Jump to content

"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
இலங்கை

பட மூலாதாரம்,KOGULAN

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது.

வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், முல்லைத்தீவில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதியும் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

2000ஆம் நாள் போராட்டத்தை முன்னிட்டு, வடக்கில் பல பகுதிகளில் இன்று மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொடிகளை ஏந்தியவாறு, சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தனர்.

அதேவேளை, காணாமல் போனோரின் உறவுகளது படங்களையும் ஏந்திய இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியிலும் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

கிளிநொச்சியில் திரண்ட உறவினர்கள்

கிளிநொச்சி போராட்டம்

பட மூலாதாரம்,KOGULAN

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (ஆக. 12) காலை 9.30 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும், ராஜபக்ச குடும்பத்தை கைது செய்து சட்டத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி போராட்டம்

பட மூலாதாரம்,KOGULAN

இந்த 2000 நாட்களில் தாம் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டதாகவும், இவ்வாறு கற்றுக்கொண்ட விடயங்களின் ஊடாக சில உறுதியான முடிவுகளை எடுத்ததாகவும் காணாமல் போனோர் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எடுத்த முடிவுகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1. தமிழர்களுக்கு வடகிழக்கில் தாயகம் வேண்டும்.

2. இந்த தாயகம் பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.

3. பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும்.

4. ஐக்கிய நாடுகளினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி.

இலங்கை

பட மூலாதாரம்,KOGULAN

5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும்.

7. எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டனர்.

8. வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமாக இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம். ஏனெனில் சிங்களவர்கள் தமிழுக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், பணம் கொடுத்து பாலியல் தொழிலாளர்களாகவும், தமிழ் கலாச்சாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

கிளிநொச்சி

பட மூலாதாரம்,KOGULAN

இதேவேளை, இந்த 2000 நாட்கள் தொடர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட, சுமார் 120க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்புகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இலங்கை அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா, இலங்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது. தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியும் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்," என அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62521500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

''நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா, இலங்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது. தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியும் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்," என அவர் குறிப்பிட்டார்.

இந்தியா என்றுமே…தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது கிடையாது.
இனி… இந்தியாவை நம்புவது இல்லை என்பது, நல்ல முடிவு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் அருமை. 

BBC யில் கோபம் வராமல் வேறு என்ன  வரும்? 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

தலையங்கம் அருமை. 

BBC யில் கோபம் வராமல் வேறு என்ன  வரும்? 😡

தமிழர்களை இழிவு படுத்த... வேண்டுமென்றே, 
அந்தத் தலையங்கத்தை  BBC போட்டுள்ளது.
தமிழர்கள்...  தங்கள் பிள்ளைகளை காணாமல் 2000 நாள் (5 வருடத்திற்கு மேல்)
தொடர் போராட்டம்  செய்கிறார்கள்.   
அதனை...  எவ்வளவு கீழ்த்தரமாக மலினப் படுத்துகிறார்கள்.

இவர்களை... பத்திரிகையாளர் என்று சொல்லவதே... அவமானம். 😡

காலையில்... பத்திரிகையாளர் போர்வையில், 
ஒரு கோஷ்டி குழப்பம் விளைவிக்க வந்துள்ளது. 👇

//தாம் ஊடகவியலாளர்கள் எனவும், இன்றைய போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என கூறி குரல் பதிவு மேற்கொள்ள முயற்சித்தவர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.//

தமிழர்களுக்குள்... எல்லாப் பக்கமும், கறுப்பு ஆடுகள். யாரை... நோவது என்று தெரியவில்லை. 😢

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மிழர்களை இழிவு படுத்த... வேண்டுமென்றே, 
அந்தத் தலையங்கத்தை  BBC போட்டுள்ளது.
தமிழர்கள்...  தங்கள் பிள்ளைகளை காணாமல் 2000 நாள் (5 வருடத்திற்கு மேல்)
தொடர் போராட்டம்  செய்கிறார்கள்.   
அதனை...  எவ்வளவு கீழ்த்தரமாக மலினப் படுத்துகிறார்கள்.

