Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள்  — கருணாகரன் — 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள்

தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள் 

             — கருணாகரன் — 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம். மக்களுக்கு வாழ்க்கைச் சுமையாக. ஆட்சியாளருக்கு அரசியல் நெருக்கடியாக, ஆட்சிச் சுமையாக. 

அதனால் அவர்கள் தீராத பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்குள் மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றிருப்பது ஒரு பெரிய கூட்டம். அது வணிகத்தரப்பாகும். 

முன்னெப்போதும் பெற்றிராத லாபத்தை இந்த நெருக்கடிக் காலத்தில் வர்த்தகர்கள் பெற்றிருக்கின்றனர். ஆம், அவர்கள் மட்டுமே. இன்னும் அவர்கள் லாபத்தைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த கொடை – வரப்பிரசாதமாகும். 

ஏனென்றால் அவர்கள் வணிகத்தில் கேள்விக்கிடமில்லாத வகையிலான அதிகாரத்தை மிக உச்சமாகப் பெற்றிருக்கிறார்கள். எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம். விற்காமல் பதுக்கலாம். பதுக்கிய பின் கறுப்புச் சந்தையை உருவாக்கலாம். யாரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் அரசாங்கத்தை நோக்கியே கைகளை நீட்டுவார்கள். அப்படித்தான் செய்கிறார்கள். அனைத்தும் அரசின் தவறுகளே தவிர, தங்களுடைய தவறுகள் என்று ஒரு போதுமே சொல்லமாட்டார்கள். 

யுத்த காலத்தில், யுத்தம் நடைபெற்ற இடங்களில் கூட இந்த மாதிரி எல்லை மீறிய, கட்டற்ற, பொறுப்பற்ற, இதயமே இல்லாத சிறுமைத்தனமான வணிகம் நடைபெறவில்லை. அப்பொழுது ஓரளவுக்கு மக்களைக் குறித்தும் சமூகத்தைக் குறித்தும் சிந்திக்கும் ஒரு போக்கு, ஒரு தன்மை இருந்தது. அதை விட அன்று இவற்றைக் கண்காணிப்பதற்கான அதிகாரத் தரப்புகளும் (அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்க நிர்வாகமும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் நிர்வாகமும்) இருந்தன. 

இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியதைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முற்பட்டது வர்த்தகத் தரப்பு. அதன் இயல்பே அதுதான். சந்தர்ப்பம் பார்த்துத் தவித்த முயலை அடிப்பது. யுத்தத்தின்போதும் இடையில் புலிகளுக்கும் அரசுக்கும் சுழித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தரப்பு இப்படிச் செய்ததுண்டு. இதனால் பாவனையாளர்கள் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாவனையாளர் நலன் பேணுகை, பாவனையாளர் பாதுகாப்பு என்பதெல்லாமே இல்லாது போய்விட்டது. இது மிகப் பாதகமான ஒரு நிலையாகும். மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குத்தான் இதன் அபகீர்த்தி போய்ச் சேரும். காரணம், தங்கள் தவறுகளையும் குற்றங்களையும் மறைப்பதற்காக அவர்கள் அரசாங்கத்தையே காண்பிக்கிறார்கள் –முன்னிறுத்துகிறார்கள். இது எவ்வளவு நுட்பமான தந்திரோபயம்? எவ்வளவு கடை கெட்ட அயோக்கியத்தனம்! ஆகவே அரசாங்கத்துக்கும் இது பாதகமே. 

இங்கே நாம் பார்க்க வேண்டியது, செயலற்றுப்போன அரசுக்கு நிகராகவே சமூக அக்கறையும் உறை நிலைக்குப் போய் விட்டது. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள், மக்கள் அமைப்புகளும் செயலற்று விட்டன. இதனால் நாட்டில் –அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியையும் கட்டமைப்புச் சிதைவையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தியிருக்கும் வணிகத்தரப்பைக் குறித்துக் கவனம் செலுத்துவதற்கோ தவறுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ யாரும் அக்கறைப்படவில்லை. ஆகவே அரசும் சரி, பொது அமைப்புகள், ஊடகங்கள், அரசியற் கட்சிகள், தலைவர்கள் உட்பட எந்தத்தரப்பும் சரி இதைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. முக்கியமாக இங்கே கண்டிக்கப்பட வேண்டியவர்கள், அரசியற் தரப்பினார். அதிலும் மக்கள் பிரதிநிதிகள். ஆனால் அவர்கள் இதைக்குறித்து வாயே திறக்கவில்லை. 

