Jump to content

போராட்டத்திற்கு ஆதரவளித்த... பிரித்தானிய யுவதியின், வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

போராட்டத்திற்கு ஆதரவளித்த... பிரித்தானிய யுவதியின், வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்.

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் போராட்டங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294303

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற ஒரு சில சுற்றுலாப் பயணிகளையும் அனுப்பி விட்டு என்ன பண்ணப்போறாங்க?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இருக்கிற ஒரு சில சுற்றுலாப் பயணிகளையும் அனுப்பி விட்டு என்ன பண்ணப்போறாங்க?!

ஶ்ரீலங்காவின் இறையாண்மைக்கு… இழுக்கு ஏற்படுத்தினால்,
“டாலர்” வராட்டிலும் காரியமில்லை, ஆக்களை நாடு கடத்துவோம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெற்றியை பரப்பியிருந்தால் விசேட விசா கிடைத்திருக்கும். இது தோத்துப்போன செய்தியை பரப்பியதால் ரத்து. மூடி மறைத்து வெற்றி கொண்டாடியதெல்லாம் புட்டுக்கொண்டு வருகுது. உள்நாட்டிலும் முறுகல், வெளிநாட்டிலும் முறுகல் இது எங்கே போய் முடியப்போகுதோ? பிள்ளையை பக்குவமாய் சொல்லி அனுப்பியிருக்கலாம் இனி இவ சும்மா இருப்பாவே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்.

தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை ஸ்கொட்லாந்து நாட்டவரான கெய்லி பிரேசர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அடிப்படையில் குடிவரவுத் திணைக்களம் தனது விசாவை தன்னிச்சையாக இரத்து செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முடிவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், தனது விசாவை இரத்து செய்யும் முடிவை மாற்றி உத்தரவு பிறப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

https://athavannews.com/2022/1294529

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.