Jump to content

இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா?

இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர்.

ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது.

மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம் நடத்தியவர்கள் குறிவைத்து இரும்புக்கரம் கொண்டு அடக்க படுவதும் இது ரணில் ஜனாதிபதி ஆகிய அடுத்த மணித்தியாலத்தில் இருந்து ஆரம்பமாகியதும் ஒரு செய்தியினை தெளிவாக சொல்கிறது.

சீன சார்பு மகிந்தா, தனது கட்டுப்பாடினை மீறிய, தன்னையே பதவியில் இருந்து தூக்கிய தம்பி கோத்தாவை, எப்படி பதவியில் ஏத்தினரோ, அதே போல இறக்கி, தனது நண்பர் ரணிலை ஏத்தி இருக்கிறார்.

இதில், இந்திய ரோ, வழக்கம் போலவே கோட்டை விட்டு விட்டது போல தெரிகிறது. கோட்டை விட்டு, விட்டு, சீன கப்பல் வருகிறது, குய்யோ,முறையோ என்று குளறுகிறது.

ஆக, சிங்களம் மீண்டும் ஒரு ஆப்பினை சொருகி உள்ளது போலவே தெரிகிறது.

கேள்வி என்னவென்றால், இந்திய தெரிவாக இருக்காத ரணில், சீன தெரிவா அல்லது மேற்கு தெரிவா என்பதே இன்றுள்ள கேள்வி. ஏனெனில், வெளிநாட்டு கரம் பின்னால் இருந்தது என்பது தெளிவு. 

அது எந்த கரம் என்பதே இப்போதுள்ள கேள்வி.

ஆக, இலங்கை ஒரு வல்லரசு போட்டிக்குள் லாவகமாக சிக்கி உள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய போகிறது? என்ன செய்ய முடியும்?

இப்போதுள்ள கேள்வி, ரணில் சீனாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஒரே தடவையில் இலங்கையின் முழு கடனையுமே சீனா அடைத்து விட்டால், இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதனை நினைத்தால்.... சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா?

வல்லரசு போட்டியில் தானே ஜேர்மனி,கொரியா எல்லாம் இரண்டானது.ஜேர்மனியும் வியட்னாமும் இரண்டாகி பின்னர் ஒன்றாகியது வேறு விடயம். இதில் இரண்டாகிய எல்லா நாடுகளும் ஒரே மொழி ஒரே இனம்.

ஆனால் சிறிலங்கா இரண்டாகினால்  இரு மொழி இரு இனம் இரு கலாச்சாரம் இப்படி பல.....

எது வசதி? ☺️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்போதுள்ள கேள்வி, ரணில் சீனாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஒரே தடவையில் இலங்கையின் முழு கடனையுமே சீனா அடைத்து விட்டால், இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதனை நினைத்தால்.... சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.

இலங்கையின்  ஜனாதிபதி, பிரதமர்கள்… புதிதாக தெரிவு செய்யப் பட்டால்,
தமது முதலாவது அயல் நாட்டு விஜயமாக, இந்தியாவிற்குத்தான் செல்வார்கள்.
ரணிலின்…. முதலாவது சீன விஜயத்தை இந்தியா மட்டுமல்ல, மேற்கும் ரசிக்க மாட்டாது.

இந்தியா… இனி,  தமிழர் தரப்பை நெருங்கி வராத அளவிற்கு,
கூட்டமைப்பும் வேலை பார்த்து வைத்திருப்பதால்… ஆப்பிழுத்த குரங்கின் நிலை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இலங்கையின்  ஜனாதிபதி, பிரதமர்கள்… புதிதாக தெரிவு செய்யப் பட்டால்,
தமது முதலாவது அயல் நாட்டு விஜயமாக, இந்தியாவிற்குத்தான் செல்வார்கள்.
ரணிலில்…. முதலாவது சீன விஜயத்தை இந்தியா மட்டுமல்ல, மேற்கும் ரசிக்க மாட்டாது.

இந்தியா… இனி,  தமிழர் தரப்பை நெருங்கி வராத அளவிற்கு,
கூட்டமைப்பும் வேலை பார்த்து வைத்திருப்பதால்… ஆப்பிழுத்த குரங்கின் நிலை.

