Jump to content

இந்­திய முட்­டையை இறக்­கு­மதி செய்க!- பேக்­கரி உரி­மை­யா­ளர் சங்­கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முட்­டை­யின் விலை உயர் ­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து குறைந்த விலை­யில் முட்­டை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு உட­ன­டி­யா­கத் தலை­யி­டு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தி­டம் ­இ­லங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்­கள் சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது­கு­றித்து சங்­கத்­தின் தலை­வர் ஜெய­வர்த்­தன தெரி­வித்­த­தா­வது,

இந்­தி­யா­வில் தற்­போது முட்டை ஒன்­றின் விற்­பனை விலை சுமார் 18 ரூபா­வாக உள்­ளது.இந்­தி­யா­வில் இருந்து முட்­டையை இறக்­கு­மதி செய்து ஒரு முட்­டையை 20 ரூபா­வுக்கு வழங்­கு­வது மிக­வும் எளி­தா­னது.

தற்­போது இங்கு ஒரு முட்­டை­யின் விலை 58, 60, 65 ரூபா­வாக உள்­ளது. இதனை நியாய விலை­யில் விற்­கா­மல் விற்­ப­னை­யா­ளர்­கள் தங்­கள் விருப்­பத்­துக்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலை­யில் விற்­கின்­ற­னர்.

கோழி தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் இந்த விலை அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது. இத­னால் நுகர்­வோர் சுரண்­டப்­ப­டு­கின்­ற­னர்-என்­றார்.

இந்­திய முட்­டையை இறக்­கு­மதி செய்க! (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இந்­தி­யா­வில் தற்­போது முட்டை ஒன்­றின் விற்­பனை விலை சுமார் 18 ரூபா­வாக உள்­ளது.இந்­தி­யா­வில் இருந்து முட்­டையை இறக்­கு­மதி செய்து ஒரு முட்­டையை 20 ரூபா­வுக்கு வழங்­கு­வது மிக­வும் எளி­தா­னது.

கேக்,அவிச்சமுட்டை,முட்டைப்பொரியல் இல்லாமலும் உயிர் வாழலாம்.
உலகம் முழுக்க புளுத்த கடனை வைச்சுக்கொண்டு றோயல் பைமிலி வாழ்க்கை வாழ நினைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கேக்,அவிச்சமுட்டை,முட்டைப்பொரியல் இல்லாமலும் உயிர் வாழலாம்.
உலகம் முழுக்க புளுத்த கடனை வைச்சுக்கொண்டு றோயல் பைமிலி வாழ்க்கை வாழ நினைக்கினம்.

60 ரூபாய்க்கும் முட்டை இல்ல சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

கோழி தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் இந்த விலை அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது. இத­னால் நுகர்­வோர் சுரண்­டப்­ப­டு­கின்­ற­னர்-என்­றார்.

கோழித்தீவனம்,அதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய கேட்கலாம், சுய தொழில் வருவாய் பெருகும். அதைவிட்டு முட்டை இறக்குமதி கேட்டால், வரும்பொழுது  முட்டைகள் பழுதடைந்தும், நொருங்கியும் வந்தால் அந்த நஷ்டத்தை யார் பொறுப்பேற்பார்? அதுவும் மக்கள் தலையிலேயே சுமத்தப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

60 ரூபாய்க்கும் முட்டை இல்ல சாமி

வீட்டில் கோழி வளர்க்க முடியாதா? அதிலும் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு கோழி,ஆடு,மாடு வளர்ப்பது ஈஸி எலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதனைத்தான் இறக்குமதி செய்வது என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள் இவர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க வேணும்.

சும்மா போங்க சார்......சோள உற்பத்தியா? அப்ப என்ன எங்கள தோட்டம் செய்ய சொல்றீங்களா? 🤣

இவ்வளவு படிப்பு படிச்சது தோட்டம் செய்யவா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எதனைத்தான் இறக்குமதி செய்வது என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள் இவர்கள்? 

இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், கோழி தீவனம், போக்குவரத்து செலவு, முட்டையை இறக்குமதி செய்வதிலும் அதிகம்.

இது இன்றய பிரச்சனை இல்லை. இலங்கையில் சிறிமாவோ காலத்தில் இறக்குமதி தடை இருந்தது. அப்போது, யாழில், தோட்டம் செய்த்தவர்கள், துணி ஆலை வைத்திருந்தவர்கள் பெரும் கோடீஸ்வரர் ஆனார்கள்.

ஜேஆர் எல்லாத்தையும் திறந்து விட, இந்திய விலைகளுடன் போட்டியிடமுடியாது பல தொழில்கள் முடங்கின.

