Jump to content

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி

By T. Saranya

06 Aug, 2022 | 09:52 AM
image

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆனால், இந்த தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முழு விவரத்தை பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. 

23.jpg

AP Photo / Fatima Shbair

ஆனால், இந்த தாக்குதலில் குறைந்தது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரை பகுதியில் இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் மூத்த பயங்கரவாதி கைதியை இஸ்ரேல் கைது செய்த நிலையில் இதற்கு பதிலடியாக உடனடி அச்சுறுத்தலாக மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.virakesari.lk/article/133022

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - பாலத்தீனம்: காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு; 100 ராக்கெட்டுகள் மூலம் பதிலடி

 • யோலாண்டே க்னெல், ஜெருசலேம் & ரஃபி பெர்க், லண்டன்
 • பிபிசி நியூஸ்
6 ஆகஸ்ட் 2022, 06:29 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் வான் நோக்கி புகை எழும் காட்சி

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலத்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஓர் ஐந்து வயது பெண் குழந்தையும் அடக்கம் என்றும் பல காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் "உடனடி அச்சுறுத்தல்" வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத், இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை "ஆரம்பகட்ட எதிர்வினையின்போது" வீசியது.

 

பெரும்பாலானவை இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்புக் கவசத்தால் தடுக்கப்பட்டன. பல இஸ்ரேலிய நகரங்களில் சைரன் ஒலிகள் கேட்டன.

இதற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் போராளிகளின் தளங்களைக் குறிவைத்து தாக்குதலை மீண்டும் தொடங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியது.

முந்தைய நாளின் ஒரு தொலைக்காட்சி உரையில், பிரதமர் யாயீர் லப்பீட், "இஸ்ரேல் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகத் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது," என்றார்.

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்துடன் (PIJ) தொடர்புடைய தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது. அவற்றில், உரத்த குண்டுவெடிப்பு சத்தத்தோடு வெடித்த, காஸா நகரில் உள்ள உயரமான பாலஸ்தீன கோபுரமும் அடங்கும்.

 

1px transparent line

 

1px transparent line

தாக்குதல் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டவர்களில் தைசீஸ் ஜபாரி உட்பட 4 பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினர் மற்றும் ஐந்து வயது குழந்தையும் அடக்கம் என்று உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் பாதுகாப்புப் படை "சுமார் 15 போராளிகள்" கொல்லப்பட்டதாகத் தான் கருதுவதாகக் கூறினார்.

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் அயிலெட் ஷகீத், சேனல் 12 நியூஸிடம், "இது எப்படி முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது முடிவுக்கு வர அதிக காலம் ஆகலாம். இதுவொரு நீண்ட மோதலாக கடினமான ஒன்றாக இருக்கலாம்," என்றார்.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணித்தபோது பேசிய பாலத்தீன பொதுச் செயலாளர் ஜியாத் அல்-நகாலா, "இந்த ஆக்கிரமிப்புக்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எங்கள் மக்கள் வெற்றி பெறக்கூடிய ஒரு சண்டையாக அது இருக்கும்," என்றார்.

"இந்தப் போரில் பேச்சுவார்த்தைக்குரிய எல்லைகள் இல்லை. மேலும் டெல் அவிவ் எதிர்ப்பின் ராக்கெட்டுகளுக்குக் கீழே இருக்கும்," என்றார்.

இதற்கிடையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ், ஆயுதக் குழுக்கள் போரில் "ஒற்றுமையாக" இருப்பதாகவும் அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

 

காஸா வரைபடம்

திங்கள் கிழமையன்று இரவு, மேற்குக் கரையில் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைவர் என்று கூறப்படும் பாஸ்ஸெம் சாதியை இஸ்ரேல் கைது செய்தது. 17 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு யுக்ரேனியர்களை கொன்ற இஸ்ரேலிய அரேபியர்கள் மற்றும் பாலத்தீனியர்களின் தாக்குதல்களுக்குப் பிறகு, தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர் ஜெனின் பகுதியில் கைது செய்து வைக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் ஜெனின் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பாஸ்ஸெம் சாதி கைது செய்யப்பட்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுடனான அதன் எல்லைக்கு அருகிலுள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது. பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்கும் கொண்டது என்று எச்சரித்தது. சாலைகள் மூடப்பட்டதால், தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் முடங்கின.

