Jump to content

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

Recommended Posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல. அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எ

goshan_che

இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை. மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது. மேற்குலகில் பல முஸ்லீம்கள்

நீர்வேலியான்

சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 👏

உக்ரைன் ஜனாதிபதி, செலென்ஸ்கி.. 
வாழ்த்து தெரிவிக்காததை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். 😡
உக்ரைனுக்கு  தேயிலை ஏற்றுமதி செய்வதை, ஸ்ரீலங்கா நிறுத்த வேண்டும். 😎
உக்ரைன்காரன்... தேத்தண்ணி குடிக்காமல் இருந்தால் தான், புத்தி வரும். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் எல்லாம் கோரஸா பாடுங்கோ!

புட்டின் சரணம் கச்சாமி…

செலன்ஸ்கி வீட்டில ரெட் ஆமி….

உடான்ஸா ஒளிப்பு மறைப்பு கூட்டுதாபனம் செய்திகள்:

உக்ரேன் போரில் யாழ்கள பிரிகேட் உயிரை கொடுத்து தமக்காக போராடியதற்கு சன்மானமாக, இலங்கையை உடனடியாக பிரித்து தமிழ் ஈழத்தை உருவாக்குமாறு புட்டின் ரணில் ராஜபக்சவுக்கு உத்தரவு.

உருவாக போகும் நாட்டின் எல்லை பாதுகாப்பை, நிர்வாகத்தை பொறுப்பெடுக்க  “பேப் பெக்கோ பெஸ்கி” என்ற ரஸ்ய விமானம்தாங்கி கப்பல் ரஸ்ய வீரர்கள், யாழ்கள பிரிகேட்டுடன் இலங்கை விரைகிறது🤣.

Link to comment
Share on other sites

நிழலியானந்தா எலிபரப்புச் சேவையின் காலை செய்தி:

மேற்கை ஆதரித்து, உக்ரைன் போரில் ரஸ்யாவை எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக தட்டச்சில் போரை நிகழத்தியதற்காக மேற்கு ரணிலுக்கு தொலைபேசி எடுத்து உடனடியாக வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகமாக அங்கீகரித்து சுய நிர்ணய உரிமையுள்ள தீர்வை கொடுக்குமாறு உத்தரவு!

டொட்டடாங்க்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன அமெரிக்கா இலங்கையின் கடனை அடைக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 

அவர் தனித்து விடப்படுள்ளார், இவர் தனித்து ஆட்சியை கைப்பற்றியுளார். வாழ்த்து தெரிவித்து ஆதரவை பரிமாறிக்கொள்ளட்டுமேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 👏

மாண்புமிகு புட்டின் ஏழைகளின் நண்பன்.மேற்குலகு போல் தம்பட்டமடிக்காமல் ஆபிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சத்தை நிவர்த்தி செய்து கொண்டிருப்பவர்.

11 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி, செலென்ஸ்கி.. 
வாழ்த்து தெரிவிக்காததை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிறிலங்கா பிரச்சனைக்கு புட்டின் தான் காரணம் என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த மகா அறிவாளி எல்லோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மாண்புமிகு புட்டின் ஏழைகளின் நண்பன்.மேற்குலகு போல் தம்பட்டமடிக்காமல் ஆபிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சத்தை நிவர்த்தி செய்து கொண்டிருப்பவர்.

சிறிலங்கா பிரச்சனைக்கு புட்டின் தான் காரணம் என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த மகா அறிவாளி எல்லோ 🤣

ஆனால் பாருங்கோ! நம்ம இனவாதிகள் இனவழிப்பின் போது  சொன்ன காரணங்களும்,  போர் செய்த முறைகளும், ஏற்படுத்திய அழிவுகளும்  புடீன் உக்கிரேனில் செய்யும் போர், காரண முறைகளோடு ஒத்துப்போகின்றன. நீ  உன் நண்பனைக்காட்டு எனக்கு , நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்றொரு பழமொழி உண்டு. சரிதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மேற்கை ஆதரித்து, உக்ரைன் போரில் ரஸ்யாவை எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக தட்டச்சில் போரை நிகழத்தியதற்காக