நான் முன்பே இங்கு சொன்னதுதான். இலங்கைத்தீவில், பருத்தித்துறை முதல் மாத்தறை வரையும், புத்தளம் முதல் மட்டக்கிளப்பு வரை, மக்கள் முழுவதும் இன, மத பேதம் இன்றி ஒத்த கருத்தாக நினைப்பது, இந்தியா ஒரு போதுமே தன்னை நம்பும் படி நடந்து கொள்ளவில்லை என்பதால், அதனை நம்பவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் முன்பே இங்கு சொன்னதுதான். இலங்கைத்தீவில், பருத்தித்துறை முதல் மாத்தறை வரையும், புத்தளம் முதல் மட்டக்கிளப்பு வரை, மக்கள் முழுவதும் இன, மத பேதம் இன்றி ஒத்த கருத்தாக நினைப்பது, இந்தியா ஒரு போதுமே தன்னை நம்பும் படி நடந்து கொள்ளவில்லை என்பதால், அதனை நம்பவே முடியாது.

ஈழத் தமிழர் சம்பந்தமாக… இந்தியா, இதுவரை நம்பிக்கையாக நடக்கவில்லை.
அதனால்…. ஈழத் தமிழர், இந்தியாவை வெறுக்கின்றார்கள்.

ஆனால் சிங்களவருக்கு… சார்ப்பாக, அளவுக்கு அதிகமாக உதவும் இந்தியாவை…
சிங்களவர் வெறுக்க என்ன காரணம்?
சிங்களவரின் மனதை.. வெல்ல வைக்க, இந்தியா இனி என்ன செய்ய வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தெற்கு அண்டை நாடான இலங்கையில் உள்ள துறைமுகத்திற்கு சீன இராணுவக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை குறித்து புது டெல்லி கவலை தெரிவித்ததை அடுத்து, "சம்பந்தப்பட்டவர்கள்" தனது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்க்கும் என நம்புவதாக சீனா வெள்ளிக்கிழமை கூறியது.

சீனாவால் கட்டப்பட்டு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தியாவின் கொல்லைப்புறத்தில் ராணுவ தளமாக சீனா பயன்படுத்திக்கொள்ளும் என இந்தியா கவலை கொண்டுள்ளது. $1.5 பில்லியன் மதிப்புள்ள துறைமுகம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது.

ஏழு தசாப்தங்களில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5 அம்பாந்தோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரவிருந்ததாகவும் Refinitiv Eikon இன் கப்பல் தரவுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு இந்தியா 4 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

வியாழன் பிற்பகுதியில் ஒரு வாராந்திர மாநாட்டின் போது, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை அரசாங்கம் கண்காணித்து வருவதாகக் கூறினார், புது தில்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்று கூறினார்.

கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகம், பெய்ஜிங் எப்போதும் உயர் கடல்களின் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவே பயன்படுத்துகிறது, என்கிறது.

“சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாகப் பார்த்து அறிக்கை செய்வார்கள் என்றும், சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்றும் சீனா நம்புகிறது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் எல்லையில் ஆயுதம் தாங்கிய மோதல்களில் குறைந்தது 20 இந்திய மற்றும் நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் இறுக்கமடைந்துள்ளன, மேலும் இரு தரப்பிலும் துருப்புக்கள் பெருமளவில் குவிக்க வழிவகுத்தது.

வெளிநாட்டு பாதுகாப்பு ஆய்வாளர்கள் யுவான் வாங் 5 ஐ சீனாவின் சமீபத்திய தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பல்களில் ஒன்றாக விவரிக்கின்றனர், இது செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல்களை கண்காணிக்க பயன்படுகிறது.

சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் பற்றிய பென்டகனின் வருடாந்திர அறிக்கை யுவான் வாங் கப்பல்கள் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) மூலோபாய ஆதரவுப் படையால் இயக்கப்படுகிறது என்று கூறுகிறது.

இலங்கையின் ஆலோசனை நிறுவனமான Belt & Road Initiative Sri Lanka, யுவான் வாங் 5 ஒரு வாரத்திற்கு ஹம்பாந்தோட்டையில் இருக்கும் என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றும் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை."

