Jump to content

கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு காலக்கெடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம” போராட்டக்களத்தை படையினர் அகற்றவில்லை : அமைதியான  போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் | Virakesari.lk

அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு காலக்கெடு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற 9’ம் திகதிக்கு முதல், அவர்களை கலைக்கப் போகிறார்கள் போலுள்ளது.
ஒரு நியாயமான  தன் எழுச்சி போராட்டத்தை.. அரசியல்வாதிகள் முடக்கி விட்டார்கள். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

வருகின்ற 9’ம் திகதிக்கு முதல், அவர்களை கலைக்கப் போகிறார்கள் போலுள்ளது.
ஒரு நியாயமான  தன் எழுச்சி போராட்டத்தை.. அரசியல்வாதிகள் முடக்கி விட்டார்கள். 😢

கோ கோத்தா  எண்டுதானே போராட்டம் செய்தனியள்? இப்பதான் கோத்தா போயிட்டாரே. இனியென்னத்துக்கு நிக்கிறியள் எண்டு கேட்டால்??????🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கோ கோத்தா  எண்டுதானே போராட்டம் செய்தனியள்? இப்பதான் கோத்தா போயிட்டாரே. இனியென்னத்துக்கு நிக்கிறியள் எண்டு கேட்டால்??????🤣

கறையான் புத்தெடுக்க… கருநாகம் புகுந்த கதையாகப் போயிட்டுது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பொலிஸார் விடுத்த, அறிவுறுத்தலுக்கு எதிராக... அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்.

காலி முகத்திடலில் இருந்து போராட்ட குழுக்களை வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக நாளை மாலை 5 மணிக்கு முன்னர் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் யெ;யப்பட்டுள்ளன.

இதேவேளை, நுகேகொடையில் நாளை மறுதினம் பாரிய மக்கள் பேரணி ஒன்றை நடத்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

அடக்குமுறை, அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கு பீடத்தை மையமாக கொண்டு ஆரம்பமாகவுள்ள இந்த பொது பேரணியில் தொழில்சார் சமூகங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவை, சிவில் அமைப்புக்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1293566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கோட்டா கோ கம'வில் கூடாரங்களை அகற்றி கலைந்துசென்ற போராட்டக்காரர்கள்

(நா.தனுஜா)

கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டப்பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் கலைந்துசெல்வதற்கும் அங்குள்ள கூடாரங்கள் அகற்றப்படுவதற்கும் பொலிஸாரால் இன்று மாலை 5 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களால் இன்றைய தினம் அங்கிருந்த பெருமளவான கூடாரங்கள் பெருமளவிற்கு அகற்றப்பட்டதுடன் போராட்டக்காரர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

296048570_1070990176860289_2627674107262

இருப்பினும் அவ்வாறு கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு சொற்ப நேரத்திற்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் 'அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை எந்தவொரு ஆட்சியாளர்களாலும் முடிவிற்குக்கொண்டுவரமுடியாது. அதேபோன்று இந்த இடத்திற்குப் பதிலாக வேறோர் இடத்தில் போராடுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கூறவோ அல்லது அதுகுறித்துத் தீர்மானிக்கவோ முடியாது. அதனை எம்மாலும் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய இடத்தைப் பொதுமக்களே தீர்மானிக்கின்றார்கள். ஆகவே நாம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வோம்' என்று அறிவித்திருந்தனர்.

296315973_733778047909794_44829858426137

அதன் பின்னர் அங்கு வருகைதந்த பொலிஸார் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் குறித்து மீண்டும் ஒலிபெருக்கி மூலம் தமிழ், சிங்கள மொழிகளில் அறிவிப்புவிடுத்தனர்.

296061947_402881101942491_17706717753123

ஆனால் பொலிஸாரின் அறிவிப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பிய அங்கிருந்த போராட்டக்காரர்கள், தாம் அங்கிருந்து கலைந்து செல்லப்போவதில்லை என்றும் தமது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

296047440_780129269677622_29590237761208

'பலநாட்களாக எம்முடன் களத்தில் நின்று போராட்டங்களில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். போராடுகின்ற தலைவர்களுக்கே இந்தக் கதி என்றால், தலைவன் இல்லாத போராட்டத்தில் பங்கேற்கும் உங்களைப்போன்றவர்களுக்கு என்ன கதி என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள் என்ற செய்தியே அதனூடாகக் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறான மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அவற்றுக்கு எமது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றோம்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

296063809_780144243123915_56789794294059

இருப்பினும் பின்னர் 'கோட்டா கோ கம'வில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றும் பணிகள் போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்றை மாலையில் அங்கு போராட்டக்காரர்கள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

'கோட்டா கோ கம'வில் கூடாரங்களை அகற்றி கலைந்துசென்ற போராட்டக்காரர்கள் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கோட்டா கோ கம", கடைசியில சூனா பானா பஞ்சாயத்து மாதிரி கலைஞ்சி போச்சுது..! 😌

vadivelu-po-po.gif

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

"கோட்டா கோ கம", கடைசியில சூனா பானா பஞ்சாயத்து மாதிரி கலைஞ்சி போச்சுது..! 😌

vadivelu-po-po.gif

 

But their struggle was valuable. They made a valuable change. They removed a Facist. it was  not like a vadivel comedy as you said.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, island said:

But their struggle was valuable. They made a valuable change. They removed a Facist. it was  not like a vadivel comedy as you said.

That's happened due to lack of dynamism, leadership quality and support from external source to tackle the crisis.

Now Ranil is very clever to handle the current situation.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

That's happened due to lack of dynamism, leadership quality and support from external source to tackle the crisis.

Now Ranil is very clever to handle the current situation.

👍. Well said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ராசவன்னியன் said:

That's happened due to lack of dynamism, leadership quality and support from external source to tackle the crisis.

Now Ranil is very clever to handle the current situation.

மன்னிக்கவும் நான் தமிழில் எழுத முடியாத வேறொரு இடத்தில் இருந்தேன். உங்கள் கருத்து முற்றிலும் சரி. போராட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இது ஒரு முக்கிய பலவீனம். அவர்கள் ஒருங்கிணைத்து ஒரு வலுவான தலைமையை உருவாக்கியிருந்தால், அவர்கள் தங்கள் முழு இலக்கை அடைந்திருப்பார்கள். எப்படியும் அவர்கள் தங்கள் இலக்கின் ஒரு பகுதியை அடைந்தனர்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.