Jump to content

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு

37 நிமிடங்களுக்கு முன்னர்
 
Therukural/Instagram

பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM

தான் எழுதி, உருவாக்கிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக 'தெருக்குரல்' அறிவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தெருக்குரல் அறிவு எழுதி, உருவாக்கிய Enjoy Enjaami பாடல், பல்வேறு இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

விழாவில் இந்தப் பாடலை பாடகி தீயும் மாரியம்மாளும் பாடினர். இந்தப் பாடல் ஆல்பமாக வெளிவந்தபோது அதில் இடம்பெற்றிருந்த தெருக்குரல் அறிவு இந்த விழாவில் இடம்பெறவில்லை. இந்தப் பாடல் நிகழ்த்தப்பட்ட தருணத்திலேயே, அறிவு அதில் இடம்பெறாதது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தப் பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து தெருக்குரல் அறிவு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "Enjoy Enjaami பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன். இது ஒரு அணி இணைந்து செய்த மிகப் பெரிய வேலை என்பதில் சந்தேகமில்லை. இதற்காக எல்லோரும் ஒன்றாக செயல்பட வேண்டுமென்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக அது வள்ளியம்மாளின் வரலாறு இல்லையென்றோ என்னுடைய முன்னோரான நிலமற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வரலாறு இல்லையென்றோ ஆகிவிடாது. என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் தலைமுறை தாண்டிய அடக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்தப் பாடலில் இருந்ததைப் போலவே.

தெருக்குரல் அறிவு

பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM

இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன. முன்னோர்களின் மூச்சை, வலியை, வாழ்க்கையை, அன்பை, எதிர்ப்பை, ஒட்டுமொத்தமாக அவர்களுடைய இருப்பைச் சுமந்துவரும் பாடல்கள். இவையெல்லாம் அழகிய பாடல்களாக உங்களுடன் பேசுகின்றன. ஒரு தலைமுறையின் ரத்தத்தையும் வியர்வையையும் விடுதலையளிக்கும் கலையின் பாடல்களாக மாறியிருக்கிறோம். அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை பாடல்களின் மூலமாக எடுத்துச் செல்கிறோம்.

நீங்கள் தூங்கும்போது உங்கள் சொத்தை யாராவது பறித்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Enjoy Enjaami என்ற இந்தப் பாடல், ஏ.ஆர். ரஹ்மானின் மாஜா நிறுவனத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை அறிவும் பாடகி தீயும் இணைந்து பாடியிருந்தனர். பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கைக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற தனது பாட்டி வள்ளியம்மாளின் கதையையே பாடலாக எழுதியிருந்தார் அறிவு. இந்தப் பாடல் வெளியானபோது, விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. யு டியூபில் தற்போதுவரை இந்தப் பாடல் 43 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. இசைக்கான செயலியான ஸ்பாட்டிஃபையில் இரு வாரங்களிலேயே 2 மில்லியன் தடவைகள் கேட்கப்பட்டது. இந்தியாவில் வெளியான இசை வீடியோக்களில் முதல் 10 வீடியோக்களுக்குள் இந்தப் பாடலும் இருக்கிறது.

தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாக சர்சை எழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக Rolling Stone Indiaவின் அட்டைப்படத்தில் பாடகி தீ, பாடகர் ஷான் வின்சென்ட் ஆகியோர் இடம்பெற, அறிவின் படம் விடுபட்டது. சர்ச்சைக்குப் பிறகு அறிவு இடம்பெறும்வகையில் ஒரு அட்டைப் படத்தை வெளியிட்டது Rolling Stone India.

இப்போது அறிவு வெளியிட்டிருக்கும் பதிவில், செஸ் ஒலிம்பியாடில் புறக்கணிக்கப்பட்டது குறித்தோ, அதற்குக் காரணமானவர்கள் என்றோ வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை.

அறிவு தற்போது அமெரிக்காவில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக அவருடைய கருத்துகள் எதையும் கூடுதலாகப் பெற இயலவில்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62374158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

அப்படி சொல்ல முடியமா என்ன?

இளையராஜா, எந்த அடி மட்டத்தில் இருந்து வந்து, தனது திறமையால் நம்மை எல்லாம் கட்டிப்போட்டார்....

