Jump to content

"லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

"லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில்  இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில்  அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர்  திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

S2.jpg

இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடாதிபதியும்,  அகில உலக கம்பன்கழகத்தின் தலைவருமான சுவாமி சரஹபவானந்தா, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு, “ஐரோப்பிய தமிழரசன்” என்ற  விருதை வழங்கி கௌரவித்தார்.

S5.jpg

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடாதிபதியும்,  அகில உலக கம்பன்கழகத்தின் தலைவருமான சுவாமி சரஹபவானந்தா, லைக்கா ஹெல்த் தலைவர்  திருமதி பிரேமா சுபாஸ்கரன் அவர்களுக்கு “வாசுகி” என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.

P1.png

S6.jpg

https://athavannews.com/2022/1293592

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசுக்கும் விருது.. சுமந்திரனுக்கும் விருது.. முரளிதரனுக்கும் விருது.. மைத்திரிக்கும் விருது.. எனி சுபாஸ்கரனுக்கு.

ஜெயராஜின் விருதை அவரே தான் பாராட்டிக்கனும். 

இம்முறை இலங்கை கம்பன் விழாவில் ரணிலுக்கு விருது வழங்குவதை மறந்தும் தவிர்க்க வேண்டாம். அவர் இப்ப சனாதிபதி. கைக்குள்ள போட்டு வைக்கனும். 

  • Like 1
Link to comment
Share on other sites

வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

கம்பனை விட்டாலும் அம்மனுக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.

அத்தோடு தமிழரசன் ஆவதற்கு என்ன என்ன தகமைகள் வேண்டும் என்று சொன்னால், முடிந்தால் நாங்களும் முயற்சிக்கலாம்

  • Haha 1
Link to comment
Share on other sites

வாசுகி எனும் பாம்பு என விவாதகளங்களில் கேட்டிருக்கிறேன். 🙂 இந்த  “வாசுகி” பட்டத்தின் கருத்தை அறியலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 minutes ago, nunavilan said:

வாசுகி எனும் பாம்பு என விவாதகளங்களில் கேட்டிருக்கிறேன். 🙂 இந்த  “வாசுகி” பட்டத்தின் கருத்தை அறியலாமா?

நீங்கள்  ஓய்வில்  உள்ளீர்கள்  என்று  நினைக்கின்றேன்??🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

நீங்கள்  ஓய்வில்  உள்ளீர்கள்  என்று  நினைக்கின்றேன்??🤣

ஓம் ... கேட்டு வாங்கிறார் 😛

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்ணு/ அம்மன் கோவிலுக்குள் வள்ளுவர் எப்பிடி வந்தார்???? 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

வள்ளுவருக்கும் கம்பன் கழகத்துக்கும் என்ன சம்பந்தம் ? வள்ளுவரைக் கோயில் வளாகத்துக்குள்ளும் கொண்டுவந்து விட்டார்கள்.

காசு

பணம்

துட்டு

மணி,மணி.

1 hour ago, குமாரசாமி said:

விஷ்ணு/ அம்மன் கோவிலுக்குள் வள்ளுவர் எப்பிடி வந்தார்???? 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வாசுகி எனும் பாம்பு என விவாதகளங்களில் கேட்டிருக்கிறேன். 🙂 இந்த  “வாசுகி” பட்டத்தின் கருத்தை அறியலாமா?

2 hours ago, விசுகு said:

நீங்கள்  ஓய்வில்  உள்ளீர்கள்  என்று  நினைக்கின்றேன்??🤣

1 hour ago, Sabesh said:

ஓம் ... கேட்டு வாங்கிறார் 😛

நுணாவிலான்…. தெரியாமல் கேட்கிறார் போலுள்ளது.
திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி.

சுவிற்சலாந்தில்… திருவள்ளுவரின், சிலையை திறந்து வைத்தவரின் மனைவிக்கு…
வாசுகி பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள், அதி மேதாவிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

DAFE45-C9-43-B8-4-C60-BC18-333-CF84-C956

எனக்கு என்ன பயம் என்றால்… ஐரோப்பிய தமிழரசன் பட்டம்,
வருடா வருடம் ஆரையும் வில்லங்கத்துக்கு இழுத்துப் பிடித்து கொடுப்பார்கள் போலுள்ளது.

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் பட்டமா ? 

கனேடியன்ஸ்களே கவனம்.

உரோப்பியன்ஸ் எல்லோரும் உங்களுக்கு போட்டியா வரப்போகினம். 

அதுசரி, உதென்ன ஐரோப்பியத் தமிழரசன் ? பாஸ்கியின் மனிசி கோவிக்கப்போறா தனக்கு ஐரோப்பியத் தமிழரசி பட்டம் தரவில்லை என்று..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு என்ன பயம் என்றால்… ஐரோப்பிய தமிழரசன் பட்டம்,
வருடா வருடம் ஆரையும் வில்லங்கத்துக்கு இழுத்துப் பிடித்து கொடுப்பார்கள் போலுள்ளது.

