Jump to content

மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
(truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்)
சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு
(மலையாள எழுத்தாளர்)
தமிழாக்கம்
களியக்காவிளை ஷினு (Shinu R S)
மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க விதத்தில் தாக்குப்பிடித்த மொழியாகவும் தமிழை நாம் காண வேண்டும்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமஸ்கிருதத்தினை கலக்கவிடாமல் மிகக்கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்துசக்தியாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சொல்வளத்தாலும் இசைத்தன்மையாலும் தமிழ் மொழி உலகின் அனைத்து மொழிகளைவிட முன்னணியில் இருக்கிறது. எந்த ஆங்கில வார்த்தைகளுக்கும் அந்த மொழியில் அதற்கு தகுந்த சொல்லாடல்கள் தேவைக்கு தகுந்தபடி தோற்றம் பெறுவதைக் காணலாம். ஏராளமான இயந்திரக் கருவிகள் மேற்குலக நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவதும், அவை இந்தியாவை வந்தடையவும் செய்கின்றன.
நம்மால் எக்கருவியும் கண்டுபிடிக்கப்படாதது மட்டுமின்றி, இல்லாத பழங்கதை பேச்சுகளில் மூழ்கிப் போவதும், எந்தவித வெட்கமுமின்றி கருவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் செய்பவர்கள். நமக்கு அந்த கருவியின் பெயரில் கூட எந்தவித உரிமையும் இல்லை! அச்சூழலிலும் அந்த இயந்திரங்களுக்கு சுயமாக பெயர் சொல்லி அழைப்பதற்காவது முயற்சி செய்யும் மொழிதான் தமிழ். ரெப்ரிஜிரேட்டருக்கு அவர்கள் சாதாரணமாக 'குளிர் சாதனப் பெட்டி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஏர்கண்டிஷனருக்கும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சாதனம் என்பதற்கு இயந்திரம் என்பதுதான் தமிழில் அர்த்தம். மொபைல் என்ற சொல்லிற்கு தமிழர்கள் முதல்தர பெயரிட்டிருக்கிறார்கள்; 'அலைபேசி'. கம்ப்யூட்டருக்கு கணினி, கால்குலேட்டருக்கு 'கணிப்பான்', 'எளிகணி' என்னும் இரு பெயரிட்டிருக்கிறார்கள். கணிப்பான் என்ற சொல்லிலிருந்து கணிப்பதற்கும், எளிதில் கணிக்க என்னும் அர்த்தங்களில் இருந்துதான் 'எளிகணி' என்று கால்குலேட்டருக்கு பெயர் படைத்திருக்கலாம்.
பஸ்சை 'பேருந்து' என்று தமிழ்ப்படுத்தினார்கள். போட்டோவிற்கோ மிகவும் ரசனைக்குரிய சொற்பிரயோகமே தமிழுக்கு; நிழல் படம். மற்றும் ஒரு அழகான சொல் 'நிழல்குடை'. இது வேறெதுவுமில்லை. வெயிட்டிங் ஷெட்டிற்கு!
Weather என்பதற்கு சரியான மலையாளம் இன்றைக்கும் இல்லை. Climate என்ற சொல்லுக்கு 'காலாவஸ்த' என்று எழுதுகிறோம். Weather என்பதற்கு 'தைனம்தின காலாவஸ்த' என்றெல்லாம் சில பத்திரிகைகள் எழுத முயற்சித்தாலும் அது எதுவும் சரிப்படவில்லை. உண்மையில் நான் பிறந்த இடமான கண்ணூரில் Weather என்பதற்கு அழகான மலையாளச் சொல் இருக்கிறது - ஆச்ச். வானம் கருமேகங்கள் சூழும்பொழுது மழை மறையும்பொழுது பண்டைய தலைமுறையினர் இப்போதும் சொல்வார்கள். ஆஹா, ஆச்ச் மாறிட்டே என்று. இப்படி எவ்வளவோ கவித்துவமான வட்டார வழக்குகளை மலையாளி இழந்திருக்கிறான். ஏதாவது ஒரு பிரபல தினசரி பத்திரிகை பழக்கப்படுத்தி இருந்தால் சிலவேளை அழியாமல் இருந்திருக்கும்.