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

மேற்கு நாடுகளில் வாழ்ந்தால் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமா?
சிறிலங்காவுக்கு ஆயுதமும், இராணுவ ஆலோசனைகளும் வழங்கிய நாடுகள் இந்த மேற்கு நாடுகள்.புலிகளை பயங்கரவாதிகளாக்கியதும் இவர்களே. 12 வருடத்தில் எல்லாம் மறந்து விட்டதா? அல்லது நடிக்கிறீர்களா?

13 hours ago, goshan_che said:

அண்ணைமார் எல்லாம் கோரஸா பாடுங்கோ!

புட்டின் சரணம் கச்சாமி…

செலன்ஸ்கி வீட்டில ரெட் ஆமி….

உடான்ஸா ஒளிப்பு மறைப்பு கூட்டுதாபனம் செய்திகள்:

உக்ரேன் போரில் யாழ்கள பிரிகேட் உயிரை கொடுத்து தமக்காக போராடியதற்கு சன்மானமாக, இலங்கையை உடனடியாக பிரித்து தமிழ் ஈழத்தை உருவாக்குமாறு புட்டின் ரணில் ராஜபக்சவுக்கு உத்தரவு.

உருவாக போகும் நாட்டின் எல்லை பாதுகாப்பை, நிர்வாகத்தை பொறுப்பெடுக்க  “பேப் பெக்கோ பெஸ்கி” என்ற ரஸ்ய விமானம்தாங்கி கப்பல் ரஸ்ய வீரர்கள், யாழ்கள பிரிகேட்டுடன் இலங்கை விரைகிறது🤣.

நேட்டோ சரணம் கச்சாமி
வின்ரருக்கு  எணணை கச்சாமி
வின்ரருக்கு காஸ் கச்சாமி

பைடனுக்கு வேல் வேல்
பொறிசுக்கு வேல் வேல்
மக்ரோனுக்கு வேல் வேல்
செலன்ஸ்கிக்கு அரோகரா  என்றும் பாடலாம்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

நேட்டோ சரணம் கச்சாமி
வின்ரருக்கு  எணணை கச்சாமி
வின்ரருக்கு காஸ் கச்சாமி

பைடனுக்கு வேல் வேல்
பொறிசுக்கு வேல் வேல்
மக்ரோனுக்கு வேல் வேல்
செலன்ஸ்கிக்கு அரோகரா  என்றும் பாடலாம்.🤣

செலன்ஸ்கிக்கு…. கோவிந்தா, கோவிந்தா…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

செலன்ஸ்கிக்கு…. கோவிந்தா, கோவிந்தா…. 🤣

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ இவருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ இவருக்கு?

President responsible for attacks on protestors: Sumanthiran - YouTube

வழக்கமாக, எல்லாவற்றுக்கும் முதலில்... வாழ்த்து தெரிவிப்பவர், 
இந்த முறை... தேர்தலுக்கு முதல் நாள், 
இந்திய  தூதரகத்தில் இருந்து வந்த தொலை பேசி அழைப்பை...
ஏபிரகாம் சுமந்திரன் சேர்,  கூட்டத்தில் நின்ற எல்லோருக்கும்... மைக்கில் போட்டுக் காட்ட 
இந்தியா...  அப்செட்  ஆகீட்டுது.  அதாலை... ரணிலுக்கு, நோ வாழ்த்து. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய  தூதரகத்தில் இருந்து வந்த தொலை பேசி அழைப்பை...
ஏபிரகாம் சுமந்திரன் சேர்,  கூட்டத்தில் நின்ற எல்லோருக்கும்... மைக்கில் போட்டுக் காட்ட 

