Jump to content

தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அப்ரா

பட மூலாதாரம்,TWITTER

(இன்று 03/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)

கேரள மாநிலத்தில் தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு உயிரிழந்ததாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அச்செய்தியில், "கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபீக் - மரியம்மை தம்பதிகளின் மகள் அப்ரா (வயது 15). இவருக்கு சிறுவயதில் எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால் அந்த சிறுமி சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அப்ராவின் தம்பி முகமதுவுக்கும் (இரண்டரை வயது) தசை சிதைவு நோய் ஏற்பட்டது. இதை குணப்படுத்த ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனை கேட்டதும் சிறுமி அப்ரா தனது தம்பியை காப்பாற்ற கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.47.5 கோடி கிடைத்தது.

இந்த பணத்தின் மூலம் அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே மருத்துவமனையில் அப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 1) காலையில் அப்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62403329

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஃப்ரா ரஃபீக்: ‘என் தம்பிக்கு வேண்டாம் அந்த வலி’- ஆன்லைன் மூலம் 47 கோடி ரூபாய் திரட்டிய அக்காவின் கடைசி நிமிடங்கள்

  • மெரில் செபாஸ்டியன்
  • பிபிசி நியூஸ், கொச்சி
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அஃப்ரா ரஃபீக் மற்றும் அவருடைய தம்பி

பட மூலாதாரம்,AFRA RAFEEQ/YOUTUBE

 

படக்குறிப்பு,

அஃப்ரா ரஃபீக் மற்றும் அவருடைய தம்பி இருவருக்குமே ஸ்பைனல் மஸ்குலர் அட்ராஃபி என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது

கேரளாவில் தம்பிக்கு ஏற்பட்ட ஸ்பைனல் மஸ்குலர் அட்ராஃபி (எஸ்.எம்.ஏ) என்ற அரிய மரபணு நோயின் சிகிச்சைக்காக சமூக ஊடகங்களில் 47 கோடி ரூபாய் திரட்டிய இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

பதினாறு வயதான அஃப்ரா ரஃபீக், தம்பியைப் போலவே ஸ்பைனல் மஸ்குலர் அட்ராஃபி (SMA) என்ற அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது தசை பலவீனத்தை ஏற்படுத்துவதோடு, உடலின் இயக்கம் மற்றும் சுவாசத்தைப் பாதிக்கிறது.

கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த நோய் காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள் அவர் உடலில் அதிகரித்ததால் அஃப்ரா ரஃபீக் திங்கள் கிழமையன்று உயிரிழந்தார்.

"அவள் வாழ்க்கையில் சாத்தியப்படக்கூடிய அனைத்து மகிழ்ச்சியையும் பெற்றாள்," என்று அஃப்ரா ரஃபீக்கின் தந்தை பிகே ரஃபீக் கூறுகிறார்.

 

அஃப்ராவின் குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் அவரை ஒரு பிரகாசமான, திறமையான இளம் பெண்ணாக நினைவில் வைத்துள்ளார்கள். அவர் வேதனைமிக்க வலியை எதிர்கொண்டாலும்கூட பாடுவதற்கும் படிப்பதற்கும் மிகவும் விரும்பியுள்ளார்.

2021-ஆம் ஆண்டின் ஒரு வைரல் வீடியோ தான், அவரை நாடு முழுவதும் ரசிகர்களை வென்றெடுக்க வைத்தது.

அதற்கு முன்பு, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து அஃப்ரா அதிகமாக வெளியே வரவில்லை என்று அவருடைய தந்தை கூறுகிறார். அவருக்கு நான்கு வயது இருந்தபோது, எஸ்.எம்.ஏ நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து, பள்ளி அல்லது மருத்துவமனைக்குச் செல்ல மட்டுமே வீட்டை விட்டு வெளியேறினார்.

"நாங்கள் மிகவும் அதிகமாகக் கூட்டு சேராமல், எங்களுக்குள்ளேயே தனித்துக்கொண்டு இருந்தோம். அவளுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதில் தான் எங்கள் கவனத்தையும் முயற்சியையும் செலுத்தினோம்," என்று அஃப்ராவின் தந்தை கூறினார்.

ஆனால், பிறகு அஃப்ராவின் இளைய சகோதரர் முகமதுக்கும் எஸ்.எம்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது.

"எங்கள் மகள் இதனால் அனுபவித்த வலி ஏற்கெனவே தெரியும் என்பதால், தம்பிக்கும் அந்த நோய் இருப்பதை அறிந்தபோது குடும்பம் சுக்குநூறானது," என்கிறார் ரஃபீக்.