கடனை அடைக்க முடியாமல் திணறிய இலங்கை தனது பிரதான தெற்கு துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு சீன நிறுவனத்திடம் கையளித்தது.

சீனா இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குபவர்களில் ஒன்றாகும், மேலும் விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு நிதியளித்துள்ளது, இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது, இது இப்போது இழந்த நிலத்தை மீண்டும் பெற முயற்சிக்கிறது.

2014ஆம் ஆண்டு கொழும்பில் சீன நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பலையும் நிறுத்த அனுமதித்ததால் இலங்கை இந்தியாவைக் கோபப்படுத்தியது.(ராய்ட்டர்ஸ்)

https://www.dailymirror.lk/top_story/China-defends-military-ships-planned-visit-to-SL-as-India-voices-concern/155-242092

15 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத் தமிழர் சம்பந்தமாக… இந்தியா, இதுவரை நம்பிக்கையாக நடக்கவில்லை.
அதனால்…. ஈழத் தமிழர், இந்தியாவை வெறுக்கின்றார்கள்.

ஆனால் சிங்களவருக்கு… சார்ப்பாக, அளவுக்கு அதிகமாக உதவும் இந்தியாவை…
சிங்களவர் வெறுக்க என்ன காரணம்?
சிங்களவரின் மனதை.. வெல்ல வைக்க, இந்தியா இனி என்ன செய்ய வேண்டும்?

போராளிகளுக்கு பயிட்சி, ஆயுதம், கையை திருகி 13 என்று சிங்களவரும் நம்ப முடியாத வேலைகளை செய்துள்ளதே.

அதே வேளை, இந்திய ராணுவத்தினை அனுப்பி செய்த அட்டுழியத்தால் தமிழரும் நம்ப முடியாத வடு. அது மட்டுமா, முள்ளிவாய்க்காலில், இந்திய வெளியுறவுக் கொள்கையினை, சோனியா எனும் விதவைப்பெண்ணின் பழிவாங்கலுக்காக வளைத்ததால், இந்த நிலைமை. 😭

***

பந்து புதுடெல்லியில் இல்லை, பீகிங், வாஷிங்டன் போய் நீண்ட காலம் என்று நான் சொன்னது உறுதி ஆகிறது.

நானும் ஏரியா ரவுடி தான் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான், நிலைமை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் மாட்டுக்கு குறி சுடும்போது வலது பக்கத்தில் சுடுவது என முடிவு செய்து போவார்களாம். ஆனால மாடு வலது பக்கம் தரையில் பட படுத்து விட்டால் - மாட்டை கிளப்பி கஸ்டபடாமல், பஞ்சியில் பிரண்ட பக்கத்தில் குறியை சுடுவார்களாம். 

இதை பிரண்ட வளத்தில் குறி சுடுவது என்பர்களாம்.

இலங்கையில் நடப்பது பற்றி எந்த உள்வீட்டு தகவலும் இன்றி, பத்திரிகை செய்தியை மட்டும் வைத்து நாமெல்லாம் பிரண்ட வளத்துக்கு குறி சுடுமாப்போல எனக்கு படுகிறது.

1. ஒரு வருடம் முதல் சீனா துறைமுக நகரோடு இலங்கையை வாங்கியே விட்டது என்றோம்.

2. அறகளைய நடக்க - அதை மேற்கு தூண்டுகிறது என்றோம். கடந்த 6 மாதமாக சீனா கப்சிப். நாமும் சீனாவை பற்றி மறந்து விட்டு அமெரிக்கா முற்றாக இறங்கி விளையாடுது என்றோம்.

3. பிறகு இந்தியா கப்பல், கப்பலாக உதவி அனுப்ப. ஐயர் பேக்கரியை மீட்க முகல்கிறார் என்றோம்.

4. இப்போ சீன கப்பல் வர…மீண்டும் புள்ளி 1இல் ஆரம்பிகிறோம்.