எந்த மொழியிலும் புதிய சொல்லாடல்களை வெளியில் இருந்து திணிப்பன் மூலம் உருவாக்க இயலாது. சமீபத்தில் நமது மொழி வல்லுனர்கள் ஆங்கிலத்திற்குச் சமமான வார்த்தைகளை உருவாக்க கடினமாக முயற்சி செய்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. அவ்வாறான சொற்கள் ஓசை நயமோ, நமது கலாச்சாரம் குறித்த ஆழ்மன சித்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனம். 'ஸ்விட்ச்' என்பதற்கு 'வைத்யுத ஆகமன பிரத்தியாகமன யந்திரம்' என்ற ரீதியில் சொற்களை உருவாக்கினால் எப்படி இருக்கும்? 'ரயில்வே ஸ்டேஷனுக்கு' 'அக்னிசகட ஆகமன பிரத்தியாகன யந்திரம்' என்று இரண்டு முறை சொல்லி முடியும்போது, நமக்கான வண்டி கிளம்பிப் போயிருக்கும். இந்த இடத்தில் தமிழ் ஒரு முன்னுதாரணமாகிறது. நேற்று கண்டறிந்த ஆங்கில வார்த்தைக்கும் நாளை தமிழ் வார்த்தையை கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குத்தக வாட்ஸ் - அப்பிற்கு கூட தமிழில் பெயர் வந்துவிட்டது; பகிரி என்னும் சொல். எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய இருக்கிறது.
தமிழ் மொழிக்கு எப்படி இது சாத்தியமாகிறது? விடை எளிது. இசைத் தன்மை கொண்டது அம்மொழி. எளிமையானது. அனேக நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. அதன்மீதான அனைத்து மதிப்பும், அன்பும் அவர்களின் இதயத்தில் அந்த மொழியிடம் இருக்கிறது. 'தமிழன்' என்றுகூட ஒரு திரைப்படத்தின் பெயர் வருகிறது. சுயமரியாதையின் ஆற்றல் ஒரு வியாபார திரைப்படத்தின் பெயரில்கூட வெளிப்படுகிறது. அது மிகவிரைவிலேயே ஒரு சமூக, அரசியல் உணர்வாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது மலையாளி ஒரு திரைப்படத்திற்கு சூட்டிய பெயரைப் பாருங்கள் - 'மலையாளி மாமனுக்கு வணக்கம்' !
இணையோடு புணர்வது குறித்து சொல்வதற்கு காவியத் தன்மை கொண்ட ஒரு சொல் கூட மலையாளத்தில் இல்லை. ஆனால் தமிழில் கவனியுங்கள்; உடல் உறவு. எவ்வளவு தூரம் அழகானதும் ஓசை நயம் கொண்டதுமான சொல். காதலின் மென்மையை வெளிப்படுத்த இதுபோன்ற அதி அற்புதமான வார்த்தை இன்னும் இருக்கிறது தமிழில். அதில் ஒன்று தான் கலவி. 'கலவி' என்பதற்கு 'இரண்டாக இராமல் ஒன்றாவது' என்பதுவே அர்த்தம். காதலுடன் இணைவதற்க்கு இதைப்போன்ற சொல்லழகும் சமூக உணர்வும் உள்வாங்கிய வேறு எந்த சொல் இருக்கிறது? மலையாளத்தில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பகுதியான சொற்களும் விகாரம் தரக்கூடியவை. சுயமரியாதை அற்றதும் கூட. ஒரு நிமிடம், இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவ்வாறான சொற்களை ஆராய்ந்து பாருங்கள்; சொன்னதன் அர்த்தம் புரியும்.
1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில். இந்த விஷயத்தில் கொல்லம் மாவட்டத்தவர்கள் மிகவும் பெருமை கொள்ளலாம். மலையாள நாடும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இதைவிட கூடுதலாக வேறு எதை சொல்ல முடியும்?
எந்தவொரு சமூகத்தினரினதும் வரலாற்று உணர்வும் மொழியில்தான் உயிர் வாழ்கிறது. வடக்கிலிருந்து உருவாகும் ஆரிய மயமாக்கல், தென்மேற்கு கரை ஓரங்களிலிருந்து உருவான வியாபார மிஷனரி தொடர்புகளினால் நாம் நமது தாய் மொழியான தமிழிலிருந்து பெருமளவுக்கு விலகி போய்யிருக்க வேண்டும். மொழியால் திணிக்கப்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான காலனித்துவம் இன்றும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மொழியைக் கற்றிராத எந்தவொரு மலையாளியாலும் ஓரளவுக்கு தமிழில் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி தமிழ் மொழியுடன் கொண்டிருப்பது தொப்புள் கொடி உறவாகும். தமிழின் சங்ககால காவியங்களில் ஒன்றினை எழுதியது ஒரு கேரளீயர். இளங்கோவடிகள் என்பது கவிஞனின் பெயர். படைப்பு; சிலப்பதிகாரம். ஒன்றிரண்டு அல்ல, 5700 வரிகள் இருக்கிறது. நாம் அறிந்திடாத கேரளக் கவிஞர்களின் பெயர்கள் இன்னும் இருக்கலாம். எட்டுத்தொகையின் சில கவிதைவரிகள் கேரளாவின் கவிஞர்கள் எழுதியதாக கருதப்படுகிறது.
