Jump to content

இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க

46 நிமிடங்களுக்கு முன்னர்
 

ரணில்

பட மூலாதாரம்,DEPARTMENT OF GOVERNMENT INFORMATION

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் 11ம் தேதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுவதற்கு, இந்தியா வழங்கிய 'உயிர் மூச்சே' காரணம் என ரணில் விக்ரமசிங்க, தனது கொள்கை பிரகடன உரையில் இன்று கூறினார்.

9வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை இன்று (03) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக இந்திய பிரதமருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 
 

ரணில்

பட மூலாதாரம்,DEPARTMENT OF GOVERNMENT INFORMATION

பாதாளத்தில் வீழ்ந்த நாட்டைதான் பொறுப்பேறுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டை பொருளாதார ரீதியில் முழுமையாக மீட்டெடுப்பதற்கு சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு கட்சி மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு, பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

''நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப் பிரச்னை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்" என்றார்.

இலங்கைக்கு 1977ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில், அதனை நவீனமயப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேன் யுத்தம் மற்றும் கோவிட் தொற்று ஆகியவை காரணமாக உலக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டதாகவும், அந்த நெருக்கடிகள் இலங்கையை மேலும் சிக்கலுக்குள் தள்ளியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது கருத்துரைத்தார்.

 

ரணில்

பட மூலாதாரம்,DEPARTMENT OF GOVERNMENT INFORMATION

''தற்போதுள்ள மின் வெட்டினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பயிர்செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சமையல் எரிவாயு பிரச்னை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில்

உள்ளது. வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன," என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டு எவ்வாறு தீர்க்கப்படும்?

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசிய ரணில் இந்த ஆண்டு இறுதிவரை அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

 

வாகன வரிசை

பட மூலாதாரம்,GETTY IMAGES

''தற்போது நமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்னை எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே நமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன்போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும். மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை

நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

 

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலம் திட்டம் என்ன?

''இந்த கஷ்டங்களிலிருந்து மீளுவதற்கு நாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் நமது நாட்டில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாதவாறு பலமிக்க அடித்தளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம். நான் இன்று உங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்துவது எங்கள் எதிர்காலத்துக்கு அடிப்படையாகும் திட்டமிடல் சட்டகமாகும். இச்சட்டகத்தினுள் நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்." என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டமையினால், வெளிநாட்டு முதலீடுகளை தடை செய்து, நாட்டுக்கு ஏற்படுத்திய இழப்பு கணிப்பிட முடியாத அளவுக்கு விசாலமானது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவோடு ஒன்றிணைந்து, திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் போது, இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என கூறி அபிவிருத்தி திட்டங்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அன்று சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் பட்சத்தில், எரிபொருள் வரிசைகளில் மக்கள் இன்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

எரிபொருள் தட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோன்று, இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கும் பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதாகவும், தாம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அதனை செயற்படுத்தியமையினால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைதியான போராட்டத்திற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்காரர்களை வேட்டையாட போவதாக கூறப்படும் கருத்து போலியானது எனவும் அவர் கூறுகின்றார்.

தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு?

''பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான காரணி ஒன்றாகும். யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்க வேண்டிய காணிப் பிரச்னைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில்

வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62407565

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • By T YUWARAJ 08 AUG, 2022 | 08:11 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அரசியல் கட்சி மற்றும்  பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான்  நத்தன அமரசிங்க இன்று  ( 😎 நிராகரித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால்,  பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார். நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவி பூங்கா அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,  அதற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 106 ( 3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய  தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கறுவாத்தோட்டம் பொலிஸார், சத்தியக் கடதாசி ஒன்றினையும் இணைத்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.  அதனையே நீதிவான் நிராகரித்தார். அத்தோடு இன்று ( 😎 ஆசிரியர் சங்கத்தினர் இணைந்து கொழும்பு நகர மண்டப பகுதியில் நடாத்திய, அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினையும் தடை செய்யுமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் கோரியிருந்த போதும் அதனையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது நாளைய ஆர்ப்பாட்டத்தை தடை செய்யவும் - பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்த கொழும்பு நீதிமன்றம் | Virakesari.lk
  • இப்படியான செய்திகளை, அதில் கருத்து பகிர்வதை சுயதணிக்கை அடிப்படையில் தவிர்ப்பது என்று அண்மையில் நம்மில் பலர் எடுத்து கொண்ட உறுதிமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
  • By VISHNU 08 AUG, 2022 | 09:16 PM (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்தது. கோட்டை நீதிவான் திலின கமகே, ஜோஸப் ஸ்டாலினை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்து  இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இவ்வழக்கு தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய பிணைக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  முன் வைத்த வாதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிவான், பிணை வழங்க தீர்மானித்ததாக அறிவித்தார். பொது மக்கள் போராட்டங்களின் போது முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய  ஜோசப் ஸ்டாலினை, உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் தலைமையில் கடந்த 3 ஆம் திகதி மாலை கோட்டையில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்துக்கு திடீரென நுழைந்த சுமார் 50 வரையிலான பொலிஸார் (நான்கு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள்)  கைது செய்து அழைத்து சென்றனர். கடந்த மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி  ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு  எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 4 ஆம் திகதி கோட்டை நீதிவானின் இல்லத்தில் பொலிஸார் அவரை ஆஜர் செய்த போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.  இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 5 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஊடாக  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு,  ஜோஸப் ஸ்டாலின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், எமிர்சா டீகல்,  நுவன் போப்பகே உள்ளிட்ட குழுவினரால் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.   அதன்படி பிணை குறித்த உத்தரவுக்காக, பீ 22225/ 22 எனும் குறித்த வழக்கு இன்று 08 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. இன்று 08 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, 6 ஆவது சந்தேக நபர் ஜோஸப் ஸ்டாலின் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை. அத்துடன் 13 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட  அமல் சாலிந்த என்பவர் இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் இருந்த நிலையில் அவரும் மன்றில் ஆஜர் செய்யப்ப்ட்டிருந்தார். அவர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் முன்னிலையானார். பொலிஸார் சார்பில், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய  பொலிஸ் பரிசோதகர் போதிரத்னவும், உப பொலிஸ் பரிசோதகர் லெஸ்லியும் மன்றில் ஆஜராகினர். இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த பொலிஸ் பரிசோதகர் போதிரத்ன,  ஜோஸப் ஸ்டாலின், இந்த நீதிமன்றின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்  நுழைந்ததாகவும்,  அதனால் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரினார். இதனையடுத்து நீதிவான் திலின கமகே தனது பிணை குறித்த உத்தரவை அறிவித்தார். 