Jump to content

காத்திருப்பு கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு

உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.

உனது குரலில் அன்பை அனுபவிக்க

ஏங்கித் தவிக்கிறது மனம்.

பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும்

நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம்.

கால நீட்சியில் உனது கோலத்தில்

எழில் கூடியிருக்கும் என்று

நினைக்கிறேன்

இத்தனை காலப் பிரிவினால் நீயும்

என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம்.

நேரில் பேச வேண்டிய செய்திகளை

சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை

மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை

எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள்

வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும்

தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு.

பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய்

உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும்

உனது கனிவான பார்வையே போதும்

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க

உன்னைப் பற்றிய கனவுகளில் வாழ்வதால்

வாழ்க்கையை இனிமை நிறைந்ததாய் உணர்கிறேன்.

நானும், உனக்கான எனது கவிதையும்

வழமை போலவே காத்துக் கொண்டிருப்போம்

எங்களத காத்திருப்பு ஒருபோதும் முடிவடையாது

ஏனெனில்,

நீ இல்லாமல் போய்விட்ட செய்தியும்

உன்னைப் போலவே இரகசியமானது

என்பதுடன் பெறுமதியும் வாய்த்தது.

- சூரியநிலா

http://www.keetru.com/punnagai/jul07/ezham.php

Link to comment
Share on other sites

நீ இல்லாமல் போய்விட்ட செய்தியும்

உன்னைப் போலவே இரகசியமானது

என்பதுடன் பெறுமதியும் வாய்த்தது.

நல்ல ஒரு கவிதை இணைப்பிற்கு நன்றி கிருபண்ஸ் அண்ணா அதிலும் இந்த வரிகள் அருமை.............. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு…

காத்திருக்கின்றேன் இன்றளவும்

காத்திருக்கின்றேன்…

காத்திருப்பின் வேதனைகள்

அறிந்தபோதும்…

காத்திருப்பின் வேதனைகள்

காலங்காலமாய் பெண்களுக்கென்பது

காலம் எழுதிவிட்ட கோலமா?!…

சிறுபிள்ளை பருவத்தில் விளையாட

துணை வேண்டுமென்று

உடன்பிறப்புக்களுக்காக காத்திருப்பு…

வாலிப பருவத்தில் பாதுகாப்பாய்

வழித்துணைக்கு அம்மா அக்காள்

வரவிற்காய் காத்திருப்பு…

காதலுற்ற பருவத்தில்

காதலனின் வரவுநோக்கி

கணம்கணமாய் காத்திருப்பு…

மணம் கொண்ட பின்னே

மன்னவனின் வரவிற்காய்

வாயிற்படியிலேயே காத்திருப்பு…

வயிற்றில் சூல்கொண்ட பின்னர்

சிசுவை பெற்றெடுக்க தவமாய்

பத்துமாதம் காத்திருப்பு…

பள்ளி சென்ற பிள்ளை

படித்து திரும்பும் வரை

பாசமோடு காத்திருப்பு…

வளர்ந்த மகள் வெளிசென்றால்

வரும்வரையில் அக்கினிமேல்

தவம்போல் காத்திருப்பு…

காத்திருப்புக்கள் ஏனோ…

கரையற்ற கடல்போல்தான்

கண்முன்னே விரிகின்றது…

காத்திருப்பின் வேதனைகள் புரிந்தாலும்

என் காத்திருப்புக்களும்…

எனக்காக காத்திருப்புக்கள்

நிகழாத என்ற ஏக்கமும்

அதனதன் வழியில்

தொடரத்தான் செய்கின்றது….

http://kalaiarasan.wordpress.com/2007/05/2...am-196-waiting/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு .....

பச்சையிலை கழற்றி

பழுத்த உருவெடுத்து

பிரியாவிடை கொடுக்கும்

பனிகால முன்மாதக் காற்றுக்கு

உயிர் அழித்து.....

