நாங்கள் சூழ்ந்து அவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஒரு ராணுவ வீரர் ஜெரினின் கையில் இருந்து தொலைபேசியை பிடுங்கி அதிலிருந்து தகவல்களை அழிக்கத் தொடங்கினார். நாங்கள் 'ஊடகம்... ஊடகம்' என்று கத்திய போதும், 'பிபிசி' என்று குரல் எழுப்பிய போதும் எதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அதில் இருந்த காட்சிகளை அழித்துவிட்டு செல்போனை திருப்பித் தந்தார்கள். அதன் பிறகு ஏராளமான ராணுவ வீரர்களை கடந்தபடி நாங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

https://www.bbc.com/tamil/india-62263250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில்,  இடம்பெறும் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகின்றது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர்.சிறிலங்காவில் கோத்தபாயவிற்கு எதிராக, ராஜபக்சக்களிற்கு எதிராக , கோட்டா  கோ கம என்னும் குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட , ஒப்பந்த அடிப்படையிலான ஜனநாயகப் போராட்டம் தனது இலக்கை அடைந்து விட்டதாக எதிர்காலத்தில் , போராட்டக்காரர்களால் அறிவிக்கப்படலாம். சிறிலங்காவை கிடுக்கிப் பிடியில் கொண்டு வருவதற்காக மேற்கின் ஆசியோடு தொடங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான போராட்ட காரர்களை நேற்று நள்ளிரவில் இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். மேற்கும் ,இந்தியாவும்  தங்களுடைய இலக்கை ஓரளவிற்கு எட்டி விட்டனர். ஆனால் இதுவும் கடந்து போகும். முற்போக்கு இளையோரினால் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடாத்தப்படலாம். ஆனால் அதற்கான விநியோகங்கள் சீராக நடைபெற மாட்டாது. ஆகவே அவையெல்லாம் கருவிலேயே அழிந்துவிடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. சனாதிபதித் தேர்தலில் யாரை வெல்ல வைக்கவேண்டும் என்ற திட்டக்கணக்கு ஒன்று ஏற்கனவே இருந்தது. அதன்படியே அனைத்தும் நடந்தது. தமிழர்கள் மீதான இனவாதத்தை தூண்டி ரணிலை வெல்ல வைக்கும் திட்டத்தில் , தமிழர் தரப்பில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு , களமிறக்கப்பட்டது. கூட்டமைப்பு.  அழகப்பெருமவிற்கு வாக்களிக்கும் என்ற செய்திகள் ரணில் தரப்பினால் கடுமையாக பரப்பப்பட்டது. ஆகவே இனத்துவேசம் கொண்டு,  எதிரணிகள் கூட தமிழர் விரோதப் போக்கினால் , ஒன்றாகி ரணிலுக்கு வாக்களித்தனர். நரியின் தந்திரமும். கூட்டமைப்பின் தந்திரமும். மேற்கு. இந்தியாவின் தந்திரமும் ஒன்றாகவே பலித்தது. இங்கே நரி வடைகளை தந்திரமாக பறித்துச் சென்றது. மேற்கின் பூகோள, வர்த்தக  நலன்களிற்கு விரோதமான ஆட்சியை அகற்றுவதற்கு தேவையான போராட்டமாக திட்டமிட்ட தொடங்கப்பட்ட "கோட்டா கோ கம" இன்று இராணுவத்தின் இரும்புக்கரங்களினுள் சிக்கியுள்ளது. இனிமேல் உலகம் இதைக் கண்டு கொள்ளாது.  காலம் எவரையும் விட்டு வைக்காது அது தன் கடமையைச் செய்யும் . விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது.

 


குறிப்பு: இது எனது கருத்தல்ல. ஒரு புலனம் குழுவிலே பகிரப்பட்டதை இணைத்துள்ளேன் 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பந்தாடிய படையினர்

பழைய பாராளுமன்ற வளாகத்துக்குள் திடீரென திமுதிமுவென ஆயுதங்களுடன் உள்நுழைந்த பொலிஸாரும், படையினரும், ஜனாதிபதி வளாகத்தில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், ஜூலை 22 நள்ளிரவைத் தாண்டி படையினரால் ஆரம்பிக்கப்பட்ட அதிரடித் தாக்குதல், நேற்று (22) அதிகாலை 3 மணிவரையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதி பெரும் களேபர பூமியாக காட்சியளித்தது.

