Jump to content

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறியாத பல தகவல்கள் சிறிது விளக்கமாக  தந்தமைக்கு நன்றி நாதம்......!   👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 118
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்? சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.  

Hana

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பி

நிலாமதி

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பா

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

களவு எங்கு நடந்தாலும் களவுதான்.

இங்கே சோசல் காசை கொள்ளை அடிப்போர் பலர் லைக்கா போன்ற பெரு முதலாளிகளை காட்டி தம்மை நியாயப்படுத்துவார்கள்.

பெரும் முதலாளிகளும் அவர்களின் அடிபொடிகளும் சோசல் காசில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என சொல்லி, கவனத்தை திசை திருப்பி விட்டு தாம் மில்லியன், பில்லியன் கணக்கில் சுத்துவார்கள்.

ஆனால் இருவருமே கெட்ட சயனட்டுகள்தான்.

இப்படி பட்டவர்கள் ஒரு நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க அந்த நாடு இந்தியா போல மாறிவிடும்.

இந்த நாடுகளின் வளமான வாழ்க்கைக்கு அடிப்படை சட்டம், ஒழுங்கு, ஒழுங்கான வரி செலுத்தல் போன்றவைதான்.

அல்லது இந்தியா, ரஸ்யா போல கொள்ளையர்களின் கூடாரமாகிவிடும் நாடு.

இந்தியன் படத்தில் சொன்னதுதான்.

நீங்கள் சொல்வது ஒழுக்கம், வாழ்க்கை முறை தொடர்பானது. நடைமுறையில் இது மேற்கு நாடுகளில் சாத்தியமற்றது. 

மேற்கில் எல்லாமே சட்டத்தின் அடிப்படையில்தான் நோக்கும். இதை எனக்குச் சொல்லித் தந்ததே கனடாதான். 

உண்மையாக வாழ விரும்பினால் இந்த நாடுகளில்  நீங்கள் வாழவே முடியாது. அனுபவம் அப்படி. 

இதைத்தான் உங்கள் பாசையில் Diplomacy என்று கூறுகிறார்களோ தெரியாது. 

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இந்த லோன் குறித்து பல விடயத்தை தர முடியும், நேரமில்லை.

பிரிட்டனில், கடன் கொடுத்தது வங்கிகள். கடன் உடன்படிக்கை வங்கிகளுக்கும், வாடிக்கையாளருகும் இடையே மட்டுமே. அதிலே, கடன் பணம் பாவிக்கும் நிபந்தனை இல்லை.

அரசு, வங்கிகள் கொடுத்த கடனுக்கு நூறு வீத உத்தரவாதம் வழங்கியது. அதனால், அரச வழிகாட்டுதல் சட்டபூர்வமான உடன்படிக்கை அல்ல.

ஊரில் உள்ள உறவினர்கள், பசியில் இருக்கக் கூடாது என கடனை எடுத்து அனுப்பிய பல வெளிநாட்டவர் உள்ளனர். அதற்காக கடன் தரப்படவில்லை. ஆகவே கள்ளர் என சொல்ல முடியுமா என்ன?

கனடாவில், கடன் எடுத்து, குறித்த காலத்தில் கட்டிவிட்டால், பத்துவீத கழிவு என்று அரசு சொன்னது. சும்மா இருந்தவர்கள் கூட, அட பத்து வீத கழிவு இலவசமாக வருதே என்று விண்ணப்பித்து, பெற்று, தொன்னாறு வீதத்தை கட்டினார்கள்.

அவர்களை கள்ளர் என சொல்ல முடியுமா என்ன?

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள்.

பிரிட்டனில், கோரணா காலத்தில், திறந்திருந்த குரோசரி கடைக்காரர்களுக்கு, சில உள்ளூர் அதிகார சபை தாமாக இருபத்தையாயிரம், இனாமாக கொடுத்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்ல.

PAYE முலம் அரசுக்கு Employers ஊடாக வரி கட்டியர்களுக்கு, Furlough  முலம், ஆகக் கூடியதாக £2,500 இலவசமாக கிடைத்தது.

மிகுதியாக இருந்த, சுய தொழிலாளர், சிறு தொழிலாளர் பசியாற்ற கொடுக்கப்பட்டதே கொராணா தாக்குதலை சமாளிக்க Bounce Back கடன்.

வியாபார விருத்திக்கு அண்மை வரை கொடுக்கப்பட்டதே business recovery loan. இது மிக கவனமாக, வழமையான கடன் போலவே கொடுக்கப்பட்டது.

கொரோணா காலத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், பத்திரங்களை நிரப்ப முகவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தது. இதுவே, பலரை, முகவர்கள் போல செயல்பட வைத்து, ஜந்து, பத்து வீத கமிசன் வாங்கி, தேவையற்றவர்களை கூட கடன் பெற வைத்து பலரை கடனாளி ஆக்கி விட்டது.

யார் கள்ளர்கள் என்பது குறித்து, அரசு தெளிவாக முடிவெடுத்து, அவர்களை பிடிக்க என்று task force அமைத்து, அதற்கான பணமும் ஒதுக்கி விட்டது. அது புரியாமல், நாமாக, அவர்கள் கள்வர்கள், இவர்கள் கள்வர்கள் என தீர்ப்பு சொல்வதில் அர்த்தம் இல்லை.

இன்றும் கூட பலர், வட்டியை மட்டுமே கட்டுகிறார்கள். சிலர், லோன் கொலிடே எடுக்கிறார்கள்.

அவர்கள், தமது உண்மையான, Turnover தொகையின் இருபத்தைந்து வீதம் கடன் வாங்கியிருந்தால், பிரச்சணை இல்லை.