இந்த குறிப்பின் நோக்கம் மொழி மீதான உரிமை கோரும் வாதமல்ல. உலகிலுள்ள எந்த மொழியும் பிற மொழிகளுக்கு எதிராக இல்லை என்பதுவே மேன்மையான உண்மை. உலகில் மிகவும் குறைவான மக்கள்தொகையினர் பேசும் மொழியைக்கூட மனிதன் பாதுகாக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ஒரு மனிதன் நான். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு எந்த மொழியையும் திணிப்பதற்கு நான் எதிராளியும் கூட. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மொழிக்குப் பின்னால் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் குரூர மனம் இருக்கிறது.
வேர்களை கைவிட்ட மரங்கள் அதன் ஆன்மாவை விரைவில் இழந்துவிடும். துணை மொழியாக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் முக்கியத்துவம் கொடுத்து கற்க வேண்டியது தமிழ் மொழியைத்தான். காரணம், வெயில் இலைகளை பசுமையாக்குவது போன்று, மண்ணின் ஆழங்களில் ஊடுருவும் வேர்கள் அதன் தாய்த்தடிகளையும் கிளைகளையும் வலுப்படுத்தும். கேரளாவில் வாழ்பவர்களின் தாய்மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்தின் தாய்மொழி தமிழ். அதில் ஒரு தற்காப்பு அரசியல் செயல்படுவதை நாம் அவதானிக்கலாம்.
(பி.கு: இந்த கட்டுரையை பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் முக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது போன்று வீண் பெருமை பேசும் நோக்கத்தில் அல்ல. மாறாக தாய்மொழி கல்வியின் சிறப்பை இதைவிட எதார்த்தமாக தற்போதைய சூழலில் எளிமையாக புரியவைக்க முடியாது என்பதற்கே.
இந்த கட்டுரையை வாசிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவு வருகிறது. சோவியத் வீழ்ந்து முப்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டு இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் சில நேரம் மூத்த தோழர்கள் வீடுகளில் காண கிடைக்கும். அந்த புத்தகத்தை தொட்டு பார்த்து "முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ” என்ற வரியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வர்ணிக்க முடியாது. வெறும் தமிழ் என்றில்லை சோவியத் கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் அவரவர் தாய் மொழியிலேயே புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்து ஏற்றுமதி செய்தார்கள். தாய் மொழி கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக கம்யூனிச ஆசான்கள் பெரும் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்)
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மலையும் ஆழமுமான பகுதிகளில் வாழ்பவர்கள் பேசும் மொழி என்பதனால் மலையாளம் (தமிழின்புணர்ச்சிவிதிப்படி) என்று அழைக்கப்பட்டது. உண்மையில் மலையாளத்தில் பேசப்படும் பல சொற்கள் ஆதித்தமிழ் சொற்களாகும். தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். தமிழர்கள் பேசுவது தை மலையாளிகளால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் மலையாளிகளும் தமிழர்களே . சேரநாடுட்டுத் தமிழர்கள்.அதை மறந்து தாங்கள் தனியான இனம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையானது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இதை பலமுறை அங்கு சொல்லிவிட்டேன்.