ஈரானால் ஆதரிக்கப்படும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைமையகம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ளது. இது காஸாவில் இருக்கும் வலிமையான போராளிக் குழுக்களில் ஒன்று. இஸ்ரேலுக்கு எதிரான ராக்கெட் வீச்சு, துப்பாக்கிச் சூடு உட்பட பல தாக்குதல்களை இது நடத்தியிருக்கிறது.

2019 நவம்பரில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஐந்து நாட்கள் மோதலில் ஈடுபட்டன. இஸ்ரேல் மீது உடனடி தாக்குதலைத் திட்டமிடுவதாகக் கூறிய அந்த அமைப்பின் தளபதியை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து சண்டை வெடித்தது. இந்த வன்முறையில் 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 111 பேர் காயமடைந்தனர், 63 இஸ்ரேலியர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.

கொல்லப்பட்ட பாலத்தீனியர்களில் ராக்கெட்டுகளை ஏவத் தயாராகி வந்தவர்கள் உட்பட 25 பேர் போராளிகள் என்றும் இஸ்ரேல் கூறியது.

இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் பின்னணி என்ன?

 

இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம்

பாலத்தீனம் என்னும் மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.

பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, "தேசியப் பகுதி" ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது.

யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர், இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி.

ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 - 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.

யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.

1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது.

இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அமல்படுத்தவும் இல்லை.

இஸ்ரேல் மற்றும் `பேரழிவின்` தொடக்கம்

1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.

அதை பாலத்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன.

ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.

போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது.

ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது.

தற்போதைய வரைபடம்

 

வரைப்படம்

ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.

ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.

 

1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ கமாண்டர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ கமாண்டர்கள்.

இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.

இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது.

தற்போது என்ன நடக்கிறது?

 

இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிழக்கு ஜெருசலேம், காஸா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையே அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது காசா. இந்த குழு இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதம் செல்வதை தடுக்க இஸ்ரேல் மற்றும் எகிப்து காஸா எல்லைகளை தீவிரமாக கட்டுப்படுத்தி வருகின்றன.

காஸா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தங்களுக்கு துயரங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேல் பாலத்தீனத்தின் வன்முறையிலிருந்து தங்கள் நாட்டை காத்துக் கொள்ளவே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் தொடக்கத்திலிருந்து அங்கு பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் போலீசாருக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

கிழக்கு ஜெருசலேமில் சில பாலத்தீனிய குடும்பங்கள் வெளியேற அச்சுறுத்தப்படுவதும் பதற்றத்தை அதிகரித்தது.

முக்கிய பிரச்னைகள் என்ன?

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படாத பல விஷயங்கள் உள்ளன. பாலத்தீன அகதிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேற்கு கரையில் உள்ள யூதக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டுமா, இருதரப்பும் ஜெருசலேத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இது எல்லாவற்றையும்விட சிக்கலான ஒன்று உள்ளது. இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலத்தீன நகரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல பிரச்னைகள் இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பிரச்னைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எட்டப்போவதில்லை. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமைதி திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

இது `நூற்றாண்டுக்கான ஒப்பந்தம்` என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வர்ணித்திருந்தார். ஆனால் அது ஒருதலைப் பட்சமாக இருப்பதாக பாலத்தீனர்களால் நிராகரிப்பட்டது. இந்த கடினமான பிரச்னையை தீர்க்க இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். அதுவரை இந்த சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

https://www.bbc.com/tamil/global-62446373

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இஸ்ரேல் - பாலத்தீனம்: காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு; 100 ராக்கெட்டுகள் மூலம் பதிலடி

நான் மேற்குலகின் கொள்கைகளை வெறுக்க இந்த பலஸ்தீன பிரச்சனையும் ஒரு காரணம்.
இதோ பிரச்சனையை முடித்து விட்டோம் என கை குலுக்க வைத்தார்கள். நோபல் பரிசும் வாங்கிக்கொடுத்து மார்தட்டிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயன் எங்கேயும் பிரச்சனையை முடித்து வைத்தாக சரித்திரம் இல்லை. 😡