ஆகவே.... திறமை.... அது திமிறிக்கொண்டு வெளியே வரும், வந்தே தீரும் என்பது எனது பார்வை.

தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

***

சிலர், குறை சொல்வார்கள். நெருங்கி போய் விசாரித்தால்.... குறித்த நபர் திறமையாளர் தான், சந்தேகமே இல்லை. ஆனால், அய்யோ.... அவருடன் வேலை செய்ய நான் பட்ட பாடு, நாய் பாடப்பாடு என்று அழுவார்கள். இவர் அப்படி ஒருவராக இருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

உதாரணமாக, சிறந்த நடிகர் கார்த்திக்..... படிப்பிடிப்புக்கு வந்தால், ரூமை பூட்டிக்கொண்டு, தண்ணி, வேறு.... என்று படப்பிடிப்புக்கு வெளியே வராமல் படுத்து விடுவார். சந்தையினை இழந்தார்..... 

அறிவு சொல்வது.... ஒரு பக்கம். அவர் புறக்கணிக்கப்படுவராகின், அதுக்கு என்ன காரணம் மறுபக்கம் வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

எத்தனை இளையராஜாவைக் கண்டுள்ளீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எத்தனை இளையராஜாவைக் கண்டுள்ளீர்கள்? 

ஒன்று போதாதா, என்ன?

மேலும் நான் எனது பார்வையை தான் சொன்னேன், அதில் தவறு இருக்கலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷ் நாராயணன் ட்வீட் பண்ணி உள்ளார்.

அறிவு, தான், தீ என்னும் இன்னுமொருவர் சேர்ந்தே உருவாக்கினோம். அவர் மட்டுமல்ல.

எனக்கான வரிகளுக்கு தீயும், அறிவின் இடங்களுக்கு நானும், இசையமைக்க, பாடலை அறிவு எழுதினார்.

இது ஒரு கூட்டு முனைவு. வருமானம் சமமாக பங்கிடப்படுகிறது.

அறிவு அமெரிக்காவில் இருப்பதால், இந்த நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை.

இறுதியாக, அதே பாடல் மெட்டில், 'வாங்கோ, வாங்கோ ஒன்னாகி' என்று அறிவை அழைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

தவறு. திருத்தி கொள்ளுங்கள்.

சும்மா பகிடியாகத்தான்.

இதில் எனக்கு உள்வீட்டு விடயங்கள் தெரியாது ஆனால் இந்த பாடலில் உழைப்பு கணிசமானது அறிவுடையது.  அவரை புறம்தள்ளி இவர்கள் இந்த பாடலில் அவருக்கு இடம் கூட கொடாமல் வெளியிட்டது பின்னர் திருத்தி கொண்டது சரியல்ல. பாடல் உரிமை அவரிடம் இல்லை என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்து பாடவேண்டும் என்பதல்ல ஆனால் ஒரு கிரெடிட் கூட கொடுக்காமல் மழுங்கடிப்பது அறிவினை ஒதுக்க எண்டே படுகிறது.

அடுத்தது அறிவு சொல்லும் ஜெய்பீம் அரசியல் சந்தோஸ் நாராயணன் வகையறாக்களை நெருடுவது வழமைதான். 

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

Castless Collection நிகழ்சியில் அனிருத்தை விருந்தினராக அழைத்து சமூக நீதி பாடல்கள் பாடி இருப்பார்கள். மிக தெளிவாக பாடலின் பொருளை பற்றி ஒரு வார்த்தை உதிர்க்காமல் பாட்டின் ஏனைய விடயங்களை பாராட்டி பேசி இருப்பார்.

அனிருத், வைஜி, கமல், பாலசந்தர், சங்கர், மணி ரத்னம், எஸ்வி சேகர், சுஜாதா, சோ, குருமூர்த்தி, மதுவந்தி, காயத்திரி ரகுராம் எல்லாரும் ஒரே சிந்தனையுள்ளோர்தான், வெளிபடும் விதம், நாசூக்கு வேறுபடும்.

சந்தோஸ்நாராயணன் வேறு மாதிரி இருப்பார் என எதிர்பார்த்தேன். அப்படி இல்லை போல தெரிகிறது.

இதில் ரஹ்மான் பங்கு அதிகம் இல்லை.

இது என் கருத்து மட்டுமே.

