Jump to content

நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தனது சிறப்பான திறமையைக் காட்டி நீண்டகாலமாக நம்மைக் கவர்ந்து வருகிறார். அதைப் போலவே இந்த முறையும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். இந்தப் போட்டிகளில், தங்கத்தின் மீது தனது கவனத்தைக் குவித்திருந்த அவர், வியாழக்கிழமை அன்று 88.39மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததோடு, இப்போது வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அமெரிக்காவின் ஒரேகானிலுள்ள யூஜீனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஈட்டியெறிதல் பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் இருவருமே தகுதிச்சுற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.

இந்தியாவின் 20 ஆண்டுக்கால ஏக்கம்

இருபது ஆண்டுக்காலமாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் ஏக்கத்தைத் தீர்க்கும் வாய்ப்பு இந்த முறை கிட்டியது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன்பு இந்தியா சார்பாக 2003-ஆம் ஆண்டில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே பதக்கம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த போட்டிகளின்போது அவர் வெண்கல பதக்கத்தை வென்றார்.

 

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா இருபது ஆண்டுகளாக இந்தியாவுக்கு இருக்கும் ஏக்கத்தைத் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தகுதிச் சுற்றில் 83.50 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தகுதி பெற்றார்.

அதேவேளையில், குறிப்பிட்ட இலக்கை எட்டாமல் 80.42 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஈட்டியை எறிந்திருந்தாலும் கூட, சிறந்த தரவரிசையின் அடிப்படையில் 11வது இடத்தைப் பெற்று அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் ஈட்டியெறிந்தார். இந்த முறை தகுதிச் சுற்றிலேயே 88.39 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார்.

ஆனால், ரோஹித் யாதவின் தனிப்பட்ட சிறப்பான தூரமே 82.54 மீட்டர் தான். ஆகவே அமெரிக்காவில் நடக்கின்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ரோஹித் யாதவை விட நீரஜ் சோப்ராவுக்கு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு பிறகு, பாவோ நுர்மி போட்டிகள் (89.30மீட்டர்), குவோர்டானே போட்டிகள் (86.69மீட்டர்), டைமண்ட் லீக் (89.94மீட்டர்) ஆகிய மூன்று தொடரிலுமே நீரஜ் சிறப்பாகச் செயல்பட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அமெரிக்காவில் நடக்கும் தொடர் தொடங்குவதற்கும் முன்னமே அவருடைய தேசியளவிலான ரெக்கார்டுகளை அவரே முறியடித்தார். குறிப்பாக 89.94 மீட்டர் என்பது அவருடைய தனிப்பட்ட சிறப்பான தொலைவாகப் பதிவானது.

போட்டி எப்படி நடந்தது?

இறுதிச்சுற்றில் 6 வாய்ப்புகள் ஒரு வீரருக்கு வழங்கப்பட்டன. முதல் மூன்று வாய்ப்புகளின் இறுதியில் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அடுத்த மூன்று வாய்ப்புகள், முதல் 8 இடங்களில் இருப்போருக்குத்தான் வழங்கப்பட்டன. வழக்கமாக முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே தனது சிறப்பான திறனை நீரஜ் வெளிப்படுத்துவார். ஆனால், இந்த முறை அவர் முதல் மூன்று வாய்ப்புகளில், முதல் வாய்ப்பு ஃபவுலாகவே, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் நீரஜ், 82.39 மீட்டர், 86.37 மீட்டர் என்ற வகையிலேயே தனது ஈட்டியை எறிந்தார்.

தகுதிச் சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின் தகுதிச்சுற்றைப் போல முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இறுதிப்போட்டியின் முதல் மூன்று வாய்ப்புகளில் அவர் எட்டிய தொலைவு பதக்கத்திற்கான வாய்ப்பையும் தொலைவுக்குக் கொண்டு சென்றதைப் போன்ற தோற்றம் உருவானது.

ஆனால், ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.

 

ஆண்டர்சன் பீட்டர்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார்

அதைத் தொடர்ந்து, மூன்று சுற்றுகளின் இறுதியில் வேளியேற்றம் முடிந்த பிறகு, இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டும் வண்ணமாக, தனது நான்காவது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார்.

வெளியேற்றப்பட்ட ரோஹித் யாதவ்

முதல் மூன்று வாய்ப்புகளைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தில், ரோஹித் யாதவ் 10வது இடத்திலும் இருந்தனர்.

அதற்குப் பிறகு நான்காவது வாய்ப்பின் இறுதியில் முதல் 8 இடங்களில் ஆண்டர்சன் பீட்டர்ஸ், நீரஜ் சோப்ரா, யகோப் வாட்லேஜ், ஜூலியன் வீபர், அர்ஷாத் நதீம், லாஸி எடல்டாலோ, ஆண்ட்ரியன் மார்டேர், ஆலிவர் ஹெலாண்டர் ஆகியோர் இருந்தனர்.

 

உலக தடகள சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,WORLDATHLETICS.ORG

சவாலான சக போட்டியாளர்கள்

இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டியெறிந்தபோது 82.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். மூன்றாவது சுற்றில் 86.37 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார்.

இறுதிச்சுற்றில் ஈட்டியெறிந்த போட்டியாளர்களில் நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ், தொடக்கத்திலேயே 90.21 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.

 

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆண்டர்சன், 2019-ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 86.69 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தங்கம் வென்றவர். இந்த சீசனில் மூன்று முறை 90 மீட்டருக்கும் மேல் ஈட்டியெறிந்துள்ளார். செக் குடியரசை சேர்ந்த யாகோப் வாட்லேஜ், முதல் முறை ஈட்டியெறிந்தபோது 85.52 மீட்டரில் தொடங்கியவர், மூன்றாவது முறையில் 88 மீட்டருக்கும் மேலாக ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ராவை விட முன்னிலையில் இருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜுக்கு அருகில் வெள்ளிப் பதக்கத்தோடு நின்ற இவர், இந்த சீசனில் 90.88 மீட்டர் வரை ஈட்டியை எறிந்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வீபரும் தொடக்கத்திலேயே 86.86 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தார்.

இப்படியாக, ஆண்டர்சன், வீபர், வாட்லேஜ் ஆகியோர் முதல் மூன்று வாய்ப்புகளிலேயே நீரஜ் சோப்ராவுக்கு பெரும் சவால் விடுத்தனர். ஆனால் அந்த சவால்களை நான்காவது வாய்ப்பில் கடந்து வந்த நீரஜ், வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், 87.58 மீட்டரே தங்கப் பதக்கம் வெல்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அதைவிட மிகவும் கடினமானது. ஆகையால், டைமண்ட் லீகில் 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியெறிந்த சோப்ரா, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் அதைத் தக்க வைத்தாக வேண்டியிருந்தது. ஆனால், அவருடைய ஐந்தாவது வாய்ப்பு ஃபவுலானது.

 

நீரஜ் சோப்ரா, ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நீரஜ் சோப்ரா, ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார்

இருப்பினும், ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற பதக்கம்

இறுதிச் சுற்றின் 6 வாய்ப்புகளும் முடிந்தபோது, ஆண்டர்சன் தங்கப் பதக்கத்தையும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் யாகோப் வாட்லேஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற தனிப்பட்ட இந்திய வீரராக முன்பு வரை இருந்த அபினவ் பிந்த்ரா, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, "தேசத்தின் கனவை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது," என்று பாராட்டினார்.

இந்தமுறையும், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியர்களின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா பூர்த்தி செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-62281562

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.