இன்று, உலகளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கு, ஆணைக்கோட்டை நல்லெண்ணெய், அரிசிமா எல்லாம் இந்தியாவில் இருந்து வருகிறது. மக்கள் அதிகம் இருப்பதால், கூலி குறைவு.

இலங்கையில் இருந்து வரும், லீலா, கிங்ஸ் மிளகாத்தூள் கூட, தேவையான மிளகாயினை, இந்தியாவில் இருந்து இறக்கின்றன. லோக்கல் விலை அதிகமாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வீட்டில் கோழி வளர்க்க முடியாதா? அதிலும் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு கோழி,ஆடு,மாடு வளர்ப்பது ஈஸி எலா?

எனக்கு வளவு போதாது அண்ண தூர இருந்த வளவில் மரவள்ளி,கீரை ,கத்தரி இட்டுள்ளேன் ஆனாலும் பூச்சி புழு தாக்கம் அதிகமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், கோழி தீவனம், போக்குவரத்து செலவு, முட்டையை இறக்குமதி செய்வதிலும் அதிகம்.

இது இன்றய பிரச்சனை இல்லை. இலங்கையில் சிறிமாவோ காலத்தில் இறக்குமதி தடை இருந்தது. அப்போது, யாழில், தோட்டம் செய்த்தவர்கள், துணி ஆலை வைத்திருந்தவர்கள் பெரும் கோடீஸ்வரர் ஆனார்கள்.

ஜேஆர் எல்லாத்தையும் திறந்து விட, இந்திய விலைகளுடன் போட்டியிடமுடியாது பல தொழில்கள் முடங்கின.

இன்று, உலகளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கு, ஆணைக்கோட்டை நல்லெண்ணெய், அரிசிமா எல்லாம் இந்தியாவில் இருந்து வருகிறது. மக்கள் அதிகம் இருப்பதால், கூலி குறைவு.

இலங்கையில் இருந்து வரும், லீலா, கிங்ஸ் மிளகாத்தூள் கூட, தேவையான மிளகாயினை, இந்தியாவில் இருந்து இறக்கின்றன. லோக்கல் விலை அதிகமாம்.   

இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே!

உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? 

அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. 

எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே!

உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? 

அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. 

எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை. 

நீங்கள் சொல்லும் சுய உற்பத்தி, தன்னிறைவு இருந்தது.

மூலப்பொருள் இல்லாமல் போனதே..... பிரச்சணைக்கு காரணம்.

இப்போது, டீசலுக்கு ஓடுவதா, தீவனத்துக்கு ஓடுவதா.....

தீவனத்துக்கு கொடுக்கும் டாலரில் பேசாமல் முட்டையையே இறக்கலாம், பின்னர் நிலைமை சீராகும் போது பார்க்கலாம் என்பதே இன்றைய நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இலங்கையில் கோழி முட்டை போடாதா? இல்லாட்டி இலங்கை சேவல்களுக்கு ஆண்மை குறைந்து விட்டதா? 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் எல்லாம் இருந்தது, இப்போ அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலை மாறிவிட்டது என்பது தங்களிற்கு தெரியாததேனோ?

மனிதர்களுக்கும் பொருந்தும். நீங்கள் கோழியில் மட்டும்  கவனம் செலுத்துகிறீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே!

உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? 

அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. 

எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை. 

உனண்மை தான்...!

அவுஸ்திரேலியா சீனாவிலிருந்து வரும் தோடம்பழ விலையுடன் போட்டி போட இயலாமல், இருந்த மரங்களையெல்லாம் வெட்டி விட்டார்கள்...!

இனிச் சீனாக்காறன் விக்கிற விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

அதை விடவும் இந்தியாக்காரன் சிங்களத்துக்குப் பதினெட்டு ரூபாய் உள்ளூர் விலைக்கு முட்டை விற்க மாட்டான்!

திரவ  நைதரசனின் விலை இந்திய உள்ளூர் விலையின் பல மடங்கு விலைக்க்குத்தான் இலங்கைக்கு விற்கப் பட்டது!

Edited by புங்கையூரன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகிடி said:

ஏன் இலங்கையில் கோழி முட்டை போடாதா? இல்லாட்டி இலங்கை சேவல்களுக்கு ஆண்மை குறைந்து விட்டதா? 

நாட்டின் நிலை புரியாமல் ஐயா எங்கிருந்து பேசுகிறீர்கள்? வாருங்கள்!  வந்து எங்கள் கோழிகளுக்கு என்ன குறை என்று சோதிச்சு சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.