 • Like 3
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் மேற்குலகின் கொள்கைகளை வெறுக்க இந்த பலஸ்தீன பிரச்சனையும் ஒரு காரணம்.
இதோ பிரச்சனையை முடித்து விட்டோம் என கை குலுக்க வைத்தார்கள். நோபல் பரிசும் வாங்கிக்கொடுத்து மார்தட்டிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயன் எங்கேயும் பிரச்சனையை முடித்து வைத்தாக சரித்திரம் இல்லை. 😡

சண்டையை உருவாக்கி ஆயுதங்களை விற்று வயிறு வளர்ப்பவர்கள்  பிரச்சனையை மேலும் வளர்ப்பார்கள் அல்லது தீர்க்க மாட்டார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சண்டையை உருவாக்கி ஆயுதங்களை விற்று வயிறு வளர்ப்பவர்கள்  பிரச்சனையை மேலும் வளர்ப்பார்கள் அல்லது தீர்க்க மாட்டார்கள்.

ஆசிய,ஆபிரிக்க,தென் அமெரிக்க நாடுகளில் சிறிய விடுதலை இயக்கங்களுக்கு எண்ணை ஊற்றி எரிய விட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்த ஆங்கிலேயர்கள். சாமாதானம்,போர் இல்லா உலகம் என போதித்துக்கொண்டு அதி நவீன உயிர்கொல்லி ஆயுதங்களையும்,அதி நவீன போர் நுட்பங்களையும் ஏழை நாடுகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்.
ஆசிய,ஆபிரிக்க நாடுகளில் இந்த ஆங்கிலேயர்கள் அபகரிக்கும் இயற்கைவளங்களும் கொஞ்ச நஞ்சமல்ல....

Link to comment
Share on other sites

On 6/8/2022 at 10:48, குமாரசாமி said:

நான் மேற்குலகின் கொள்கைகளை வெறுக்க இந்த பலஸ்தீன பிரச்சனையும் ஒரு காரணம்.
இதோ பிரச்சனையை முடித்து விட்டோம் என கை குலுக்க வைத்தார்கள். நோபல் பரிசும் வாங்கிக்கொடுத்து மார்தட்டிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயன் எங்கேயும் பிரச்சனையை முடித்து வைத்தாக சரித்திரம் இல்லை. 😡

அமெரிக்கர்கள் எல்லோ கைகுலுக்க வைத்தவர்கள்? இதில் ஆங்கிலேயர்கள் எங்கே வந்தார்கள் ?

அப்புறம்:

அரபாத்தை காயடித்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை வரைபடத்தில் இருந்தே தூக்குவோம் என்று கமாஸ் நடந்திராவிட்டால் பல்ஸ்தீனம் என்ற நாடு உருவாகியிருக்கவும் கூடும்.

இஸ்ரேலின் மிக முக்கிய ஆதாரம் அமெரிக்காவுக்கு அடுத்து ஹமாஸ்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிரியாவும், ஈரானும் பாலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை ஊக்குவித்து வருகின்றன. இந்த இரு நாடுகளுக்கும் இஸ்ரேலின் இருப்பென்பது பாரிய தலைவலிதான். ஆகவேதான் இஸ்ரேலினை அழிப்பதை தமது முதலாவது குறிக்கோளாகக் கொண்டு இந்நாடுகள் இயங்குகின்றன. தாம் நேரடியாக இறங்கமுடியாத பொழுது, பாலஸ்த்தீன ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவுவதன் மூலம் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக போர்ச்சூழலுக்குள் வைத்திருக்க இவை முனைகின்றன.