பதிலாக இவர்களுடைய கரிசனை முழுவதும் அரசியல் நெருக்கடியிலேயே குவிந்திருக்கிறது. ஆளை ஆள் குற்றம் சுமத்திச் சொறிந்து கொள்கிற, அந்தச் சொறிதலில் இன்பம் காணுகிற, நன்மைகளைத் தேடுகிற போக்கு இது. உண்மையில் இது நாட்டுக்கும் நன்மையைத் தாராது. மக்களுக்கும் நன்மையைத் தராது. 

இதனால் பகற் கொள்ளை என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்த அநீதி –அப்பட்டமான கொள்ளையடிப்பு– வெளிப்படையான சுரண்டல் நடக்கிறது. இதன் காரணமாகப் பல லட்சம் மக்கள் தினமும் – ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் குறித்து எங்கும் முறையிடவும் முடியாது. யாரிடத்திலும் பேசவும் முடியாது. அந்தளவுக்கு நாடு இறுகிப் போயுள்ளது. அல்லது எல்லாமே சீரழிந்து விட்டன. இது பெருந்துயரம். 

அந்நியச் செலாவணியான டொலர் பிரச்சினை –தட்டுப்பாடு – வந்தபோது பொருட்களின் இறக்குமதியில் தடங்கல் அல்லது தடை ஏற்பட்டது. இதனால் சட்டெனப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியது. பதுக்கல்கள் நிகழ்ந்தன. ஆகவே இயல்பாகவும் செயற்கையாகவும் உருவாக்கப்பட்ட பொருள் தட்டுப்பாட்டில் படபடவென பொருட்களின் விலை ஏறியது. அல்லது விலை ஏற்றப்பட்டது. கேள்விகள் அதிகரிக்கப்படுவதற்கு ஏற்றமாதிரி சந்தையை வணிகச் சமூகம் தன்கைகளில் முழுதாகவே எடுத்துக்கொண்டது. 

இது எப்படி நடந்தது? 

இதற்குப் பிரதான காரணம், பதுக்கலைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ அதற்குப்பொறுப்பான அரச நிர்வாகத் தரப்பு –விலைக் கட்டுப்பாட்டுச் சபை உள்பட அனைத்துத் தரப்பும் தவறியதேயாகும். 

ஆரம்பத்தில் சில அதிரடி நடவடிக்கைகள் அங்குமிங்குமாக மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் அதையும் கடந்து அல்லது அவர்களை உச்சிக் கொண்டு தமது கைங்கரியத்தைக் காட்டத் தொடங்கினர் வியாபாரிகள். இறுதியில் வர்த்தகர்களே வெற்றியீட்டினர். இரண்டு மூன்று மாதங்களில் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களோ கேட்கக் கூடியவர்களோ இல்லை என்ற அளவுக்கு வளர்ச்சியடைந்தனர். இப்பொழுது இவர்கள் மாபெரும் மாஃபியாக்களாகிவிட்டனர். இது பெரு லாபத்தை வணிகச் சமூகத்துக்கு அளித்துள்ளது. 

பதுக்கலைக் கட்டுப்படுத்தவில்லை என்ற நிலையில் அதில் ருசிப்பட்டவர்கள் அடுத்தாக விலையை ஏற்றத் தொடங்கினார்கள். முதலில் நாளுக்கு நாள் ஏறிய  -ஏற்றப்பட்ட விலை பின்னர் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என்றானது. இது மேலும் வளர்ச்சியடைந்து மணித்தியாலங்களுக்கிடையில் வேறுபடும் அளவுக்கானது. இப்பொழுது நொடிக்கொரு விலை என்றாகிவிட்டது. 

இதை எதிர்க்க முடியாத நிலைக்குள்ளாகினர் மக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் எப்படியாவது பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டம். இல்லையென்றால் தேவைக்கதிகமாக அலைந்து அதிக சிரமங்களைப் படவேண்டும். சிலவேளை குறித்த பொருளைப் பின்னர் பெற்றுக்கொள்ளவே முடியாது என்றும் ஆகிவிடும். 

