Jump to content

இலங்கைக்கு இந்தியா வழக்கும் உளவு விமானம்


Recommended Posts

கதிர்

இந்­தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்­னி­யர் உளவு விமா­னம் ஒன்றை இலங்­கை­ப் படை­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது.

இதற்­கான பேச்சு இடம்­பெற்று வருவ­ தாக இந்­திய ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு இன்று சீன உளவு கப்­ப­லான யுவாங் வாங் 5 வரு­வ­தற்கு இந்­தியா எதிர்ப்­புத் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த டோர்­னி­யர் உளவு விமா­னத்தை இலங்­கைக்கு இந்­தியா வழங்­க­வுள்­ளது.

பெரும்­பா­லும் இந்த விமா­னம் இந்த மாத நடுப்­ப­கு­தி­யில் இலங்­கைக்கு வழங்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை தனது கடல் கண்­கா­ணிப்பு மற்­றும் பிற நோக்­கங்­க­ளுக்­காக இந்த உளவு விமா­னத்­தைப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கைப் படைக்கு இந்திய உளவு விமானம் (newuthayan.com)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

சீனாவுக்கு வேலை இலகுவாகி விட்டது.🙃

அந்த உளவு விமானத்திலேயே சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள். 🤣

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதுவும் தெரியாதுன்னு ஹிந்தியா நினைக்குது போல. உதை கொடுத்து அதை தானே கையாளலாம் என்ற திட்டமாக்கும். ஆனால்.. சிங்களவன் உந்த ஆளில்லா விமான உளவில்.. நல்ல அனுபவம் மிக்கவர்கள். இஸ்ரேல் உளவு விமானங்களை தமிழர்களுக்கு எதிராக பாவித்த அனுபவம் உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீனக்கப்பல் இலங்கைக்கடல் எல்வைக்குள் வந்து விட்டது. இந்த விடயம் கைமீறிவிட்டது. இந்தியாவுக்கும் மேற்குலகுக்கும்  தமிழர்களின் தயவு  தேவைப்படுகின்றது;. வெண்ணெய் திரண்டு வரும் பொது தாளியை உடைக்கும் தற்போதுள்ள தலைமை இதை சரியாகப் பயன்படுத்ததாது என்பது மட்டும் உறுதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இந்­தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்­னி­யர் உளவு விமா­னம் ஒன்றை இலங்­கை­ப் படை­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது.

இந்த டோர்­னி­யர் விமானம் இந்துஸ்தான் தாயரிப்பு 2௦௦2டன் இழுத்து மூடிவிட்டார்கள் இப்ப இலங்கைக்கு கொடுத்தது  எந்த ரகம் என்று குறிப்பிடவில்லை இந்திய ராணுவ வெளியேற்றம் பொழுது இந்த டோர்­னி­யர் ரக விமானம் பறந்து பறந்து வன்னி காடுகளை உளவு அறிந்தது அவர்களின் எதிர்கால பழிவாங்கல்க்கு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நினைக்க சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை? இலங்கை சீனாவை அழைக்கிறது, அதற்கு இது உளவு விமானம் வழங்குதாம். ம் .... ஏற்கெனவே இது கொடுத்த உளவு விமானம் உலா வரும்போதே விடுதலைப்புலிகள் விமானப்படைத்தளத்தை அழித்ததோடு இந்திய இராணுவமும் கொல்லப்பட்டது. பாவம் இந்தியா இப்போது! துரோகி எப்போதும் தான் செய்த துரோகத்தாலேயே அழிவான்! பகவத் கீதையை படிப்பிக்கமுதல் இவர்கள் படிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அந்த உளவு விமானத்திலேயே சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள். 🤣

எப்ப அடிச்சுப்பாங்க என்று தெரியாமல் இருக்கு🤔🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தனை கெடுக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு பழைய வண்டியை வாங்கிக் குடுத்தால் போதும்......இப்பொழுது நாடு சாப்பாட்டுக்கே தங்கினத்தோம் போடுது......எல்லாம் விலையேறி விட்டது.......இந்நேரத்தில் இதுகளை எங்கே வைச்சு பராமரிக்கிறது.....இன்னும் ரெண்டு கப்பலும் குடுத்தாங்கள் எண்டால் கடனில் மூழ்கிய  நாடு அப்படியே கடலில் மூழ்கிடும்......!   🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்ப அடிச்சுப்பாங்க என்று தெரியாமல் இருக்கு🤔🤔

அந்தளவுக்கு வருவாங்கள் எண்டு நான் நினைக்கேல்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அந்தளவுக்கு வருவாங்கள் எண்டு நான் நினைக்கேல்லை

எப்படி அடிச்சாலும் இந்தியா தாக்காது 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.