இந்த நாடுகளினதும் பாலஸ்த்தீன ஆயுதக் குழுக்களினதும் தாக்குதல்களிலிருந்து தமது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கிறேன் என்கிற பேரில் இஸ்ரேல் தனது நாட்டினை விஸ்த்தரித்து வருவதுடன், பல பாலஸ்த்தீனப் பகுதிகளையும் தன்னுடன் அடாத்தாக ஆக்கிரமித்து வருகிறது. இவற்றுள் பல பிரதேசங்களில் யூதர்கள் குடியேற்றப்பட்டு வருவதுடன், இன்னும் பல பகுதிகள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான சூனியப் பிரதேசமாகவும் ஆக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கிடையே அகப்பட்டு பரிதாபமாக அவதிப்படுவது பெருமளவில் அப்பாவிப் பாலஸ்த்தீனியர்களும், சிறிதளவில் யூதர்களும்தான்.

இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்கிற இறுமாப்பிலிருந்து ஈரானும், சிரியாவும் இறங்கிவராமல் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அமெரிக்கர்கள் எல்லோ கைகுலுக்க வைத்தவர்கள்? இதில் ஆங்கிலேயர்கள் எங்கே வந்தார்கள் ?

அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் பெரிய பிரித்தானியாவின் அச்சு எல்லோ?🤣
ஆங்கில மொழியை கொண்ட நாடுகளை ஆங்கிலேயர் என்றும் அழைக்கலாம் தானே? 😎

2 hours ago, goshan_che said:

அரபாத்தை காயடித்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை வரைபடத்தில் இருந்தே தூக்குவோம் என்று கமாஸ் நடந்திராவிட்டால் பல்ஸ்தீனம் என்ற நாடு உருவாகியிருக்கவும் கூடும்.

பேச்சுவார்த்தையின் போதே வெள்ளையர்கள் சூழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கையொப்பமிட அரபாத் முரண்டு பிடித்ததெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனால் அரபாத் கொல்லப்பட்டார் என்ற கதையும் உண்டு.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் பெரிய பிரித்தானியாவின் அச்சு எல்லோ?🤣
ஆங்கில மொழியை கொண்ட நாடுகளை ஆங்கிலேயர் என்றும் அழைக்கலாம் தானே? 😎

 அவுசை அப்படி சொல்லலாமோ தெரியவில்லை, எனக்கு அவர்களை பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் அமெரிக்காவில் ஆங்கிலேய அச்சு உள்ளதில் கூட எனும் அளவில்தான் இருக்கிறது. அங்கே மிக பலமான, ஐரிஷ், ஸ்பானிய, ஜேர்மானிய, வேர்கள் ஓடுகிறன. 

உலகில் மெக்சிகோவுக்கு அடுத்து அமெரிக்காவில் தான் ஸ்பானிஷ் பேசுபவர்கள் அதிகம் உளர். 

https://amp.theguardian.com/us-news/2015/jun/29/us-second-biggest-spanish-speaking-country

Link to comment
Share on other sites

உண்மையில் அமெரிக்காவில் Irish American, African American, Latino, Asian American என்றெல்லாம் மக்கள் தம்மை சுய அடையாளப்படுத்தினாலும் Anglo American என யாரும் தம்மை அழைத்து நான் இதுவரை காணவில்லை.

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆங்கிலம்  தேசிய மொழி ஆகியதாம். இல்லாவிட்டால் ஜேர்மன் தான் தேசிய மொழியாக இருந்திருக்கும்.

2014ல் 49 மில்லியன் மக்கள் ஜேர்மன் பின்னணியை கொண்டவர்கள். 16 வீதம் சனத்தொகையில்.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

பேச்சுவார்த்தையின் போதே வெள்ளையர்கள் சூழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கையொப்பமிட அரபாத் முரண்டு பிடித்ததெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனால் அரபாத் கொல்லப்பட்டார் என்ற கதையும் உண்டு.

கட்டாயம் சூழ்சிகள் இருந்திருக்கும். அரபாத் நஞ்சூட்டப்பட்டார் என்ற கதையும் நம்ப தக்கதே.

ஆனால் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்க முடியாது என்அ கமாசின் நிலைப்பாடும், அவர்களின் இண்டிபாடா முஸ்தீபுகளுமே அரபாத்தின் காலத்தில் “இரு நாடுகள், ஒரே மண்” அடிப்படையில் தீர்வு வர முடியாமல் போல முழு காரணம்.