சம்பவத்தை கேள்வியுற்று, ஸ்தலத்துக்கு விரைந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் சரமாரியான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். சிலரின் கமெராக்களை உடைக்கவும் முயற்சித்தனர்.

'எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் போய்விடுகின்றோம்' என கத்தி மன்றாடிய போதிலும், பெண் போராட்டக்காரர்கள் என்றுகூட பார்க்காமல் முதுகு, கைகள், கால்களில் அச்சு பதியும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். அத்துடன் காயங்களையும் ஏற்படுத்தினர்.

அவ்விடத்தை விட்டு  நேற்று (22) நண்பகலுடன் அகன்று சென்றுவிடுவதாக, ஜூலை 21 ஆம் திகதியன்றே கோட்டை பொலிஸாருக்கு எழுத்துமூலமாக உறுதியளித்த போராட்டக்காரர்கள், கடிதத்தையும் கையளித்திருந்தனர்.

எனினும், நடுநிசியில் உள்நுழைந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர், சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதல்களை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச இராஜதந்திரிகள் 'மிலேச்சத்தனமான தாக்குதல்' என வன்மையாக கண்டித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர், அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த படையினர், அங்கிருந்தவர்கள் வெளியே செல்லமுடியாத வகையில் தடைகளை ஏற்படுத்தி, கடுமையான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் என தெரியவருகின்றது.

படையினரால் பலரும் பிடித்துச் செல்லப்பட்டனர் என்றும், அவ்வாறானவர்கள் என்ன நடந்ததென தெரியவில்லையென போராட்டக்காரர்கள் அங்கலாய்கின்றனர்.

எனினும், போராட்டக்காரர்கள் ஒன்பது கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நேற்று (22) காலை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

நடுநிசியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் காயமடைந்தவர்களை, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதைக்கூட அங்கிருந்த படையினர் தடுத்தனர். எனினும், ஒருசிலரை மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்க முடிந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை கேட்டு, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பலரும் பல வழிகளின் ஊடாகவும் படையெடுத்தனர். எனினும், எந்த பக்கத்திலிருந்தும் உள்நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பெருந்திரளான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

'கோட்டா கோ கம' மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவே முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த கமவுக்கு எவ்விதமான சேதங்களும் விளைவிக்கவில்லை. அத்துடன், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் எந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்காக, சட்டத்தரணிகளும் நேற்றுக்காலையிலேயே ஸ்தலத்துக்கு விரைந்தனர்.

எனினும், அங்கிருந்த பொலிஸார், சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு எவ்விதமான பதிலை வழங்கவில்லை. இந்நிலையில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, நேற்று (22) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/போராட்டக்காரர்களை-இரவோடு-இரவாக-பந்தாடிய-படையினர்/175-300947

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

திடீரென சாதாரண உடை அணிந்து இருந்த ஒருவர் ஜெரின் கன்னத்தில் இரண்டு மூன்று முறை அடித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

10 hours ago, ஏராளன் said:

சீருடை அணியாதோர் என பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஜெரினை தாக்க தொடங்கினார்கள்.

3 hours ago, கிருபன் said:

எனினும், நடுநிசியில் உள்நுழைந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர், சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

 

3 hours ago, கிருபன் said:

எனினும், எந்த பக்கத்திலிருந்தும் உள்நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பெருந்திரளான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதிலிருந்து தெரிவிக்கப்படும் செய்தியென்ன?

3 hours ago, கிருபன் said:

எனினும், எந்த பக்கத்திலிருந்தும் உள்நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பெருந்திரளான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

பதில் ஜனாதிபதியாக ரணில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னே, திட்டமிட்டு நீதிமன்றத்தில் அதனுள் யாரும் செல்லாதவாறு அனுமதிபெற்று நடத்தப்பட்ட தாக்குதல். இது சொல்லும் செய்தியென்ன? ஒன்றும் மாறாது, விட்டதிலிருந்து தொடரும் பயணம், ஆள் மட்டும் வேறு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

இது எனது கருத்தல்ல. ஒரு புலனம் குழுவிலே பகிரப்பட்டதை இணைத்துள்ளேன் 

புலனம் குழு என்றால் சிஐஎ, மொஸ்சாட் மாதிரியோ என்று தேடி பின்பு கண்டுபிடித்துவிட்டேன் 😀 புலனத்தில் எப்போதாவது நல்ல கருத்துக்களும் வருவதுண்டு. இதுவும் நல்ல கருத்து . கருத்துக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத் திடல்

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

போராட்டம்

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம்.

