Jump to content

மனிதர்கள் இறப்பது ஏன்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் இறப்பது ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வைக்கும் பண்பு ஒன்று உயிரியலாளர்களை இந்தப் பக்கம் திரும்ப வைத்துள்ளது. அதுதான் மீட்டுருவாக்கம். இதனை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும், மீண்டும் முழு உடல் வளர்ந்து ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக வாழத் தொடங்கிவிடும்.

அப்படியானால், இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியம் என்பது இயற்கையிலேயே இருக்கிறதா என்று உயிரியலாளர்களை எண்ண வைத்திருக்கிறது இந்த பண்பு. எனில் மரணம் தவிர்க்க முடிந்ததுதானா? ஏன் இந்த உயிரி மட்டும் மரணிப்பதில்லை?

(இந்தக் கட்டுரையில் இயற்கையான தேர்வு முறை என்று அடிக்கடி சொல்லப்படும். உடலின் செல்கள், ஆற்றல் ஆகியவை அடங்கிய வளத்தை, தானாகவே உடல் ஆரோக்கியத்துக்காக உடலே எடுத்துக் கொள்ளும் முறைதான் இயற்கை தேர்வு முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி கட்டுரைக்குள் போகலாம்)

 

வயது மூப்பு என்பது இனப்பெருக்கத்துக்கும் செல் பராமரிப்புக்கும் இடையிலான ஒரு சமாதான வர்த்தகம் என்று 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள வளங்களை (செல்கள்) அவை, ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்துகின்றன. குழந்தைப்பருவம் மற்றும் பதின்பருவத்தின் போது, உடல் தசைகளை வலுவாக வைத்திருக்க இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாலியல் முதிர்ச்சி வந்ததும் முன்னுரிமை இனப்பெருக்கத்துக்கு போய்விடுகிறது. ஏனெனில், பெரும்பாலான உயிரிகளில் குறைந்தளவே வளங்கள் உள்ளன. அவை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதால், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தப்படுவது குறையும்.

ஆனால், உயிர்கள் ஏன் இறக்கின்றன என்பதில் தற்போதைய புரிதல் கவனிக்கத்தக்கது. பாலியல் முதிர்ச்சி வந்ததும், இயற்கையாகவே வளங்களை பயன்படுத்தும் உடலின் பண்பு தளர்வடைந்து, வயதாகத் தொடங்குவது இறப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார் பிரிட்டன் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழக உயிரியல் மற்றும் உயிரியக்கவியல் பேராசியர் அலெக்சி மெக்லகோவ்.

 

ஹைட்ரா- கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஹைட்ரா

நம் வாழ்நாளில் நமது மரபணுக்கள் ஏராளமான திரிபுகளைச் சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பவையாகவோ அல்லது ஏதும் செய்யாதவையாகவோ இருக்கலாம். வெகு சில மட்டுமே பயனுள்ளவை.

பாலியல் முதிர்ச்சிக்கு முன்பாக, "இனப்பெருக்கத்துக்கான திறனை குறைக்கும் அல்லது இனப்பெருக்கத்துக்கு முன்பாக அந்த உயிரியை கொல்லும் எந்த ஒரு மரபணு திரிபும் உடலால் தேர்ந்தெடுக்கப்படும்." ஆனால், பாலியல் முதிர்ச்சியை ஒரு உயிரினம் அடைந்த பிறகு, தன் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இதன்பிறகு, இயற்கையாக தேர்வு செய்யப்படும் முறை பலவீனமடைகிறது.

உதாரணத்துக்கு, முட்டையிடும் சால்மன் மீன்களை எடுத்துக் கொண்டால், அவை இளம்பருவத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் நன்றாக தயாராகின்றன. கடலில் பெரும்போராட்டத்தை வென்று முட்டையிட்ட பிறகு அவற்றின் சந்ததிகளும் இதே போன்று போராடி முட்டையிட வேண்டியிருக்கும். அதன்பின்னர் அவை இறந்துவிடுகின்றன. ஒருவேளை பிழைத்திருந்தால் (வாய்ப்பு குறைவு) இன்னொரு சுற்று முட்டையிடுமானால், அவை முந்தைய சந்ததி அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. காரணம், ஏற்கனவே ஒரு தலைமுறைக்கு (திரிபுகளற்ற மரபணுவை) அது வழங்கிவிட்டது.

 

கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், எல்லா உயிரினங்களும் அப்படி இல்லை. சில உயிரினங்கள் பலமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுகிறது. அவை சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் விளைவுகளற்றும் இருக்கலாம். நம் உடலே அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், நாள் செல்ல செல்ல வயது மூப்பும் இணைந்து கொண்டு, இயற்கையாகவே செல்களை பயன்படுத்தும் முறையை வெகுவாக பலவீனப்படுத்தி விடுகிறது.

