Jump to content

இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228"  கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது

இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228"  கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

விமான நிலை ஊழியர்கள்..  தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

image_ea2afa79e3.jpg

image_c763c9aec6.jpg

image_cc480dd5f1.jpg

https://athavannews.com/2022/1294793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடல் கண்காணிப்புக்கு அவசியமானது போல.
சிலவேளை பழைய உரிமையாளருக்கும் ஏதும் தகவல்களை வழங்குமோ தெரியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய டோனியர் விமானம்

19 நிமிடங்களுக்கு முன்னர்
 

டோர்னியர் இலங்கை

இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன், அதில் முதலாவது விமானமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் கையளிக்கப்பட்ட இந்த விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு படைகளில் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த டோனியர் ரக விமானத்தின் மூலம், இலத்திரனியல் போர் நடவடிக்கைகள், சமுத்திர கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கான பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

சீன கப்பல் வருகைக்கு முன்பே வந்த விமானம்

 

இலங்கை ராணுவம் ஜனாதிபதி ரணில்

பட மூலாதாரம்,PMD

குறுகிய தூரத்திலேயே ஏற்ற முடியும் என்பதுடன், அவசரமாக தரையிறக்கக்கூடிய வசதிகளும் இந்த விமானத்தில் காணப்படுகின்றன.

புதுடில்லியில் 2018ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விமானத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முதலில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியா அதனை நிராகரித்திருந்ததுடன், சீன கப்பல் வருகைத் தருவதற்கு ஒரு நாள் எஞ்சியிருக்கக்கூடிய நிலையில், சமுத்திர கண்காணிப்பு தொடர்பிலான விசேட விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி டோர்னியர் விமானம்

பட மூலாதாரம்,PMD

இந்த விமானம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து வெளியிட்டுள்ளது.

''இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்." என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ''பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்" என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

டோனியர் விமானத்தின் வசதிகள் என்ன?

 

டோனியர்

  • இரண்டு டர்போபாப் எஞ்சின்களை இரண்டு இறக்கைகளிலும் கொண்டுள்ளது டோனியர் ஆர்288 ரக விமானம். குறைந்த எரிபொருள் பயன்பாடு, குறுகிய தூரத்திலேயே மேலெழும்பும் வசதி, தரையிறங்கும் திறனை இது பெற்றுள்ளது. பகுதியளவு தயாரான ஓடுபாதையில் கூட இந்த விமானத்தால் தரையிறங்கி மேலெழும்ப முடியும்.
  • இந்த விமானத்தில் இரு விமானிகள் பயணம் செய்யலாம். அதே சமயம், அதன் கட்டுப்பாட்டை தனியாகவும் ஒருவரால் மேற்கொள்ள முடியும். எனினும், பொதுவாக இதை இருவர் இயக்குவதே வழக்கில் உள்ளது.
  • இதன் மேலெழும்பும் எடை 6,400 கிலோவாகும், அதேபோல தரையிறங்கும்போது 5,900 கிலோ எடையாக இருக்கும்.
  • இரு பக்க இறக்கைகளிலும் 2 நான்கு முனை பிளேடுகள் அதன் ப்ரொப்பெல்லர்களில் உள்ளன. ஒவ்வொரு இறக்கையிலும் மூன்று ஒருங்கிணைந்த எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்த எரிபொருள் தாங்கு திறன் 2,850 லிட்டர்கள் ஆகும். இரண்டு இறக்கைகளில் உள்ள எரிபொருள் கலன்களும் இணைக்கும் வகையில் இதன் வடிவம் உள்ளது.
  • இந்த விமானத்தின் மொத்த நீளம் 54 அடி 4 அங்குலம். உயரம் 15 அடி 11 அங்குலம். இதன் தரையிறங்கும் கியர்கள், ஹைட்ராலிக் முறையிலானது. 28 வோல்ட் மின்சாரமும் 300 ஆம்புகள் டிசி மின்சாரமும் இதன் இயக்கத்துக்கு தேவைப்படும்.
  • அதிகபட்ச வெப்பநிலை +55 டிகிரியிலும் குறைந்தபட்சம் -40 டிகிரியிலும் இந்த விமானம் எந்த பிரச்னையுமின்றி இயங்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

இந்திய கடற்படை டோனியர் (INDO - 228), இலகு ரக விமானம் ஆகும். இது 1981ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. ஜெர்மனியின் டோனியர் ஜிஎம்பிஹெச் நிறுவனம் தான் இந்த ரக விமானத்தை முதலில் தயாரித்தது. அந்த நிறுவனம் 1981-1998 வரையிலான காலகட்டத்தில் 245 விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கிடையே, 1993இல் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், டோனியர் ஜிஎம்பிஹெச் உரிமத்தின் கீழ், டோனியர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62553540

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தும் மீசையில் மண் படாத கதைதான்...நரி இந்தைடத்தில் சொன்னது ...இலங்கையும் இந்தியாவும் நாணயதந்தின்..இரண்டு பக்கமாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விமான நிலை ஊழியர்கள்..  தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.