இப்போதைய மலையாளம் எண்ணப்படும் மொழி தோற்றத்தின் உருவாக்கம், 1800க்கு பின்.

கேரளத்தில், முதல் இருந்த மொழி மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.

 (இது மிக முக்கியமான காரணம், போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் , அவர்கள் மலபார் மொழி என்று அடையாளப்படுத்திய மலையாளத் தமிழையும், இப்போதைய தமிழ் நாடு மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதியில்  இருந்த தமிழை மலபார் மொழி என்று குழம்பி, இரண்டையும் மலபார் மொழி, மலபார் இனம் என்று  அடையாள படுத்தியதற்கு).

நம்பூதிரிகளின் சூழ்ச்சியால், ஆங்கிலேயர் மலையாளத் தமிழை  தடை செய்ததுடன், மலையாளத் தமிழில்   இருந்த அரச பதிவுகளை எரித்து விட்டனர்.

ஆங்கிலேயர், துளு நாட்டில்    திகலரி மொழியை, எழுத்துக்களை தடை செய்த அதேவேளையில், நம்பூதிரிகளின் தூண்டுதலால், அதே திகலரி எழுத்துக்களை மலையாளத் தமிழில் புகுத்தி இப்போதைய எழுத்து மலையாளத்தை உருவாக்கினர்.

ஆனால், பேச்சு மொழியான மலையளம்மா மொழியை நீக்க முடியவில்லை (எப்படி முடியும்? சிந்தித்து பார்க்கவும்).

இந்த திகலரி எழுத்து , உச்சரிப்பு மாற்றம் செய்யப்பட்ட எழுத்து மலையாளமும், தொன்று தொட்டு தொட்டு வழங்கி வந்த மலையளம்மாவும் கலந்து உருவானதே இப்போதைய பேச்சு மொழி மலையாளம்.

இதனால் தான், தமிழருக்கு மலையாளம் பேச்சு மொழி (முழுவதும் இல்லாவிட்டாலும்) உடனடியாக புரியாக் கூடியதாக இருப்பது.

அனால், திகலாரியால் எழுத்து, உச்சரிப்பு  மாற்றப்பட்ட எழுத்து   மலையாளம் (முதலில் கற்காமல்) விளங்காது.    

2 hours ago, புலவர் said:

1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில்.

இத தம்பிரான் வணக்கத்தை பார்த்தல், மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் தெரியும், இபோதுதும் தமிழர்கள் வாசிக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன் - தம்பிரான் வணக்கம் எனும் நூல், ஓர் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய நூல். முதலில் போத்துகேய மொழியில் லிஸ்பன் இல் வெளியிடப்பட்டு, பின் மொழிபெயர்க்கப்பட்டு, கோவாவில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் வெளியிடப்பட்டது   

இது அப்படியே தரவேற்றம் செய்யப்பட்ட தம்பிரான் வணக்கம் நூலின்  பிரதி

https://eap.bl.uk/archive-file/EAP981-1-15-54#?c=0&m=0&s=0&cv=0&xywh=-1809%2C-1%2C5899%2C3425