Turnover தொகையை, பொய்யாக பெருப்பித்து சொல்லி, கடன் வாங்கியவர்கள் தான் கள்வர்கள்..... அவர்களே சிக்கலில்....

நான் மேலே சொன்னது போல..... பெருந்தொகை அடித்தவர்கள், நாட்டை விட்டே போய்விட்டார்கள். அவர்கள் விபரம் இருப்பதால் அரசு அவர்களை விடாது என்றே நிணைக்கிறேன்.

இந்தக் கள்ளரை விட்டு்ட்டு, முறையான வழியில் கடனை வாங்கினவன், கார் வாங்கினது பிழை, வீடு வாங்கினது பிழை, ஊருக்கு அனுப்பினது பிழை எண்டு, அரசே எடுக்காத moral preaching, அர்த்தமற்றது.

Turnover ன் 25வீதம், 2.5 வீதத்துக்கு கடனாகப் பெற்று, காரை, வீட்டை வாங்கி, அதற்குரிய வரியை செலுதினார்கள்.

அதுவே அரசு எதிர்பார்த்த விடயம்.

நன்றி

நாதம்,

கடன் வங்கிகள் கொடுத்தாலும் அதை 100% உத்தரவாதம் கொடுத்தது அரசு. 

இவ்வாறு வங்கி கடன் கொடுக்கப்பட்டது வியாபாரத்தை மீள் எழுப்பபே. கடன் கொடுக்கபட்ட போது எழுதபட்ட உடன்படிக்கையிலும் இது தெளிவாக எழுத பட்டுள்ளது.

அந்த கடனை எடுத்து வேறு எதற்கு பாவித்தாலும் அது சட்டவிரோதமே.

ஏஎன்றால் கொடுக்கபட்ட கடன் சாதாரணமாக வங்கி கொடுக்கும் கடன் அல்ல. அரசு உத்தரவாததில், குறைந்த வட்டியில் கொடுக்கப்பட்ட கடன்.

ஆகவே சட்டவிரோதம் என பார்த்தால் கடனை முழுமையாக சுத்தி விட்டு ஊருக்கு போனவருக்கும், அந்த கடனை எடுத்து ஊரில் அநாதை ஆசிரம பிள்ளைகள் சாப்பிட அனுப்பினவருக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

இதை ஒத்த சிறிய களவு ஒன்று 90களில் இங்கே அதிகம் நடந்தது. அப்போ student loan/grant காசை - tuition fees உட்பட மாணவரின் வங்கிக்கு அனுப்புவார்கள்.

நம்மவர்கள் பலர் - படிக்கும் எண்ணமே இல்லை - ஆனால் முதல் வருட காசுக்காக பொய்யாக ஒரு பல்கலை கழக அனுமதியை எடுத்து அந்த காசை எடுத்துவிட்டு - பின் பல்கலைகழக பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்.

இப்படி வந்த காசை ஊருக்கு அனுப்பி பல குமர்கள் கரை சேர்ந்ததும் உண்டு.

பின்னர் சிஸ்டம் மாறி - tuition fees காசு நேரே பல்கலைக்கு போனது. அதன் பின் முற்றாக வேறு ஒரு சிஸ்டம் வந்துவிட்டது.

அதன் பின் லேபர் காலத்தில் Learn Direct இல் படிக்கிறோம் என களவுகள் செய்தார்கள்.

இப்படி நூதனமாக களவு செய்வது புதிதல்ல. ஆனால் அது களவுதான். 

என்ன மிக சிலரே இந்த கடனை திருப்பி கொடுப்பார்கள்.

அநேகம் பேர் இப்பவே பொய் வங்குரோத்து கணக்கு காட்டி அரசுக்கு நாமம் போட்டு விட்டார்கள்.

இன்னும் சிலர் நீங்கள் சொன்னது போல் நாட்டை விட்டே போய்விட்டார்கள்.

இந்த அரசும் சும்மா ஒப்புக்கு முயன்றுவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள்.

அரசை பொறுத்தவரை அவர்கள் நீங்கள் சொன்னது போல பல கடன்களை வாங்கியவர்கள், நாட்டை விட்டு ஓடியவர்கள், ஒரு கம்பனியே இல்லாமல் லோன் எடுத்தவர்கள் - இவர்களையே தேடி கண்டுபிடிக்க முடியாது/மாட்டோம் என கையைவிரிக்கிறார்கள். 

ஆகவே லோனை எடுத்து வேறு வழியில் முதலிட்டு விட்டு பின் திருப்பி கொடுப்போரை இவர்கள் சீண்ட போவதே இல்லை. அவர்களை பொறுத்தவரை காசு திரும்பி வருவதே பெரிய விடயம்.

கண்ணை மூடிக்கொண்டு பல பில்லியன்களை அறவிட முடியாகடன் என்கிறார் ரிசி. அவர் வீட்டு சொத்தில்லைதானே? நாங்கள் சின்ன வயது முதல் உடல், பின்னர் மூளையை வருத்தி கட்டிய வரிப்பணம். அவரை போல் பணக்கார வீட்டோடு மாப்பிள்ளையும் இல்லை 🤣.

முடிவாக கொடுக்கப்பட்டது சாதாரண கடன் அல்ல. அது ஒரு குறித்த காரணதுக்கா கொடுக்கப்பட்ட சலுகை கடன். அதை வேறு விடயத்துக்கு பாவிப்பது சட்டவிரோதம். இதை விட மோசமாக வேறு ஆட்கள் சட்டத்தை மீறினார்கள் என்பது இதற்கான பதில் இல்லை. 