இஸ்ரேல் எதை விரும்பியதோ அதை கமாஸ் செய்து முடித்தது.

8 minutes ago, nunavilan said:

அமெரிக்காவில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆங்கிலம்  தேசிய மொழி ஆகியதாம். இல்லாவிட்டால் ஜேர்மன் தான் தேசிய மொழியாக இருந்திருக்கும்.

http://faculty.las.illinois.edu/debaron/essays/legend.htm

Link to comment
Share on other sites

இன்னும் முழுதாக வாசிக்கவில்லை. நீங்கள் சொல்வதை இது குறிப்பதாயின் ஜேர்மன் மொழியில் சட்டங்களை மொழிமாற்றி பிரசுரிப்பதா இல்லையா என்ற வாக்கெடுப்பின் ஒத்திவைப்பு பிரேரணையே 1 வாக்கால் தோற்றது போல் உள்ளது.

The German Vote

On January 13, 1795, Congress considered a proposal, not to give German any official status, but merely to print the federal laws in German as well as English. During the debate, a motion to adjourn failed by one vote. The final vote rejecting the translation of federal laws, which took place one month later, is not recorded.

நானறிந்தவரை அமெரிக்காவில் தேசிய (federal level) மட்டத்தில் ஆங்கிலம்தான் தேசிய மொழி என்று சட்டம் ஏதும் இல்லை, ஆனால் பல மாநிலங்கள் இப்படி சட்டம் இயற்றியுள்ளன.

Link to comment
Share on other sites

Did German almost become America’s official language in 1795?

 

For centuries, stories have persisted about Congress almost approving German as our official language, except for one vote by its German-speaking leader. So how close is that story to the truth?

muhlenberg.jpgOn April 1, 1789, Frederick Muhlenberg was chosen as the first speaker of the House of Representatives. Muhlenberg’s father, Henry, was born in Germany, and he played an important role in the establishment of the Lutheran Church in the Colonies.

Young Frederick was born outside of Philadelphia before serving as a minister and pastor in the colonies. He began his life of public service as a member of the Continental Congress. He also served as the Speaker of Pennsylvania’s House and led the Pennsylvania delegation that ratified the Constitution.

Muhlenberg then emerged as the preferred candidate for the Speaker’s role as the House neared a quorum for its first meeting in 1789.

During two terms as Speaker, Muhlenberg was the first person to sign the Bill of Rights, but his tie-breaking vote on the controversial Jay Treaty proved to be his undoing. Muhlenberg lost a re-election bid after that, and his national political career was over.

But his “legendary” role in preventing the adoption of German as the United States’ official language gained steam over the years.

The late German academic Willi Paul Adams published a study in 1990 that included an explanation of why so many people believed Muhlenberg acted to block a congressional resolution that would have made German the national language.

“Fascinating for Germans, this imagined decision has been popularized by German authors of travel literature since the 1840s and propagated by some American teachers of German and German teachers of English who are not entirely secure in their American history,” Adams wrote.

“In reality, this presumed proposition was never brought to the congressional floor and a vote was never taken,” he added.

Dennis Baron, professor of English and linguistics at the University of Illinois at Urbana-Champaign, also tells a similar tale in an article he penned for PBS’s website, after the Muhlenberg legend popped up in an Ann Landers column.

“On January 13, 1795, Congress considered a proposal, not to give German any official status, but merely to print the federal laws in German as well as English. During the debate, a motion to adjourn failed by one vote. The final vote rejecting the translation of federal laws, which took place one month later, is not recorded,” Baron said, who cites two contemporary sources for the account.

Baron traces the legend to an 1847 book by Franz Löher called History and Achievements of the Germans in America, which Baron says “presents a garbled though frequently cited account of what is supposed to have happened.”

Adams also pointed out that just 9 percent of the early United States was German-speaking, and that the vast English-speaking majority would have had a few problems with the concept of an official language.

“Colonial speakers of English fought only for their political independence. They had no stomach for an anti-English language and cultural revolution,” Adams said.

Muhlenberg’s role in passing the Jay Treaty with Great Britain was much more controversial than his alleged involvement in rejecting the German language.