பனி சொரியும் வான் பார்த்து

உறவினாய் இருந்த - உம்

பலமிழந்து நாங்களிங்கு தனியனாக.....

வசந்தத் துளிர்வின்

வைகாசி வரும் நாளை

விழியுடைத்து நீர் வார்த்து

இப்பனியுறையும் தேசத்து வீதிகளில் ,

காடுகளில் காத்திருப்பு நீண்டபடி......

http://uyirvaasam.blogspot.com/2006/04/blog-post_16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு!

உனக்காய் காத்திருந்து நிலவுகூட

பகலில் வந்து விட்டது பகல் நிலவாய்

இன்னும் நீதான் வரவில்லை

காக்க வைப்பதில் உனக்கு

அவ்வளவு சுகமா அதைவிட

சுகம் உனக்காய் காத்திருப்பதில்

உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்

நீ வரும் பாதைகூட உன்னை போல்

அழகாக வெக்கப்படுகிறது

உனக்காய் காத்திருந்து இறந்துபோக

ஆசைதான் உனக்காக கவிதைகள்

பிறக்காமல் போகுமென்றால்

உனக்காய் காத்திருந்து நான்

வாடிப் போகவில்லை

என் கவிதைகளுக்குத்தான்

தாடி முளைக்கிறது

நீ தாமதமாய் வரும்வரை எப்படி

சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை

ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது

என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக

தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே

என் பேனா ஒரே நாளிளே இறந்து போய்விடும்

உன்னைக் கண்டால்போதும் எனக்குமுன்

ஓடி வரும் என் கவிதைகள் எங்கே

உன்னைக் காணவில்லை இன்னும்

என் பின்னால் என் கவிதைகள்

என் கவிதை கேக்கவே நீ

தாமதமாய் வருவாய்

அதற்காகவே வந்துவிடும்

ஆயிரம் கவிதைகள்

நீ இனி வரவேமாட்டாய் என்று

முடிவெடுத்தபின்தான் தினம் வருவாய்

இன்று முடிவெடுத்தபின்தான்

காத்திருக்கிறேன் வரவே மாட்டாயா

உனக்காய்க் காத்திருக்கும் என் நேரம்

முடிந்துவிட்டது இனியும் காத்திருந்தால்

அது என் கவிதைகளுக்காகத்தான்

-யாழ்_அகத்தியன்

http://yaalakththiyan.wordpress.com/2007/0...ae%aa%e0%af%81/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு

நினைவு தெரிந்த நாளிலிருந்து

என் காத்திருப்புகள்

இப்படித்தான் தொடர்கின்றன

மாலையில் வீடுதிரும்பும்

அம்மா அப்பாவுக்காய்

வேலைச் சுமையில்லா

அப்பாவின்

மாலை நேரங்களுக்காய்

இடுப்பைக் கட்டிக் கொண்டு

கூடவே நடக்க

அம்மாவின் அபூர்வமான

ஓய்வு நேரங்களுக்காய்

சிறகு முளைத்த

தேவதைகளும்

கிழவன் வேடம் போட்ட

இராஜகுமாரர்களும் கொண்ட

ஊரிலிருந்து வந்து

சித்தி சொல்லும்

கனவு விதைக்கும்

கதைகளுக்காய்

அப்பா வாங்கி வரும்

புதுப்புது புத்தகங்களுக்காய்

அம்மா உருட்டிப் போடும்

நெய்யும் சர்க்கரையும்

கரைந்து உள் இறங்கும்

தேவாமிர்த ரவாலட்டின்

ருசிக்காய்

அப்பா உருட்டித்தரும்

நிக்கோடின் மணக்கும்

கடைசிக் கவளத்

தயிர் சாதத்திற்காய்

கோழி

குஞ்சு பொரிக்கப் போகும்

நாளுக்காய்

பண்டிகை நாளில்

புதுத்துணி வாசத்திற்காய்

திரும்பிய பக்கமெல்லாம்

குழாயுள்ள வீட்டிற்காய்

மழை நாளுக்காய்

விடுதியிலிருக்கும் போது

விடுமுறைக்காய்

இதமான தோழமைக்காய்

ஈரமான கவிதைக்காய்

மனம் விட்டுச் சிரிக்க வைக்கும்

நகைச்சுவைக்காய்

நானே அறியாதிருக்கும்

என் காதலின் ஆழத்தை

காதலோடு

கண்டுபிடித்துச் சொல்லும்

மனசில் கவிதையுடைய

மிகைகள் ஏதுமில்லாத

ஓர் இயல்பான காதலனுக்காய்

உயிரின் துளியாய்

உணர்வைக் குழைத்து

அணுஅணுவாய்

நான் வடிக்கும்

என் தாய்மைக்காய்

நான் காத்திருந்தேன்........

காத்திருந்துக் காத்திருந்து

எல்லாமும் தான்

பெற்றுக்கொண்டேன்

ஒன்றைத் தவிர...........

என் உயிர் தீண்டி

என்னின் பிம்பமாய்

என் பிரத்தியேக வாசங்களோடு

என் உணர்வுகளின் உயிர்ப்பாய்

என் கனவுகளில் இருந்து

எனக்கொரு மகள்....

ஏன் தான் பிறக்கவில்லை....

ஒருவேளை

யாருக்கோ பிறந்து

எங்கோ வளர்ந்து

என்னை வந்தடைய

என்னைப் போலவே

அவளும் காத்திருக்கிறாளோ

காலம் கனிய............

என் மகன் தேடி

அழைத்து வருவான்

தன் மனைவியாய்

எனக்கந்த மகளை...

காத்திருப்பேன்

இன்னும் கொஞ்ச காலம்

கனவையும் கனிவையும்

கண்களில் தேக்கி........

- உதயச்செல்வி

http://www.maraththadi.com/article.asp?id=466

Link to comment
Share on other sites

மிக நல்ல கவிதைகளை

இணைக்கும்

கிருபனுக்கு

எனது வாழ்த்துக்கள்.

கீழே உள்ள வரிகள்

மிகமிக அழகானவை

காத்திருப்பேன்

இன்னும் கொஞ்ச காலம்

கனவையும் கனிவையும்

கண்களில் தேக்கி........

நானும்தான் காத்திருக்கிறேன்

எம் தேசத்தின்

சுதந்திரக் காத்தை

சுவாசிக்க...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காத்திருப்பு" எனும் சொல் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தேடியபோது கிடைத்தவைதான் இங்கு பதியப்பட்டுள்ளன. நீங்களும் இதே தலைப்பில் இருக்கும் கவிதைகளைப் பதியுங்கள் (சொந்தமாகவும் இருக்கலாம்)

Link to comment
Share on other sites

"காத்திருப்பு" எனும் சொல் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றா? :( ஆனால், காத்திருப்பு என்ற சொல் எனக்கு எனக்கு பிடிக்கவே பிடிக்காதே! அப்படியானால் நான் இன்னும் கவிஞன் ஆகவில்லையா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காத்திருப்பு" எனும் சொல் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றா? :( ஆனால், காத்திருப்பு என்ற சொல் எனக்கு எனக்கு பிடிக்கவே பிடிக்காதே! அப்படியானால் நான் இன்னும் கவிஞன் ஆகவில்லையா? :(

கனவுலகில் சஞ்சாரித்து காணும் கனவுகள் நனவுகளாகக் காத்திருப்பவர்கள் கவிஞர்கள். காத்திருப்பது பிடிக்காவிட்டால்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு

கருவிழியில் ஒளி ஏந்தி

கண் நிறைந்த காதலுடன்

காலமெல்லாம் வாசல் வர வேண்டுமெனக்

காத்திருப்பேன்.

காலமெல்லாம் கரைந்துருகி

கனவாகிப் போகாமல்

மீள ஒரு பொழுது சுகம் தரவருமெனெ

உடல் தகிக்க

உணர்வூறும் பொழுதுகளில்

கண் மூடித் துயில் கொள்ள

விழைகின்ற என் மனம்

உன் வரவில் உயிர் கொள்ளும்.