5 minutes ago, Nathamuni said:

சந்தோஷ் நாராயணன் ட்வீட் பண்ணி உள்ளார்.

அறிவு, தான், தீ என்னும் இன்னுமொருவர் சேர்ந்தே உருவாக்கினோம். அவர் மட்டுமல்ல.

எனக்கான வரிகளுக்கு தீயும், அறிவின் இடங்களுக்கு நானும், இசையமைக்க, பாடலை அறிவு எழுதினார்.

இது ஒரு கூட்டு முனைவு. வருமானம் சமமாக பங்கிடப்படுகிறது.

அறிவு அமெரிக்காவில் இருப்பதால், இந்த நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை.

இறுதியாக, அதே பாடல் மெட்டில், 'வாங்கோ, வாங்கோ ஒன்னாகி' என்று அறிவை அழைக்கிறார்.

யார் மீதும் எடுத்தவுடன் இனவாதி, சாதிவாதி என தூக்கி போடுவது தவறு. ஆனால் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை புறம்தள்ளவும் முடியாது.

சந்தோஸ்நாராயணன் இதை சுமூகமாக முடித்து வைப்பார் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

தவறு. திருத்தி கொள்ளுங்கள்.

சும்மா பகிடியாகத்தான்.

இதில் எனக்கு உள்வீட்டு விடயங்கள் தெரியாது ஆனால் இந்த பாடலில் உழைப்பு கணிசமானது அறிவுடையது.  அவரை புறம்தள்ளி இவர்கள் இந்த பாடலில் அவருக்கு இடம் கூட கொடாமல் வெளியிட்டது பின்னர் திருத்தி கொண்டது சரியல்ல. பாடல் உரிமை அவரிடம் இல்லை என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்து பாடவேண்டும் என்பதல்ல ஆனால் ஒரு கிரெடிட் கூட கொடுக்காமல் மழுங்கடிப்பது அறிவினை ஒதுக்க எண்டே படுகிறது.

அடுத்தது அறிவு சொல்லும் ஜெய்பீம் அரசியல் சந்தோஸ் நாராயணன் வகையறாக்களை நெருடுவது வழமைதான். 

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

Castless Collection நிகழ்சியில் அனிருத்தை விருந்தினராக அழைத்து சமூக நீதி பாடல்கள் பாடி இருப்பார்கள். மிக தெளிவாக பாடலின் பொருளை பற்றி ஒரு வார்த்தை உதிர்க்காமல் பாட்டின் ஏனைய விடயங்களை பாராட்டி பேசி இருப்பார்.

அனிருத், வைஜி, கமல், பாலசந்தர், சங்கர், மணி ரத்னம், எஸ்வி சேகர், சுஜாதா, சோ, குருமூர்த்தி, மதுவந்தி, காயத்திரி ரகுராம் எல்லாரும் ஒரே சிந்தனையுள்ளோர்தான், வெளிபடும் விதம், நாசூக்கு வேறுபடும்.

சந்தோஸ்நாராயணன் வேறு மாதிரி இருப்பார் என எதிர்பார்த்தேன். அப்படி இல்லை போல தெரிகிறது.

இதில் ரஹ்மான் பங்கு அதிகம் இல்லை.

இது என் கருத்து மட்டுமே.

மேலே, சந்தோஷ் கருத்தினை பார்த்தீர்களா?

எனக்கு, பாடல் தயாரிப்பு குறித்த உள் வீட்டு விடயங்கள் தெரியாது.

பாடலை முழுவதுமாக கேட்கவும் இல்லை.

ஆனால் ஒருவர் குறை சொல்லும் போது.... மறுபக்கம் வேறு கருத்து இருக்கும் என்று நினைத்தேன்.

இது சாதி பிரச்சனை போல தெரியவில்லை. பங்குப் பிரச்சனை போலவே படுகிறது. அதாவது, எனது வேலை கூட.... அல்லது பாடல் என்னது.... எனக்கு கூட பங்கு வேணும்....... 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மேலே, சந்தோஷ் கருத்தினை பார்த்தீர்களா?

எனக்கு, பாடல் தயாரிப்பு குறித்த உள் வீட்டு விடயங்கள் தெரியாது.

பாடலை முழுவதுமாக கேட்கவும் இல்லை.

