Jump to content

சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_5bb0c8da86.jpg

இந்தியாவின் பாதுகாப்பானது  இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து  பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக  தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன  ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது  பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவொன்றை இட்டுள்ளது. அதில் இந்தியப் பெருங்கடல் மற்றொரு மோதல்  புள்ளியாக மாறுகிறதா, அங்கு இந்தியாவின் ஆதிக்கத்தை அதன் சொந்த கொல்லைப்புறமே   சவால் விடுகிறதா? என்ற பதிவையும் இட்டுள்ளது.

 

Tamilmirror Online || சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்

 

நம்பிட்டம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்

 

நம்பிட்டம்???

சிங்களத்திடமும், சீனாக்காரனிடமும் ஆப்பு வாங்கும் இந்திய உளவுத்துறை.... சிங்களவனுக்கு செய்யும் பெரும் சேவையை பாருங்கோ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இரண்டொரு நாளுக்கு முன்னர் ரணிலுக்கு எதிராக முழங்கினார். அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டது.

அவரே கூத்தமைப்பின் ஏனைய உறுப்பினர்களுக்காக, மொழிபெயர்ப்பு வழக்கமாக செய்பவர்.

இவரது முக்கியத்துவத்தை குறைக்க, நரியார், பாராளுமன்ற,மொழி பெயர்ப்பாளர்களை பயன்படுத்தி உள்ளார்.

ஆக, சுமந்திரன்,தனது கருத்துக்களை மட்டுமே சொல்ல முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

அதுதானே! மூடிட்டு படுக்க வேண்டியதுதானே! கோவணம் கடயே வழியில்லையாம் இதற்குள் சிவப்புக் கொடி காட்டப் போகினமாம்.. முதலில் இந்திய வெளியுறவுத்துறையை முற்றாகக் கலைத்து விட்டு தமழிர்கள் தலைமயில் இந்திய வெளியுறவுக் கொள்கையை அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் போகா விட்டால், இதை கேளுங்கள். சிரிப்பு  நிச்சயம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டியது எந்த சிவப்புக் கொடி?

நிச்சயமா இதாக இருக்காது !!  Flag of China

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளபோது ஒரு கப்பலுக்கு அடிக்கும் அளவுக்கு எரிபொருள் இலங்கைக்கு எங்கிருந்து கிடைத்தது.

பாவத்துக்கு இரங்கி இந்தியா கொடுக்கும் எண்ணையை சீனனுக்கு விற்கிறதா இலங்கை அரசு.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இது கானாது.இன்னும் நிறைய எதிர் பாக்கிறம்.ரெயிலுறுக்கே இப்படி அலறினால் மெயின் பிக்சருக்கு நினைக்கவே இனிக்குதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 02:27, Nathamuni said:

அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...

தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நேரம் போகா விட்டால், இதை கேளுங்கள். சிரிப்பு  நிச்சயம். 

இதெல்லாம் ஊடகங்களின் சல்ஜாப்பு ஆனால் சொல்லி வைத்துகொண்டு விளையாடுவார்கள் சீனா இந்தியா அமேரிக்கா சிலோன் நாங்க வழக்கம் போல் பொங்கி கொண்டு இருப்பம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " 
பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ...

ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால்  வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்....
உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்"
இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன் 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல

இந்த சிவப்பு சிந்தனை என்ன பாடுபடுத்துகிறது முற்காலத்தில் சீன எம்பசி தமிழில் புத்தகம் அடித்து பரப்பியதாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " 
பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ...

ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால்  வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்....
உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்"
இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன் 🤣

கோயில் வீதியிலை புல்லு புடுங்க(சிரமதானம்) போனனான் எண்டு சொல்லி பாருங்கோ...:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கோயில் வீதியிலை புல்லு புடுங்க(சிரமதானம்) போனனான் எண்டு சொல்லி பாருங்கோ...:cool:

ஒருவருடைய அனுபவம் பகிரும்போது இன்னொருவருக்கு உதவலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்களும் களத்தில் உலாவினால் சொன்னவரும் கேட்டவரும் பரிதாப நிலையில். அநேகமாக பெண்கள் காலம்நேரம் இல்லாமல் கோயில் வீதி வலம் வருகிறவர்கள் நாலுபக்கமும் பாத்துவிட்டு சொல்லுங்கோ! மீண்டும் மாட்டுப்பட்டு  முழிக்காமல்.

 

15 hours ago, vanangaamudi said:

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளபோது ஒரு கப்பலுக்கு அடிக்கும் அளவுக்கு எரிபொருள் இலங்கைக்கு எங்கிருந்து கிடைத்தது.

அவர் நாட்டு மக்களுக்கு அடிச்சு விடுகிற மாதிரி இதுவும் ஒன்று.

15 hours ago, vanangaamudi said:

பாவத்துக்கு இரங்கி இந்தியா கொடுக்கும் எண்ணையை சீனனுக்கு விற்கிறதா இலங்கை அரசு.?

 தான் புத்திசாலி என்கிற நினைப்பு பந்துல குணவர்த்தனாவுக்கு! இவற்ற வாயால் இனி வருகிற உதவிக்கும் உலை வைத்தாயிற்று.            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.

 

படக்குறிப்பு,

யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.

2007ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாகும் என இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையிலேயே, சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை அந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா அரசாங்கம் அதன் கவலையை இலங்கையிடம் தெரிவித்திருந்தது. மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கியிருக்கும் சூழலில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.

 

ஹம்பாந்தோட்டையில் நடைமுறையில் எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எச்சரிக்கை விடுத்த இந்தியா, அமெரிக்கா

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம்,SRI LANKA DEFENCE MINISTRY

முன்னதாக, சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்து வெளியிட்டது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீன கப்பல் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி தனதுஅதன் பயணத்தைத் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து இந்த வார தொடக்கத்தில், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு காவல்துறை அதன் எல்லைக்குட்பட்ட கடலோர பாதுகாப்பை பலப்படுத்தியது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்திய கடற்படையும் இந்திய கடலோர காவல் படையும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தின.

இதேவேளை, சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகலாம் என்று இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) இலங்கைக்கு எச்சரிக்கை குறிப்பை அனுப்பியது.

"இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டு" இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பணியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ லெப்டிணன்ட் கர்னல் புனீத் சுஷீல் மற்றும் அதிகாரிகள், இந்திய துணைத்தூதர் திபின் தலைமையில் ஹம்பந்தோட்டா துறைமுக அதிகாரிகளையும் இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். அப்போதும் இந்தியாவின் கவலை இலங்கை தரப்பிடம் பதிவு செய்யப்பட்டது.

 

இலங்கை கடற்படை

 

இந்திய அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை

 

இலங்கை ஹம்பாந்தோட்டை

இதேபோல, 'யுவான் வாங் 5' கப்பல் சீனா ராணுவத்தின் (பிஎல்ஏ) ஆதரவு அமைப்பால் இயக்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனும் கூறியது.

இந்த அழுத்தங்கள் காரணமாகவே, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாய்மொழி குறிப்பு மூலமும் பின்னர் எழுத்துபூர்வமாகவும் இந்த பிரச்னையில் மேலதிக ஆலோசனைகள் செய்யப்படும் வரை, யுவான் வாங் 5 கப்பலின் வருகை தேதியை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யுவான் வாங் 5 - ஏன் அச்சப்பட வேண்டும்?

ஆராய்ச்சி பணிக்காக வடிவமைக்கப்பட்ட யுவான் வாங் 5 கப்பல், 2007இல் கட்டப்பட்டது. 11 ஆயிரம் டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல், ஜூலை 13ஆம் தேதி சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டது. தற்போது தைவானுக்கு அருகே இந்த கப்பல் பயணம் செய்து வருகிறது.

ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, சில தினங்களுக்கு முன்பு சீன தடையை மீறி பயணம் செய்தார். அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக இதே கப்பலை தைவான் கடல் பகுதி நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சீனா.

 

சீன கப்பல்

அந்த கடல் பகுதியில் சீனா அதன் வான் படை மற்றும் கடற்படை, ராணுவ கூட்டு ஒத்திகையை கடந்த இரு தினங்களாக நடத்திய விவகாரம் சர்ச்சையானது. மரைன் டிராஃபிக் வலைதள தரவுகளின்படி, யுவான் வாங் 5 கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் தைவானின் வடகிழக்கு இடையே உள்ளது.சீன கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுகை வரைபடத்தை தயாரிக்க இந்த யுவான் வாங் 5-ஆல் முடியும். ஆனால், தரவுகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலாக இது காட்டப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ஹம்பாந்தோட்டையில் சீன கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலை நிலவுகிறது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டால் அது இலங்கையுடனான சீன உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கான சீன தூதர் கூறியிருந்தார். இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கர்னல் நளின் ஹேரத், சீன கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவின் கவலைகள்

யுவான் வாங் 5 கப்பல், சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாட்டு வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.

 

இலங்கை கடற்படை

இந்த கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து மற்ற இந்தோனீசிய ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைய திட்டமிடப்பட்டது.

யுவான் வாங் 5 சீன கப்பல், இந்திய பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும்.

இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான ஆற்றல் பற்றிய தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேக கண்ணோட்டத்துடனேயே அணுகி வருகிறது.

அந்த நாட்டில் கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ள துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017இல் வழங்கியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், இலங்கையில் உள்ள துறைமுக வசதிகளை அனுபவிக்கும் வகையில் தமது செல்வாக்கை இலங்கை மீது செலுத்த இந்த கப்பல் பயணத்தை சீனா வாய்ப்பாக பயன்படுத்தலாம் என இந்தியா கருதுகிறது.

இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில், சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அப்போதும் இந்தியா அந்த கப்பல்கள் குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை எதுவும் பதிவாகவில்லை.

https://www.bbc.com/tamil/sri-lanka-62450326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனக்கப்பல் எரிபொருள் நிரப்பத்தான் வருகிறது. இடையில் வரவேண்டாம் என்று சொன்னால் நடுக்கடலில் கப்பல் தத்தளிக்கும். அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பேச்சைக்கேட்டு சீனாவுடன் பகைத்தால்இப்பொழுது தாய்வானைச் சுற்றி நடக்கும் வாணவேடிக்கைகளை சுpனா காட்டும். இதெல்லாம் தேவையா? சீனா நினைத்தால் இலங்கையின் கடனை சுலபமாக அடைத்து விடும். சரி ஒரு பேச்சுக்கு இலங்க இந்தக்கப்பலை இப்பொழுது நிறுத்தினாலும் அது தற்காலிகமானதே. சுpனக்கப்பல் இலங்கைக்கு வரத்தான் போகிறது. இந்தியாவுக்ககும் மேற்குக்கும் ஒரே ஒரு தெரிவு தான் இருக்கிறது. அது தமிழர்களைக்கையாளுதல்.தமிழர்களும் இந்தியா மேற்குலகம் சீனா மூன்றையும் கையாளுதல் வேண்டும்.இப்பொழுது இருக்கும் தமிழ்த்தலைமகளான சம்சும் கொம்பனி அதற்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இந்தியாவுக்கு வாலை ஆட்டுபவர்கள். அடுத்துவரும் தேர்தலல்களிலாவது தமழர்கள் பூகோள அரசிளலைக் சரியாகக் கையாளும் தமிழ்தலைமைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