ஆனால் அரசு இவர்கள் பணத்தை மீள கட்டும் போது - அவர்களை துரத்த போவதில்லை.

இந்த திட்டத்தில் கொள்ளை அடித்த மிக சிலரையே அரசு துரத்தி பிடிக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வரியை வேண்டுமென்றே தாமதமாக கட்டுவது, COVID recovery loanனை அதன் உண்மையான நோக்கங்களிற்கு எதிராக பாவிப்பது, COVID relief payments பொய்யான காரணங்களை காட்டி எடுப்பது இங்கேயும் நடந்தது.. இது எல்லாம் privilege misuse அவ்வளவுதான். 

இப்படி தங்களுக்கு கிடைத்த/ தங்களது தொழில் முயற்சிகளுக்கு கிடைத்த நன்மை/சலுகைகளை தவறாக பயன்படுத்துபவர்களால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் கூட சரியான சமயத்தில் போகவில்லை, மேலும் வங்கிகள் கூட இது தொடர்பான தங்களது விதிகளை மாற்ற வேண்டி வந்தது. சிறிய நடுத்தர முதலீட்டாளர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாங்கள் குறுகிய கண்ணோடத்திலேயும், மற்றவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் என்ன என்ற நோக்கிலுமே நடக்கிறோம். மற்றைய விளைவுகளை யோசிப்பதில்லை. மனசாட்சியையும் தேவைக்கு ஏற்ப மாற்றிவிடுவோம். அவ்வளவுதான். 

இதையெல்லாம் எடுத்துக் கூறினால் உலகம் மாறுது, அதற்கேற்ப நடக்கவேண்டும், தந்திரமாக வியாபாரம் செய்யவேண்டும் என விரிவுரை தருவார்கள். அவர்களைப் பொறுத்த வரை எப்படியாயினும் இலாபம் வந்தால் சரி.. இன்று உலகம் இந்த மாதிரி பல அழிவுகளை சந்திப்பதே மனிதனால் வந்த greedyதான். 

நன்றி பிரபா,

எங்கே “நான் மட்டிலும் நியாயம் என்றோர் நரகத்துழல்கிறேனோ” என்று பயந்து விட்டேன். உங்கள் பதிலும் அதற்கான விருப்பபுள்ளிகளும் நம்பிக்கை தருகிறன.

இன்னுமொரு விடயம் - இப்படி எமக்கு என்று வரும் போது “தந்திரமாக, பிழைக்க தெரிய வேண்டும்” என அறிவுரை தருபவர்கள்தான் அரசியல்வாதிகள் பெட்டி வாங்குகிறார்கள் என கூச்சலும் போடுவார்கள்.

நீங்கள் எப்படி உங்கள் தனிவாழ்கையில் தந்திரமாக சுழிக்கிறீகளோ, அப்படித்தான் உங்கள் தலைவர்கள் பொதுவாழ்வில் சுழிக்கிறார்கள்.

ஆகவே சும் பெட்டி வாங்கி விட்டார். சம் கதிரைகாக தந்திரம் செய்கிறார் என இனி மூக்கால் யாரும் அழக்கூடாது🤣.

உங்களை போலவே அவர்களும் தம் வாழ்கையை முன்னேற்ற தந்திரமாக பிழைக்கிறார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

நீங்கள் சொல்வது ஒழுக்கம், வாழ்க்கை முறை தொடர்பானது. நடைமுறையில் இது மேற்கு நாடுகளில் சாத்தியமற்றது. 

மேற்கில் எல்லாமே சட்டத்தின் அடிப்படையில்தான் நோக்கும். இதை எனக்குச் சொல்லித் தந்ததே கனடாதான். 

உண்மையாக வாழ விரும்பினால் இந்த நாடுகளில்  நீங்கள் வாழவே முடியாது. அனுபவம் அப்படி. 

இதைத்தான் உங்கள் பாசையில் Diplomacy என்று கூறுகிறார்களோ தெரியாது. 

உங்கள் அனுபவம் எனக்கிலை ஆகவே அதை பற்றி நான் கூறுவது சரியாக இருக்க முடியாது. 

ஆனால் நேர்வழியில் எங்கே இருந்தாலும் வாழலாம் என்பது என் நம்பிக்கை.

மேலே பிரபா சொன்னது போல அவா (greed), மற்றது மாட்டிகொண்டால் அசிங்கம் என்ற பயம் - இவைதான் எந்த வழியில் ஒருவர் போகிறார் என்பதை தீர்மானிக்கிறன.

மனிதர் அடிப்படையில் இருவகைதான்.

1. களவு செய்வோர்/ செய்ய துணிந்தோர்

2. செய்யாதோர் ( நல்லெண்ணம்,வாய்ப்பில்லை, பயம் இப்படி பல காரணம்கள்).

எப்போது ஒரு நாட்டில் 1ம் வகையினர் அதிகமாகிறனரோ அப்போ அந்த நாடு சீரழிய தொடங்கும்.

இதை தமிழ் நாட்டில் 1947-2022 காலப்பகுதியை பார்த்தால் தெளிவாக தெரியும்.

காமராஜரோ, ராஜாஜியோ, அண்ணாவோ - கொள்கைகள் மாறினாலும் ஊழலின் நிழல் கூட படாதவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அதன் பின் வந்த ஒவ்வொருவரும் ஊழலில் ஒவ்வொரு படிநிலை மேலே போனார்கள். 

இந்த சரிவு தனியே தலைவர்கள் மட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த நிலை தலைவர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் என ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்டது.

விளைவு?

75 வருடங்கள் முன், படிப்பறிவு இல்லாமல் கொள்கைக்காக வாக்கு செலுத்திய மக்கட்கூட்டம்.

