Jump to content

பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக... மாற வேண்டிய கட்டாயத்தில், இலங்கை பெண்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை பெண்கள்!

பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக... மாற வேண்டிய கட்டாயத்தில், இலங்கை பெண்கள்!

பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர், பொருளாதார நெருக்கடியால், வேலை இழந்துள்ளனர், இதனையடுத்து, அதில் பலர், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் சிரமங்கள் பல குடும்பங்களை வறுமையின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாட செய்யற்பாடுகளில், இலங்கையில் பெரும் எண்ணிக்கையான மக்கள், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த மோசமான சூழ்நிலை நாடு முழுவதும் தற்காலிக விபச்சார விடுதிகளை உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் விபச்சார தொழில், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள பெண்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாலின உரிமைகளுக்காக பாடுபடும் ஸ்டேண்ட்-அப் மூவ்மென்ட் லங்கா (SUML) தெரிவித்துள்ளது

ஆடைத்தொழிலில் பணிபுரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பாலியல் தொழிலை  நாடுகிறார்கள் என்று நிறுவனத்தின் செயல் இயக்குனர் அஷிலா டான்டெனியா இந்திய ஊடகத்திடம்  கூறியுள்ளார்.

21 வயதான ரெஹானா என்று தமது பெயரை மாற்றிக்கூறிய பெண் ஒருவர்,  தாம் ஆடைத்தொழிலில் பணிபுரியும் ஒரு ஊழியராக இருந்து பாலியல் தொழிலாளியாக மாறியது பற்றிய தனது கதையை இந்திய ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்ததாகவும்,  பல மாதங்கள் விரக்திக்குப் பிறகு, தாம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் ரெஹானா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டு டிசம்பரில், ஆடை  தொழிற்சாலையில் வேலை இழந்தேன். பின், தினக்கூலி அடிப்படையில், வேறு வேலை கிடைத்தது. சில சமயங்களில், ஆட்பலம் குறைந்த போது, சென்று, வேலைக்குச் சென்றேன். ஆனால், என்னால் பணம் சம்பாதிக்க  முடியவில்லை.

எனது மற்றும் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது, பின்னர், ஒரு ஸ்பா உரிமையாளர் என்னை அணுகினார், இதனையடுத்து, பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலாளியாக வேலை செய்ய முடிவு செய்தேன், என் மனம் அதை ஏற்க மறுத்தது. ஆனால் எனது குடும்பத்திற்கு பணம் மிகவும் தேவைப்பட்டது, என்று அவர் இந்திய ஊடகத்திடம்  கூறியுள்ளார்.

நாற்பத்திரண்டு வயதான ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்று தமது பெயரை மாற்றிக்கொண்ட ஒருவரும், பாலியல் தொழிலாளியாக மாறியவர்களில் இன்னொருவர் என இந்திய ஊடகம் தெரிவிக்கிறது.

ஏழு வயதான ஒரு குழந்தையின் தாயான அவர் விவாகரத்து பெற்றவர், அவர் தனது மகளின் கல்வி மற்றும் வீட்டு வாடகைக்கு போதுமான அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டியிருந்தது.

“பொருளாதார நெருக்கடியால் வருமானம் போதாது. என் குடும்பத்தின் வீட்டுத் தேவைக்கு பணம் போதாது. அதனால்தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு 20,000 முதல் 30,000 வரை சம்பாதித்த பெண்கள் மற்றும் பெண்கள் ஒரு நாளைக்கு 15,000-20,000 ரூபாய் பெறுவதுதான் பாலியல் தொழிலாளிகளாக மாறுவதற்கு முக்கிய காரணம் என்று  நம்பப்படுகிறது. ஆனால் அவர்கள், சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2022/1293031

Link to comment
Share on other sites

இலங்கையில் விபச்சாரத் தொழில் 30 சதவீதத்தால் அதிகரிப்பு?

