Jump to content

குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு: ரிஷி சுனக் முன்னிலை!

குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி!

பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார்.

இது குறித்து ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழிலுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ‘எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன்.

அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி ஒன்றியம் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்’ என கூறினார்.

மேலும், ருவாண்டா திட்டத்தை தரையில் இருந்து இயக்குவதற்கு எதுவேண்டுமானாலும் செய்வேன் என்று சுனக் கூறினார். மேலும் பிற நாடுகளுடன் மேலும் குடியேற்ற கூட்டாண்மைகளை தொடரவுள்ளதாக தெரிவித்தார்.

குடியேற்றம் குறித்த 10-புள்ளி திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கையை வரம்பிடுவதாகவும், தஞ்சம் கோர தகுதியுடையவர்கள் யார் என்ற வரையறையை கடுமையாக்குவதாகவும், கோரிக்கைகள் மறுக்கப்பட்டவர்களை திரும்பப் பெற மறுத்த நாடுகளின் உதவித் தொகையை நிறுத்துவதாகவும் சுனக் கூறினார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் இறுதி இரு வேட்பாளர்களான, லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் இருவரும் ருவாண்டாவிற்கு நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தனர். இந்த திட்டம் இது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு கடந்த மாதம் முடங்கியது.

இவர்களில் யார் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டாலும், எதிர்வரும் மாதங்களில் சட்டவிரோத இடம்பெயர்வுகளை பிரித்தானியா மேலும் ஒடுக்கும்.

இதுவரையிலான பிரச்சாரத்தில் இரு வேட்பாளர்களும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ருவாண்டா புகலிடத் திட்டத்திற்கு மீண்டும் உறுதியளித்தனர். புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் நீதிமன்றங்களால் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்டால் பிரித்தானியா தற்போது ருவாண்டாவிற்கு செலுத்திய 120 மில்லியன் பவுண்டுகளை இழக்க நேரிடும்.

https://athavannews.com/2022/1292229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி!

டொனால்ட் ரம்பும் இப்பிடித்தான் சொல்லி ஆட்சியை பிடிச்சவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இவர் சொன்னா இவர் இங்க வந்த வளியை நினைச்சும் குடியேற்றவாதிகளை வச்சே குடியேறிகள் கண்ணை குத்துவதையும் நினைச்சு வெள்ளையள் வாயையும் சூவையும் மூடிசிரிப்பானுவள்.. (ப்ரீதி பட்டேலையும் நினைச்சுத்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதை இவர் சொன்னா இவர் இங்க வந்த வளியை நினைச்சும் குடியேற்றவாதிகளை வச்சே குடியேறிகள் கண்ணை குத்துவதையும் நினைச்சு வெள்ளையள் வாயையும் சூவையும் மூடிசிரிப்பானுவள்.. (ப்ரீதி பட்டேலையும் நினைச்சுத்தான்)

இண்டைக்கு லிங்ட்இன்ல ஒரு விளம்பரம்..... ஒரு வடக்கர்.... போட்டிருக்கிறார்..... இந்தியர்களே தயாரா? சில வாராங்களில், பிரிட்டிஸ் உயர் தகமை விசா (high skills) கொடுக்கும் கதவு திறக்கிறது...... எம்முடன் பதிவு செய்யுங்கள்.... 🤔

4 hours ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்பும் இப்பிடித்தான் சொல்லி ஆட்சியை பிடிச்சவர்

அது.... வெள்ளை......

இதை ரிசி சொன்னா சிரிப்பார்கள்...... டேய்.... டேய்... கதை விடாதடா.....

ஏற்கனவே.... நேற்று நடந்த விவாதத்தில்.... பெண்ணை மதிக்காமல், அடிக்கடி இடைமறித்து ஆண் மேலாண்மை காட்டியதாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள்..

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் பிரச்சனையை உண்டாக்கி மக்களை அகதிகளாக்கி, அவர்கள் வாழ்விடங்களை  அழித்தொழித்துவிட்டு, இப்போது குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கப்போவதாக கூறுவது  சுத்த அயோக்கியத்தனம் அல்லது சுத்த மொள்ளமாரித்தனம் அன்றி வேறில்லை. 

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அது.... வெள்ளை......

இதை ரிசி சொன்னா சிரிப்பார்கள்...... டேய்.... டேய்... கதை விடாதடா.....

ஏற்கனவே.... நேற்று நடந்த விவாதத்தில்.... பெண்ணை மதிக்காமல், அடிக்கடி இடைமறித்து ஆண் மேலாண்மை காட்டியதாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள்..

வெள்ளை டொனால்ட் ரம்ப்க்கும் பூர்வீக குடி சிவப்பு இந்தியனை வைச்சு காமெடி பண்ணியிருந்தார்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 13:01, பாலபத்ர ஓணாண்டி said:

இதை இவர் சொன்னா இவர் இங்க வந்த வளியை நினைச்சும் குடியேற்றவாதிகளை வச்சே குடியேறிகள் கண்ணை குத்துவதையும் நினைச்சு வெள்ளையள் வாயையும் சூவையும் மூடிசிரிப்பானுவள்.. (ப்ரீதி பட்டேலையும் நினைச்சுத்தான்)

வெள்ளையனே வெளியேறு எண்டு சொல்லிப்போட்டு அவனுக்கு பின்னாலையே ஓடி வந்த ஆக்கள் தானே.....🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.