Jump to content

தடை செய்யப்பட்ட... தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

தடை செய்யப்பட்ட.. தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தடைப்பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன ஆய்வை மேற்கொண்டுள்ளன.

2021ஆம் ஆண்டு 577 பேரும், 18 அமைப்புகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து, 316 பேரையும், 06 நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பயங்கரவாதத்திற்கு பணம் மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 03 நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1294981

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதல்ல : அரசாங்கம்

By T. Saranya

17 Aug, 2022 | 10:06 AM
image

(எம்.மனோசித்ரா)

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலீட்டை இலக்காகக் கொண்டே குறித்த அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக பல தரப்பினராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்ட போதே  அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முதலீட்டை இலக்காகக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

1968 (48) ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கமைய , பாதுகாப்பு அமைச்சினால் சர்வதேச தரநிலைக்கமைய பயங்கரவாத மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற அமைப்புக்கள் வேறு பிரிக்கப்பட்டு, அவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடல் மற்றும் நீக்குதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதற்கமையவே கடந்த காலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த 6 தமிழ் அமைப்புக்களுக்கான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் 1373 ஆம் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் அவுஸ்திரேலிய தமிழ் காங்ரஸ், உலக தமிழ் பேரவை, உலக தமிழ் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனேடிய தமிழ் காங்ரஸ், பிரித்தானிய தமிழ் பேரவை என்பவை மீதான தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களுக்கமைய, ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர் இவ்வாறு தடைகளை நீக்குவதற்காள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 3 புதிய அமைப்புக்கள் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தாரூர் அதர் அல்லது ஜம்யுல் அதர் மொஸ்க் அல்லது தாரூல் அதர் குர்ஆர் மத்ரஸா அல்லது தாரூல் அதர் , இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் அல்லது ஜமீயா மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 6 அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதே வேளை, 3 அமைப்புக்களுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

https://www.virakesari.lk/article/133720

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இவ்வளவு தூரம் சிரமம் எடுத்துச் சொல்லும்போது நாங்கள் நம்பாமல் இருப்போமா என்ன? நம்பிற்றோம்!

  • Haha 1
Link to comment
Share on other sites

இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

நான் அறிந்த வரையில் தடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் NGO போன்ற இலாப நோக்கமற்ற அமைப்புகள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இவை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுச் சில உதவிகளை மட்டுமே செய்யலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் புலம்பெயர் அமைப்புக்களின் தடை பற்றி கேள்வி எழுப்புவார்கள். அதற்கான  நரியின் முன்னேற்பாடு தான் இத்தடை நீக்கம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ?

 

13 hours ago, கிருபன் said:

பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதுதான் நரிப்புத்தி! அவர்களின் நேரடிகண்காணிப்பிலுள்ள தடுப்பிலுள்ள இளைஞர்களின் நன்னடத்தையை கண்டறிந்து,  பரிந்துரைத்து அவர்களை விடுவிக்க முடியவில்லை, எங்கோ தொலைநாட்டிலுள்ளவர்களை தேடி கண்டறிந்து விட்டார்களாம், சொல்கிறார்கள் கேளுங்கள்! குண்டுவைத்து கொலை செய்தவர்களை கண்டறிந்து விட்டார்களாம் கேளுங்கள்! இன்னும் சொல்வார்கள் காதை தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். சர்வதேசத்தை ஏமாற்றி பாராட்டு, உதவி பெற வேண்டும், அதே நேரம் தமிழரை ஏமாற்றி கழுத்தை இறுக்கி இரத்தத்தை உறிஞ்ச வேண்டும். இந்த நரியின் தந்திரத்தை உடைத்து அம்மணமாய் ஓட வைக்க நம்மிடையே  ஒரு வல்லவன் இல்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

இந்த நரியின் தந்திரத்தை உடைத்து அம்மணமாய் ஓட வைக்க நம்மிடையே  ஒரு வல்லவன் இல்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

அதான் இருந்த ஒருத்தரையும் குடுமபத்துடன்  தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறம் .

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.