அதனால் எப்படியோ என்ன விலைக்கோ கிடைக்கின்ற பொருளைப் பெற்றுக்கொள்வோம் என்ற முடிவுக்குப் பலரும் வந்தனர். இதை மேலும் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியது வணிகத் தரப்பு. 

இந்த வளர்ச்சி இன்று எல்லா இடங்களிலும் உருவாகி மனச்சாட்சிக்கே விரோதமான அளவுக்குள்ளது. மக்கள் தங்களுடைய கொள்வனவுச் சக்திக்கு அப்பால் பொருட்களைப் பெற முடியாமல் திணறுகின்றனர். இவ்வளவுக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏற்கனவே கையிருப்பில் இருந்தவை. அல்லது இங்கே களஞ்சியங்களில் இருந்தவையாகும். 

உதாரணமாக, சைக்கிள்கள், வாகன உதிரிப்பாகங்கள், துணி மற்றும் உடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், மின் உபகரங்கள், மின்சாரப் பொருட்கள், மரப் பொருட்கள் என இந்தப் பட்டியல் நீளும். 

எரிவாயு, பெற்றோல், சீமெந்து, உரம், அரிசி, சீனி, மா, பருப்பு மற்றும் சில உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வது தவிர்க்க முடியாதது. அவை அவ்வப்போது இறக்குமதி செய்யப்படுகின்றவை. அவற்றின் விலையை அரசாங்கமே அறிவித்தது. அல்லது அதற்குரிய நிறுவனங்கள் அறிவித்தன. 

ஏனையவை அப்படியல்ல. ஆரம்பத்தில் – மூன்று மாதங்களின் முன்பு சைக்கிளொன்றின் விலை 30 ஆயிரமாக இருந்தது. இப்பொழுது தொண்ணூறு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது எப்படி ஏற்பட்டது?உதிரிப்பாகங்களின் விலையும் அப்படித்தான். முதல்நாள் இரவு ஒரு விலை. மறுநாள் காலை அதே கடையில், அதே பொருள் வேறு விலையில் – கூடிய விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன நியாயம் சொல்ல முடியும்? 

இந்த அப்பட்டமான எல்லை மீறலுக்கு, அறம் மீறலுக்கு அளவே இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாட்டிலே ஆட்சியாளர்களின், பெருந்தலைவர்களின் ஊழல், கொள்ளை லாபமீட்டல், சமூக விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு எதிராக ஒரு பக்கத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

மறுபக்கத்தில் அத்தகைய நடவடிக்கைகள் சத்தமின்றி –அச்சமின்றி நடந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோத்தபாயவுக்குப் பதிலாக ஊரெல்லாம் பல கோத்தபாயக்கள் உருவாகி விட்டனர். ராஜபக்ஸக்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்றுதானே அர்த்தம்! 

ஆட்சியாளர்கள் மட்டும் தவறிழைக்கவில்லை. நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும்தான் தவறிழைக்கின்றனர். கொள்ளையடிக்கின்றனர். மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர். 

இதைத் தெரிந்து கொண்டும் பல அரசியற் தலைவர்களும் எதையும் காணாத மாதிரியே இருக்கின்றனர். இறுதியில் எரிபொருளைக் கூடப் பதுக்கி கறுப்புச் சந்தையில் அதை விற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏகப்பட்ட நெருக்கடிகள் உருவாகின. இதொரு பெரிய பிரச்சினையாக இன்று ஆகி விட்டது. 

இதிலே வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது 450 ரூபாய்க்கு விற்கப்படும் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு நான்கு ஐந்து அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் ரூபாய்ச் சைக்கிள் ஒரு லட்டம் ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு யாருமே இல்லை. 

இது தனியே சைக்கிளுக்கு மட்டுமானதல்ல. அனைத்துப் பொருட்களுக்குமான பிரச்சினையே. 

மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் தங்கள் உடலையும் உயிரையும் அர்ப்பணித்தது, அர்ப்பணிக்கின்றது ஒரு தரப்பு. இன்னும் தேசத்தின் நன்மைகளுக்காக, சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றனர் பலர். இந்த மாதிரியானவர்களின் மத்தியில் இவர்களோ – இந்தக் கொள்ளையர்களோ எந்த விதமான மனச்சாட்சியும் இல்லாமல் அறாவிலையில் பொருட்களை விற்கிறார்கள். கண்முன்னே கொள்ளையடிக்கிறார்கள். 