இலங்கையில் விபச்சாரத் தொழில் 30 சதவீதத்தால் அதிகரிப்பு?

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 22 மில்லியன் மக்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்கொள்வதாக இந்திய செய்தி நிறுவனமான ANI சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாடப் போராட்டத்தினால் பல இலங்கையர்கள் வீட்டில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பெண்கள் ஆடைத் துறையில் வேலை இழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக விபச்சார விடுதிகள் உருவாக்கப்பட்டு, பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலியல் உரிமைகளுக்காக செயற்படும் குழுவான Standup Movement இலங்கை, இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் விபச்சாரத்தில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில் வேலை செய்து பாலியல் தொழிலாளிகளாக வருமானம் ஈட்டுவதாக இது தொடர்பான செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தியை போடுவதில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி😡  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

பாலியல் தொழிலுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது ? 

ஒட்டிய குழுக்கள் ... ஓடடாத குழுக்கள் 
லஞ்ச பணம் 
களவு கொள்ளைகள் அதிகரிப்பதும் இதனால்தான். 


ஜூன் மாதம் $ 5 பில்லியனுக்கு ஆடையும் தேயிலையும் ஏற்றுமதி செய்திருந்தார்கள் 
நான் நினைத்திருந்தேன் ஆடை தொழிலார்கள் இப்போதுதான் இன்னமும் பிஸியாக இருப்பார்கள் என்று 

தமிழ்நாட்டில் ஒரு ஆடை தொழில் கொம்பனி மிகவும் பாரிய அளவில் வளர்ந்துகொண்டு வருகிறது 
அவர்களின் இலக்கு இந்த இலங்கை தொழிலை அங்கு எடுப்பதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பாலியல் தொழிலுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது ? 

புலம்பெயர் அங்கிள்மார் முண்டியடித்து கொண்டு இலங்கை போகிறார்கள் இந்த பஞ்சத்திலும். பலர் தனியாக. சொத்து பத்து சொந்தங்களை பார்த்து வரவாம்.

பிகு

செய்தியின் சாராம்சம் பொய்யல்ல.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒட்டிய குழுக்கள் ... ஓடடாத குழுக்கள் 
லஞ்ச பணம் 
களவு கொள்ளைகள் அதிகரிப்பதும் இதனால்தான். 


ஜூன் மாதம் $ 5 பில்லியனுக்கு ஆடையும் தேயிலையும் ஏற்றுமதி செய்திருந்தார்கள் 
நான் நினைத்திருந்தேன் ஆடை தொழிலார்கள் இப்போதுதான் இன்னமும் பிஸியாக இருப்பார்கள் என்று 

தமிழ்நாட்டில் ஒரு ஆடை தொழில் கொம்பனி மிகவும் பாரிய அளவில் வளர்ந்துகொண்டு வருகிறது 
அவர்களின் இலக்கு இந்த இலங்கை தொழிலை அங்கு எடுப்பதுதான் 

ஸ்டாலினின் கொள்கை இதனுடன் ஒத்துப் போகிறது.

14 minutes ago, goshan_che said:

புலம்பெயர் அங்கிள்மார் முண்டியடித்து கொண்டு இலங்கை போகிறார்கள் இந்த பஞ்சத்திலும். பலர் தனியாக. சொத்து பத்து சொந்தங்களை பார்த்து வரவாம்.

பிகு

செய்தியின் சாராம்சம் பொய்யல்ல.

உலகத்தின் ஆதித் தொழிலை கற்றுவரும் எண்ணம் இருக்கிறதோ என்னமோ ?

உங்களுக்கு அங்கு போகும் எண்ணம் ஏதும் ....?

