Jump to content

பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி


Recommended Posts

பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி

By T. SARANYA

10 AUG, 2022 | 03:23 PM
image

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார்.

09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார்.

இந்த தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21.jpg

பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிழம்பு said:

21.jpg

ஆகா... பாராளுமன்றத்தில், "கிரிபத் பாட்டி" நடந்திருக்கு.
கோத்தாவை... நாடு, நாடாய்... அலைய  விட்டுட்டு, நீங்க கொண்டாடுங்கோ.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.

    என்னது .... தேனீர் விருந்துச் செலவு இவ்வளவா? நாட்டுமக்கள் நடுத்தெருவில், நீங்கள் கொண்டாடுங்கோ! அது சரி, உங்களையும் சனாதிபதி ஆக்கினவைக்கு இதுகும் கொடுக்காவிட்டால் பதவியை தொடர ஏலுமோ? அவர்கள் வீட்டிலும் பல தட்டுப்பாடுகள் இருக்கலாம், யார் கண்டா?

5 hours ago, தமிழ் சிறி said:

ஆகா... பாராளுமன்றத்தில், "கிரிபத் பாட்டி" நடந்திருக்கு.
கோத்தாவை... நாடு, நாடாய்... அலைய  விட்டுட்டு, நீங்க கொண்டாடுங்கோ.  

ஹஹ்ஹா..... அதனாற்தானே இவர் தேனீர் விருந்து கொடுக்க முடிந்தது! இல்லையெனில் இவர் ஒரு மூலையில் ஞானியைப்போல் அமைதியாக முடங்கியிருந்திருப்பார். கொண்டாடத்தானே செய்வார்! பதவி விட்டுக்கொடுத்தவர் திண்டாடுகிறார் குந்தியிருக்க இடமில்லாமல்,  இவரோ அரியணை ஏறிய குஷியில் பயமில்லாமல் கொண்டாடுறார். நினையாதவை, நினையாத நேரத்தில், நினையாத மனிதருக்கு நடக்கும். அதுதான் விதியின் விளையாட்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேத்தண்ணி எண்டு சொல்லிப்போட்டு என்னத்தை குடிச்சு இறக்கினாங்களோ ஆருக்குத்தெரியும்? பில்ல பாத்தால் தேத்தண்ணி காசு போல தெரியேல்லை :cool:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.