இதைப்பற்றி நமது சமூகத்தின் அக்கறை என்ன? பதில் என்ன? இதற்கான நடவடிக்கை என்ன?இதைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதற்கான தண்டனையை எப்படி, யார் வழங்குவது? 

உண்மையில் ஒரு இடர் காலம் வரும்போது அதில் அனைத்துத் தரப்பும் இணைந்து நின்று ஆளுக்காள் உதவியாக, ஆறுதலாக, துணையாக இருக்க வேண்டும். அப்படித்தான் புலம்பெயர் சமூகம் இன்று பேருதவிகளைச் செய்து வருகின்றது. அது போர்க்காலமாக இருக்கலாம். போருக்குப் பிந்திய – மீள் குடியேற்ற காலமாக இருக்கலாம். சுனாமி, வெள்ளப்பெருக்கு, கொரோனா போன்ற பேரிடர் காலமாக இருக்கலாம். எந்த நெருக்கடியிலும் பேராறுதலை அளித்துக் கொண்டிருக்கிறது புலம்பெயர்ந்த சமூகம். 

உள் நாட்டிலும் பலரும் பல அமைப்புகளும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இப்படியெல்லாம் இருக்கும்போது எந்தக் கூச்சமும் இல்லாமல் காலநேரம் பார்த்துத் தவிச்ச முயல் அடிப்போரை, அநீதி இழைப்போரை நாம் மன்னிக்கவே கூடாது. பாரதியார் சொன்னதைப்போல பாதகம் செய்வோரைக் கண்டால் நாம் பயந்துவிடக்கூடாது, அவர்கள் முகத்தில் காறி உமிழவே வேண்டும்.  
 

https://arangamnews.com/?p=7926

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

ஊழலும் சமூக விரோத செயல்களும் எல்லாவகையான இடங்களிலும் ஏதோவொரு வடிவில் தொடர்வதற்கு இலங்கையின் இன்றைய நிலை உதவுவதைத் தான் அங்கே போகும் சமயங்களில் உணர முடிந்தது. 