எனக்கு மட்டும்தான் இந்த தேஜாவூ (தமிழ் தாத்தாக்கள் தேஜாவூவை தமிழ் படுத்தி தரவும்) தோன்றுகிறதா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

தமிழ் தாத்தாக்கள் தேஜாவூவை தமிழ் படுத்தி தரவும்

காலக்கொடுமை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • தேஜா வு
  • ஒரு அனுபவம் நிகழும்போது, அது ஏற்கனவே அனுபவித்த மாயை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிலாமதி said:
  • தேஜா வு
  • ஒரு அனுபவம் நிகழும்போது, அது ஏற்கனவே அனுபவித்த மாயை

நன்றி சகோதரி,

கோசான் தேஜாவுவிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு கேட்டுள்ளார், தமிழில் அதற்கு சொல் இல்லாதபடியால் விளையாட்டாக காலக்கொடுமை என குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா… இனி,  தமிழர் தரப்பை நெருங்கி வராத அளவிற்கு,
கூட்டமைப்பும் வேலை பார்த்து வைத்திருப்பதால்… ஆப்பிழுத்த குரங்கின் நிலை.

அது வந்து சம்பந்தன் சுமந்திரன்ரை பெரீய ராசதந்திரமாம்....அங்கை இஞ்சை கதைச்சுக்கொண்டு திரியினம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அது வந்து சம்பந்தன் சுமந்திரன்ரை பெரீய ராசதந்திரமாம்....அங்கை இஞ்சை கதைச்சுக்கொண்டு திரியினம்😁

தீபாவளிக்கு தீர்வு வரும் என்று, சம்பந்தன்… வருசா வருசம் சொன்னதை,
நம்பின சனம் இதையும் நம்பும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

தீபாவளிக்கு தீர்வு வரும் என்று, சம்பந்தன்… வருசா வருசம் சொன்னதை,
நம்பின சனம் இதையும் நம்பும். 🤣

ஒரு சில வியாபர நிறுவனங்கள் மாதிரி பெயர் எடுத்து விட்டார்கள். அந்த பெயரை வைத்து மக்களை முட்டாள்களாக்கி காலத்தை ஓட்டுகின்றார்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஒரு சில வியாபர நிறுவனங்கள் மாதிரி பெயர் எடுத்து விட்டார்கள். அந்த பெயரை வைத்து மக்களை முட்டாள்களாக்கி காலத்தை ஓட்டுகின்றார்கள்.😁

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பொறுப்புள்ள பதவியில் இருந்த போது…
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை, விடுதலை செய்வது சம்பந்தமாக…
சிலர் அவரை சந்திக்கச் சென்ற போது…
சம்பந்தன், வந்தவர்களை நிமிர்ந்து கூடப் பார்க்காமல்,
வீரகேசரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்த தோரணையை….
என் வாழ் நாளில் மறக்க மாட்டேன். 😡
அந்தக் காணொளி கிடைத்தால்… இணைத்து விடுங்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஊரில் மாட்டுக்கு குறி சுடும்போது வலது பக்கத்தில் சுடுவது என முடிவு செய்து போவார்களாம். ஆனால மாடு வலது பக்கம் தரையில் பட படுத்து விட்டால் - மாட்டை கிளப்பி கஸ்டபடாமல், பஞ்சியில் பிரண்ட பக்கத்தில் குறியை சுடுவார்களாம். 

இதை பிரண்ட வளத்தில் குறி சுடுவது என்பர்களாம்.

இலங்கையில் நடப்பது பற்றி எந்த உள்வீட்டு தகவலும் இன்றி, பத்திரிகை செய்தியை மட்டும் வைத்து நாமெல்லாம் பிரண்ட வளத்துக்கு குறி சுடுமாப்போல எனக்கு படுகிறது.

1. ஒரு வருடம் முதல் சீனா துறைமுக நகரோடு இலங்கையை வாங்கியே விட்டது என்றோம்.

2. அறகளைய நடக்க - அதை மேற்கு தூண்டுகிறது என்றோம். கடந்த 6 மாதமாக சீனா கப்சிப். நாமும் சீனாவை பற்றி மறந்து விட்டு அமெரிக்கா முற்றாக இறங்கி விளையாடுது என்றோம்.

3. பிறகு இந்தியா கப்பல், கப்பலாக உதவி அனுப்ப. ஐயர் பேக்கரியை மீட்க முகல்கிறார் என்றோம்.

