Jump to content

தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில்... சீனா, இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்!

தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில்... சீனா, இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்!

அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது.

சீனா ஐந்து நாட்களுக்கு ‘தேவையான மற்றும் நியாயமான’ ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல்நாள் பயிற்சியை சீனா தொடங்குகின்றது.

தாய்வானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. ‘நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்’ அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது.

பயிற்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை தேடுமாறு குறிப்பிட்ட கடல்வழிகளைப் பயன்படுத்தும் கப்பல்களை தாய்வான் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல் அண்டை நாடான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடன் மாற்று விமானப் பாதைகளைக் கண்டறியவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

https://athavannews.com/2022/1293470

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைவானைச் சுற்றி ஏவுகணைகளை வீசும் சீனா: விரையும் அமெரிக்கக் கப்பல் - நேரடித் தகவல்கள்

4 ஆகஸ்ட் 2022, 07:57 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம்,AFP

தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

போர்ப் பயிற்சியின் ஓர் அங்கமான இந்தக் குண்டு வீச்சுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தந்திருப்பதாகவும் சீன ராணுவம் கூறியுள்ளது.

கடற்பகுதியில் ஏராளமான ஏவுகணைகள் வீசப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீன ராணுவம் ஏவியதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தைவானின் தென்கிழக்கே பகுதியை ஒட்டிய பெருங்கடலை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

தைவானுக்குச் செல்வது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று சீனா எச்சரித்திருந்த நிலையும் நான்சி பெலோசி அதைப் பொருள்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தைவானைச் சுற்றி வளைத்து சீன ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

 

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் - கோப்புப் படம்

இந்தப் போர்ப்பயிற்சிக்கு தைவான் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. சாதாரண நிலையை மாற்றுவதற்கு இந்தப் போர்ப்பயிற்சிகளை சீனா பயன்படுத்துவதாக தைவான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒரு அறிக்கையில், "போரை நாடிச் செல்லாமல் போருக்குத் தயாராக இருக்கும் கொள்கையில் உறுதியாக இருப்பதாக" தைவான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு உலக நாடுகளை தைவான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

வியாழன் அன்று, வெளியுறவு அமைச்சகம் சீனாவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு உலக சமூகத்தை வலியுறுத்தியது.

 

வரைபடம்

சீனாவுடன் தைவான் மோதும் சாத்தியம் உண்டா?

சீனா தைவானுக்கு நெருக்கமாக தனது போர்ப்பயிற்சிகளை தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கினால், நிலைமை மோசமடைய வாய்ப்பிருப்பதாக சர்வேதச மூலோபாய ஆய்வு மையத்தின் இயக்குநர் போனி லின் கூறுகிறார்.

"தைவானின் வான்வெளியில் விமானங்களை பறக்கவிட சீனா முடிவு செய்தால், தைவான் அவற்றை இடைமறிக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. நடுவானில் மோதலாகவும் அது மாறலாம் இருக்கலாம், புதிய காட்சிகள் அரங்கேறலாம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

தைவான் எங்கே அமைந்திருக்கிறது?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான "முதல் தீவு சங்கிலி" (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

சீனா, தைவான்

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.

தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

https://www.bbc.com/tamil/global-62418250

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.