Jump to content

ராஜஸ்தான்: பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான்: பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்

8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இன்று (14.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார் என்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.

சிறுவன், கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

ஆசிரியரின் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவன் சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.bbc.com/tamil/global-62537897

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்தியா  🤣

நோ நோ

வல்லரசு இந்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நோ நோ

வல்லரசு இந்தியா.

வலசு என்றொரு வார்த்தை உண்டு தெரியுமோயில்லியோ ? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தாக்கியதால் தலித் சிறுவன் உயிரிழப்பா? ராஜஸ்தானில் என்ன நடந்தது?

  • மோஹர் சிங் மீனா
  • ஜெய்பூர், பிபிசி இந்திக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இறந்த தலித் சிறுவன்

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் ஒன்பது வயது தலித் சிறுவன் இறந்ததையடுத்து, சடலத்துடன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவரின் உறவினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் யோசனையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான முன்மொழிவை அனுப்பவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குழந்தையின் உடல் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததால் தலித் சிறுவன் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது.

 

பள்ளி ஆசிரியர் அடித்ததால் காயமுற்ற சிறுவனுக்கு, வெவ்வேறு மருத்துவமனைகளில் 23 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆமதாபாதில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆசிரியர் அவனை அடித்தார் என்ற விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உள்ளூர் காவல்துறை கூறுகிறது.

 

தலித் சிறுவன் உயிரிழப்பு

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

என்ன நடந்தது?

ஜலோர் சட்டப்பேரவை தொகுதியில் வரும் சைலா தாலுகாவின் சுரானா கிராமத்தில் சரஸ்வதி வித்யாலயா உள்ளது. ஒன்பது வயது தலித் மாணவர் இந்தர் குமார் மேக்வால் இந்த தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பில், படித்து வந்தார். ஜூலை 20ஆம் தேதி, பள்ளியின் இயக்குநரும் ஆசிரியருமான சைல் சிங் மூன்றாம் வகுப்பு மாணவர் இந்தர் குமார் மேக்வாலை அடித்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 40 வயதான சைல்சிங் அடித்ததில் 9 வயது இந்தர் குமார் மேக்வாலுக்கு, காது மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது.

"இந்திரகுமார் மேக்வால், வழக்கம்போல் ஜூலை 20-ம் தேதி பள்ளிக்கு சென்றார். சுமார் 11 மணியளவில் தாகம் எடுத்ததால் பானையில் இருந்து தண்ணீர் குடித்தார். மேல்சாதி ஆசிரியர் சைல் சிங்குக்கு தனியாக இந்தப் பானை வைக்கப்பட்டுள்ளது என்று சிறுவனுக்குத்தெரியாது. தாழ்ந்த சாதியை சேர்ந்த நீ எப்படி என் பானையில் இருந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்று கேட்டு சைல் சிங் சிறுவனை அடித்துள்ளார். இதன் காரணமாக இந்தர் குமாரின் வலது காது மற்றும் கண்ணில் காயங்கள் ஏற்பட்டன," என்று சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த எழுத்துபூர்வ புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, குடும்பத்தினர் இந்தர் குமாரை 23 நாட்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இறுதியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆமதாபாதுக்கு மாணவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சேர்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி இறந்தார். அவரது குடும்பத்தில் மூன்று உடன்பிறந்த சகோதரர்களில் இந்திரகுமார் இளையவர்.

இந்த நிலையில், குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இந்த மரணத்திற்கு சரஸ்வதி வித்யாலயா ஆசிரியர் சைல்சிங்தான் காரணம் என்று குற்றம்சாட்டத் தொடங்கின. அவரது குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

தலித் சிறுவன் உயிரிழப்பு

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்கு தண்டனையா?

"தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் சைல் சிங் தன்னை அடித்ததாக சிறுவன் கூறினான்," என்று தொலைபேசி மூலம் பிபிசியிடம் பேசிய இந்தர் குமாரின் மாமா மீட்டாலால் மேக்வால் கூறினார்.

அதே நேரத்தில், ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "பானையில் இருந்து தண்ணீர் குடித்த விஷயம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நானே சம்பவ இடத்திற்கு (பள்ளி) சென்றேன். வகுப்பறைக்கு வெளியே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் குடிநீர் குழாய்கள் உள்ளன. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகளிடம் நான் பேசினேன். ஆனால் பானை இல்லை என்று குழந்தைகள் சொன்னார்கள். விஷயம் இப்போது விசாரணையின் கீழ் உள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம்."என்று தெரிவித்தார்.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். "குழந்தை வகுப்பில் குறும்பு செய்ததால் அவரை அறைந்ததாக இதுவரை நடந்த விசாரணையில் சைல் சிங் கூறியுள்ளார்.ஆனால் தண்ணீர் தொடர்பான விஷயத்தை ஆசிரியர் மறுத்துள்ளார்,"என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலா மேலும் கூறினார்.

கன்னத்தில் அறைந்ததால் குழந்தையின் நிலை எப்படி இவ்வளவு மோசமாகும் என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலாவிடம் வினவப்பட்டபோது, "குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

இருப்பினும், உள்ளூர் பத்திரிகையாளர் ஓம் பிரகாஷ், மாணவர் பானையில் இருந்து தண்ணீரைக் குடித்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார். இந்தர் குமாரின் தந்தைக்கும் ஆசிரியர் சைல் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப்பும் வெளிவந்துள்ளது. அதில் அவர் சிகிச்சைக்கு உதவுவது குறித்தும் பேசியிருக்கிறார். எனினும், இந்த உரையாடலில் இருந்து தாக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

 

ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா.