வயதாவதும் இறப்பதும் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றன. ஒன்று இயற்கையாகவே செல்களை தேர்வு செய்வது குறைந்துவிடுவதால் உடலில் உருவாகும் எதிர்மறை திரிபுகளின் தொகுப்பு; இன்னொன்று இனப்பெருக்கத்துக்கு பெருமளவு உதவவல்ல ஆனால், நீண்ட ஆயுட்காலத்துக்கு எதிரான தேர்வு முறை.

வயதாவதைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சில உயிரினங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றன. அது, "எதிர்மறை முதுமை" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இல்லை என்கிறார் பேராசிரியர் மெக்லகாவ்.

ஏதோ காரணங்களுக்காக குறைவாக இனப்பெருக்கம் செய்யும் அல்லது இளமை முதலே இனப்பெருக்கம் செய்ய முடியாத சுற்றுச்சூழல் இருந்தால், அந்த உயிர்களில் செல்களை தேர்வு செய்வதற்கான முறையில் மாற்றம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மெக்லகாவ்.

எப்படியாயினும், முதுமையடைவது என்பதில் கலவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ரூத் மேஸ் மற்றும் மேகன் ஆர்னாட் ஆகியோரின் ஆய்வின்படி, தொடர்ச்சியாக கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோப்பாஸ் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரிக்க வாய்ப்பில்லாத சமயங்களில், ஆற்றலை, முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற பயன்படுத்துவதற்கு பதில், அந்த ஆற்றலை உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் பரஸ்பர சமாதானம் இங்கு ஏற்படுகிறது என்பதற்கான உதாரணமாக இந்த செயல்முறை உள்ளது.

ஆனால், மீதமுள்ள விலங்குலகில், அதிகமான இனப்பெருக்க திறன் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு வேகமாக வயதாவதாகத் தெரிகிறது. வௌவால்கள் அதிகமான முறை இனப்பெருக்கம் செய்கின்றன ஆனால் குறைந்த காலமே வாழ்கின்றன. "இளமைக்காலத்தில் அதிகமுறை இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பாக இல்லை" என்கிறார் பேராசிரியர் மெக்ஹக்.

சில உயிரினங்களில் பாலினத்தைப் பொறுத்தும் ஆயுட்காலம் வேறுபடுகிறது. குறிப்பாக எறும்புகள், தேனீக்கள் ஆகியவற்றில் ராணி எறும்பு / ராணித் தேனீ அதிகமான இனப்பெருக்க வல்லமையும் அதிகமான ஆயுட்காலமும் கொண்டுள்ளது. இங்கு மட்டும் ஏன் கலவிக்கும் முதுமைக்குமான தொடர்பு வேலை செய்யவில்லை? காரணம், இரண்டுக்குமான வாழ்வியல் முறைகளின் வேறுபாடுதான். பெரும்பாலும் பிரச்னைகளை காவல் எறும்புகளோ/தேனீக்களோ கையாளும் சூழலில் அவை வாழ்கின்றன. அதுபோக, மூப்பு அடைவதற்கான சூத்திரங்கள் இங்கு எல்லாவற்றுக்கும் சமமாக பொருந்துவதில்லை.

சரி, மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் இனப்பெருக்கத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் உண்டு என்றால், குழந்தைகள் பெறுவதை நிறுத்திய பிறகும் ஏன் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்?

 

கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பாட்டி கருதுகோள்' சொல்வதன்படி, வயது மூத்த நம் உறவினர்கள் உயிரோடு இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், இனப்பெருக்கம் என்பது விலைமதிப்புமிக்க கடினமான செயலாகிவிட்டது. ஒரு பாட்டி தன் பேரக்குழந்தையுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அந்தக் குழந்தைக்குள் இருக்கும் தன் சொந்த மரபணுவை தூண்டி விட முடியும். இயற்கையான தேர்வு முறை என்ற அளவில், இது அவசியமாகிறது.

பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் அதிகமான இனப்பெருக்கத்திறன் காணப்படுகிறது. பாட்டிகளின் உதவி இருப்பதால் அடுத்த குழந்தை குறித்து அந்தத் தாயால் சிந்திக்க முடிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் கவுன்ரிடஸ்.