ஆனால் ஒருவர் குறை சொல்லும் போது.... மறுபக்கம் வேறு கருத்து இருக்கும் என்று நினைத்தேன்.

இது சாதி பிரச்சனை போல தெரியவில்லை. பங்குப் பிரச்சனை போலவே படுகிறது. அதாவது, எனது வேலை கூட.... எனக்கு கூட பங்கு வேணும்....... 😜

அறிவுக்கு இது பெரிய காசு ஆனால் சந்தோசுக்கு இல்லை. ஆகவே பணம் காரணம் என நான் நினைக்கவில்லை.

சந்தோசின் அண்மைய பதிவு பற்றிய என் கருத்து மேலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அறிவுக்கு இது பெரிய காசு ஆனால் சந்தோசுக்கு இல்லை. ஆகவே பணம் காரணம் என நான் நினைக்கவில்லை.

சந்தோசின் அண்மைய பதிவு பற்றிய என் கருத்து மேலே.

ஓகே... என்சாமி.... சுமந்திரன் பொங்கிறார்.... என்னெண்டு பார்த்துட்டு வாறன்.... திண்ணயில லிங்க்...🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

இளையராஜா, ஜனாதிபதி ஆகும் கனவில், துதி பாடினார் என்பது எனது கணிப்பு. அதனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாடலை கண்டுகொள்ளவில்லை.

அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான், இப்போது எம்பியாகுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

உண்மைதான். அது அவரின் அபரிமிதமான ஆற்றலின் விளைவு.

ஆனாலும் தனித்து என்றும் சொல்ல முடியாது அவரின் அண்ணர் மற்றும் பாரதிராஜா உட்பட பலரும் அவருடன் கூடவே பயணித்து ஒருவரை ஒருவர் ஆதரித்து கொண்டார்கள்.

ஆனால் எனது பார்வையில் ஆரம்பம் முதலே அவர் தன்னை தலித் என்று சொல்வதை விரும்பாதவராக இருந்தார். கிட்டதட்ட மைக்கேல் ஜாக்சன் தோல் நிறத்தை மாற்றியது போல ஒரு மனநிலை.

ஒருவகையான சுயம் மறுத்தல். புதிதாக மதம் மாறுவோருக்கு இருக்கும் மனநிலை.

பாரதிராஜ கூட சில வருடங்கள் முன் “அவனுக்கு எப்படியாவது பிராமணன் ஆகிவிட வேண்டும் என்ற தவிப்பு”என்று பொருள்பட சொல்லி இருந்தார்.

12 minutes ago, Nathamuni said:

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

10 minutes ago, குமாரசாமி said:

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

விளக்கம் மேலே. மோடி துதி இப்போதுதான் பாடினார் ஆனால் அவர் எப்போதும் அந்த மனநிலையில்தான் இருந்தார் என்பது என் அவதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனாலும் தனித்து என்றும் சொல்ல முடியாது அவரின் அண்ணர் மற்றும் பாரதிராஜா உட்பட பலரும் அவருடன் கூடவே பயணித்து ஒருவரை ஒருவர் ஆதரித்து கொண்டார்கள்.

அவரின் அண்ணா பாஸ்கர் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். பாரதிராஜா நல்ல இயக்குனர்தான். ஆனாலும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையுமே  பாரதிராஜாவின் படங்களுக்கு 90 வீதம் மெருகூட்டியது. இளையராஜாவின் விலகலுக்கு பின்  பாரதிராஜாவின் திரைப்படங்கள் பெரிதாக எடுபடவில்லை.பாடல்களும் பெரிதாக அமையவில்லை.

6 minutes ago, goshan_che said:

ஆனால் எனது பார்வையில் ஆரம்பம் முதலே அவர் தன்னை தலித் என்று சொல்வதை விரும்பாதவராக இருந்தார். கிட்டதட்ட மைக்கேல் ஜாக்சன் தோல் நிறத்தை மாற்றியது போல ஒரு மனநிலை.

சாதியே இல்லையென நினைப்பவன் நான். என்னை இங்கே கறுப்பன் என சில வெள்ளைகள் சொல்லும் போது மனம் நெருடும். பாதிப்பு வந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.