இவர்களை... பத்திரிகையாளர் என்று சொல்லவதே... அவமானம். 😡

பீ.பீ.சீ கிந்தியாவின் கைக்கூலியாகி நீண்டநாட்களாகிவிட்டது. இவர்களது செய்திகளை யாழில் இணைக்காமலிருக்கலாம் அல்லது குழுநிலையாகக் கண்டணங்களைப் பதிவு செய்யவது நன்று. செய்திக்குத் தலைப்பு எழுதத் தெரியாதவனெல்லாம் ஊடகவியலாளர். இது எங்கட தமிழ்த்தளங்கள் பலவற்றுக்கும் உள்ளவியாதி. கைவிரலிடுக்கில் செய்திகள் பரிமாறும்காலத்தில் தலைப்புகளைப்போட்டு ஏமாற்றும் கீழான செயல்.

4 hours ago, தமிழ் சிறி said:

காலையில்... பத்திரிகையாளர் போர்வையில், 
ஒரு கோஷ்டி குழப்பம் விளைவிக்க வந்துள்ளது.

4 hours ago, தமிழ் சிறி said:

//தாம் ஊடகவியலாளர்கள் எனவும், இன்றைய போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என கூறி குரல் பதிவு மேற்கொள்ள முயற்சித்தவர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.//

தமிழர்களுக்குள்... எல்லாப் பக்கமும், கறுப்பு ஆடுகள். யாரை... நோவது என்று தெரியவில்லை. 😢

 இலையானிலும் கீழான கறுப்பாடுகள். ஏன் தமிழீழம் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு, இதைவிட எடுத்துக்காட்டு தேவையில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

'அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

 நல்லது.

இலங்கை தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி யார் நல்லவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் எங்களை நன்றாக வாழவைப்பார்கள் என்று அடையாளம் கண்டு அடைக்கலம் பெற்றனரோ அவர்களிடமே தான், நம்பிக்கை வைக்க வேண்டியவர்களிடம் தான் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் 👍

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்  என்று குறிப்பிடுவதால் மற்றய சிறந்த நாடுகள் அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்சலண் நியூஸிலாந்து விடுபட்டு விடுகிறது. ஆகவே மேற்குலகநாடுகள் என்று சொல்லுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விடயம் தெரியாத ஊரில் இருக்கும் அப்பாவி மக்கள் இன்றும் இந்த மேற்குலகை நம்புவது மடைத்தனம்.

ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியாவை அல்லவா நம்பி கோரிக்கை வைக்க வேண்டும்😆.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விடயம் தெரியாத ஊரில் இருக்கும் அப்பாவி மக்கள் இன்றும் இந்த மேற்குலகை நம்புவது மடைத்தனம்.

ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியாவை அல்லவா நம்பி கோரிக்கை வைக்க வேண்டும்😆.

கோசான்,

நீங்கள் எப்படித்தான்  ஒத்தூதினாலும் மேற்குலகும் சேர்ந்துதான் எங்களுக்கு கழுத்தறுத்தார்கள். 

அதை நீங்கள் மறுக்க முடியாது.

முன்னர், இந்தியா எங்களை பாவித்தது. இப்போது மேற்கு பாவிக்கிறது. 

இன்னும் 10 வருடங்களில் இலங்கையில் தமிழர் இரண்டாம் சிறுபான்மையினர் ஆகிவிடுவர். அதன்பின் மேற்கு விரும்பினாலும் ஒன்றுமாகிவிடாது. 

உங்கள் விருப்பம் கானல்நீர்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

உங்களை விட இங்கே மேற்கு எம்மை கழுத்தறுத்ததை எழுதுகிறவன் நான் ஆகவே இங்கே ஒத்து ஊதல் ஏதும் இல்லை.

மேற்கும்” என்ற உங்கள் வசனத்தில் அந்த “ம்” விகுதி யாரை குறிக்கிறது?

2009 க்கு பின்னும் எம்மை கழுத்தறுக்கும், ஐநாவில் இலங்கைக்கு முழு கவர் எடுக்கும் சீனா, ரஸ்யாவை ஆக இருக்குமோ?

எம்மை கழுத்தறுத்தோர் வரிசையில் மேற்கும் இருக்கிறது, இன்றும் ரஸ்யாவும் சீனாவும் இருக்கிறது. இந்தியாவும் இதே லிஸ்டில்தான்.

நாங்கள் எல்லாம் 2001-2022 வரை விரல் சூப்பிகொண்டிருக்கவில்லை இதை மறக்க.

2009 க்கு பின்னேனும் எமது குரலை கொஞ்சம்மாவது யார் கவனத்தில் எடுத்தார்கள் என்பதும், யாரை நாம் நெருங்க, நெருக்க வேண்டும் என்பதும், போர் குற்ற விபரணங்களை வெளி கொணர்ந்தோர் எந்த நாட்டவர்கள் என்பதும், உங்களுக்கு புரியாவிடிலும், ஊரில் போராடும் மக்களுக்கு புரிகிறது.