(பிபிசி ஃபியூச்சரில் வில்லியம் பார்க் எழுதிய கட்டுரை இது)

https://www.bbc.com/tamil/india-62498045

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையில் பாராளுமன்றம் ஊடாக, ஜனாதிபதியை கிளம்புவது மிகவும் கடினமான விடயம். அப்படி ஒரு பிரேரணை வரகிறது என தெரிந்தால், வருவதுக்கு முன்பே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைப்பு செய்தால், கதை கந்தல். பிரேரணை (ரகசியமாக) வந்துவிட்டால், ஒத்திவைக்க முடியாது. அதாவது, இலங்கை ஜனாதிபதி பதவி மிகப் பலமானது.
  • அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 11:20 AM கலாநிதி ஜெகான் பெரேரா   உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது.நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை.ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது.சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது.இந்த அத்தியாவசிய பொருட்கள் சகலதினதும்  விலைகள் மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தியிருக்கிறது. ஆனால், உயர்ந்த மட்ட வருமானம் பெறுபவர்களினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலைகளால் வாங்கக்கூடியதாக இருப்பதால் முன்னரைப் போன்று நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை என்பது குறித்து அவர்கள் திருப்பதியடைகிறார்கள்.அவர்கள் இனிமேலும் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களாக இல்லை.உண்மையில் அவர்களில் பலர் அறகலய மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஆதரவாளர்களாகக் கூட மாறிவிட்டார்கள். போராட்ட இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் பணக்காரர்களும் வறியவர்களும் கடுமையான தட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருட்கள், மின்சாரம் இன்மை காரணமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.மாற்றத்துக்காக நாடளாவிய ரீதியில் ஐக்கியப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அதுவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தை வீழ்த்தியது.அந்த ஐக்கியப்பட்ட கோரிக்கை இப்போது இல்லை.ஏனென்றால் கையில் பணம் உள்ளவர்களினால் உயர்ந்த விலைகளில் பெ்ருட்களை வாங்கக்கூடியதாக இருக்கிறது.அவர்கள் தங்களின் வழமை வாழ்வுக்கு திரும்பிவிட்டார்கள். வாழ்க்கையை சமாளிக்க முடியுமென்பதால் அவர்கள் வீதிப்போராட்டங்கள் இல்லாத வாழ்வை விரும்புகிறார்கள்.ஆனால் பெரும்பான்மையானவர்களினால் தங்களது பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பமுடியாமல் இருக்கிறது.அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி சந்தேகத்துக்கிடமின்றி ஒரு கிளர்ச்சித் திருப்பத்தை எடுக்கும். தொடரும் மாணவர் போராட்டங்களில் இதற்கான அறிகுறிகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு அதிகாரத்தை தன் கையில் எடுத்திருக்கிறார். அவரின் கீழ் அரசின் பிரதான அம்சமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.அவர் அதிகாரத்துக்கு  வந்த பிறகு பெருமளவு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னதாக அந்த மக்கள் விளிம்புநிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.வழமை வாழ்வைத் தொடரக்கூடிய வருமானம் இல்லாத அந்த மக்களின் பிரதிநிதிகள்தான் தொடர்ந்தும் போராடுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள்.கடந்த வாரம் கொழும்பில் அந்த மாணவர்களின் போராட்டம் வன்முறை மூலமாக கலைக்கப்பட்டதுடன் 80  பேர் கைதுசெய்யப்பட்டனர். ஒரு ஐந்து வருட இடர்பாடுகளுக்கு பின்னரே பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தற்போது தோன்றுகிறது.அதனால் இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்கு அடக்குமுறை சாத்தியமா அல்லது விரும்பத்தக்கதா என்பதை ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும். மேலும் கடன்களைப் பெற்று பழைய நடைமுறைகளையே தொடருவதன் மூலம் நெருக்கடியின் அறிகுறிகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணிகளை கையாளத்தவறியதைப் போன்று அறகலயவைக் கொண்டுவந்த அடிப்படைக் காரணிகளை கையாளவும் அரசாங்கம் தவறுகின்றது. இனப்பிரச்சினையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதால் மூண்ட போர்  மூன்று தசாப்த காலம் நீடித்தது.அரசியல் தீர்வு காணப்படவில்லை.அதன் விளைவாகவே அரசாங்கம் இன்று ஜெனீவாவில் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது அமைதி சமாதானத்தின் பயன்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அது சாத்தியப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு போன இராணுவ செலவினம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் கண்ணியமான வாழ்க்கையை தொடர முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.நீர்ப்பீரங்கி,கண்ணீர்புகை மற்றும் குண்டாந்தடி தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் மாணவர்களைக் கைதுசெய்து நீதிமன்றங்கள் முன் நிறுத்துவதன் மூலமும் பரந்துபட்ட சமுதாயத்துக்கு அரசாங்கம் ஒரு செய்தியைச் சொல்கிறது. பொருளாதாரப் இடர்பாடுகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதே அந்த செய்தியாகும். அரசாங்கத்தின் அக்கறை இரண்டு வகைப்பட்டதாக இருக்கலாம்.