இன்று,

அதீத படிப்பறிவுடன் இருந்தும், வாக்கு போடுவதாக கூறி எல்லா கட்சியிடமும் காசு வாங்கும் ஒரு கூட்டமாக மாறிப்போயுள்ளது.

அங்கே இப்போ வாக்குக்கு காசு வாங்குவது ஒரு பெரிய விசயமே இல்லை.

ஊழல் என்பது ஒரு போதும் பொதுவாழ்வில் மட்டும் இருக்கும் விடயம் அல்ல.

ஒரு நாடு இன்று ஊழலில் நாசமாகி கிடக்கிறது என்றால், பத்து இருபது வருடங்கள் முன் அந்த நாசம் தனி மனிதர் வாழ்வில் ஏற்று கொள்ளதக்கதாக ஆகி விட்டிருக்கும்.

நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - 47-22 தமிழ்நாடு போன பாதையில் கனடா இப்போ போகிறது போல் படுகிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍

மோசடியாக காசு எடுப்பது எடுக்க முயற்ச்சிப்பது பின்பு அது தான் சரியானது என்று ஒரு விளக்கம் தருவது. மோசடியாக காசு எடுப்பதை ஏதோ சாதனை செய்ததாகவும் சொல்வது.அபாயகரமான போக்கு.

நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாதம்,

கடன் வங்கிகள் கொடுத்தாலும் அதை 100% உத்தரவாதம் கொடுத்தது அரசு. 

இவ்வாறு வங்கி கடன் கொடுக்கப்பட்டது வியாபாரத்தை மீள் எழுப்பபே. கடன் கொடுக்கபட்ட போது எழுதபட்ட உடன்படிக்கையிலும் இது தெளிவாக எழுத பட்டுள்ளது.

அந்த கடனை எடுத்து வேறு எதற்கு பாவித்தாலும் அது சட்டவிரோதமே.

ஏஎன்றால் கொடுக்கபட்ட கடன் சாதாரணமாக வங்கி கொடுக்கும் கடன் அல்ல. அரசு உத்தரவாததில், குறைந்த வட்டியில் கொடுக்கப்பட்ட கடன்.

ஆகவே சட்டவிரோதம் என பார்த்தால் கடனை முழுமையாக சுத்தி விட்டு ஊருக்கு போனவருக்கும், அந்த கடனை எடுத்து ஊரில் அநாதை ஆசிரம பிள்ளைகள் சாப்பிட அனுப்பினவருக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

இதை ஒத்த சிறிய களவு ஒன்று 90களில் இங்கே அதிகம் நடந்தது. அப்போ student loan/grant காசை - tuition fees உட்பட மாணவரின் வங்கிக்கு அனுப்புவார்கள்.

நம்மவர்கள் பலர் - படிக்கும் எண்ணமே இல்லை - ஆனால் முதல் வருட காசுக்காக பொய்யாக ஒரு பல்கலை கழக அனுமதியை எடுத்து அந்த காசை எடுத்துவிட்டு - பின் பல்கலைகழக பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்.

இப்படி வந்த காசை ஊருக்கு அனுப்பி பல குமர்கள் கரை சேர்ந்ததும் உண்டு.

பின்னர் சிஸ்டம் மாறி - tuition fees காசு நேரே பல்கலைக்கு போனது. அதன் பின் முற்றாக வேறு ஒரு சிஸ்டம் வந்துவிட்டது.

அதன் பின் லேபர் காலத்தில் Learn Direct இல் படிக்கிறோம் என களவுகள் செய்தார்கள்.

இப்படி நூதனமாக களவு செய்வது புதிதல்ல. ஆனால் அது களவுதான். 

என்ன மிக சிலரே இந்த கடனை திருப்பி கொடுப்பார்கள்.

அநேகம் பேர் இப்பவே பொய் வங்குரோத்து கணக்கு காட்டி அரசுக்கு நாமம் போட்டு விட்டார்கள்.

இன்னும் சிலர் நீங்கள் சொன்னது போல் நாட்டை விட்டே போய்விட்டார்கள்.

இந்த அரசும் சும்மா ஒப்புக்கு முயன்றுவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள்.

அரசை பொறுத்தவரை அவர்கள் நீங்கள் சொன்னது போல பல கடன்களை வாங்கியவர்கள், நாட்டை விட்டு ஓடியவர்கள், ஒரு கம்பனியே இல்லாமல் லோன் எடுத்தவர்கள் - இவர்களையே தேடி கண்டுபிடிக்க முடியாது/மாட்டோம் என கையைவிரிக்கிறார்கள். 

ஆகவே லோனை எடுத்து வேறு வழியில் முதலிட்டு விட்டு பின் திருப்பி கொடுப்போரை இவர்கள் சீண்ட போவதே இல்லை. அவர்களை பொறுத்தவரை காசு திரும்பி வருவதே பெரிய விடயம்.

கண்ணை மூடிக்கொண்டு பல பில்லியன்களை அறவிட முடியாகடன் என்கிறார் ரிசி. அவர் வீட்டு சொத்தில்லைதானே? நாங்கள் சின்ன வயது முதல் உடல், பின்னர் மூளையை வருத்தி கட்டிய வரிப்பணம். அவரை போல் பணக்கார வீட்டோடு மாப்பிள்ளையும் இல்லை 🤣.