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

 

படக்குறிப்பு,

ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா.

வீடியோவில் கவலைக்கிடமாக தெரியும் மாணவர்

ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலையில் குழந்தையின் இரண்டு வீடியோக்கள் வெளிவந்தன. குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. குடும்பத்தினர் மாணவரிடம் பேச முயன்றும் அவரால் எதுவும் கூற முடியவில்லை.

மாணவர் கண்களை மூடிக்கொண்டு வலியில் புலம்புகிறார். மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது

ஆம்புலன்சில் இருந்த குடும்பத்தினர் இந்த வீடியோ எடுத்துள்ளனர்.

மாணவரின் மூக்கில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. வலது கண் வீங்கியிருக்கிறது. குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் பேச முயல்கிறார்கள், ஆனால் ஒன்பது வயது மாணவர் வலியால் துடிக்கிறார், அவரால் எதுவும் பேச முடியவில்லை.

மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மாணவரிடம் அவரை அடித்தது யார் என்று கேட்கிறார்கள். இந்த வீடியோவிலும் மாணவர் கண்களை மூடியபடி படுத்துள்ளார். படுக்கையில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் அடித்தது யார், அறைந்தது யார் என்று குடும்பத்தினர் கேட்கின்றனர். மாணவர் அதற்கு பதில் சொல்லவில்லை. பலரது பெயர்களை சொல்லி அடித்தது யார் என்று கேட்கின்றனர். சைல் சிங் மாஸ்டர் அறைந்தாரா, யார் அடித்தது என்று உறவினர்கள் கேட்க, மாணவன் லேசாக கழுத்தை மட்டும் அசைக்கிறான்.

எங்கே அடித்தார் என்று உறவினர்கள் கேட்டபோது, மாணவன் கண்களை மூடிய நிலையிலேயே தன் விரல்களால் காதின் பின்புறத்தைக் காட்டுகிறான்.

மாணவர் இந்தர் குமார் மேக்வாலின் தாய்வழி மாமா மீட்டாலால் மேக்வால், குழந்தையின் காதில் வலி இருப்பதாக பிபிசியிடம் கூறினார். சிகிச்சைக்காக சிறுவன் பகோடா, பீன்மால், டீசா, மெஹ்சானா, உதய்பூர் மற்றும் இறுதியாக அகமதாபாத்திற்கும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 13 அன்று சிறுவன் காலமானான்.

 

பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியர் சைல்சிங்

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

 

படக்குறிப்பு,

பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியர் சைல்சிங்

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கொலை வழக்கு

ஜூலை 20 ஆம் தேதி சம்பவம் நடந்து 23 நாட்களுக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில் சைலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர் சைல் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்த தகவலை அளித்த ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஹர்ஷ் வர்தன் அகர்வாலா, "குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகக் கடுமையான பிரிவுகள் விதிக்கப்பட்டுள்ளன. IPC மற்றும் SC ST சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் FIR பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

"இந்த சம்பவம் ஜூலை 20-ம் தேதி நடந்துள்ளது. குழந்தை ஆகஸ்ட் 13-ம் தேதி இறந்தது. இந்த விஷயம் ஆகஸ்ட் 11-ம் தேதி எங்களுக்குத் தெரிந்தது. குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவில்லை. சாயலா எஸ்.ஹெச்.ஓ. தான் புகார் அளிப்பதாக அகமதாபாத் மருத்துவமனையில் இருந்த சிறுவனின் தந்தையிடம் கூறினார். அப்போது தானே சென்று புகார் செய்வதாக சிறுவனின் தந்தை சொன்னார்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 8 மணி முதல் இணையதள சேவையை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கள்

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மனு அளிக்கப்படும்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் அஷோக் கெய்லாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இதை' கேஸ் ஆஃபீசர் திட்டத்தின்' கீழ் எடுத்துக்கொள்வதற்கு முதல்வர் கெலாட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வேகமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை விரைவில் தண்டிக்க இது வகை செய்யும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ராஜஸ்தானில் இதுபோன்ற வேதனையளிக்கும் சாதிவெறி சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார்.

"ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, குறிப்பாக தலித்துகள், பழங்குடியினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கத் தவறிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராஜஸ்தானில் தலித் வன்கொடுமை சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகின்றன. அரசும், முதல்வரும் பலவீனமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன," என்று கூறியுள்ளார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ், இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். "இது மனிதாபிமானத்திற்கு ஒரு

களங்கம். ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்,"என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.bbc.com/tamil/india-62546215

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

வலசு என்றொரு வார்த்தை உண்டு தெரியுமோயில்லியோ ? 🤣

"வலசு"  என்ற சொல்... 1975´களில்  புழக்கத்தில் இருந்த சொல். 😁
அது... இன்னும் காலாவதி ஆகவில்லையா? 😂
2022´ம் ஆண்டிலும், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக பாவிக்கிறார்களா...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்குகள் தமிழர்களை அதாவது தமிழ்நாட்டு தமிழர்களயே கேவலமாத்தான் பார்ப்பான் .

பாவம் அந்த சிறுவன் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.