Jump to content

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

"அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை." என்றார் 

கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார்.
 
https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கோட்டாபய-நாடு-திரும்புவதற்கு-உகந்த-நேரமல்ல-ரணில்/150-301454

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பதவிப்பயம் வந்திட்டுது, அதுமட்டுமல்ல நிதி உதவியும் வராது என்பது நன்கு தெரியும். ஒருவேளை கோத்தா  வந்தாலும், வரத்தானே வேண்டும் வேறு எங்கே போக முடியும்?  இவரே கைது செய்ய முயற்சிக்கலாம். அவர்களுக்கு இருந்த எல்லா செல்வாக்கும் இழந்து இவரின் செல்வாக்கிற்தான் வரவேண்டும்.    

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Quote

"அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை."

வெகு விரைவில் கோத்தபாயவை சிங்களத்தின் ஒப்பற்ற தலைவனாக்கி நாட்டுக்குள் மீண்டும் அழைத்து வருவார்கள் பாருங்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெகு விரைவில் கோத்தபாயவை சிங்களத்தின் ஒப்பற்ற தலைவனாக்கி நாட்டுக்குள் மீண்டும் அழைத்து வருவார்கள் பாருங்கள்.

இல்லை.....இனி அப்படி ஒரு சந்தர்ப்பத்தை மகிந்தா தரமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்......!  🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களைப்பிடித்து உள்ள போட்டுட்டு ஒரு சிலருக்கு நியமன நாடாளுமன்ற உருப்பினர் பதைவைத்து அடக்கி  ராஜபக்ஸக்களை காப்பத்தப் புறப்படுட்டார்.

இஅரது மாமனார் தலைமையிலான அரசாங்கத்தில் யாழ் நூல் நிலையத்தை எரித்ததுக்கு எதுவும் சொல்லாத ரணில் தன்னுடைய வீட்டிலிருந்த ஆயிரக்கணக்கான புத்த குடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு செய்தபின்பு வரவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மந்தி புரியாணி போட்டுத்தின்னுவம் இப்ப அவசரப்படவேண்டாம் எனச்சொல்லுறார் ரணில். போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தை  ஆரம்பித்த்தபோது திண்ணை எப்ப காலியாகும் என சத்தம்போடாமல் இருந்துபோட்டு அதிகாரம் தனது கைக்கு வந்தபின்னர் ஆமிக்காரனைகங்களை வன்முறையாளர்கள் எரித்தவுடன் 

"எனது வீட்டையும் அங்கு சேர்த்துவைத்த நீல்களையும் எரித்தவர்கள் கிட்லரின் மன்நிலையில் உள்ளவர்கள்" எனக்கூறுகிறார்.

அப்போ யாழ் நூலகத்தை எரித்த தனது ச்ங்களப் பேரினவாதிகள் கிட்லரது மனநிலையில் உள்ளவர்கள் எனச்சொல்லாமல் சொல்கிறாரா.

கரயான் புத்தெடுக்கக் கருநாகம் குடிகொண்ட கதையாக ரணில் வந்து இப்போ அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

இப்போது சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார் ஆனால் அது நல்லதுக்குத்தான் என.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Elugnajiru said:

சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார்

  சாணக்கியனை கோத்துவிட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பார்க்கிறாரோ சுமந்திரன்? தானே சாணக்கியனை த. தே. கூட்டமைப்புக்குள் கொண்டு வந்ததாக கதை அடிபட்டது. வேலிக்கு வைச்ச முள் தன் காலில தைச்சு விடுமோ என்று அவர் பயப்படுவதில் தப்பில்லைதானே. அவர் செய்தது அவருக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். பாப்போம் சாணக்கியன் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

  தெரியவில்லை, யார் முந்துகிறார்களோ விழுத்தி, எழும்பி அவரே பிழைப்பார்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

என்ன சொல்லுறியள்

முள்ளிவாய்க்காலில் கொலைசெய்துபோட்டு ரத்தம் தோய்த கைகளை கழுவியும் கழுவாமலும் இருக்கும்போது மகிந்தவினதும் கொத்தாவினதும் கைகளை இறுக்கப் பற்றிப்பிடித்து தமிழர்க்கு எதிரான சிங்களத்தேசிய அரசியல் செய்த சாணாக்கியன் திறம்  எனச்சொல்லுறியளா?