The Senate had passed the treaty by a mandatory two-thirds majority, but the House was needed to fund its provisions. Muhlenberg sided with the Federalists against an opposition led by James Madison.

In 1796, he cast the key vote in recommending the House fund the treaty. According to several accounts, Muhlenberg was stabbed by his brother-in-law several days later for that vote. He survived that attack and later died in Lancaster, Pennsylvania, in 1801.

Scott Bomboy is the editor in chief of the National Constitution Center.

https://constitutioncenter.org/blog/april-fools-german-as-americas-official-language

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

Did German almost become America’s official language in 1795?

 

For centuries, stories have persisted about Congress almost approving German as our official language, except for one vote by its German-speaking leader. So how close is that story to the truth?

muhlenberg.jpgOn April 1, 1789, Frederick Muhlenberg was chosen as the first speaker of the House of Representatives. Muhlenberg’s father, Henry, was born in Germany, and he played an important role in the establishment of the Lutheran Church in the Colonies.

Young Frederick was born outside of Philadelphia before serving as a minister and pastor in the colonies. He began his life of public service as a member of the Continental Congress. He also served as the Speaker of Pennsylvania’s House and led the Pennsylvania delegation that ratified the Constitution.

Muhlenberg then emerged as the preferred candidate for the Speaker’s role as the House neared a quorum for its first meeting in 1789.

During two terms as Speaker, Muhlenberg was the first person to sign the Bill of Rights, but his tie-breaking vote on the controversial Jay Treaty proved to be his undoing. Muhlenberg lost a re-election bid after that, and his national political career was over.

But his “legendary” role in preventing the adoption of German as the United States’ official language gained steam over the years.

The late German academic Willi Paul Adams published a study in 1990 that included an explanation of why so many people believed Muhlenberg acted to block a congressional resolution that would have made German the national language.

“Fascinating for Germans, this imagined decision has been popularized by German authors of travel literature since the 1840s and propagated by some American teachers of German and German teachers of English who are not entirely secure in their American history,” Adams wrote.

“In reality, this presumed proposition was never brought to the congressional floor and a vote was never taken,” he added.

Dennis Baron, professor of English and linguistics at the University of Illinois at Urbana-Champaign, also tells a similar tale in an article he penned for PBS’s website, after the Muhlenberg legend popped up in an Ann Landers column.

“On January 13, 1795, Congress considered a proposal, not to give German any official status, but merely to print the federal laws in German as well as English. During the debate, a motion to adjourn failed by one vote. The final vote rejecting the translation of federal laws, which took place one month later, is not recorded,” Baron said, who cites two contemporary sources for the account.

Baron traces the legend to an 1847 book by Franz Löher called History and Achievements of the Germans in America, which Baron says “presents a garbled though frequently cited account of what is supposed to have happened.”

Adams also pointed out that just 9 percent of the early United States was German-speaking, and that the vast English-speaking majority would have had a few problems with the concept of an official language.

“Colonial speakers of English fought only for their political independence. They had no stomach for an anti-English language and cultural revolution,” Adams said.

Muhlenberg’s role in passing the Jay Treaty with Great Britain was much more controversial than his alleged involvement in rejecting the German language.

The Senate had passed the treaty by a mandatory two-thirds majority, but the House was needed to fund its provisions. Muhlenberg sided with the Federalists against an opposition led by James Madison.

In 1796, he cast the key vote in recommending the House fund the treaty. According to several accounts, Muhlenberg was stabbed by his brother-in-law several days later for that vote. He survived that attack and later died in Lancaster, Pennsylvania, in 1801.

Scott Bomboy is the editor in chief of the National Constitution Center.

https://constitutioncenter.org/blog/april-fools-german-as-americas-official-language

நன்றி.