 

அஃப்ரா தனது தம்பி முகமது மற்றும் சகோதரி அன்ஸிலாவுடன்

பட மூலாதாரம்,AFRA RAFEEQ/YOUTUBE

 

படக்குறிப்பு,

அஃப்ரா தனது தம்பி முகமது மற்றும் சகோதரி அன்ஸிலாவுடன் நேரத்தைச் செலவிடுவதை மிகவும் விரும்பினார்

எஸ்.எம்.ஏ என்பது, 6,000 முதல் 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அபாயகரமான பிரச்னை. இது முதுகுத் தண்டுவடத்தில் இருக்கும் மோட்டார் நியூரான்களை பாதித்து, குழந்தைக்கு வயது ஆக ஆக படிப்படியாக மோசமடைகிறது.

எஸ்.எம்.ஏ இருக்கும் குழந்தைகள் கழுத்தை மேல்நோக்கி உயர்த்துவது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற வளர்ச்சிக்கான முக்கிய விஷயங்களை அடையவே போராடுகிறார்கள்.

அஃப்ரா மற்றும் அவருடைய தம்பி முகமதுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்று தான் ஆசைப்பட்டதாக அவருடைய தந்தை கூறுகிறார்.

2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக்கான கட்டுப்பாட்டு அமைப்பால் (FDA) அங்கீரிக்கப்பட்ட மரபணு சிகிச்சைக்கான புதிய மருந்தான, ஸோல்கென்ஸ்மா (Zolgensma) கிடைப்பதற்கான முயற்சியும் அதில் அடக்கம். உலகின் மிகவும் விலையுயர்ந்த மருந்துகளில் ஒன்றான இந்த மருந்தில் எஸ்.எம்.ஏ-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்ற, ஆனால் அவர்கள் உடலில் இல்லாத மரபணுவின் பிரதி உள்ளது. எஸ்.எம்.ஏ உள்ள இரண்டு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்து ஒரு டோஸ் செலுத்தப்படுகிறது.

முகமதுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதாகி இருந்ததால், அவருடைய குடும்பத்திற்கு மிகக் குறைந்த காலமே மிச்சமிருந்தது. ஆனால், "அந்த மருந்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது" என்கிறார் ரஃபீக்.

ஸோல்கென்ஸ்மா ஒரு டோஸின் விலை, 18 கோடி ரூபாய் (2.2மில்லியன் டாலர்). மேலும், அமெரிக்காவிலிருந்து இது இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது.

ஸோல்கென்ஸ்மாவின் ஒப்புதலுக்குப் பிறகு, பல இந்தியர்கள் இந்த மருந்தை அணுகுவதற்கு கிரவுட் ஃபண்டிங் எனப்படும் பொதுமக்களிடம் நிதியுதவி கேட்கும் முறையில் முயல்கின்றனர். அதில் சிலருடைய கோரிக்கைகள் பொதுவெளியில் வைரலான பிறகு, அவர்கள் வெற்றி பெற்றனர். இந்தியாவின் சுகாதார அமைச்சகம் எஸ்.எம்.ஏ போன்ற சில அரிய நோய்களுக்குத் தன்னார்வ கூட்டு நிதி சேர்ப்புக்கு அனுமதியளித்துள்ளது.

அஃப்ராவின் குடும்பம் ஆன்லைன் கிரவுட் ஃபண்டிங் உட்பட பல வழிகளில் பல கதவுகளைத் தட்டியது. அவர்களின் உள்ளூர் கிராம சபையும் பணம் வசூலிக்க சிகிச்சைக் குழு என்ற ஒரு குழுவை உருவாக்கியது. ஆனால், அவர்களால் சில லட்சம் ரூபாயைத் தான் திரட்ட முடிந்தது.

அப்போது தான், அஃப்ரா தனது உறவினரின் உதவியுடன் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

"எனக்கு ஏற்பட்ட வலியை என் சகோதரன் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை," என்று அவர் ஆன்லைனில் பதிவேற்றிய காணொளியில் பேசினார்.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, வைரலாகத் தொடங்கியது.

கிராம சபை உறுப்பினர் ஒய்.எல்.இப்ராஹிம், "திடீரென எங்கிருந்தோ பணம் வரத் தொடங்கியது," என்கிறார்.

அடுத்த 3 நாட்களில், முகமதுவின் சிகிச்சைக்கான நிதியாக 46.78 கோடி ரூபாய் கிடைத்தது. அஃப்ரா பணம் அனுப்புவதை நிறுத்துமாறு மற்றொரு பொது கோரிக்கையை வைக்க வேண்டியிருந்தது.