Link to comment
Share on other sites

எண்ணை நிறுவனங்கள் கடந்த காலத்தை விட தற்போது இரண்டு மடங்கு லாபம் பெறுகின்றார்கள். இது அரசுகளுக்கு தெரியாமல் நடக்கும் என நான் எள் அளவும் நினைக்கவில்லை.
ஊசி போன இடத்தை தேடுகிறோம் உலக்கை போன இடத்தை தேடாமல்.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் அவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.ஆசிரியரின் கையில் இருந்த பிரம்பு பறிக்கப்பட்டதால்தான் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்துக்கு பரவியுள்ளன என்று ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.கல்வியதிகாரிகளுக்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் வகுப்பெடுக்கும் உயரதிகாரிகள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டு இப்பொழுது போதைப்பொருள் பாவனை தொடர்பான புள்ளி விபரங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. இந்தக்கருத்துக்கள் எல்லாமே தொகுப்பாக கூறவருவது ஒரு விடயத்தைத்தான். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டித்தால் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்தலாம் என்பதுதான். பாடசாலைகளில் மாணவர்கள் மீது உடல்ரீதியாக அல்லது உளரீதியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் 17ஆம் இலக்க சுற்றுநிருபம் 2005ஆம் ஆண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அப்பொழுது கல்வியமைச்சின் செயலாளராக கலாநிதி.தாரா டி மெல் இருந்தார். அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 23 ஆம் இலக்கச் சட்டத்தின்படி நீதிமன்றங்களில் சரீரத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதன் விளைவே மேற்படி சுற்றுநிருபம் என்று கூறப்படுகிறது.மேற்படி சுற்றுநிருபமானது 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் மீளவலியுறுத்தப்படுகிறது. இந்தச்சுற்றுநிருபமானது ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போடுகிறது என்ற ஒரு விமர்சனம் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் ஏன் பெற்றோர் மத்தியிலும்கூட உண்டு. கண்டிப்பான ஆசிரியரே நல்லாசிரியர் என்று அபிப்பிராயம் தமிழ்மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.கண்டிப்பான ஆசிரியர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.நாட்டில் உள்ள கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது.பரீட்சை மையக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவரே கெட்டிக்கார ஆசிரியர். அந்த சிறந்த பெறுபேறுகளை அவர் எப்படியும் பெற்றுக் கொடுக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள்.இதனால் சிறந்த கல்விப் பெறுபேறுகளுக்காக அதிகம் பலியிடப்படுவது மனித உரிமைகள் என்பதனை பெரும்பாலான பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தேசியமட்ட பரீட்சைகளை நோக்கி மாணவர்களை தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இப்படிப்பட்டதோர் கல்விச்சூழலில் தண்டனை நிறுத்தப்பட்டதால் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் அதிகரிக்கிறது என்ற கூற்று மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும்.சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் கஞ்சா பாவிக்கும் தனது 15 வயது மகனை அவருடைய தாயார் வீட்டில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய கண்களுக்குள் மிளகாய்தூளைத் தூவினார்.இது ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. இது போன்ற தண்டனைகள்மூலம்தான் மாணவர்களை மட்டுமல்ல பாடசாலை நீங்கிய இளையவர்களையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. ஆனால் தனியே தண்டனைகளால் மட்டும் இந்த விவகாரத்தை கையாள முடியாது.ஏனெனில் பிரச்சினையின் வேர்கள் மிகஆழமானவை.அந்த வேர்களைத் தேடிப்போனால் யாரைத் தண்டிப்பது என்ற கேள்வி எழும். நுகர்வோரை தண்டிப்பதா?அல்லது விற்பனையாளர்களைத் தண்டிப்பதா?அல்லது திட்டமிட்டு மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வலைப்பின்னலைக் கட்டியெழுப்பும் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகளைத் தண்டிப்பதா? யாரைத் தண்டிப்பது? இந்தப்பிரச்சினையின் சமூகப்பொருளாதார,அரசியல் பின்னணி மிகஆழமானது. 2009 க்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, முதலாவதாக, தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று நிலவுகிறது. இரண்டாவதாக ,உலகில் அதிகம் படைமயமாக்கப்பட்ட ஒரு அரசியல் ,இராணுவ சூழலுக்குள் தமிழ்ச்சமூகம் வாழ்கிறது. நாட்டின் படைக்கட்டமைப்பின் மொத்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு= கிழக்கில் காணப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு. மூன்றாவதாக ,மேற்சொன்ன இராணுவ மயப்பட்ட சூழல் காரணமாக படைத்துறை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ச்சமூகம் காணப்படுவது. நாலாவதாக, ஆயுத மோதல்களுக்கு முன்னிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து போய்விட்டது.ஆயுதப் போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டது. 2009 இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து, இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் விழுமியங்களை மீளுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது. ஐந்தாவது ,உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக இளைய தலைமுறை கைபேசி செயலிகளின் கைதியாக மாறியிருப்பது. மேற்கண்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும்.தமிழ்மக்களைத் தொடர்ந்தும் அரசியல்ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் எனவே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது தனியே தண்டனைகளால் மட்டும் சாத்தியமான ஒன்று அல்ல.அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும். முதலாவதாக,சமூகப் பிரதிநிதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள்,மதப் பெரியோர்கள்,புத்திஜீவிகள்,கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லாத் தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக அதை முன்னெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் தலைமைதாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை பாடசாலைகள் வரை வந்துவிட்டது.போதைபொருள் பாவனை மட்டுமல்ல வாள் வெட்டுக் கலாசாரத்தின் பின்னால் உள்ள உளவியலைத் தீர்மானிக்கும் அம்சங்களும் மேற்கண்டவைதான். இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து,அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி,விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மதகுருக்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்தக்கூட்டுப் பொறுப்பை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? பாடசாலைகளில் தண்டனை நீக்கப்பட்டதை குறித்து முறையிடுகிறோம். ஆனால் ஒரு காலம் எமது பிள்ளைகள் தனியாக பள்ளிக்கூடங்களுக்கு போனார்கள்.டியூட்டரிகளுக்கு போனார்கள்.பெற்றோர் அவர்களை காவிச் செல்லும் ஒரு நிலைமை இருக்கவில்லை.ஆனால் இப்பொழுது எல்லா அம்மாக்களும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகளை பூனை குட்டியைக் காவுவது போல இரவும் பகலும் காவுகிறார்கள்.ஏன் காவுகிறார்கள்?பிள்ளைகளை ஏன் தனியாக விட முடிவதில்லை? ஒரு பாடத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் பிள்ளை படிக்கிறது. அவ்வாறு படிப்பதற்கே நாள் போதாது.இது சுயகற்றலை பாதிக்காதா?அப்படிப் படித்து மேலெழுந்த பிள்ளை என்னவாக வருகிறது?கல்வி பற்றிய தமிழ்ச்சமூகத்தின் அளவுகோல்கள் சரியானவைகளா?இந்த கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பட்ட ஆளுமைகள் எப்படிப்பட்டவை? இதைக் குறித்த ஒரு சரியான மீளாய்வு தமிழ்ச் சமூகத்திடம் உண்டா? இல்லை.கல்வி தொடர்பாகவும் விழுமியங்களை மீளுருவாக்குவது தொடர்பாகவும்,சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூட்டுத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.அவற்றை வகுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு 13 ஆண்டுகளை கடந்துவந்து விட்டோம்.நாங்களாக சுயகவசங்களை உருவாக்கத் தவறிவிட்டோம்.அந்த வெற்றிடத்தில்தான் போதைப்பொருளும் வாள்களும் நுழைகின்றன. எனவே பிரச்சினையின் வேர்களைத் தேடிப்போனால் முழுச்சமூகமும் அதன் கூட்டுப்பொறுப்பை இழந்து விட்டதைக் காணலாம். அண்மையில் எரிபொருள் வரிசைகளில் நின்றபோது நாங்கள் ஒரு சமூகமாகத் தோல்வியடைந்தமை தெரியவில்லையா? உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வெளியாள் போதைப்பொருளை,வாளைக் கொடுக்கிறான் என்றால் உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ ஒரு இடைவெளி இருக்கிறது என்று பொருள்.உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ தொடர்பாடல் அறுந்துவிட்டது என்று பொருள்.நீங்கள் பிள்ளையோடு மேலும் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று பொருள்.பிள்ளைகளை இரவு பகலாக வகுப்புகளுக்கு காவி செல்கிறீர்கள்.ஆனால் பிள்ளைகளோடு மனம் விட்டு கதைக்கின்றீர்களா? பூனை குட்டியைக் காவுவது போல பிள்ளைகளைக் காவுகிறோம். சிறந்த கல்விப் பெறுபேறுக்காக மனித உரிமைகளைப் பலிகொடுக்கத் தயாராக இருக்கிறோம்.அந்தக்கல்விப் பெறுபேறுகளின் விளைவாக நாங்கள் உருவாக்கிய ஆளுமைகள் எத்தகையவை என்ற கேள்வியை எப்பொழுதாவது எங்களை நோக்கி கேட்டிருக்கிறோமா? இதுதான் பிரச்சினை.ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப அரசியல்வாதிகளால் முடியவில்லை.சமூகச் செயற்பாட்டாளர்களால் முடியவில்லை, சமயப் பெரியார்களால் முடியவில்லை, புத்திஜீவிகள்,படைப்பாளிகள், ஊடகங்களால் முடியவில்லை. போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்பதென்றால் புனர்வாழ்வும் மட்டும் போதாது. தண்டனைகளால் பலன் இல்லை. மாறாக சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். விழுமியங்களை மீளுருவாக்க வேண்டும்.இளையோர் பிரமிப்போடு பார்க்கும் முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் மேலெழ வேண்டும்.திரைப்பட நாயகர்களையும் சண்டியர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் வெற்றிடம் ஏன் ஏற்பட்டது?எனவே இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும்,உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக ஆசிரியர்களால் மட்டும் முடியாது.மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால் மட்டும் முடியாது.புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஜெனிவாவில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் ஒரு மக்கள்கூட்டமானது,சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணர வேண்டும். கீழிருந்து மேல் நோக்கிய சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நிலாந்தன் https://newuthayan.com/பாடசாலைகளில்-போதைப்பொரு/
  • 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,  07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1303142
  • இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார். கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார். டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது. https://athavannews.com/2022/1303121
  • இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை  வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது. இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இந்த பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1303112
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.