பிகு

ரஸ்யா, சீனாவை ஆதரித்தால் எமது இனப்பரம்பல் இலங்கையில் கூடி விடுமா?

அவர்கள் நம் சார்ந்த யாரையும் சந்திப்பதே இல்லை. 

வடிவேலுவை கேட்ட மாதிரி “யார்யா நீ கோமாளி” என்பதுதான் சீனா, ரஸ்யாவின் ஈழத்தமிழர் மீதான அணுகுமுறை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதெல்லாம் சரிதான கோசான். அதற்காக நீங்கள் அதிகம் வக்காலத்து வாங்குகிறீர்கள எனத் தோன்றுகிறது.

உங்களது செய்வதைத்தான் இலங்கையில் ஆனந்தசங்கரியாரும் சம்பந்தரும் இந்தியாவிற்காகச் செய்தவர்கள். அதன் பலனை எல்லோரும் தற்போது  அனுபவிக்கிறோம். 

எதற்கும் கொஞ்சம் அடகி வாசித்தல் நல்லது. உங்கள் எழுத்துக்கள் அதீத நம்பிக்கையை மேற்கின் மீது வைக்கும்படி ஊக்குவிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

விடயம் தெரியாத ஊரில் இருக்கும் அப்பாவி மக்கள் இன்றும் இந்த மேற்குலகை நம்புவது மடைத்தனம்.

ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியாவை அல்லவா நம்பி கோரிக்கை வைக்க வேண்டும்😆.

தற்போது தமிழ் மக்கள் யாரையும் அதாவது எந்த நாட்டையும் நம்பி இல்லை ஆனால் அரசியல் வாதிகள் மேற்குலகை நம்பி மக்களையும் நம்ப வைக்கிறார்கள் 

நாங்க இப்ப சீனா வரணும் அது  இந்தியாக்கு கொஞ்சம் சக்கரைத்தண்ணி கொடுக்கணும் என்ற ஆசைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் சில திரிகளில் உள்ள அரசியல் விளங்குதோ இல்லையோ நல்லாய் தமிழ் கற்றுக் கொள்ளலாம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதெல்லாம் சரிதான கோசான். அதற்காக நீங்கள் அதிகம் வக்காலத்து வாங்குகிறீர்கள எனத் தோன்றுகிறது.

உங்களது செய்வதைத்தான் இலங்கையில் ஆனந்தசங்கரியாரும் சம்பந்தரும் இந்தியாவிற்காகச் செய்தவர்கள். அதன் பலனை எல்லோரும் தற்போது  அனுபவிக்கிறோம். 

எதற்கும் கொஞ்சம் அடகி வாசித்தல் நல்லது. உங்கள் எழுத்துக்கள் அதீத நம்பிக்கையை மேற்கின் மீது வைக்கும்படி ஊக்குவிக்கின்றது. 

இல்லையே. எப்போதும் நம்ப நட, நம்பி நடவாதே என்றுதானே எழுதுகிறேன்.

இங்கே நம்பிக்கை என்பது மேற்கை நம்புங்கள் என்பதல்ல. எங்கே எமக்கான சிறு இடைவெளியாவது தெரிகிறதோ அதை நோக்கி செயல்படுங்கள் என்பதே.

மேற்கினது நிகழ்சி நிரலுடன் எம் இலக்கை ஒருமியுங்கள் (align) என்பதே.

இல்லாமல் கற்பிதனோ, வேறு யாருமோ, கூட்டமைப்பையோ, அல்லது, கஜனையோ, விக்கி ஐயாவையோ சீனா, ரஸ்யாவுடன் ஒரு தேனீர் விருந்துக்காகவது ஏற்பாடு செய்தால் - பிறகு அவர்கள் ஆதரவு நிலை எடுப்பது பற்றி யோசிக்கலாம்.

நான் அறிந்தவரை - எந்த தமிழ் தரப்பையும், இவர்கள் சந்திக்க கூட தயாரில்லை. இவர்களை நம்பி கொஞ்சமேனும் நெகிழ்வாக இருக்கும் மேற்கையும் பகைப்பது எவ்வளவு அறிவான நகர்வு? என்பதே நான் கேட்பது.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்க இப்ப சீனா வரணும் அது  இந்தியாக்கு கொஞ்சம் சக்கரைத்தண்ணி கொடுக்கணும் என்ற ஆசைதான் 

இது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் சக்கரைதண்ணி குடிச்ச பின் இந்தியா எமக்கு ஆதரவாக நகர்ந்தால்தான் எமக்கு நல்லது நடக்கும்.