இந்தியாவுக்ககும் மேற்குக்கும் ஒரே ஒரு தெரிவு தான் இருக்கிறது. அது தமிழர்களைக்கையாளுதல்.தமிழர்களும் இந்தியா மேற்குலகம் சீனா மூன்றையும் கையாளுதல் வேண்டும்.இப்பொழுது இருக்கும் தமிழ்த்தலைமகளான சம்சும் கொம்பனி அதற்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இந்தியாவுக்கு வாலை ஆட்டுபவர்கள். அடுத்துவரும் தேர்தலல்களிலாவது தமழர்கள் பூகோள அரசிளலைக் சரியாகக் கையாளும் தமிழ்தலைமைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை தலைவர் பிரபாகரன் அன்றே கூறிவிட்டார்.
இருந்தாலும் இன்றிருக்கும் எமது சாக்கடை சோம்பேறி அரசியல்வாதிகள் ஆரோக்கியமில்லாத அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இழுவான் கோஷ்டிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

ஒருவருடைய அனுபவம் பகிரும்போது இன்னொருவருக்கு உதவலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்களும் களத்தில் உலாவினால் சொன்னவரும் கேட்டவரும் பரிதாப நிலையில். அநேகமாக பெண்கள் காலம்நேரம் இல்லாமல் கோயில் வீதி வலம் வருகிறவர்கள் நாலுபக்கமும் பாத்துவிட்டு சொல்லுங்கோ! மீண்டும் மாட்டுப்பட்டு  முழிக்காமல்.

நாங்கள் ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ.....ஒருக்கால் போன பாதையாலை இன்னொருக்கால் போக மாட்டம் :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை அழிக்க என்று இந்த இரு முக அணுகுமுறையை கதிர்காமர் தான் சந்திரிக்காவுக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது சீனாவை காட்டி ஹிந்தியாவை பணிய வைப்பது.. ஹிந்தியாவை காட்டி சீனாவை பணிய வைப்பது. 

சீனாவுக்கும் ஹிந்தியாவுக்கும் ஏன் உலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. பாக்குநீரினையில்.. அவர்கள் நினைப்பதை செய்ய புலிகள் தடையாக இருந்ததால்.. அந்த விடயத்தில் கதிர்காமரின் நரித்தனம் வெற்றி பெற்றது என்னவோ உண்மை தான்.

ஆனால்.. வொய்ஸ் ஒவ் அமெரிக்காவோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்திரா காந்தி அம்மையார் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஊக்குவித்து அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றி அமைத்தது போல் அன்றி.. சீனாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து ஹிந்திய ஆட்சியாளர்கள் இந்திரா அம்மையார் அளவுக்கு செயற்படாமை.. ஈழத்தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை சிங்கள அரசு தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ளது. 

அதன்படி...தராசு இப்போ சிங்கள அரசுக்கும் சீனத்துக்கும் சார்ப்பாக தான் உள்ளதே தவிர ஹிந்தியாவுக்கு சார்ப்பாக கிடையாது. எனி பிராந்திய இராணுவச் சமநிலை என்பது ஹிந்தியாவுக்கு சாதகமாக வேண்டின் பிராந்தியத்தில் ஹிந்தியா தனக்கு சார்பான சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஒன்று தமிழீழம் அமைவதுமாகும். 

சீனாவை கட்டுப்படுத்த தாய்வானின் சுதந்திர தாகத்தை அமெரிக்கா எப்படி பாவிக்கிறது என்பது ஹிந்தியாவுக்கு நல்ல உதாரணம். ஆனால் அந்தளவு திறமை தற்போதைய ஹிந்திய ஆட்சியாளர்களுக்கோ.. உளவு அமைப்புகளுக்கோ கிடையாது. றோ இன்னும் புலி பிடிப்பதில் தான் கவனம். 

றோ ஒரு தோற்றுப் போன ஹிந்திய உளவு அமைப்பு. ஹிந்திய எல்லையை ஒட்டிய சீன ஊடுருவலை.. தடுக்க எந்த வகையிலும் செயற்பட முடியாத ஹிந்திய பாதுகாப்பை பற்றி எந்த அக்கறையும் அற்ற ஒரு தோற்றுப்போன அமைப்பே றோ. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.