9 minutes ago, goshan_che said:

ஒருவகையான சுயம் மறுத்தல். புதிதாக மதம் மாறுவோருக்கு இருக்கும் மனநிலை

சுயம் வேறு. மதம் மாறுவது வேறு.

10 minutes ago, goshan_che said:

பாரதிராஜ கூட சில வருடங்கள் முன் “அவனுக்கு எப்படியாவது பிராமணன் ஆகிவிட வேண்டும் என்ற தவிப்பு”என்று பொருள்பட சொல்லி இருந்தார்.

அதில் என்ன தவறு??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இளையராஜா, ஜனாதிபதி ஆகும் கனவில், துதி பாடினார் என்பது எனது கணிப்பு. அதனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாடலை கண்டுகொள்ளவில்லை.

அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான், இப்போது எம்பியாகுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

இதெல்லாம் பாரதீய ஜனாதா கட்சியின்  அரசியல் சித்து விளையாட்டுக்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவரின் அண்ணா பாஸ்கர் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். பாரதிராஜா நல்ல இயக்குனர்தான். ஆனாலும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையுமே  பாரதிராஜாவின் படங்களுக்கு 90 வீதம் மெருகூட்டியது. இளையராஜாவின் விலகலுக்கு பின்  பாரதிராஜாவின் திரைப்படங்கள் பெரிதாக எடுபடவில்லை.பாடல்களும் பெரிதாக அமையவில்லை.

இதில் நான் சொல்ல வருவது இளையராஜ திறமைசாலி இல்லை என்றோ அல்லது ஏனையோர் அவரை திறமைக்கு மேலாக தூக்கி விட்டார்கள் என்பதோ அல்ல.

இளையராஜா முதல் பாடலுக்கு இசை அமைக்க முன்னம் பல படிகளைதாண்டி வந்தார் - அதில் பலது அவரின் அண்ணர் போட்டது - அவை இல்லாவிடின் முதல்பட வாய்ப்பே இல்லாமல் அவர் வாழ்க்கை போயிருக்கலாம் என்பதை அவரே சொல்லியுள்ளார்.

ஆகவே ஒருவரின் எழுச்சியை அவரின் முதலாவது வெற்றியில் இருந்து பார்த்து அவர் சுயம்பு என சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்லுவது.

ஆனால் இளையராஜாவுக்கு இருக்கும் “அடிமை மனநிலை” அவருக்கு பலகாலமாகவே இருந்தது - அதன் பலனாக அவர் தன்னை பிராமணரின் எதிரி ஆக்காமல் காத்து கொண்டார்.

ஒரு நாளும் ஜெய்பீம் என்ற பதத்தை உதிர்காத, ஜனனி, ஜனனி என உருகும் ராஜாவையும், மேடைக்கு மேடை இந்துதுவாவை விமர்சிக்கும் அறிவையும் பிராமணிய மேலதிக்க சிந்தனை ஒரே மாதிரி அணுகும் என்ற ஒப்பீடு முற்றிலும் தவறானது என்பதே என் வாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

விளக்கம் மேலே. மோடி துதி இப்போதுதான் பாடினார் ஆனால் அவர் எப்போதும் அந்த மனநிலையில்தான் இருந்தார் என்பது என் அவதானம்.

நீங்கள் முதலில் குறிப்பிட்டது இளையராஜா துதி பாடித்தான் பல உயரங்களை தொட்டார் என்பது. அதற்கு எனது பதிலின் சாரம்சம் அவர் ஏற்கனவே பல உயரங்களை தொட்டு விட்டார் என்பது. அவர் உயரத்திற்கு வந்த பின்னரே மோடி அரசிற்கும் அவரை தெரிந்ததது.மகரிசிக்கும் அதே நிலைதான்

8 minutes ago, goshan_che said:

ஆகவே ஒருவரின் எழுச்சியை அவரின் முதலாவது வெற்றியில் இருந்து பார்த்து அவர் சுயம்பு என சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்லுவது.

அப்படி பார்த்தால் கங்கை அமரனுக்கும் பங்குண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

இல்லை நான் அப்படி எழுதவில்லை.

நீங்கள் அப்படி வாசித்கிருக்க கூடும் (மேலே பார்க்கவும்).

மோடிக்கும் பிஜேபி க்கும் ராஜாவை இப்போதான் தெரியும் (ராஜா உயரங்களை தொட்ட போது பிஜேபி க்கு டெல்லியில் 1 சீட் என நினைக்கிறேன்). 