முதலாவது, ஆர்ப்பாட்டங்களை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால், மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் இடர்பாடுகள் காரணமாக  அவை மேலும் தீவிரமடைந்து அண்மைய மாதங்களில் காணக்கூடியதாக இருந்ததைப் போன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விடும்.கொழும்பில்  உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறது என்பதன் அறிகுறி.இரண்டாவது,நிதியுதவி கிடைக்கவேண்டுமானால் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை. போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் எதிரியின் தாக்குதல்களில் இருந்து இராணுவ தளங்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் முன்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை ஜனநாயகத்துக்கு பாதகமானது என்று கண்டனம் செய்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவின் ஏற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயப்போவதாகவும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உகந்த சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் அறகலயவின் பலமும் மக்கள் செல்வாக்கும் ஆட்சிசெய்வதற்கான மக்கள் ஆணையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பதைக் காட்டின.இப்போதும் நிலைமை அதுவே. பெருமளவு மெய்க்காவலர்கள் சகிதம் வந்தாலன்றி மற்றும்படி அரசாங்க தலைலர்களினால் வீதிகளில் மக்கள் மத்தியில் கலந்து நிற்க முடியாது. தேசிய பாதுகாப்பு என்ற நிறப்பிரிகை ஊடாகவே அவர்கள் தங்கள் இருப்பை நோக்குகிறார்கள். தனது பதவியின் இறுதி நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொருளாதார நெருக்கடியின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதற்கு ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய -- பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தேசிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கக்கூடிய 15 அமைச்சர்களைக் கொண்ட சிறியதொரு அரசாங்கத்தை அமைக்க முன்னவந்ததுடன் 6  மாதங்களில் புதிய தேர்தல்களை நடத்துவதாகவும் அறிவித்தார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தபோது அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வரக்கூடிய ஒரு மதிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் செயற்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதில் அவர் செலுத்திய கவனம் அதிர்ச்சியை தந்தது.ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவையின் அடிப்படையில் அது நியாயப்படுத்தப்பட்டது.அதே போன்றே ஊழலையும் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்துகிற நடைமுறைகளையும் அவர் ஒடுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. யாழ்ப்பாணம்   உதாரணம் முன்னைய ஜனாதிபதியின் கீழ் அதிகார பதவிகளில் இருந்த -- பொருளாதார நெருக்கடியை தடுக்கத்தவறிய  அதே அரசியல்வாதிகள் குழுவே மீண்டும் நியமிக்கட்ட்டிருக்கிறது. மீண்டும் அவர்களது நியமனம் தீர்வொன்றை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.ஒட்டுமொத்த தேசிய நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு வழிவகுககக்கூடிய திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லையென்றே தெரிகிறது.அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கே அன்றி தீர்வுகளை முன்வைப்பதற்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. இத்தகைய பின்புலத்தில், திட்டங்களுக்கே  பணம்  இல்லாமல் இருக்கும்  ஒரு நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் அமைச்சர்கள் நியமனம் நியாயமற்ற ஒன்று என்று மக்கள் நோக்குகிறார்கள்.அந்த அமைச்சர்களை வெறுப்புடன் நோக்கும் மக்கள் அவர்களை பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.இந்த அரசியல்வாதிகள் குழு முழுமையும் போகும்வரை பிரச்சினையும் போகாது என்றே மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய இருளார்ந்த சூழ்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச் சமூகம் ஒரு முன்னுதாரணத்தை வகுத்திருக்கிறது.மாணவர்களை தண்டிப்பதற்கு  பதிலாக அவர்களது மனங்களை வென்றெடுப்பதற்கு அரசாங்கம் அந்த உதாரணத்தை பின்பற்றலாம்.தனது மாணவர்கள் காலையில் உணவருந்தாமல் வகுப்புக்களுக்கு வருவதை ஒரு  விரிவுரையாளர் அவதானித்ததையடுத்தே இது ஆரம்பமானது.தனது வகுப்பில் மாணவர்களுக்கு பிஸ்கற் மற்றும் வாழைப்பழத்தை அவர் கொடுக்கத்தொடங்கினார். அடுத்து அவர் இலவச உணவு வழங்குவதற்கு பங்களிப்புச் செய்ய தனது சகாக்கள் இருவரை ஊக்கப்படுத்தினார்.இது மூன்று மாதங்களாக தொடருகிறது.இன்று அந்த சமூக நடவடிக்கை தினமும் 1200 க்கும் அதிகமான  மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கக்கூடிய ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்துவிட்டது. நல்லிணக்கம் மற்றும் நீதி மீது கொண்டிருக்கும்  பற்றுறுதிக்கான சான்றை வெளிக்காட்டுமாறு ஜெனீவாவில் ஐக்கிய்நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கேட்கப்படுகின்ற ஒரு நேரத்தில் யாழ்ப்பாண கல்வியாளர்கள் அரசாங்கம் தேசிய ரீதியில் முன்னெடுக்கவேண்டிய திட்டத்துக்கான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.