"நாங்கள் பல வழிகளை முயன்றோம். ஆனால், அவருடைய வீடியோவும் அஃப்ரா பேசியதும் மக்கள் மனதைத் தொட்டது," என்று இப்ராஹிம் கூறுகிறார்.

முகமதுக்கு டோஸ் போட்ட பிறகு, குழு கூடுதல் நிதியைப் பயன்படுத்தி மேலும் இரண்டு எஸ்.எம்.ஏ-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவியது. அதுபோக மீதமிருந்த பணத்தை கேரள அரசிடம் வழங்கியது.

"அஃப்ரா குடும்பத்தைக் காப்பாற்றினார்," என்கிறார் ரஃபீக்.

 

அஃப்ரா தனது குடும்பத்துடன்

பட மூலாதாரம்,COURTESY PK RAFEEQ

 

படக்குறிப்பு,

"அஃப்ரா குடும்பத்தைக் காப்பாற்றினார்," என்கிறார் ரஃபீக்

"அதிக மகிழ்ச்சியோடு" அஃப்ரா தனது சகோதரர் உடலில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க, யூட்யூப் சேனலைத் தொடங்கினார். ஓராண்டுக்குள், அவர் 2 லட்சத்து 59,000 ஆயிரம் பின்தொடர்பவர்களைப் பெற்றார். அதிலுள்ள காணொளிகள், அவர் மருத்துவமனைக்குச் செல்வதை, வீட்டில் தனது சகோதரர், சகோதரியுடன் நேரத்தைச் செலவிடுவதை, பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடுவதைக் காட்டியது.

முகமதுவின் மருத்துவ சிகிச்சை மற்றும் பிசியோதெரபி குறித்தும் அவர் தனது காணொளிகளில் ஆர்வத்துடன் பேசியுள்ளார்.

இப்போது இரண்டு வயதாகவுள்ள முகமது அவராகவே தவழ்வதும் ஆதரவாக எதையேனும் பிடித்துக்கொண்டு நிற்பதுமாக இருக்கிறார்.

"முகமதுவால் இன்னும் தன்னந்தனியாக நிற்கவோ நடக்கவோ முடியாது. ஆனால், இப்போது அவருடைய கால்களில் கொஞ்சம் வலிமை இருக்கிறது," என்று ரஃபீக் கூறுகிறார்.

இருப்பினும், அஃப்ராவின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. அவருடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில், அவர் வலியால் பல்லைக் கடித்துக் கொள்வார். மேலும், அவரால் கைகளைத் தூக்க முடியவில்லை என்று அவருடைய பெற்றோர் கூறுகின்றனர்.

 

அஃப்ராவின் குறிப்பு

பட மூலாதாரம்,COURTESY PK RAFEEQ

 

படக்குறிப்பு,

அஃப்ரா 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அஃப்ராவின் கடைசி காணொளி, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குக் குடும்பத்தினரோடு சென்றதைக் காட்டியது. அவருடைய மறைவுச் செய்திக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் காணொளியின் கீழ் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

அஃப்ராவின் காணொளிகள், இந்தியாவில் எஸ்.எம்.ஏ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக ரஃபீக் நம்புகிறார்.

அவர், "அவளுடைய வாழ்க்கையின் நோக்கம் அதுதான் என்று நினைக்கிறேன். அவளால் இன்று, எஸ்.எம்.ஏ என்றால் என்ன, அது என்ன செய்யும் என்பதைப் பலர் புரிந்துகொண்டனர்," என்கிறார்.

"அஃப்ரா இந்த மாத இறுதியில் பள்ளித் தேர்வுகளை எழுதவிருந்தார். அதற்குக் கடினமாகத் தயாராகி வந்தார். ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்," என்று அவருடைய தந்தை கூறுகிறார்.

அவர் இறந்து ஒரு நாள் கழித்து, அவர் படிக்கும் மேசைக்குப் பின்னால் சுவரில் ஒட்டியிருந்த போஸ்ட்-இன் குறிப்பு ஒன்றை அவருடைய தந்தை கண்டார். அதில் தனக்குத் தானே ஊக்கமளிக்கும் "உன்னால் முடியும்!" என்ற வார்த்தைகள் எழுதியிருந்ததைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

"இந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவள் எந்தளவுக்கு நிறைந்திருக்காள் என்பதை அது எனக்கு நினைவூட்டியது," என்கிறார் ரஃபீக்.

https://www.bbc.com/tamil/india-62422796

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.