பெரிய ராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதிபரின் செயலகம் இருக்கும் பகுதிக்குச் செல்லக்கூடிய அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஊடகங்கள் செல்வதற்குக்கூட அனுமதி அளிக்கப்பட வில்லை.

சாலைகளை அடைத்து தடுப்புகளை வைத்திருக்கும் பகுதிகளில் பலர் போராட்டங்களை நடத்தும் காட்சிகளை வெள்ளிக்கிழமையன்று பார்க்க முடிந்தது. 'கோட்டா கோ கம' என்ற பெயரில் போராட்டம் நடந்து வரும் பகுதியில் சுமார் நூறு பேர் வரை 'அடைபட்டிருப்பதாக' போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

ஜூலை 9-ஆம் தேதியும் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகும் போர்க்களம் போலக் காட்சியளித்த பகுதியில் இப்போது ராணுவம் மற்றும் காவல்துறையினரைத் தவிர மற்றவர்களைக் காண இயலவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் பிரபலமான நட்சத்திர விடுதிகளும் அரசு அலுவலகங்களும் இருக்கின்றன. அவற்றுக்குச் செல்வோரின் நடமாட்டமும் தடை பட்டிருக்கிறது.

அதிபரின் செயலகம் இருக்கும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த தடயமே இப்போது தென்படவில்லை. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அதிபரின் செயலகத்தின் முக்கிய வாயிலை அடைத்துதான போராட்டம் தொடங்கப்பட்டது. பின் நாள்களில் அதில் ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயில் தடுப்புகளும் மேடையும் இப்போது இல்லை.

அந்த வாயிலை ஒட்டியபடி சாலையின் குறுக்காக ராணுவ வீரர்கள் வரிசையாக நின்றபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்வப்போது ராணுவ வாகனங்கள் வந்து செல்கின்றன. அதிபரின் செயலகத்தில் புதிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

கொழும்பு நகரில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கணிசமாகக் கூடும் இடமான காலி முகத்திடலை ஒட்டிய கடற்கரையும் இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. சாலையோரக் கடைகள், வண்டிக் கடைகள் ஆகியவையும் தென்படவில்லை.

அதிபரின் செயலகத்தைத் தாண்டியிருக்கும் பகுதிகளில் மட்டும் கறுப்புக் கொடிகள் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன. 'கோட்டா கோ கம' என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள கூடாரங்களும் அப்படியே இருக்கின்றன.

ராணுவத்தினர் அடித்ததில் பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு போராட்டக்காரர் கூறினார்.

 

போராட்டக்காரர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காட்சிகள் மாறிய வியாழக்கிழமை

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற கடந்த வியாழக்கிழமையிலிருந்து காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். இருப்பினும் அன்று இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அன்று காலையிலேயே போராட்டம் நடைபெறும் இடத்தில் பண்டாரநாயக சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சிகிச்சை முகாம் அகற்றப்பட்டது.

அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அதிபரின் செயலகத்தை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த கறுப்புக் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. நடைபாதைகளில் இருந்த கூடாரங்களை மாற்றி அமைப்பதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

காலி முகத்திடல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குள் ராணுவத்தினர் நுழைந்த தருணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே இடத்தில் பிபிசி தமிழ் அளித்த நேரலையில்கூட இந்தத் தகவலை போராட்டக்காரர்கள் உறுதி செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டத்தை சிறிது அவகாசத்துக்குப் பிறகு தீவிரப்படுத்துவது என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.

கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்களை காலி செய்துவிட்டு அங்கு தென்னங் கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கைகளையும் சில போராட்டக்குழுவின் செய்திருந்தார்கள். அன்று காலையில் இருந்து கூடாரங்களில் இருந்த சிலர் மற்றவர்களிடம் விடைபெற்றுச் செல்வதையும் கவனிக்க முடிந்தது.

