Jump to content

கோட்டா கோ கமயிலிருந்த... எஞ்சிய, கூடாரங்களும் அகற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கோட்டா கோ கமயிலிருந்த... எஞ்சிய, கூடாரங்களும் அகற்றம்!

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன.

எஞ்சிய சில நிர்மாணங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே, இன்று அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி உள்ளிட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குறித்த நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

போராட்டக்காரர்கள்... ஒன்று சேர்ந்து, ராஜபக்சக்களை  அகற்றினார்கள்.
இப்ப... ரணிலும், மகிந்தவும் சேர்ந்து...  போராட்டக்காரர்களை அகற்றி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தப் போராட்டம் அதன் முதல் இலக்கை அடைந்தாலும் வலுவான காரணங்களை வழிகாட்டல்களை முன்வைக்காததால் தொடர்ந்து செல்ல முடியாமல் போனது தான் உண்மை.

ஏனெனில்.. கோத்தா போய் ரணில் வந்தால் ரணில் போய் சஜித் வந்தால் சஜித் போய் பொன்சேகா வந்தால்.. என்று மக்கள் எவரை எல்லாம் வேண்டாம் என்றினமோ அவர்களை பதவிக்கு கொண்டு வருவதால்.. எந்தப் பயனும் இல்லை.

மாறாக மக்களுக்கு மாற்றுத் தலைமை அளிக்கக் கூடிய கட்டமைப்பும் தேர்தலும் அவசியமான நேரத்தில்.. அதை நோக்கி செல்லாமை.. இந்தப் போராட்டத்தின் குறைபாடாகும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு சாப்பிடப்  பாணும், பருப்பும், கருவாடும், பருகுவதற்கு தேனீரும் கித்துள் கருப்பட்டியும் கொடுத்தால் போதும். நாட்டு நிலைமை சுமூகமாக இருக்கும். 

🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.