4. இப்போ சீன கப்பல் வர…மீண்டும் புள்ளி 1இல் ஆரம்பிகிறோம்.

எனக்கு மட்டும்தான் இந்த தேஜாவூ (தமிழ் தாத்தாக்கள் தேஜாவூவை தமிழ் படுத்தி தரவும்) தோன்றுகிறதா?

சம்பந்தரின் ஆட்கள் சும்மா குழப்பி அடிக்கினம், கணபதி ஜயர் வெட்டியாடிப் போட்டார் எண்டு தானே எல்லோரும் நினைக்க, ஜயர்..... சந்தில நிண்டு ‘ஜயோ போச்சே...கள்ளப் புரிஜன் வேலியால புகுந்து வாறானே’ எண்டு கத்தினால் என்னத்தை  விளங்குறதாம்? 😁
 
அது சரி.... உந்த குறிசுடுற விசயம்....

யாரு, யாருக்கு சுட்டது?

ஜயருக்கே, பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்க, சூடு விழுந்தது? 🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சம்பந்தரின் ஆட்கள் சும்மா குழப்பி அடிக்கினம், கணபதி ஜயர் வெட்டியாடிப் போட்டார் எண்டு தானே எல்லோரும் நினைக்க, ஜயர்..... சந்தில நிண்டு ‘ஜயோ போச்சே... ‘ கத்தினால் என்னத்தை  சொல்வது? 😁

கணபதி ஐயர்… “விழுந்தாலும், மீசையிலை மண் படவில்லை” என்று… சொல்லுற ரைப். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

காலக்கொடுமை?

🤣 

தேஜாவு வ விடுங்க நம்ம ஜி @கிருபன் பெயர்ல ஸ் போட்டதுக்கே புரட்டி எடுத்திருக்காங்க🤣

17 hours ago, நிலாமதி said:
  • தேஜா வு
  • ஒரு அனுபவம் நிகழும்போது, அது ஏற்கனவே அனுபவித்த மாயை

நன்றி. ஆனால் இது தேஜாவூவின் விளக்கம் தானே அக்கா.

நான் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பவர்களிடம் யாசிப்பது தேஜாவூ விற்கான தமிழ் பதத்தை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த மொழி - இவ்வளவு காலமாக தேஜாவூவை உணராமல் இருக்க முடியாது? அப்போ அதன் பெயர் என்ன?

அல்லது சுனாமி போல் வந்த பின்னாவது ஆழிப்பேரலை என உருவாக்கியது போல் ஏன் இன்னும் தேஜாவூவுக்கு இல்லை.

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

சம்பந்தரின் ஆட்கள் சும்மா குழப்பி அடிக்கினம், கணபதி ஜயர் வெட்டியாடிப் போட்டார் எண்டு தானே எல்லோரும் நினைக்க, ஜயர்..... சந்தில நிண்டு ‘ஜயோ போச்சே...கள்ளப் புரிஜன் வேலியால புகுந்து வாறானே’ எண்டு கத்தினால் என்னத்தை  விளங்குறதாம்? 😁
 
அது சரி.... உந்த குறிசுடுற விசயம்....

யாரு, யாருக்கு சுட்டது?

ஜயருக்கே, பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்க, சூடு விழுந்தது? 🤔

சூடு ஐயருக்கோ, அல்லது டிராகனுக்கோ அல்லது அங்கிள் சாமுக்கோ விழுந்திருக்ககூடும்…ஆனால் குறி சுடுவது நாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பவர்களிடம் யாசிப்பது தேஜாவூ விற்கான தமிழ் பதத்தை.

மாயனுபவம்! இது பொருந்துமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

மாயனுபவம்! இது பொருந்துமா?

நல்லாத்தானிருக்கு. 

ஆனால் மாயானுபவம் என்றால் hallucination இல்லையா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேஜாவூவை உணராமல் இருந்திருக்கமாட்டார்கள்.. ஆனால் பிரமை/குழப்பநிலை/மாய உணர்வு என்றுவிட்டு போயிருப்பார்கள் என நினைக்கிறேன். 

On 1/8/2022 at 05:44, goshan_che said:

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த மொழி - இவ்வளவு காலமாக தேஜாவூவை உணராமல் இருக்க முடியாது? அப்போ அதன் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.