ஒல்லாந்தர் காலத்து தட்டிவானுக்கு தண்ணி பீச்சியடிப்பு வேற.......அத கண்டு களிக்க நரி கோட்டு சூட்டோட நெஞ்ச நிமித்திக்கொண்டு போவுது.🤣

இப்ப இஞ்சையிருந்து ஒரு நாள் கட்டின சாறியள கூட அங்கத்தையான் எங்கட சனம் வாங்குதுகள் இல்ல.....நாங்கள் என்ன பிச்சைக்காரரோ எண்டு முகத்திலை காறித்துப்புதுகளாம்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஒல்லாந்தர் காலத்து தட்டிவானுக்கு தண்ணி பீச்சியடிப்பு வேற.......அத கண்டு களிக்க நரி கோட்டு சூட்டோட நெஞ்ச நிமித்திக்கொண்டு போவுது.🤣

இப்ப இஞ்சையிருந்து ஒரு நாள் கட்டின சாறியள கூட அங்கத்தையான் எங்கட சனம் வாங்குதுகள் இல்ல.....நாங்கள் என்ன பிச்சைக்காரரோ எண்டு முகத்திலை காறித்துப்புதுகளாம்.😉

பகிடி என்னவென்றால்... புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 
இந்தியா  கொடுத்த சற்றலைற் சரியாக வேல செய்யவில்லை என்று, 
அதை வைத்து... மண்வெட்டி தான் செய்யலாம் என்று 
கேலி பேசிய சிங்களவனுக்கு, இந்தியாவும்... வெட்கம் இல்லாமல், 
கொடுத்துக் கொண்டே இருக்குது.

அவனும்...  ஓசி என்றவுடன்,  விழா எடுத்து கொண்டாடுறான்.
இரண்டு கிழமையில்... மீண்டும், இந்தியாவை வழக்கம் போல கரிச்சுக்  கொட்டுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

இலங்கை ராணுவம் ஜனாதிபதி ரணில்

 

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

Link to comment
Share on other sites

இந்திய ஊடகங்களை (சில) பார்த்தால் சீனாவை ஓட  ஓட விரட்டுவோம் என்று எழுதுகிறார்கள்.  இங்கை பார்த்தால் சிங்களவர் பீச்சி அடிக்கிறார்கள் தண்ணியை.🤣

1 minute ago, goshan_che said:

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

சும்மா இருக்க வ்ந்த பதவி கோசான். அந்தாள் ஜமாய்க்குது.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

அவருக்கும் பசிக்கும்ல.. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

சும்மா இருக்க வ்ந்த பதவி கோசான். அந்தாள் ஜமாய்க்குது.😆

நரி, நரி முகத்தில முழிச்சிருக்கு🤣

 

22 minutes ago, ராசவன்னியன் said:

அவருக்கும் பசிக்கும்ல.. 🤗

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் கடல் கண்காணிப்புக்கு அவசியமானது போல.
சிலவேளை பழைய உரிமையாளருக்கும் ஏதும் தகவல்களை வழங்குமோ தெரியல?

அதானே இந்தியன்ர திட்டமே.
இலங்கை கடல் எல்லைக்குள்ள சீனாக்காரன்ர
கப்பல் நிக்கும்போது அதுக்கும் மேலாலை நாம பறந்து உளவு பாப்பமெல்ல.
விமானத்தில் பெறப்படும்  வேவுத் தரவுகளை இந்தியாவிலுள்ள புலனாய்வு மையத்தில் வைத்து de-code பண்ணாம இலங்கை அதை(data) வச்சு ரணிலுக்கு நாக்குதான்  வழிக்கலாம். இந்த வேவு விமானத்தை இந்திய விமானிகளுக்கு பதிலாக இலங்கை விமானிகள் ஒட்டுவார்கள் அதுதான் வித்தியாசம்.

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் விழுந்த ஹிந்திய விமானப்படை விமானத்தையே கண்டுபிடிக்க முடியாமல் திணறியவர்கள்.. இதை வைச்சு.. மீன்பிடி வலைகளையாவது வீசலாமா..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடல் எல்லைக்குள்ளும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்ளும் தாங்கள்  வரமுடியாது என்பதற்கக, இலங்கையைக் கொண்டே உளவு பார்க்கிறார்கள்.

உளவுப் பரிமாற்றத்தின்போது இந்தியா Live ஆகவே கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அனுப்புங்கோ அனுப்புங்கோ, இன்னும் அனுப்புங்கோ! சீனன் வந்து பழுது பாக்கட்டும் அவைகளை, வேலைசெய்யுதோ என்று பரீட்ச்சித்து பாத்து தகவலும் அனுப்பட்டும் உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுக்க பாத்தீர்கள் முடியவில்லை, நாங்கள் விடமாட்டோம் ஓயமாட்டோம் என்று நாண்டு கொண்டு அனுப்புகிறீர்கள். உங்களின் வேண்டுகோளை ஏற்காமல் அழைக்கிறார்கள் சீனாவை, உதுகளை அனுப்பினால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்களா? உங்களின் இயலாத்தன்மை இப்படி வெளிப்படுகிறது. அவன் பழைய இரும்புச்சாலையில் கொண்டுபோய் தள்ளிப்போட்டு சீனக்கப்பலை வரவேற்று,  கைகுலுக்க போய்விடுவான் நாளைக்கு. அதுக்கு பூக்கொத்தும் அனுப்பிவையுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கை விமான படைக்கு பயிற்சி விமானமாக பயன்படும். மற்றும்படி வேறு என்ன உபயோகம் என்று விளங்கவில்லை. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.