அதுக்கு தகுதி தகமைகள் ஏதாவது வேணுமா சார்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் ஆரம்பம், நான் போய்வரும் வாசிகசாலையின் விளையாட்டு மைதானத்தைத் திருத்துவதற்கு நிதி சேகரிக்கும் பல நிகழ்வுகளை நடாத்தியிருந்தோம். அதில் இறுதி நிகழ்வாக நாட்டுக்கூத்து நிகழ்வொன்றை நடத்துவதென்ற தீர்மானம். 

அதற்கான ஏற்பாடுகள் செய்தாயிற்று. அந்த நிகழ்வு முடிந்தவுடன் நன்றியுரை கூறும் பொறுப்பு என்னிடம். 

இறுதி நிகழ்வுக்கான நாளும் வந்தது. எல்லா நிகழ்வுகளும் இனிதே நிறைவுபெற்று இறுதி நிகழ்வாக நாட்டுக்கூத்து அம்பமாயிற்று. நிகழ்வின் முத்தாய்ப்பாய் இருந்தது  நாட்டுக்கூத்துத்தான்.

ஏனென்றால் அதைக் காட்டித்தான் நுழைவுச் சீட்டை விற்றிருந்தோம். பணமும் ஓரளவு சேர்த்தாயிற்று. இப்போது நாடகம் முடிவுபெறும் நிலை. அப்போதுதான் நாட்டுக்கூத்து அண்ணாவியாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பது நினைவிற்கு வந்தது.

தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு, எங்கள் சனசமூக நிலையத்தின் முக்கியஸ்தர்கள்களிடம் "இந்த அண்ணாவியாரால்தான் இந்த அளவில் காசு சேர்க்க முடிந்தது. அவருக்கு வெறுமனே நன்றி கூறினால் அது நன்றாக இராது. வேறு ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்" என்று கேட்டேன். 

ஆனால் நிகழ்வு நிறைவுபெற இன்னும் சில நிமிடங்களே இருந்தது. எல்லோருக்கும் சிறிய குழப்பம். என்ன செய்வது  என்று ஒருவருக்கும் புரியவில்லை.

அப்போதுதான் அங்கே அறையில் வைக்கப்பட்டிருந்த, விளையாட்டு போட்டிகளில் கிடைத்த கேடயம் எனது கண்ணில் பட்டது.  

"அண்ணர், இந்தக் கேடயத்தையும் கொடுத்து ஒரு பட்டமும் கொடுப்போமா ? இப்போதைக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றேன்." 

பிறகென்ன அந்த அண்ணாவியார் தற்போதும் அந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டு  கொண்டு திரிகிறார். 

(அவர் செய்த, செய்கின்ற கலைச் சேவைக்காக அவருக்கு இலங்கை அரசும் பட்டமளித்துக் கெளரவித்தது)  

பாவம் சுபாஸ்கரன்..என்னைப்போல யாராவது கம்பன் கழகத்தில் இருந்திருப்பினம்...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அதுக்கு தகுதி தகமைகள் ஏதாவது வேணுமா சார்? 🤣

சேச்சே...... ஒரேயொரு பலம்தான் தேவை ...... அது "பணம்" மட்டும்தான்......அதுதான் "பணம் பத்தும் செய்யும்" என்று அன்றே சொன்னார்கள்.....ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு எல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும் ஆனால் சுத்த வேஸ்ட் ......!  நம்ம அரசியலையே பாருங்கள் கதவால வெளியே போய் ஜன்னலால உள்ளே குதித்து வருகிறார்கள்......காரணம் மிதமிஞ்சிய பணம்........! 🤔

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

S5.jpg

ஆள் மீளமுடியா தண்ணிசாமி ஆகி விட்டார் போல் உள்ளது  போல் உள்ளது நம்மவரின் பழக்கம் களின் உதவாக்கரை பழக்கம் இதுதான் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அதுக்கு தகுதி தகமைகள் ஏதாவது வேணுமா சார்? 🤣

8 hours ago, suvy said:

சேச்சே...... ஒரேயொரு பலம்தான் தேவை ...... அது "பணம்" மட்டும்தான்......அதுதான் "பணம் பத்தும் செய்யும்" என்று அன்றே சொன்னார்கள்.....ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு எல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும் ஆனால் சுத்த வேஸ்ட் ......!  நம்ம அரசியலையே பாருங்கள் கதவால வெளியே போய் ஜன்னலால உள்ளே குதித்து வருகிறார்கள்......காரணம் மிதமிஞ்சிய பணம்........! 🤔

காசு இருந்தால்… எல்லாம் தேடி வரும். 🙂

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.