கருத்தொன்றிக் காதலுடன்

கனல் மீது நகர்கின்ற பொழுதுகளாய்

காலம் நகர்கிறது

காத்திருப்பு தொடர்கிறது.

-ஔவை-

http://www.noolaham.net/library/books/01/24/24.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவை எண்டு போட்டு இருக்கிது? யாரண்ண எங்கட ஒளவைப்பாட்டியோ முன்னொரு காலத்தில உதை எழுதியது?

மஹாகவி என்று ஒரு கவிஞர் இருந்தார். "மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என்று கவிதை எழுதியவர். அவரின் மகள்தான் ஒளவை.. கவிஞர் சேரனின் சகோதரியும் ஆவார்!

Link to comment
Share on other sites

ஆ அப்படியா? :( தப்பாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்க சாமி! :(

[கவிஞர்மாரை கிண்டல் பண்ணுவதற்கு எனக்கு கொஞ்சம் பயம்... அதான் இப்படி.. ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்பு

கொட்டிக்கொண்டே இருந்தது

இரவு முழுவதும்

நல்ல மழை.

பூத்துகொண்டே இருந்தன

சாலையெங்கும் நீர்ப்பூக்கள்

துளி விழ விழ.

நனையும் குடைகளின் சந்தோஷம்

மனிதன் அறியாதது.

காலையில்தான் கவனித்தேன்

கவிழ்த்து வைத்த என் பானை

நிரம்பவேயில்லை என.

நிமிர்த்தி வைத்தேன்

நேராக அதை.

காத்துக்கொண்டிருக்கிறது பானை

வானம் பார்த்து

அடுத்த மழைக்காக.

நாகூர் ரூமி

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Link to comment
Share on other sites

நான் இரசித்த கவிதை ஒன்று

எப்போதும் காத்திருப்பு!

கருவுற்ற நாள்முதலாய் உருவாகி உலகில்வர

அன்னை உடலுள் காத்திருப்பு

சிசுவாகி சிற்றுடல்புரட்டி தவழ்ந்து தடுமாறி

குறுநடை நடைக்க ஓராண்டு காத்திருப்பு

அம்மா என்றுசொல்லி அழுதுசிரித்து முரண்டுபிடித்து

ஆண்டு ஐந்து பள்ளிக்குக் காத்திருப்பு

அறிவோடு அனுபவமும் குறையாத உடற்பலமும்

நிறைவாக இருபதாண்டு காத்திருப்பு

கைநிறைய ஊதியமும் கண்நிறயை உடலழகும்

மைவிழியாள் மாலையிட மணவறைக்குக் காத்திருப்பு

குடும்பம் கௌரவம் சிறப்பு சந்தோசம்

இடுக்கண் கவலை எல்லாமங்கு காத்திருக்கும்

பிள்ளைகள் பெருமைபார்த்து பேரர்பூட்டர் பார்த்து

எல்லாமே இனிதுவர முதுமை காத்திருக்கும்

உடல்நலம் குன்றும் உள்ளமும் சோர்வடையும்

இல்லாத நோயெல்லாம் உடல்புக காத்திருக்கும்

பெற்றமனம் பித்தாகும் உற்றவரே பகையாகும்

எல்லாமே ஒவ்வொன்றாய் பறிபோகக் காத்திருக்கும்

இல்லாளும் இல்லாமல் எழுந்திருக்க இயலாமல்

எந்நாளும் நீள்துயிலில் செலவாக காத்திருக்கும்

ஏனிந்த வாழ்க்கையென்று நாளெல்லாம் நினைவுவரும்

என்றாலும் எம்வாழ்வு காலனுக்காய் காத்திருக்கும்.

உரும்பிராய்கவி எம்.ரி.செல்வராஜா. இலண்டன் (14.02.2006)

http://www.karanthan.com/article.php?subac...amp;ucat=1&

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.