இலங்கை மொத்தமாக இந்தியா/மேற்கின் கையை விட்டு சீனாவின் கைக்குள் போனால் - அதன் பின் சீனா முழுக்க முழுக்க இனவாதிகள் பக்கம்தான் நிற்கும். இப்போ இருப்பதை விட மிக மோசமான நிலைக்கு நாம் தள்ளபடுவோம்.

குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் விட்டால், நாம்தான் நாறுவோம்🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் சக்கரைதண்ணி குடிச்ச பின் இந்தியா எமக்கு ஆதரவாக நகர்ந்தால்தான் எமக்கு நல்லது நடக்கும்.

இலங்கை மொத்தமாக இந்தியா/மேற்கின் கையை விட்டு சீனாவின் கைக்குள் போனால் - அதன் பின் சீனா முழுக்க முழுக்க இனவாதிகள் பக்கம்தான் நிற்கும். இப்போ இருப்பதை விட மிக மோசமான நிலைக்கு நாம் தள்ளபடுவோம்.

குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் விட்டால், நாம்தான் நாறுவோம்🤣.

வாஸ்த்தவம் தான்   இப்ப மட்டும் என்னவாம் இனவாதிகள் பக்கம் தானே எனக்கு கண் போகுதோ இல்லையே எதிரிக்கு தலை போகணும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாஸ்த்தவம் தான்   இப்ப மட்டும் என்னவாம் இனவாதிகள் பக்கம் தானே எனக்கு கண் போகுதோ இல்லையே எதிரிக்கு தலை போகணும்  

உங்கள் மனநிலையை புரிந்து கொள்ள  முடிந்தாலும், “தாச்சியில் இருந்து அடுப்புக்குள் குதிக்க கூடாது”.

இந்தியா/மேற்கின் பிடி முற்றாக இலங்கை மீது இழக்கப்பட்டால் இலங்கை வட கொரியா போல ஆகி விடும்.

அப்போ மீண்டும் தனி சிங்கள சட்டத்தை இலங்கை கொண்டு வரக்கூடும். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

நீங்கள் எப்படித்தான்  ஒத்தூதினாலும் மேற்குலகும் சேர்ந்துதான் எங்களுக்கு கழுத்தறுத்தார்கள். 

அதை நீங்கள் மறுக்க முடியாது.

முன்னர், இந்தியா எங்களை பாவித்தது. இப்போது மேற்கு பாவிக்கிறது. 

இன்னும் 10 வருடங்களில் இலங்கையில் தமிழர் இரண்டாம் சிறுபான்மையினர் ஆகிவிடுவர். அதன்பின் மேற்கு விரும்பினாலும் ஒன்றுமாகிவிடாது. 

இங்கே இன்னுமொன்றை நாங்கள் பெரிதாக கவனிக்க வேண்டும். உலகத்தில் வேறு எங்குமில்லாதவாறு இலங்கையில் இரண்டு பெரிய எழுச்சி போராட்டங்கள் உருவாகி அழிக்கப்பட்டது. ஒன்று சேகுவாரா இயக்கம். இரண்டாவது தமிழீழ விடுதலை இயக்கம். இரண்டும் வெற்றியின் உச்சத்திற்கு சென்றவை.

இந்த இரண்டு இயக்கத்தையும் முடிவிற்கு கொண்டுவர உதவியது இந்தியா மட்டுமே.

எனவே இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்களை இந்தியா எனும் வாய்ப்பாட்டை வைத்து கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல் கணக்கை கணித்துக்கொள்ளுங்கள் :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது தமிழ் மக்கள் யாரையும் அதாவது எந்த நாட்டையும் நம்பி இல்லை ஆனால் அரசியல் வாதிகள் மேற்குலகை நம்பி மக்களையும் நம்ப வைக்கிறார்கள் 

நாங்க இப்ப சீனா வரணும் அது  இந்தியாக்கு கொஞ்சம் சக்கரைத்தண்ணி கொடுக்கணும் என்ற ஆசைதான் 

