Jump to content

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்!


Recommended Posts

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?

Kalaingar Temple
முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதிக்கு தமிழக கிராமம் ஒன்றில் கோவில் கட்டப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. உடல்நல குறைவால் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது.
 
 
அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே ஒரு ஊரில் கோவிலே கட்டப்பட்டு வருகிறது.
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் அம்மக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக “கலைஞர் பகுத்தறிவு ஆலயம்” என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கினர்.
 
தொடர்ந்து கிராம மக்கள் நிதி திரட்டி அந்த கோவிலை கட்டி வரும் நிலையில் நிதி பற்றாக்குறையால் கோவில் பணிகள் முடிவடைய தாமதமாகி வருகிறது. கடவுள் மறுப்பாளராக விளங்கிய கருணாநிதிக்கு அவர் பெயரிலேயே கோவில் கட்டுவது வைரலாகியுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

"பகுத்தறிவு ".....ஆலயம்.

அதே பகுத்தறிவு அந்த கிராமத்தில் எவனுக்காவது இருந்திருந்தால் எவனும் கோவில் கட்டியிருக்கமாட்டன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

அதே பகுத்தறிவு அந்த கிராமத்தில் எவனுக்காவது இருந்திருந்தால் எவனும் கோவில் கட்டியிருக்கமாட்டன்.

கருநாநிதியின் பேனாவை கடலில் வக்கப்போகும் இவர்கள்  அவரின் மனைவிமார்களது சிலைகளை எங்கே வைப்பார்கள் ? 

பூமியில் இடம் போதாத காரணத்தால்  சந்திரனில் வைப்பார்களோ .. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

கருநாநிதியின் பேனாவை கடலில் வக்கப்போகும் இவர்கள்  அவரின் மனைவிமார்களது சிலைகளை எங்கே வைப்பார்கள் ? 

பூமியில் இடம் போதாத காரணத்தால்  சந்திரனில் வைப்பார்களோ .. 😏

கடலில்... சிலைகளை வைக்க, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. 
இது தவறான முன் உதாரணமாகி... கருணாநிதி வம்சத்துக்கே, 
கடலில் சிலைகளை வைக்க தொடங்கினால்... கடலில், இட நெருக்கடி ஏற்படும்.  

மெரீனாவில்... முதல்வர் பதவியில் இல்லாமல் இறந்த,  
கருணாநிதிக்கு இடம் கொடுத்ததே தவறு.
ராஃபிக் ராமசாமி தனது வழக்கை வாபஸ் பெறாமல் இருந்தால்,
கருணாநிதியை... கண்ணம்மா பேட்டையில்தான், புதைத்திருப்பார்கள். 

ஒட்டகத்துக்கு... இடம் கொடுத்த கதையாக, 
தி.மு.க. மெரீனா கடற்கரையின் அழகை கெடுப்பதை, 
உடனடியாக நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

திருவள்ளுவரின் சிலைக்கு அருகே திருவள்ளுவரின் சிலையை விட உயரமாக கருணாநிதியின் சிலையை வைத்துள்ளார்களாமே?!?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் தனது கட்சிக்கு வைக்கும் முதலாவது ஆப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஸ்டாலின் தனது கட்சிக்கு வைக்கும் முதலாவது ஆப்பு.

எல்லோரும் சறுக்கல் ஆரம்பிக்கும் இடம்....குடும்பம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

எல்லோரும் சறுக்கல் ஆரம்பிக்கும் இடம்....குடும்பம். 

என்ன சொல்ல வாறியள்? 😁

Link to comment
Share on other sites

அழகிரியின் சிலமன். அடிக்கடி அறிக்கைகள் தேர்த்தல் காலத்தில் விட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை, அதில் கருத்து பகிர்வதை சுயதணிக்கை அடிப்படையில் தவிர்ப்பது என்று அண்மையில் நம்மில் பலர் எடுத்து கொண்ட உறுதிமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இப்படியான செய்திகளை, அதில் கருத்து பகிர்வதை சுயதணிக்கை அடிப்படையில் தவிர்ப்பது என்று அண்மையில் நம்மில் பலர் எடுத்து கொண்ட உறுதிமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மறதி தான்.😄

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.