அங்கிள்மார் என்று போட்டிருக்கிறீர்கள் அதுதான்....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை அடித்துக் கொன்று துரத்தி ஏதிலியாக்கி ஏதோ சிங்களவருக்கு இருப்பது தமிழரது படைபலப் பிரச்சினைதான். அதைக் கடனைத் தனியப் பட்டென்றாலும் முடிவுகட்டிவிட்டாத் தேனும் பாலுமா ஓடும் என்று இனவாத சிந்தனை அல்லது தேசியத் தலைவரவர்கள் சுட்டியதுபோல் 'மகாவம்ச மனோநிலை' கரணியமாக அழகிய  ஈழமணித்திருநாடு, இன்னொரு மும்பை சேரியாகவும், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியாகவும் தேயநிலையடைந்து மாறிவருவதன் அறிகுறியா? 
ஏன் ராயபக்ச வம்சத்தால் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படும் சொத்துகளை இனம் கண்டு அரச திறைசேரிக்குத் திருப்பினால் இந்த நிலையில் மாற்றம் வருமல்லவா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை பார்த்தபின் 2௦௦9 மே க்கு பிறகு தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட  அநியாயங்களை  கேள்விப்பட்ட கதைகளின் பின் உருவாகிய  மிருகம் இன்று சிரித்து கொள்கிறது ஆனால் !.௦..............................

2 hours ago, Maruthankerny said:

அவர்களின் இலக்கு இந்த இலங்கை தொழிலை அங்கு எடுப்பதுதான்

அவர்கள் எடுக்கணும் அதுதான் நல்லது . இவர்கள் எடுத்தால் என்ன செய்வார்கள் ? நாலு புத்த மடாலயம் தமிழர் பகுதியில் நிறுவுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nochchi said:

ராயபக்ச வம்சத்தால் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படும் சொத்துகளை இனம் கண்டு அரச திறைசேரிக்குத் திருப்பினால் இந்த நிலையில் மாற்றம் வருமல்லவா?

கண்டிப்பாக! ஆனால் அதை தடுப்பதற்காகத்தான் ரணிலை இறக்கி, இருத்திவிடப்படுள்ளது. அவர் ஆயுதப் படையை அவசரமாக ஏவி விட்டதே ராஜ பக்ஸ கொள்ளைக்கும்பலை காப்பாற்றத்தானே! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்கு அங்கு போகும் எண்ணம் ஏதும் .

எப்போதும் விலை போவதுமில்லை, கொடுப்பதும் இல்லை 😎

1 hour ago, Kapithan said:

உலகத்தின் ஆதித் தொழிலை கற்றுவரும் எண்ணம் இருக்கிறதோ என்னமோ ?

ஒரு ஆறு மாதம் அல்லது அதற்கும் கூடவாக இருக்கும் டயனா கமகே பாலியல் தொழிலை இலங்கையில் சட்ட பூர்வமாக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தார். நியாபகம் இருக்கலாம்.

அது காகம் சொல்லி சொன்னதுதானாம்.

தாய்லாந்தின் வழியில் அந்நிய செலவணியை ஈட்டினால் என்ன என்று உயர் மட்டத்தில் யோசிப்பதாகவும், அதனால் கீழ் மட்டத்தில் முன்னர் போல கட்டுப்பாடுகள் குறைவு, பொலீசாரும் கண்டு கொள்ளாமல் விடும் படி அறிவுறுத்த பட்டுள்ளதாக கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாரது..... பவுத்திராவோ பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டுமென்னும் ஆலோசனை வைச்சவா? அவவுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கு இப்படி ஓர் நிலைமை நாட்டுக்கு வருமென்று. ஆமா ..... நாடு முழுக்க பஞ்சம், யாரது பாலியலுக்கு  அலையினம்? கொள்ளையடித்த பணக்காரரோ? 

2 hours ago, Kapithan said:

உங்களுக்கு அங்கு போகும் எண்ணம் ஏதும் ....?

யாரைப்பாத்து என்ன கேள்வி கேட்டுப்புட்டிங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கஞ்சா வளர்ப்பு ஏற்றுமதியாம்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.