முடிவாக கொடுக்கப்பட்டது சாதாரண கடன் அல்ல. அது ஒரு குறித்த காரணதுக்கா கொடுக்கப்பட்ட சலுகை கடன். அதை வேறு விடயத்துக்கு பாவிப்பது சட்டவிரோதம். இதை விட மோசமாக வேறு ஆட்கள் சட்டத்தை மீறினார்கள் என்பது இதற்கான பதில் இல்லை. 

ஆனால் அரசு இவர்கள் பணத்தை மீள கட்டும் போது - அவர்களை துரத்த போவதில்லை.

இந்த திட்டத்தில் கொள்ளை அடித்த மிக சிலரையே அரசு துரத்தி பிடிக்கும்.

நன்றி

லோன் கொடுக்கப்பட்டது, வியாபார நோக்கம் என்கிறீர்கள், சரி.

1. டைரக்டர் தனக்கு சம்பளமாக அந்த லோனில் இருந்து எடுத்து, அதுக்கு உரிய PAYE வரி செலுத்தி, வரும் மீதி காசில் காரை, வீட்டினை வாங்கலாம்.

2. Director loan account என்ற கணக்கில், முழுவதுமாக வெளியில் எடுத்து, காரை, வீட்டினை வாங்கலாம். பின்னர் காசு வரும் போது திருப்பி செலுத்தலாம்.

சகலமும் சட்டத்துக்கு உள்பட்டது. கணக்கியல், நம்ம ஏரியா. 

நான் இங்கே சொன்னது அனைத்துமே, எனது கணக்கியல் நண்பர்களுடன் பேசி பகிர்ந்தவை.

இதுக்கு மேலே, களவு, நேர்மையீனம் என்றால், சொல்வதுக்கு எதுவும் இல்லை.

மேலும், நேற்று... பழைய பன்னீர்செல்வமாக நீங்கள் போட்ட சில குறிப்புகளுடன் மகிழ்ச்சி இல்லை. தவிர்த்திருக்கலாம்.

இணைத்திருங்கள். நன்றி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உங்கள் அனுபவம் எனக்கிலை ஆகவே அதை பற்றி நான் கூறுவது சரியாக இருக்க முடியாது. 

1) ஆனால் நேர்வழியில் எங்கே இருந்தாலும் வாழலாம் என்பது என் நம்பிக்கை.

மேலே பிரபா சொன்னது போல அவா (greed), மற்றது மாட்டிகொண்டால் அசிங்கம் என்ற பயம் - இவைதான் எந்த வழியில் ஒருவர் போகிறார் என்பதை தீர்மானிக்கிறன.

மனிதர் அடிப்படையில் இருவகைதான்.

1. களவு செய்வோர்/ செய்ய துணிந்தோர்

2. செய்யாதோர் ( நல்லெண்ணம்,வாய்ப்பில்லை, பயம் இப்படி பல காரணம்கள்).

எப்போது ஒரு நாட்டில் 1ம் வகையினர் அதிகமாகிறனரோ அப்போ அந்த நாடு சீரழிய தொடங்கும்.

இதை தமிழ் நாட்டில் 1947-2022 காலப்பகுதியை பார்த்தால் தெளிவாக தெரியும்.

காமராஜரோ, ராஜாஜியோ, அண்ணாவோ - கொள்கைகள் மாறினாலும் ஊழலின் நிழல் கூட படாதவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அதன் பின் வந்த ஒவ்வொருவரும் ஊழலில் ஒவ்வொரு படிநிலை மேலே போனார்கள். 

இந்த சரிவு தனியே தலைவர்கள் மட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த நிலை தலைவர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் என ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்டது.

விளைவு?

75 வருடங்கள் முன், படிப்பறிவு இல்லாமல் கொள்கைக்காக வாக்கு செலுத்திய மக்கட்கூட்டம்.

இன்று,

அதீத படிப்பறிவுடன் இருந்தும், வாக்கு போடுவதாக கூறி எல்லா கட்சியிடமும் காசு வாங்கும் ஒரு கூட்டமாக மாறிப்போயுள்ளது.

அங்கே இப்போ வாக்குக்கு காசு வாங்குவது ஒரு பெரிய விசயமே இல்லை.

ஊழல் என்பது ஒரு போதும் பொதுவாழ்வில் மட்டும் இருக்கும் விடயம் அல்ல.

ஒரு நாடு இன்று ஊழலில் நாசமாகி கிடக்கிறது என்றால், பத்து இருபது வருடங்கள் முன் அந்த நாசம் தனி மனிதர் வாழ்வில் ஏற்று கொள்ளதக்கதாக ஆகி விட்டிருக்கும்.

2) நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - 47-22 தமிழ்நாடு போன பாதையில் கனடா இப்போ போகிறது போல் படுகிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

1) மனதளவில் ஒழுக்கமாக, அமைதியாக  வாழ வேண்டும் என விரும்புவோர்  அமைதியான வாழ்க்கையை வாழலாமே தவிர, பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஒரு வியாபாரத்தையோ அல்லது முதலீட்டையோ செய்ய முடியாது.  அதாவது, நாம் இன்னொரு விடயத்தில் யாருடனும் போட்டிபோட முடியாது. 

ஏனென்றால் நாம் வாழும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. 

2) மிகச் சரியாகச் சொன்னீர்கள்.  20 வருடங்களுக்கு முந்திய கனடா இல்லை தற்போதைய Canada.  கனேடியரிடம் கேட்டுப்பாருங்கள் புரியும். 

