Jump to content

மியன்மாரில்... நான்கு அரசியல் கைதிகளுக்கு, மரண தண்டனை நிறைவேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை தூக்கிலிட்டது மியான்மார்

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை... தூக்கிலிட்டது மியான்மார்.

பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர்.

பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1292285

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் நான்கு அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

மியன்மாரில்... நான்கு அரசியல் கைதிகளுக்கு, மரண தண்டனை நிறைவேற்றம்!

மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில் உள்ள இராணுவத்தினர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த மரணத் தண்டனையை ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியோ ஸெயா தா, ஜனநாயக செயற்பாட்டாளர் கியாவ் மின் யு, ஹியா மயோ ஆங், ஆங் துரா ஜா ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது, கொரில்லா தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் இவர்கள் மீது இருந்தன என்று அரச பத்திரிகையான ‘மிரர் டெய்லி’யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை இராணுவ அரசாங்கமும் உறுதிப்படுத்தியது. ஆனால், இவர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் என்கிற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இவர்கள் 4 பேருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருந்தன. ஆசியான் அமைப்புக்கு தற்போதைய தலைவர் என்கிற முறையில் கம்போடியாவும் வலியுறுத்தியிருந்தது. ஆனால், அரசியல் கைதிகள் 4 நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மார் நாட்டுச் சட்டப்படி மரண தண்டனைக்கு அரசின் தலைவர் ஒப்புதல் அளிப்பது அவசியம். இதற்கு முன்னதாக 1976இல் மாணவர் தலைவர் சலாய் டின் மௌங், அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குடும்பத்தினரும் தகவல் அறிந்து சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது. குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மியன்மார் இராணுவத்தை அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

https://athavannews.com/2022/1292374

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to மியன்மாரில்... நான்கு அரசியல் கைதிகளுக்கு, மரண தண்டனை நிறைவேற்றம்!
  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 05:50, தமிழ் சிறி said:

மியன்மாரில்... நான்கு அரசியல் கைதிகளுக்கு, மரண தண்டனை நிறைவேற்றம்!

சனநாயச் செயற்பாடுகளை உயிர்ப்பலி மூலம் ஒடுக்கும் உலகப் பயங்கரவாத அரசுகள் பொதுவாகச் சூட்டும் 'பயங்கரவாதம்' என்று பொய்மொழி இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஸ்யாவில் தொடங்கி மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவரை வியாபித்து நிற்கிறது. பொருண்மிய நலன்களின் மீதான அரசியல் அப்பாவி மக்களையும் சனநாயக மற்றும் குமூகச் செயற்பாட்டாளர்களைப் பலியெடுத்து வருகிறது. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.