அடுத்த சில வாரங்கள் / மாதங்கள் முக்கியமானவ.  நடைபெறப்போகும் சம்பவங்கள் மேற்கின் தலையீட்டுக்கான சாத்தியக்கூறுக்களை இன்னும் அதிகமாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏலவே அறியப்பட்ட விடயம் தானே. கருணா - பிள்ளையான் மற்றும் ஈபிடிபி புளொட் கும்பல்கள் தான் இவர்களை இராணுவக் கொத்தடிமைகளாக வித்தார்கள். கோத்தாவுக்கு இதில் முக்கிய பங்குண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது ஏலவே அறியப்பட்ட விடயம் தானே. கருணா - பிள்ளையான் மற்றும் ஈபிடிபி புளொட் கும்பல்கள் தான் இவர்களை இராணுவக் கொத்தடிமைகளாக வித்தார்கள். கோத்தாவுக்கு இதில் முக்கிய பங்குண்டு. 

நெடுக்ஸ் இந்த தலைப்பைப் பற்றி பீபிசிக்கு இரு முறைப்பாடு செய்து விடுங்கோவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாதவூரான் said:

நெடுக்ஸ் இந்த தலைப்பைப் பற்றி பீபிசிக்கு இரு முறைப்பாடு செய்து விடுங்கோவன்

பிபிசி க்கு பல முறை அது தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் தொடர்பிலான செய்திகளில் விடும் தவறுகள் குறித்து சுட்டிக்காட்டிய போதும் ஒரு சிலதுக்கு மட்டும் பதில் வந்தது. அதில் ஒன்றில் மட்டும் தான் மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.. ஆனால் பிரதான செய்தியில் மாற்றம் செய்யவில்லை. இது பிபிசி ஆங்கிலத்துடனான மோதலில்.

பிபிசி தமிழ் சொல்லி.. வேலையில்லை. அது ஹிந்திய ஆளுகைக்குள் உள்ளது. அவை நினைச்சதை தான் எழுதுவினம் சொல்லுவினம்.

பிபிசி மீது நம்பிக்கை இழந்து பல காலமாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உங்கள் மனநிலையை புரிந்து கொள்ள  முடிந்தாலும், “தாச்சியில் இருந்து அடுப்புக்குள் குதிக்க கூடாது”.

இந்தியா/மேற்கின் பிடி முற்றாக இலங்கை மீது இழக்கப்பட்டால் இலங்கை வட கொரியா போல ஆகி விடும்.

அப்போ மீண்டும் தனி சிங்கள சட்டத்தை இலங்கை கொண்டு வரக்கூடும். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

இப்ப மட்டும் அவங்க சட்டம்தானே நாடு முழுவதும் 

4 hours ago, Kapithan said:

அடுத்த சில வாரங்கள் / மாதங்கள் முக்கியமானவ.  நடைபெறப்போகும் சம்பவங்கள் மேற்கின் தலையீட்டுக்கான சாத்தியக்கூறுக்களை இன்னும் அதிகமாக்கும். 

நமக்கென்ன ஆகப்போகிறது ஒன்றும் இல்லை சும்ம கைய கட்டி வேடிக்கை மட்டும் பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

விடயம் தெரியாத ஊரில் இருக்கும் அப்பாவி மக்கள் இன்றும் இந்த மேற்குலகை நம்புவது மடைத்தனம்.

ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியாவை அல்லவா நம்பி கோரிக்கை வைக்க வேண்டும்😆

இவர்களின் உண்மை நிலையை முஸ்லிம்களின் நிலயோடு ஒப்பிட்டு  மேற்குலக வாழ்க்கை வசதி சுதந்திரங்களை அனுபவித்து அங்கிருந்து இன்புற்றபடியே  சவுதிஅரெபியாவுக்கு விசுவாசமாக ஷரியா முஸ்லிம் மத சட்டம் வர வேண்டும் என்பது போன்றது என்பதை வேறு ஒரு திரியில் அழகாக விளங்கபடுத்தி இருந்தீர்கள்.
திட்டமிட்டு மிகவும் சிறந்த நாட்டுக் தான் போக வேண்டும் என்று இலங்கையில் இருந்து சூட்கேஸ்சை கட்டி கொண்டு மேற்குலக நாடுகளுக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்குள்ள வாழ்கை வசதிகளை அனுபவித்தபடி கொழுப்பெடுத்து பொழுது போவதற்காக பேசுவது தான் அவர்களின் மோசமான சர்வாதிகாரிகளுக்கான ஆதரவு, ஈரான் முல்லாக்கள் ஆதரவு பேச்சுக்கள் என்பதை இலகுவாக விளங்கி கொள்ளலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.