மிகச் சிறிய உதாரணம்; அண்மையில் GTA Square எனப்படும் தமிழர்களுக்கான indoor mall ல் உள்ள நகைக்கடைகள் ஒரு மாதகாலத்தினுள் 3 முறை உடைக்கப்பட்டது (2 முறை அது தோல்வி ). அறுவும் பட்டப் பகலில், பலர் முன்னிலையில். 3 சம்பவங்களுக்கும் நான் அங்கே  நின்றிருந்தேன். அந்த  நிகழ்வு ஏற்படுத்திய பதட்டம் இன்னும் மறையவில்ல.  அந்த நிகழ்வினால், வாகனத்தில்  வைத்து தொலைபேசியைச் சுரண்டினாலும் கண்ணாடியை உயர்த்தும் மனநிலைக்கு என்னைக்  கொண்டுவந்துவிட்டுவிட்டது. 

எனது தனிப்பட்ட அனுபவங்கள் பலவற்றை இங்கே பட்டியலிட முடியும். ஆனாலும் அதற்கு நீங்கள் ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுப்பீர்கள். அதற்கு என்னால் விளக்கங்கள் கொடுக்கப்படும். அது மீண்டும் மீண்டும்  தொடரும் என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.  

ஆனால் எனது  அடிப்படை புரிதல் இதுதான் ; (டாவின்சியின்) தக்கன பிழைக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கும் களத்தில்  நீதி நேர்மை நியாயம் கதைப்பவர்கள் எப்படி இந்த நாட்டுக்குள் வந்தார்கள் என்றால் வாய பொத்துவினம்  .

அது அவுஸ் என்றாலும் கனடா என்றாலும் அவர்களின் உண்மையான பெயர்களை தந்தாள் உண்மையான வண்டவாளம் வெளிவரும் அவ்வளவுக்கு இணையம் பட்டவர்தமாகி விட்டது .

Edited by பெருமாள்
 • Confused 1
Link to comment
Share on other sites

தனக்கும், ஊழியருக்கும் சம்பளம் கொடுப்பது bounce back loan இன் நிபந்தனையை மீறுவது ஆகாது.

டைரக்டருக்கு உரிய சம்பளம் மட்டும் அல்ல, வேறு ஊழியர்களுகுரிய சம்பளமும் கூட லோனில் இருந்து கொடுக்கலாம்.

ஆனால் ஒரே அடியாக 50,000 ஐயும் ஒருவரின் தனி கணக்குக்கு மாற்றி அல்ல.  

தவிரவும் இதுவரை கம்பெனியில் இருந்த பணம் எவ்வளவு. எப்படி இதுவரை சம்பளம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம், எந்த கால இடைவெளியில் இதுவரை சம்பளமாக எடுக்கப்பட்டது. 

இப்போ கொடுக்கப்படும் பணம் எங்கிருந்து வந்தது. 

என்பவற்றை ஆராய்து பார்த்து. இந்த வகையில் கம்பெனியில் இருந்து டைரக்டர் பணம் எடுத்து சம்பளம் கொடுத்தது நேர்மையான காரணதுக்கா அல்லது இதை களவு எடுக்க ஒரு கருவியாக (a vehicle to defraud) பாவித்தாரா என்றே சட்டம் பார்க்கும்.

நியாயமாக சம்பளம் கொடுக்க பாவித்து இருந்தால் ஓகே. இல்லை என்றால் அது சட்டவிரோதமே.

7 hours ago, Nathamuni said:

Director loan account என்ற கணக்கில், முழுவதுமாக வெளியில் எடுத்து, காரை, வீட்டினை வாங்கலாம். பின்னர் காசு வரும் போது திருப்பி செலுத்தலாம்.

இது முன்னையதை விட அதிக ரிஸ்க் உள்ள தெரிவு.

பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பில் இருந்து டைரக்டர் லோன் எடுக்கலாம். ஆனால் இங்கே இந்த கடன் பணம் கொடுக்கப்பட்டது டைரக்டருக்கு லோன் எடுத்து தனிபட்டு செலவழிக்க அல்ல. வியாபாரம் படுகுழியில் விழ போகிறது அதை தடுக்க அரசு லோன் தாருங்கள் என எடுத்து பின் அதை டைரக்டர்ஸ் லோன் என வெளியே எடுத்து சொந்தமாக வீடு வாங்கினால் - அது அப்பட்டமான களவாகவே கருதப்படும்.

 ஆகவே என்ன கணக்கியல் திருகுதாளம் செய்தாலும் - இதில் இருந்து சட்ட படி களவு இல்லை என தப்புவது கடினம்.

ஆனால் அரசு துரத்தாது என்பதால் யாரும் கவலை படவில்லை.

ஆனால் சட்டபடி தப்ப ஒரு வழி இருக்கிறது. தேவைபடும் போது சொல்கிறேன்.

7 hours ago, Nathamuni said:

சகலமும் சட்டத்துக்கு உள்பட்டது. கணக்கியல், நம்ம ஏரியா. 

நான் இங்கே சொன்னது அனைத்துமே, எனது கணக்கியல் நண்பர்களுடன் பேசி பகிர்ந்தவை.

ம்ம்ம்…கணக்கியல் தவறுகளால் சட்டசிக்கலில் மாட்டுபடுபவருடன் டீல் பண்ணுவது நம்ம ஏரியா எண்டு வையுங்கோவன்🤣. நான் யாரையும் கேட்பதில்லை. தற்போது டீல் பண்ணும் விடயங்களை வைத்தே எழுதுகிறேன்.

7 hours ago, Nathamuni said:

மேலும், நேற்று... பழைய பன்னீர்செல்வமாக நீங்கள் போட்ட சில குறிப்புகளுடன் மகிழ்ச்சி இல்லை. தவிர்த்திருக்கலாம்.