'வழக்கின் 13 ஆவது சந்தேக நபரான அமல் சாலிந்த கடந்த ஜூலை 5 ஆம் திகதி இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் அனுப்பட்ட நிலையில், அவர் தொடர்பில் கடந்த ஜூலை 25 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் சந்தேக நபரான ஜோசப் ஸ்டாலின்  கடந்த நான்காம் திகதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இருவருக்கு எதிராகவும் கடந்த மே 28 ஆம் திகதி பீ 22225/22 எனும் வழக்கில் நீதிமன்ற உத்தரவை  மீறி செயற்பட்டதாகவும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும்,  தண்டனை சட்டக் கோவையின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி 6 ஆம் சந்தேக நபரான ஜோசப் ஸ்டாலின் சார்பில் பிணை கோரி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  இந்த நீதிமன்றின் உத்தரவை மீறி செயற்பட்டதாக கூறி, ஒருவருக்கு எதிராக இதே நீதிமன்றம் வழக்கு விசாரிக்க முடியாது எனவும், நீதிமன்ற அவமதிப்பு குறித்து மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே வழக்கு விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும் எனவும்  இதன்போது வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில்  மேன் முறையீட்டு நீதிமன்றின் இரு வழக்குத் தீர்ப்புக்களையும் அவர் மன்றுக்கு எடுத்துக்காட்டியிருந்தார். இந் நிலையில் 09 ஆம் திகதி பொலிஸ் தரப்பில் பொலிஸ் பரிசோதகர் போதிரத்ன ஆஜராகி பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார். இந் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தின் போது முன் வைக்கப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்றின் வழக்குத் தீர்ப்புக்கள் தொடர்பில் இம்மன்று அவதானம் செலுத்துகின்றது. 6, 13 ஆம் சந்தேக நபர்களுக்கு எதிராக  இதே நீதிமன்றின் முன்னுள்ள 22225/22 எனும் வழக்கின் உத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆம் சந்தேக நபரான  ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்ற உத்தரவு முறையாக கையளிக்கப்பட்டதாக பதிவுகள் இருந்தாலும் 13 ஆம் சந்தேக நபரான அமல் சாலிந்தவுக்கு அவ்வாறு கையளித்தமைக்கான பதிவுகள் வழக்குப் புத்தகத்தில் இல்லை. எது எப்படியாயினும், இதே நீதிமன்றின்  முன்னுள்ள வழக்கின் உத்தரவை மீறியமைக்காக, இதே நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்ய முடியுமா என்பது குறித்து இம்மன்று ஆராய்கிறது.  நீதிமன்ற அறைக்குள் இடம்பெறும் அவமதிப்பு தொடர்பில் செயற்பட அதே நீதிமன்றுக்கு அதிகாரம் இருந்தாலும், நீதிமன்றுக்கு வெளியே இடம்பெறும் ஒரு அவமதிப்பு குறித்து செயற்பட, உத்தரவை பிறப்பித்த நீதிமன்றுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லை.  இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளமை தெளிவாகினாலும், அது குறித்து மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். இது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தை இம்மன்று ஏற்றுக்கொள்கிறது. அடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்டதாக கூறபப்டும் பொதுச் சொத்தின் பெறுமதி 33 ஆயிரத்து 650 ரூபா என பொலிஸாரால்  அறிக்கை இடப்பட்டுள்ளது. சேதமான பொதுச் சொத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாக இருப்பின் அதனை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான சேதப்படுத்தலாக கருதுமாறு  சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளது. இந் நிலையில், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 8 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ், பெறுமதி ஒரு இலட்சத்துக்கும் குறைவு எனில் பிணை தொடர்பில் விஷேட காரணிகள் தேவையற்றது. ஏனைய குற்றச்சாட்டுக்கள் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  பிணையளிக்க முடியுமான குற்றச்சாட்டுகளாகும். எனவே  சந்தேக நபர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இம்மன்று, இருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகலில்  விடுவிக்கிறது.' என கோட்டை நீதிவான் திலின கமகே அறிவித்தார். அதன்படி இவ்வழக்கை எதிர்வரும்  ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இந் நிலையில்,  அதன் பின்னர் மன்றுக்கு ஜோஸப் ஸ்டாலின் அழைத்து வரப்பட்டு பிணை கையெழுத்திட்ட பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த அமல் சாலிந்த, மீண்டும் இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் அழைத்து செல்லப்பட்டார்.  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தை ஏற்ற கோட்டை நீதிமன்றம் ஸ்டாலினுக்கு பிணை வழங்கியது | Virakesari.lk
  • By VISHNU 08 AUG, 2022 | 09:44 PM ( எம்.எப்.எம்.பஸீர்) 'போராட்டம் முடியவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.' என  பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். பிணை கையெழுத்திட்ட பின்னர்  நீதிமன்றுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் ஏனைய நெருக்கடிகளை மையபடுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று போராட்டங்கலில் ஈடுபட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு  மக்கள் நாட்டில் ஒரு கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை கோரியே போராட்டம் செய்தனர். அதனை நோக்கிய எமது போராட்டம் தொடரும். போராட்டம் இன்னும் முடியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை விடுவுவிக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை. அதற்காக ஒன்றிணையுங்கள். கட்டமைப்பு மாற்றம் வரை நாம் போராடுவோம். 'என தெரிவித்தார்.  போராட்டம் முடிவடையவில்லை : அடக்குமுறையை முறியடிப்போம் - பிணையில் வெளியே வந்த ஸ்டாலின் அறிவிப்பு | Virakesari.lk
  • இப்போ ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் தாக்குதல் தொடருமாம். எப்போ என இன்னும் அறிவிக்கவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.