அப்படி என்னதான் பேசியிருப்பார்? இவர் பெரிய கொல்லிமலை இரகசியக்காரன் என்றுதானே வெளிநாட்டுத் தூதுவர்கள் தனியே அழைத்து பேசினர். அதற்கிடையில் என்ன நடந்தது இவருக்கு? ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரா ஏதும் சொன்னாரோ? ஆனால் அமெரிக்காதான் ரணிலை கொண்டுவந்தது என்றும் தாங்கள் இந்தியாவின் சொல்லுக்கிணங்க ரணிலுக்கு கூட்டாக வாக்களிக்கவில்லை என்றும் சொல்கிறார். ஒருவேளை ஏதும் மாறாட்டம் வந்திருக்குமோ?  என்னதான் நடக்குது நம்ம நாட்டில ஒன்றும் புரியல? 

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ 

ஓம் இன்று வாழ்த்து சொல்லியுள்ளார் நரேந்திரமோடி.

Link to comment
Share on other sites

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

உடான்ஸ் சாமியாருக்கு நிழலியானந்தா எழுதிய பதிலை அவர் புரிந்து இருப்பார். மேற்கை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன, தமிழர்களுக்கு அதில் எந்த பிரதிபலனோ அல்லது அனுகூலங்களோ அறவே இல்லை என்பதைத் தான் சுவாமி நிழலியானந்தாஜி சொல்ல வந்தார்.

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம், முக்கியமாக அமெரிக்காவின் முக்கிய பங்காற்றும் நேட்டோவை ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டை வேடம் மீண்டும் ஒரு முறை, கடல் தாண்டி, எல்லை தாண்டி, இன்னொரு தேசத்தில் வைத்து பத்திரிகையாளரை படுகொலை செய்ய உத்தரவு இட்ட, யேமனில் தினமும் பலரை கொன்று குவிக்கின்ற சவூதியின் இளவரசரை சந்தித்து கைலாகு (அல்லது கை முட்டி லாகு) கொடுத்ததன் மூலம் அம்பலமாகியது. 

தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஓம் இன்று வாழ்த்து சொல்லியுள்ளார் நரேந்திரமோடி.

முடிவு அறிவிக்க முதலே வெடி கொழுத்துகிறவர், இப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தாரோ? இவரின் பாராமுகம் கண்டுதான்  ஐயாவும் சீனப்பக்கம் திரும்பியிருப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

உடான்ஸ் சாமியாருக்கு நிழலியானந்தா எழுதிய பதிலை அவர் புரிந்து இருப்பார். மேற்கை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன, தமிழர்களுக்கு அதில் எந்த பிரதிபலனோ அல்லது அனுகூலங்களோ அறவே இல்லை என்பதைத் தான் சுவாமி நிழலியானந்தாஜி சொல்ல வந்தார்.

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம், முக்கியமாக அமெரிக்காவின் முக்கிய பங்காற்றும் நேட்டோவை ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டை வேடம் மீண்டும் ஒரு முறை, கடல் தாண்டி, எல்லை தாண்டி, இன்னொரு தேசத்தில் வைத்து பத்திரிகையாளரை படுகொலை செய்ய உத்தரவு இட்ட, யேமனில் தினமும் பலரை கொன்று குவிக்கின்ற சவூதியின் இளவரசரை சந்தித்து கைலாகு (அல்லது கை முட்டி லாகு) கொடுத்ததன் மூலம் அம்பலமாகியது. 

தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல.

அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எமக்கு ஒப்பீட்டளவில் பயன்படகூடிய மேற்கின் பக்கம் நிற்பதே உசிதம் என்பதே உ.சா வின் கருத்து. மேற்கில் எமக்கு சொற்ப வாக்கு பலமாவது உண்டு. எமது மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை விடுத்து, ஒரு போதும் எம்மை தமது தூதரக வளவுக்குள் கூட எடுக்காத ரஸ்யாவுடன் நாமாக ஒருதலைகாதல் செய்வது அபத்தமான வெளிநாட்டு கொள்கை என்பதே உ.சாவின் கருத்து. அதேபோல் 2009 வரை இருபகுதியும் எமக்கு ஆப்பு அடித்தாலும், 2009 இற்கு பின் மேற்கினதும், ரஸ்யாவினதும் நம் சம்பந்தமான அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டையும் உ.சா கருத்தில் எடுக்கிறார்.