பன்னீர்செல்வம் எடப்பாடியாக மாற மாட்டர். மாறவும் கூடாது. அதை உங்களை தாக்க நான் சொல்லவில்லை. 

what is right, what is wrong என்பதில் நாம் இருவரும் பொதுவாக இருவேறு துருவங்கள் என்பது உள்ளம் கை நெல்லிகனிதானே. அதை மட்டும்தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கு hmrகாரனை விட வெகு கவலையாக பவுண்ட்ஸ் பாக் லோன் பற்றி போகுது  மற்றைய இனமான பாக்கி இந்தியன் கூட்டம் இந்த பவுண்ட்ஸ் பாக்லோன் மூலம பணகரராகியுள்ளனர் அவர்கள் பற்றி கதைக்க முடியாது ஏனென்றால் அவர்கள் பற்றி இங்கு தெரியாது .

Edited by பெருமாள்
 • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

1) மனதளவில் ஒழுக்கமாக, அமைதியாக  வாழ வேண்டும் என விரும்புவோர்  அமைதியான வாழ்க்கையை வாழலாமே தவிர, பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஒரு வியாபாரத்தையோ அல்லது முதலீட்டையோ செய்ய முடியாது.  அதாவது, நாம் இன்னொரு விடயத்தில் யாருடனும் போட்டிபோட முடியாது. 

ஏனென்றால் நாம் வாழும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. 

2) மிகச் சரியாகச் சொன்னீர்கள்.  20 வருடங்களுக்கு முந்திய கனடா இல்லை தற்போதைய Canada.  கனேடியரிடம் கேட்டுப்பாருங்கள் புரியும். 

மிகச் சிறிய உதாரணம்; அண்மையில் GTA Square எனப்படும் தமிழர்களுக்கான indoor mall ல் உள்ள நகைக்கடைகள் ஒரு மாதகாலத்தினுள் 3 முறை உடைக்கப்பட்டது (2 முறை அது தோல்வி ). அறுவும் பட்டப் பகலில், பலர் முன்னிலையில். 3 சம்பவங்களுக்கும் நான் அங்கே  நின்றிருந்தேன். அந்த  நிகழ்வு ஏற்படுத்திய பதட்டம் இன்னும் மறையவில்ல.  அந்த நிகழ்வினால், வாகனத்தில்  வைத்து தொலைபேசியைச் சுரண்டினாலும் கண்ணாடியை உயர்த்தும் மனநிலைக்கு என்னைக்  கொண்டுவந்துவிட்டுவிட்டது. 

எனது தனிப்பட்ட அனுபவங்கள் பலவற்றை இங்கே பட்டியலிட முடியும். ஆனாலும் அதற்கு நீங்கள் ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுப்பீர்கள். அதற்கு என்னால் விளக்கங்கள் கொடுக்கப்படும். அது மீண்டும் மீண்டும்  தொடரும் என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.  

ஆனால் எனது  அடிப்படை புரிதல் இதுதான் ; (டாவின்சியின்) தக்கன பிழைக்கும். 

நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது கற்பஸ். 

ஒரு காலத்தில் லண்டனில் ஒரு என்வெலப்பில் காசை வைத்து வீட்டு கதவில் வைத்தால் பால்காரன் மட்டும் எடுத்து போவார். 

இன்று?

கதவோடு கொண்டு போய்விடுவார்கள்.

ஆனால் இதே நிலைதான் இப்போ ஊரிலும்.

நீங்கள் சொல்வது போல் எல்லாரும் களவு செய்வதால் பிழைக்க வேண்டும் என்றால் நாமும் அதை பின் பற்ற வேண்டும் என்பது தர்க ரீதியாக சரியாகவே படுகிறது. 

அதாவது பாம்பு தின்னும் ஊருக்கு போனால் நடு துண்டு நமக்கு என்ற நிலை.

ஆனால் இன்னமும் இந்த நாடுகள் பாம்பு தின்னும் ஊராக மாறவில்லை. நாம் அதை அப்படி ஆக்க கூடாது என்பது என் நிலை.

24 minutes ago, பெருமாள் said:

இங்கும் களத்தில்  நீதி நேர்மை நியாயம் கதைப்பவர்கள் எப்படி இந்த நாட்டுக்குள் வந்தார்கள் என்றால் வாய பொத்துவினம்  .

அது அவுஸ் என்றாலும் கனடா என்றாலும் அவர்களின் உண்மையான பெயர்களை தந்தாள் உண்மையான வண்டவாளம் வெளிவரும் அவ்வளவுக்கு இணையம் பட்டவர்தமாகி விட்டது .

எல்லாரும் ஒரே மாதிரி வரவில்லை. ஆதலால் எல்லாரும் பொத்துவினம் என சொல்லமுடியாது.

அப்படி வரும் போது ஒரு தவறான வழியை கையாண்டு வந்திருந்தாலும் - அதன் பின் அடைக்கலம் தந்த நாட்டுக்கு விசுவாசமாக இருப்போர் பலர் உள்ளனர்.

அடைகலம் கொடுத்த நாட்டில் தொடர்ந்தும் களவு வேலைகள் செய்பவர்கள் பற்றித்தான் இங்கே பேசுகிறோம்.

4 minutes ago, பெருமாள் said:

இங்கு hmracகாரனை விட வெகு கவலையாக பவுண்ட்ஸ் பாக் லோன் பற்றி போகுது  மற்றைய இனமான பாக்கி இந்தியன் கூட்டம் இந்த பவுண்ட்ஸ் பாக்லோன் மூலம பணகரராகியுள்ளனர் அவர்கள் பற்றி கதைக்க முடியாது ஏனென்றால் அவர்கள் பற்றி இங்கு தெரியாது .

பெரும்ஸ் நோ டென்சன் பிளீஸ்.