அந்தத் தருணத்தில் வெகு சிலர் மட்டுமே அதிபரின் செயலகத்தில் இருந்தார்கள். அந்தக் காட்சி நள்ளிரவு நேரத்தில் மாறியது.

 

ராணுவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராணுவத்தின் நள்ளிரவு நடவடிக்கை

வியாழக்கிழமையன்று நள்ளிரவுக்குப் பிறகு செயலகத்தில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அங்கு பிபிசி தமிழ் குழு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றது. முதலில் போராட்டக்காரர் ஒருவருடன் சில முகநூலில் நேரலை செய்தோம். அப்போது பெரிய எண்ணிக்கையிலான ராணுவத்தினர் எங்கும் தென்படவில்லை. ஆனால் ஆங்காங்கே கட்டடங்களுக்குப் பின்னாலும் கடற்கரையை ஒட்டிய சாலையிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

முதல் நேரலையை முடிந்த சிறிது நேர இடைவெளியில் ராணுவத்தினர் சாலைகளில் படிப்படியாக அணிவகுக்கத் தொடங்கினார்கள். ஒரு சில நிமிடங்களில் வெவ்வேறு சாலைகளில் இருந்தும் ராணுவத்தினர் திரண்டு வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு நகரிலும் நாட்டின் பிற நகரங்களிலும் ராணுவத்தின் நடவடிக்கை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.

கையில் இருந்த லத்திகளைக் கொண்டு சைகை செய்தபடியே கோட்டா கோ கம பகுதியை நோக்கி அனைவரையும் விரட்டிய ராணுவத்தினர். அதே நேரத்தில் பின்னிருந்து வந்த ராணுவத்தின் மற்றொரு குழுவினர் சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, அகற்றினர். சில கூடாரங்களில் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.

 

வாகனம்

ராணுவத்தினருக்கு மத்தியில் சீரூடை இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்த பலரைக் காண முடிந்தது. அங்கு நடந்த சம்பவத்தைப் படம் பிடிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. கடுமையான குரலில் எச்சரிக்கும் தொனியில் அவர்கள் பேசினார்கள். ஊடகம் என்றும் பிபிசி என்றும் கூறிய போதும் அவர்கள் அதைப் பொருள்படுத்தவில்லை. அப்போதுதான் பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ராணுவம் முன்னேறி வந்தபோது பெண்கள், வயதானவர்கள், உள்ளிட்டோர் போராட்டக்காரர்களில் இருந்தார்கள் அனைவருமே கோட்டா கோ கம என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி விரட்டிச் செல்லப்பட்டார்கள்.

அந்தத் தருணத்திலேயே ஜனாதிபதி செயலகத்துக்கு வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாகவே ராணுவத்தின் உதவியுடன் தான் பணியாற்றப்போகும் அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62247418

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான டிலான் சேனநாயக்கா தெரிவித்த கருத்துக்களை  தென்பகுதியில் பலர் வரவேற்று பதிவிட்டு வருகிறார்களாம்.  இது .....! இதுக்குதான் இந்த போராட்டம் நீண்டு செல்கிறது. தமிழரின் போராட்டம் எவ்வளவு நிஞாயமானது, அது எவ்வாறு சித்திரிக்கப்பட்டது, எவ்வாறு கொடிய முறையில் அடக்கப்பட்டது, சர்வதேசத்துக்கும், தென்னிலங்கைக்கும் விளக்கப்பட்டது  என்பதை அனைவரும் அரியணும், அந்தப்போராட்டத்தை ஏற்கணும், நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கணும், கதாநாயகர்கள் தண்டிக்கப்படணும். அதுவரை போராட்டம் தொடரும்! தொடரணும். இப்போ பல முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகளுக்கு கிலி பிடிக்கும். இனி மேல் எதைவைத்து ஆட்சியை பிடிக்கப்போகிறோமென்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் போராட்டமே ஆரம்பிக்குது, இதில அடக்கினா சரி, இல்லைன்னா அடக்கமுடியாத அளவு வீறு கொள்ளும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.