இந்த கட்டுரையும் ஆங்கிலமா? ஜேர்மனா? என்று ஒரு வாக்கெடுப்பு காங்கிரசில் நடக்கவில்லை என்றும். சட்டங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதா இல்லையா என்ற வாக்கெடுப்பே இவ்வாறு திரிபுபடுத்த பட்டிருக்கிறது என்பதாகவே சொல்கிறது.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ரஷ்யாவுக்கு வேறு சோலி இருப்பதால் அடக்கமாக உள்ளது. இல்லாவிட்டால் அதன் ஆதரவு நாடுகளுடன் சேர்ந்து வழக்கம்போல் வெட்டி ஆடியிருக்கும்.  முன்னர் தமிழர்கள் கொடிகளுடன் பெரும் எடுப்பில் ஜெனீவா நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்துவார்கள். ஆனால் இந்தத் தடவை பெரிய அளவில் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தத் தீர்மானத்தில் என்ன உள்ளது என்ற முழுமையான விபரம் யாருக்காவது தெரியுமா ?
  • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் பெரிய‌ப்பா 
  • பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றியுள்ளதால், நானும் பதில்களை வைக்கின்றேன். இந்தப் பதில்களை கிரிக்கெட் போட்டிகளைத் தவறவிடாமல் பார்க்கும் நண்பர் ஒருவர் தெரிவு செய்தார். அவர் விடுப்பு எடுத்து இரவிரவாகப் போட்டிகளைப் பார்க்கவுள்ளார்.😃  அவரது கணிப்புக்களை வைத்து யாழ் களப் போட்டியில் வெல்லுவேன் என்று நினைக்கின்றேன்!! # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.         1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM முதல் சுற்று பிரிவு A:         13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)         NAM Select NAM NAM   NED Select NED     SRI Select SRI SRI   UAE Select UAE   14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)         #A1 - ? (2 புள்ளிகள்)     SRI   #A2 - ? (1 புள்ளிகள்)     NAM 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE முதல் சுற்று பிரிவு B:         16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)         IRL Select IRL IRL   SCO Select SCO     WI Select WI WI   ZIM Select ZIM   17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)         #B1 - ? (2 புள்ளிகள்)     WI   #B2 - ? (1 புள்ளிகள்)     IRL 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.         19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI IRL SRI 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN 24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA 25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS 26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG IRL ENG 27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL 28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA 29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND 30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG IRL AFG 32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG 33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI 34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI BAN 35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK 36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA RSA 37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS IRL AUS 38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI 39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL NZL 40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAM WI 41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND 42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA RSA 43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL IRL NZL 44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS 45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI SRI 46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA 47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND சுப்பர் 12 பிரிவு 1:         49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)         AFG Select AFG     AUS Select AUS AUS   ENG Select ENG     NZL Select NZL     SRI Select SRI SRI   IRL Select IRL   50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)         #அணி A1 - ? (3 புள்ளிகள்)     AUS   #அணி A2 - ? (2 புள்ளிகள்)     SL 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRL சுப்பர் 12 பிரிவு 2:         52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)         BAN Select BAN     IND Select IND IND   PAK Select PAK     RSA Select RSA RSA   WI Select WI     NAM Select NAM   53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)         #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND   #அணி B2 - ? (1 புள்ளிகள்)     RSA 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAM அரையிறுதிப் போட்டிகள்:           அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.       55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி, அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)     AUS 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)     SRI இறுதிப் போட்டி:           இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.       57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி     AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:         58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     RSA 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Virat Kohli 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Wanindu Hasaranga 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Suryakumar Yadav 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mitchell Starc 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     David Miller 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     RSA  
  • இப்படிக் கடிதமும் எழுதி ஆர்ப்பாட்டமும் செய்தால் சீனா பயந்து திட்டத்தைக் கைவிடாது. இலங்கை அரசங்கமும் சீனவுடன் தமிழர்களது முரன்பாட்டை ஆதரிக்கும். மாறாக இத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்களை ஆராய்ந்து அதனை ஈடு செய்வதற்கான மாற்று வழிகளைச் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் சீனாவின் உதவிகளை வரவேற்பதுமே புத்திசாலித்தனம். கடிதத்தை வாசித்தால் அது எழுதப்பட்டதன் நோக்கம் புரியும். சட்ட விரோதமான முறையில் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அதனை தமிழ்த் தலைவர்களிடமே முறையிட வேண்டும். 
  • இன்னும் முறியலையோ? உங்கட ஜக்கம்மா என்னோட ஆளூ.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.