ஆனால் “மச்சான பார்தீங்களா” காலத்திலேயே இளையராஜா “ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே” என பாடி இருந்தால், தமிழ் சினிமாவில் பரவி கிடக்கும் பிராமண லாபி, அவரை அடுத்த படத்துக்கு நகர விட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.

அந்த காலத்திலேயே அவாளுக்கு அடங்கி போகும், பிராமணரை உயர்வாக சித்தரிக்கும், இந்துவாக அடையாளபடுத்தி, மறந்தும் தலித் அடையாளத்தை சொல்லாமல் விட்ட அணுகுமுறையை ராஜா எடுத்திராவிடால், மாறாக தலித் விடுதலை பற்றி, சமூக நீதி பற்றி அவர் பேசி இருந்தால் - இப்போ அறிவிக்கு நடப்பது முதல் படத்தின் பின்னே அவருக்கும் நடந்திருக்கும்.

“பிழையான சாதியில்” பிறந்த எத்தனையோ ஏகலைவர்களை விரைவெட்டி விரட்டிய துறை தமிழ் சினிமா.

ஆகவே ஆரம்பம் முதலே ராஜாவின் பிராமண துதிபாடும் அணுகுமுறை அவரை பல உயரங்களை அடைய உதவியது.

இந்த அணுகுமுறை இல்லாவிட்டால் எவ்வளவு திறமை இருந்தாலும் அவர் வெட்டி விடப்பட்டிருப்பார்.

ராஜாவுக்கு மட்டும் அல்ல. ரஜனிக்கும் இது பொருந்தும். 

14 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் முதலில் குறிப்பிட்டது இளையராஜா துதி பாடித்தான் பல உயரங்களை தொட்டார் என்பது. அதற்கு எனது பதிலின் சாரம்சம் அவர் ஏற்கனவே பல உயரங்களை தொட்டு விட்டார் என்பது. அவர் உயரத்திற்கு வந்த பின்னரே மோடி அரசிற்கும் அவரை தெரிந்ததது.மகரிசிக்கும் அதே நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால் “மச்சான பார்தீங்களா” காலத்திலேயே இளையராஜா “ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே” என பாடி இருந்தால், தமிழ் சினிமாவில் பரவி கிடக்கும் பிராமண லாபி, அவரை அடுத்த படத்துக்கு நகர விட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.

கவனிக்க.......
இளையராஜா  புரட்சி செய்ய சினிமாவிற்கு வரவில்லை என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கவனிக்க.......
இளையராஜா  புரட்சி செய்ய சினிமாவிற்கு வரவில்லை என நினைக்கின்றேன். 

நிச்சயமாக இல்லை. 

அவர் அப்படி செய்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

அவர் சினிமாவுக்கு வந்தது தன் திறமையை வெளிகொணர, அதன் மூலம் பொருள், பலம், புகழ் ஈட்ட.

ஆனால் அதை அவர் அடைய அவரின் தலித் அடையாளம், நிச்சயம் ஒரு தடையாக இருந்திருக்கும். அவர் சமூக புரட்சி அரசியல் செய்திருந்தால் அடித்தே நூத்திருப்பார்கள்.

ஆகவே நான் ஆரம்பத்தில் சொன்னபடி,

இளையராஜ ஒரு விதிவிலக்கு. “பிராமண சேவகன்” மனநிலையை வெளிகாட்டிய அவரை பிராமண லாபி வளர விட்டது என்பதை வைத்து “ஜெய்பீம்” அரசியல் செய்யும் அறிவையும் அதே போல வளரவிடும் என சொல்ல முடியாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

பெரியாரின் திராவிட/திராவிட மொடல் நாட்டில் சாதி இன்னும் இருக்கா? 

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

இளையராஜா மட்டுமா?

சினிமாவில் பிராமணர் எங்கே ஆதிக்கம் செலுத்தினார்கள்?

கே பாலசந்தர், விசு தவிர, கருணாதி முதல், எம்ஜிஆர், சிவாஜி, மெய்யப்ப செட்டியார், பாரதிராஜா, பாக்யராஜ், பா ரஞ்சித் என்று அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் லிஸ்ட் அதிகமே.... 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.