நான் இங்கே தமிழர் மட்டுமே இதை செய்வதாக சொல்லவில்லை. பொதுவாக இந்த முறை நூதன திருட்டு பற்றி மட்டுமே எழுதினேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பெரும்ஸ் நோ டென்சன் பிளீஸ்.

நான் இங்கே தமிழர் மட்டுமே இதை செய்வதாக சொல்லவில்லை. பொதுவாக இந்த முறை நூதன திருட்டு பற்றி மட்டுமே எழுதினேன்.

நான் டென்சன் ஆகவில்லை முதலில் உங்கள் ஏரியாவில் உள்ள இலங்கையின் கடனை அடைக்க கூடிய வல்லமை உள்ள வீட்டு முகவர் ஆக உள்ள தமிழரை தெரியுமா ? கோயிலில் திருநிறு பூசிக்கொண்டு சிரித்துகொண்டு நிக்கும் ஆள் .

நுதானா திருட்டு என்று எதை சொல்கிறிர்கள் ?

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

என்னப்பா ஊரில் உள்ள கள்ளன் எல்லாரின் டீடெய்லும் நானே மெயிண்டேய்ன் பண்ணுறன்.

சொல்லுங்கோ கேப்பம். ஆனால் யாழுக்கு வக்கீல் நோட்டீசு வராதமாரி எழுதுங்கோ.

நூதன திருட்டு - இந்த திரியில் அலசப்ட்டவை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு எப்படி என்றாலும் பொருள் சேருங்கள் என்றோ ஒரு நாள் நிம்மதியாக தமிழ் ஈழத்தில் சந்திப்போம் நாம் இல்லா விட்டாலும் நம் சந்ததி இணையட்டும் .

Link to comment
Share on other sites

24 minutes ago, பெருமாள் said:

இங்கு எப்படி என்றாலும் பொருள் சேருங்கள் என்றோ ஒரு நாள் நிம்மதியாக தமிழ் ஈழத்தில் சந்திப்போம் நாம் இல்லா விட்டாலும் நம் சந்ததி இணையட்டும் .

கடைசியில் போகும் வழிக்கு காதுடைந்த ஊசியும் வராது பெரும்ஸ்.

நிம்மதி எம் உள்ளேதான் உள்ளது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

கடைசியில் போகும் வழிக்கு காதுடைந்த ஊசியும் வராது பெரும்ஸ்.

நிம்மதி எம் உள்ளேதான் உள்ளது.

இந்த கொள்கையை உங்களிடம் வைத்து கொள்ளுங்கள் நன்றி 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

களவு மேசடி வேலைகள் செய்பதாவது காசு சேர்க்க வேண்டும் என்பது தவறு.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

நிம்மதி எம் உள்ளேதான் உள்ளது.

2௦௦9 ல் துடிக்க துடிக்க கொன்றார்களே அது இன்னும் நெஞ்சில் இருக்கிறது இரவில் குடித்துவிட்டு போர்த்துக்கொண்டு ................................................அது இருக்காது .

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

இந்த கொள்கையை உங்களிடம் வைத்து கொள்ளுங்கள் நன்றி 

நிச்சயமாக. அவரவர் கொள்கையை அவரவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். 

நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொன்னது போல நானும் என் நிலைப்பாட்டை சொன்னேன் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

2௦௦9 ல் துடிக்க துடிக்க கொன்றார்களே அது இன்னும் நெஞ்சில் இருக்கிறது இரவில் குடித்துவிட்டு போர்த்துக்கொண்டு ................................................அது இருக்காது .

அந்த வலி யாருக்குத்தான் இல்லை. 

அதை மறக்க வாழும் நாட்டில் களவு செய்ய வேண்டுமா என்ன பெரும்ஸ்?

எதை, எதை கொண்டு நியாயப்படுத்துவது என்ற விவஸ்தை இல்லையா?

இன்று ரொம்ப நிதானம் தப்பி எழுதுகிறீகள். 

ஏனென்று புரியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முதலில் மோசடி என்பதை தமிழில் ஒழுங்காக  எழுத பழகுவது  உத்தமம் .

4 minutes ago, goshan_che said:

இன்று ரொம்ப நிதானம் தப்பி எழுதுகிறீகள். 

ஏனென்று புரியவில்லை.

😀 காலையில் ஆறுக்கு எழுதினால் உங்களுக்கு புரியுமாப் போல் சரி இனிய இரவு உங்களுக்கு .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

😀

நிதானம் தப்பி என எழுதியது நீங்கள் தண்ணி அடித்து விட்டு எழுதுகிறீர்கள் என்ற அர்தத்தில் அல்ல. நீங்கள் தண்ணி அடிப்பதில்லை என்பது தெரியும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இதை நீங்கள் கொஞ்சம் உணர்சி வசப்பட்டு கையாள்வதாக உணருகிறேன்.

கடைசியாக போத்து கொண்டு ….என எழுதியது முகம் சுழிக்கும் படியாக இருந்தது. வழமையான உங்கள் பாணியாக இல்லை. அதுதான் அப்படி எழுதினேன்.

யாரையும் குறை சொல்லவோ, நான் உத்தமன், நீ கெட்டவன் என சொல்லவோ நான் எதையும் எழுதவில்லை. 

எனது கருத்தை, எனது அணுகுமுறையை மட்டும்தான் எழுதினேன். வேறேதும் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே தமிழ் எழுதி பழகுவதற்கு சான்ஸ் தந்த யாழ்களத்துக்கு நன்றி.
பிழையே வராமல் எழுதுவது என்றால் 🤔

 • Like 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.