நாட்டின் சகல பாகங்களில் இருந்து வரும்  வேறுபட்ட இனங்கள் மதங்களைச் சேர்ந்த தங்களது மாணவர்களுக்கு அந்த கல்வியாளர்கள் சமூக உணவகம் ஒன்றை நிறுவியமை நடைமுறையில் ஒரு தேசிய நல்லிணக்கச் செயற்பாடாகும்.  சிவில் சமூக செயற்பாடுகள் என்று பார்க்கும்போது அரசாங்கம் பெரும்பாக மட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய ஒன்றை நுண்மட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் செய்துகாட்டியிருக்கிறார்கள்.சிவில் சமூகத்தினால் சமுதாய மட்டத்தில் ஆதரவை பெருக்கமுடியும். முறைமைசார் ஆதரவை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது | Virakesari.lk
  • பெரிய பிக்குமார்..... இளம் பிக்குகளை, பாலியல் வன்கொடுமை செய்வதால்.... இரண்டு வயதை கூட்டி... இளம் பிக்குவுக்கு, பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.  😂 🤣
  • சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும் By DIGITAL DESK 5 29 SEP, 2022 | 11:55 AM (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வானதொரு நிலையில்  கடலை அண்மித்த 36000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.   இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. பல்வேறு சீன நிறுவனங்களும்  இலங்கை கடல் வளங்களை நீண்டகாலமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கடலட்டை பண்ணைகள் பெய்ஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும். சில ஊடக செய்திகளின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 டொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது. இந்த துறையில் சீன வணிக நிறுவனங்கள் பல தற்போது இலங்கையில் செயற்படுகின்றன. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான வணிக கடலட்டை பண்ணை திட்டங்களுக்கு கடந்த ஜுன் மாதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அனுமதியை கொழும்பு காண்கின்றது. தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட  சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் (Chunmanm Cultural Business Group) புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்கும் என சூழலியளாளர்கள் கூறுகின்றனர். எனவே தான் வடக்கு மீனவர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஏற்கனவே வடக்கில் காணப்படுகின்ற சீன கடலட்டை பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்கள் ஏற்கனவே எதிர்த்து வருகின்றனர். இந்தப் பண்ணைகளால் கடல் வளம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சும் வடக்கு மீனவர்கள், கடலட்டை  பண்ணைககளால் சுற்றுச்சூழலுக்கும், மீனவ மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று அந்த திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வட இலங்கையைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்கள், சீன வணிக மீன் வளர்ப்பு மீதான அரசாங்கத்தின் உந்துதலை தங்கள் வாழ்வாதாரத்திற்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவே கருதுகின்றனர். முன்மொழியப்பட்ட கடலட்டை பண்ணைகள் நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும் என யாழ். மீனவ சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி அரசாங்கம் திட்டங்களை ஊக்குவிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இந்த பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் உள்ளூர் கடல் சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் நம்புகிறார்கள். 2021 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதேபோன்ற சீனத் திட்டத்திற்காக் கடலை ஒட்டியுள்ள நிலத்தில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மீனவர்களும் மக்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தத் துறையில் சீன முதலீட்டின் தீவிரத் தேவைக்கு எதிர்வினையாற்றிய உள்ளூர் மீனவர்கள், சமீபத்திய ஆண்டுகளில் வடக்கில் சுமார் 250 கடலட்டை பண்ணைகளின் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய சீன முதலீடுகள் குறைவாகவே உள்ளன. உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அரசியல் ரீதியிலான செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டினார். சீனத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இலங்கைக்கு புதிதல்ல. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் போது பொது விவாதங்களில் இடம் பெற்ற பல சூழல் மீறல்கள்; குறித்த சம்பவங்கள் வெளிவந்தன. இந்த விமான நிலையம் யானைகளின் வாழ்விடத்தில் கட்டப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த விலங்குகள் ஓடுபாதைக்கு அருகில் அடிக்கடி சுற்றித் திரிகின்றன. அதேபோன்று, தெற்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தீவிரமான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும் | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.