இப்ப சம்பந்தர் புறப்பட்டிருக்கிறார் சிறி லங்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தேசிய பிரச்சனையைத் தீர்க்க ரணில் விடுத்த அழைப்பையொட்டி நாம் பேச்சுவார்த்தை செய்யத் தயார் என.

திரும்பவும் நாட்டைத் துண்டாடக் கடந்தகாலத்தில் யுத்தம் செய்தவர்களே இப்போது வெளிநாடுகளிலிருந்து போராட்டத்துக்கு உதவுகினம் என மீண்டும் புலிக்காச்சலைத் தொடங்க சாணாக்கியன் மகிந்தவுடன் தொடர்பில இருக்க சம்பந்த சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றப்புறப்பட சுமந்திரன் தனது நிகழ்சிநிரலைக் கைவிடாது தொடர .... இப்போது தெரிகிறதா இவங்கள் எல்லாரும் சிங்களத்தேசியத்துக்குத்தான் அரசியல் செய்கிறாஙள் என.

Link to comment
Share on other sites

9 hours ago, Elugnajiru said:

தலைமையே சிங்க கொடி பிடித்தவர்கள். பிரபாகரன் தன்னை  கொல்ல வந்தவர் என திருவாய்மலர்ந்தருளியவர். இனப்படுகொலை நடந்ததற்கு போதிய ஆதாரம் இல்லை என்றவர்கள். நான் நினைக்கிறேன் பணத்தை கொடுத்து மழுங்கடிக்க  பண்ணி உள்ளார்கள். இவ்வளவும் தெரிந்தும் மக்கள் இவர்களை தெரிந்துள்ளார்கள். யாரில் தவறு உள்ளது?
பல கொலைகளுக்கு பொறுப்பான சித்தார்த்தன் பற்றி ஒரு வரி கூடவா உங்களால் எழுத முடியவில்லை?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2022 at 19:40, Elugnajiru said:

போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களைப்பிடித்து உள்ள போட்டுட்டு ஒரு சிலருக்கு நியமன நாடாளுமன்ற உருப்பினர் பதைவைத்து அடக்கி  ராஜபக்ஸக்களை காப்பத்தப் புறப்படுட்டார்.

இஅரது மாமனார் தலைமையிலான அரசாங்கத்தில் யாழ் நூல் நிலையத்தை எரித்ததுக்கு எதுவும் சொல்லாத ரணில் தன்னுடைய வீட்டிலிருந்த ஆயிரக்கணக்கான புத்த குடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு செய்தபின்பு வரவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மந்தி புரியாணி போட்டுத்தின்னுவம் இப்ப அவசரப்படவேண்டாம் எனச்சொல்லுறார் ரணில். போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தை  ஆரம்பித்த்தபோது திண்ணை எப்ப காலியாகும் என சத்தம்போடாமல் இருந்துபோட்டு அதிகாரம் தனது கைக்கு வந்தபின்னர் ஆமிக்காரனைகங்களை வன்முறையாளர்கள் எரித்தவுடன் 

"எனது வீட்டையும் அங்கு சேர்த்துவைத்த நீல்களையும் எரித்தவர்கள் கிட்லரின் மன்நிலையில் உள்ளவர்கள்" எனக்கூறுகிறார்.

அப்போ யாழ் நூலகத்தை எரித்த தனது ச்ங்களப் பேரினவாதிகள் கிட்லரது மனநிலையில் உள்ளவர்கள் எனச்சொல்லாமல் சொல்கிறாரா.

கரயான் புத்தெடுக்கக் கருநாகம் குடிகொண்ட கதையாக ரணில் வந்து இப்போ அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

இப்போது சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார் ஆனால் அது நல்லதுக்குத்தான் என.

நல்ல கருத்துக்கள் பொக்ஸ் மைன்ட் 

1 hour ago, nunavilan said:

பல கொலைகளுக்கு பொறுப்பான சித்தார்த்தன் பற்றி ஒரு வரி கூடவா உங்களால் எழுத முடியவில்லை?

அதை சொன்னால் காணமல் போயிடுவார் 😄

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார். கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார். டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது. https://athavannews.com/2022/1303121
  • இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை  வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது. இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இந்த பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1303112
  • வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ பாலியல் வல்லுறவு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1303082
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.