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 31/7/2022 at 17:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

 • Like 1
 • Thanks 1

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒலிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2022 at 22:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

பிர்ஞ்சுகாரர் மொழி மட்டும் அல்ல, உணவு, உடை கலாச்சாரத்தில் கூட ஆங்கில கலப்பை  தடுப்பத்தில் முன்னிற்பார்கள் என்பது தெரியும். ஆனால் இதற்காக அரச அமைப்பை வைத்திருப்பது தெரியாது. தகவலுக்கு நன்றி.

உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆங்கிலத்தில் authority என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒன்று அதிகாரம் உள்ள அமைப்பு (எ கா - Greater London Authority). இன்னொன்று ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ அவர்களின் புலமை அல்லது திறமை காரணமாக அதிகாரம்/authority ஆக கருதப்படுவார்கள் (எ.கா Lord Wilberforce is an authority on public law).

இந்த இரண்டாம் அடிப்படையில்தான் ஆக்ஸ்போர்ட் அகராதி எது ஆங்கிலம் என்பதை தீர்மானிக்கும் “அதிகாரமாக” அனைவராலும் ஏற்கப்படுகிறது. ஏனைய அகராதி அமைப்புகள் கூட ஆக்ஸ்போர்ட்டின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை.

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

3 hours ago, நன்னிச் சோழன் said:

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

3 hours ago, நன்னிச் சோழன் said:

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

2 hours ago, நன்னிச் சோழன் said:

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒல்லிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

நன்றி.

Edited by goshan_che
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

உண்மைதான். நிச்சயம் பல சொற்கள் உதாரணம் disc = வட்டு தமிழில் வழக்கொழிந்து போயுள்ளன. நன்னி சொன்னது போல் இவற்றை மீள பாவனைக்கு எடுத்து அதன் பின்னும் தகுந்த சொல் இல்லை என்றால், இடுகுறியாகவோ காரணமாகவோ உருவாக்கலாம்.

ஆனால் புதியதாக ஒரு சொல்லை உருவாக்குவது கடைசி வழியாக (last resort) ஆக இருக்க வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

நன்றி.

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2022 at 02:56, நன்னிச் சோழன் said:

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கதிர் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.   இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.   120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,  squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.   அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.   தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! | உதயன் | UTHAYAN (newuthayan.com)
  • சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது. கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பல் விவகாரம்- இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கு சீன தூதரகம் முயற்சி | Virakesari.lk
  • By T. SARANYA 08 AUG, 2022 | 10:20 AM தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில்  உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும். வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள் அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது. ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள். வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது. அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.  ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.  ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றார். கூட்டமைப்பினுள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன் | Virakesari.lk
  • By T. SARANYA 08 AUG, 2022 | 04:35 PM (எம்.நியூட்டன்) வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் என அண்ணளவாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த பாதிப்பு கடற்றொழில் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது. கடந்த 60 நாட்களுக்கு மேல் எமக்குரிய மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. நூற்றுக்கு எண்பது வீதமான கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்டோம்.  மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. எங்கள் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. எரிபொருள் பற்றாக்குறை இன்றளவில் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் கூட கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம்.  நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால் மீன் உண்பவர்களின் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை.அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம். எங்கள் பிரச்சினை தொடர்பான விடங்களை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளுக்கு அனுப்பவேண்டும். நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடற்றொழில் சமூகம் அதற்கான பணத்தை வழங்கும். இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன். வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும்  என்றார். மண்ணெண்ணெயை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் | Virakesari.lk
  • இப்படியான செய்திகளை, அதில் கருத்து பகிர்வதை சுயதணிக்கை அடிப்படையில் தவிர்ப்பது என்று அண்மையில் நம்மில் பலர் எடுத்து கொண்ட உறுதிமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.