அதே போல் மேற்கினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரஸ்யாவையும், புட்டினையும் நல்லவர்களாக சித்தரிப்பதை, உக்ரேன் மீது நடக்கும் ஆக்கிரமிப்பை மனிதாபிமான போர் என வர்ணிப்பதை உ.சா எதிர்க்கிறார்.

ரஸ்யா பல நூறு வருடங்களாக சிறிய ஐரோப்பிய தேசிய இனங்களை கருவறுத்ததை, அழிக்கப்படும் ஒரு தேசிய இனமான நாமே, தனி மனித வழிபாட்டு உந்தலால், மேற்கின் மீதான வெறுப்பால், வெள்ளை அடிக்க முனைவதை - உ.சா அடியோடு வெறுக்கிறார்.

மேற்கில் நாம் எல்லோரும் அனுபவிக்கும் ஒப்பீட்டளவு பொருளாதார மேன்மை, மேற்கு செய்யும் ஊத்தை வேலையின் பலந்தான் என்பதால் -குறைந்த பட்சம் நாமும் அந்த ஊத்தையின் ஒரு அங்கமே என்பதையாவது ஏற்க வேண்டும் என உ.சா விரும்புகிறார். மாறாக மேற்கின் ஊத்தை வேலைகளால் விளைந்த நன்மையை அனுபவித்த படியே, அதே ஊத்தை வேலையையை கண்டிப்பதாக பாவ்லா காட்டும் “வெள்ளைவேட்டி” தனத்தையே உ.சா சாடுகிறார்.

அதே போல் மேற்கில் பெரும்பாலும் முதலாம் தலைமுறை குடியேறியாக இருக்கும் நாமே பொதுவெளியில் மேற்கை விமர்சிக்கும் ஒப்பீட்டளவு பேச்சு சுதந்திர்ந்தை, ஜனநாயகத்தை பாவித்து, உலகின் மிக அடக்குமுறை உள்ள ஒரு மாபியா ஸ்டேட்டை - அதுவும் ஜனநாயக நாடுதான் என சீரியஸாக காமெடி பண்ணுவதையும் உ.சா கண்டிக்கிறார்.

பிகு:

உ.சா நேற்று முதல் ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறையை கழி(ளி)ப்பதால் - எல்லோரினதும் கருத்துகளுக்கும் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.

Edited by goshan_che
  • Like 5
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி உ.சா என்று வருவது வாசிக்கும் போது வேறு மாதிரி இருக்குது.😄ஆனால் பச்சை அதுக்கல்ல கருத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது

மேற்குலகில் வாழ்ந்து கொண்டு மேற்கை எதிப்பவர்கள் அந்த நாடுகள் செய்த தவறுக்காக ஒன்றும் எதிர்கவில்லை. ரஷ்யாவை பற்றிய பொய்களால் ஏற்பட்ட மோட்டுதனமான நம்பிக்கை அதனால் புரினை  போற்றி துதிபாடுவது, உக்கிரேனை ஆக்கிரமித்ததை ரஷ்ய அட்டூழியங்களை நியாயபடுத்துதல் தாங்கள் பாதுகாப்பாக வாழ்கின்ற நாட்டையே தூற்றுவது எல்லாம். ரஷ்யாவை பற்றிய அவர்களின் மோட்டுதனமான நம்பிக்கை, பிரசாரம் முழுபொய் என்பது அவர்களுக்கே தெரியும். தப்பி தவறியும் அவர்கள் ரஷ்யாவுக்கு சென்று குடியேறமாட்டார்கள்.புத்திசாலிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

அவையள் அப்பிடித்தான் கதைப்பினம். நாங்கள் எங்கடை அரசியல்வாதிகளை குறை,தவறுகளை சொல்லேக்கை......அப்ப நீங்கள் வந்து செய்து காட்டுங்கோ எண்டுற மாதிரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை.

மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது.

மேற்குலகில் பல முஸ்லீம்கள் ஆசியா, ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறியுள்ளார்கள். அவர்கள் அப்படி இங்கே வர காரணம் இங்கே உள்ள பொருளாதார மேன்மை. அந்த மேன்மை மந்திரத்தால் விளையவில்லை. மேற்கின் ஒப்பீட்டலாவில் மேலான ஜனநாயக, பொருளாதார, கட்டமைபுக்களே இதை உருவாக்கின.

இந்த தனிமனித, பொருளீட்டும், லாபம் பார்க்கும் மேற்கின் அரசியல், கலாச்சார, பொருளாதார மேன்மையை அதன் பலன்களை அனுபவித்த படியே - மேற்கில் ஷ்ரியா சட்டம் வேண்டும் என கேட்பார்கள். ஆப்கானில், ஈரானில், சவுதியில் நடக்கும் இஸ்லாமிய 10ம் நூற்றாண்டு ஆட்சி மேற்கை விட திறம் என்பார்கள். ஆனால் செத்தாலும் இந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல அதை விட நெகிழ்வான மலேசியா, இந்தோனேசியா வில் கூட போய் வாழமாட்டார்கள்.

இதைதான் ரஸ்யா விடயத்தில் அண்ணைமார் செய்கிறார்கள்.

எந்த நாட்டையும் எங்கும் இருந்தும் ஆதரிக்கலாம். ஆனால் ஒரு மோசமான, சுரண்டல் மிகுந்த சர்வாதிகார systemதை நல்லது என்று, அந்த நாட்டிலே வாழாமல், கொலிடே போய் கூட பார்க்காமல், அதைவிட ஒப்பீட்டளவில் சகல சுதந்திரங்களும் உள்ள சிஸ்டத்தில் இருந்து விமர்சிப்பதுதான் விமர்சிக்கபடுகிறது.

தவிரவும் நாம் எல்லோரும் மேற்க்கை தேர்ந்து வந்தவர்கள். இப்போ மேற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பலர் மொஸ்கோவில் வந்திறங்கி - ரொமேனியா போடரை நடந்து கடந்து ஈயுவிக்குள் உள்ளிட்டவர்கள். அல்லது இன்னொரு ஈயு அல்லாத நாட்டின் மூலம் அல்லது கிழக்கு ஜேர்மனி மூலம் மேற்கு ஐரோப்பா வந்தவர்கள்.

ஆகவே ஊரில் இருந்து கிளம்பும் போதே, ரஸ்யாவை, கியூபாவை, தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பு, இப்போ இதே நாடுகளுக்கு போக கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ள போது, அந்த மேன்மையான நாட்டை விட்டு ஏன் இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே.

எனது அப்பா கொள்ளைகாரன், அவரை நான் கண்டிகிறேன் என்று சொன்ன படி, அவர் கொள்ளை அடித்து சேர்த்த சொத்தை அனுபவிக்கும் மகன் போல - ஒரு போலித்தனம் இது.

மேற்கின் பிழைகளை யாரும் விமர்சிக்கலாம், ரஞ்சித், விசுகு அண்ணை, நான் என இங்கே மாறாக கதைப்பவர்கள் பலரும் மேற்கை கடுமையாக சாடுபவர்கள்தான் -

ஆனால் இங்கே விமர்சனத்குக்கு உள்ளாவது, மேலே சொல்லபட்ட போலி தார்மீக குமுறலும் (fake moral indignation), புட்டின் மீதானா ஒரு தலைக்காதல், நாயக வணக்கமும், வரலாற்றில் ஐரோப்பிய சிறுபான்மை தேசிய இனங்களுக்கு ரஸ்யா செய்த, செய்கிற கருவறுப்பை வெள்ளை அடிக்கும் செயல்களுமே.

Edited by goshan_che
  • Like 3
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.